பா.ம.க எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்வாரா ராமதாஸ்..???

10 Aug 09 பா.ம.க எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய சொல்வாரா ராமதாஸ்..???

தினமணியில் வெளியான செய்தி : ” மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது கூறப்பட்டு வரும் புகாரை நிரூபிப்பதற்கான செயல் விளக்கத்தை பாமக சென்னையில் திங்கள்கிழமை நடத்துகிறது

பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இந்த செயல் விளக்கம் நடைபெறவுள்ளது. நீதிபதி டி.என். வள்ளிநாயகம், பி.எச். மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.), சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), எச். ராஜா (பா.ஜ.க.) உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்”.

நமது உரை :

கடந்த மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒன்றில் கூட தேறவில்லை, வெற்றிபெற முடியவில்லை.

இதைத் தொடர்ந்து பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் தோல்விக்கான காரணங்களை தேடி அழைந்தார்.

” மக்கள் எங்களைப் புறக்கணித்துவிட்டனர் ” - என்திரு தோல்விக்கான உண்மையான காரணத்தைக் கூறாமல், பண பலம, படை பலம், அதிகார பலத்தினை வைத்து தி.மு.க கட்சி எங்களைத் திட்டமிட்டு பழிவாங்கிவிட்டது என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பாமகவின் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய, அக்கட்சியின் பொதுக்குழுக் ( ? ) கூட்டம் மே 25-ல் சென்னையில் நடைபெற்றது.

அப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் காரணமாகவே பாமக தோற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

பா.ம.கவில் இருக்கும் சில அறிவு ஜீவிகள், அதே பொதுக்குழுவிலும், பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் போல ஒரு மாதிரி “Assembled” மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை செய்து, வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படி, எந்த வகையில் முறைகேடு செய்ய முடியுமென பாமகவினர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

இதற்கிடையே அதே குற்றச்சாட்டை காரணம் காட்டி, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக வழக்கும் போட்டார்கள்.

இதை சற்று சீரியஸாக எடுத்துக் கொண்ட தேர்தல் ஆணையம்,

மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என்று கூறிய கட்சிகள், வழக்குப் போட்ட கட்சிகளிடம், புகார் கூறிய கட்சிகளிடம் அதை நேரில் வந்து நிரூபிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது .

இதற்காக ஆகஸ்ட் 3முதல் 8ம் தேதி வரை நேரமும் ஒதுக்கியிருந்தோம். இவர்களது புகார்களையடுத்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தில்லி, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் இருந்து 100 மின்னணு எந்திரங்களை டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன.

இதற்காக , இந்த மின்னணு எந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களான BEL - ECIL நிறுவனத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களும், பொறியாளர்களும் ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

புகார், வழக்கு தொடர்ந்த கட்சிகள், இருக்கின்ற 100 வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்களில் எதை வேண்டுமானாலும் எடுத்து நிரூபிக்கலாம் என்று கூறியது.

ஆனால், அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ.க உட்பட எந்தக் ஒரு கட்சியும் தலைமை தேர்தல் ஆணையத்திற்குவந்து முறைகேட்டை நிரூபிக்க முன்வரவில்லை.

தேர்தல் ஆணையமோ, ” நிபுணர்களைக் கொண்டு சோதனையும் நடத்தினோம். அதிலும் முறைகேடு செய்ய முடியாது என்பது நிரூபணமானது. அதில் எந்தக் கோளாறும் இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது

மேலும், 2004 முதல் 2009 வரை நாட்டில் நடைபெற்ற கிட்டத்தட்ட 30 மாநில மற்றும் நாடு தழுவிய தேர்தல்களில் வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்களை பயன்படுத்த பட்டுள்ளதாகவும்,

இதுவரை மின்னணு எந்திரங்களை பற்றிய குறைகளையும், புகார்களையும், வழக்கு தொடர்ந்த எவரும் நிரூபிக்கவில்லை என்றும் மிகத் தெளிவாகக் கூறிவிட்டது.

” இந்த சூழலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்த செயல் விளக்கத்தை பாமகவினர் மீண்டும் சென்னையில் திங்கள்கிழமை செய்து காட்டுகின்றனராம.

பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இந்த செயல் விளக்கம் நடைபெறவுள்ளது.

நீதிபதி டி.என். வள்ளிநாயகம், பி.எச். மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.), சி. மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), எச். ராஜா (பா.ஜ.க.) உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.

மீண்டும் மீண்டும் தேர்தல் ஆணையம் , மின்னணு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யமுடியாது என்று செயல்முறை விளக்கங்களும், தகவல்களும் தந்துவிட்ட பின்னரும்,

மின்னணு எந்திரங்களில் எந்த முறையில், எப்படி , எவ்வாறு முறைகேடு செய்யமுடியும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் வந்து நிரூபியுங்கள் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தும்,

நிரூபிக்கப் போகாத பா.ம.க, அ.தி.மு.க , ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இனியும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யமுடியும் என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கலாமா?.

அப்படியே இவர்கள், மீண்டும் மீண்டும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யமுடியும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தால், ஏன் இவர்கள் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்லக் கூடாது.

கடந்த 2006 சட்ட மன்ற பொதுத்தேர்தலில் மின்னணு இயந்திரம்தான் பயன்படுத்தப் பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற பா.ம.க, தங்களது கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற 18 எம்.எல்.ஏக்களையும்,ராஜினாமா செய்ய சொல்வாரா ராமதாஸ் ?.

அ.தி.மு.கவில் 58 எம்.எல்.ஏக்களையும், ம.தி.மு.கவில் 3 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய சொல்வார்களா?.

அடுத்து வரும் பொதுத் தேர்தல்களையும் இப்படியே குறைகூறிக் கொண்டு, தேர்தலைப் பறக்கனிப்பார்களா ?

தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் முறைகேடுகளை நிரூபிக்க என் செல்லவில்ல்லை என்று தெரிவிப்பார்களா?

என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் இவர்கள் எல்லாம் ?.

பா.ம.க கட்சி நிறுவனர் ராமதாஸ் உண்மையில் டாக்டருக்கு படித்தவர் என்றால்…..கொஞ்சமாவது தன சுய அறிவை பயன்படுத்தி…..சிந்தித்து செயல்பட வேண்டும்.

தான் கற்பனை செய்வதையும், கனவு கானுவதையும் அறிக்கையாக வெளியிடக் கூடாது.

இனியாவது மக்களுக்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்

Posted by போவாஸ் | at 12:47 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails