தமிழ் 'குடி' நாடு

தமிழ் 'குடி' நாடு

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 732 டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 7,432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது மது விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் பணிகளை முடுக்கிவிட்டது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனையை இரட்டிப்பாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மது வகைகள் இல்லை என குடிமகன்கள் திரும்பாத வகையில், ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது ஐந்து லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் இருப்பு வைத்துக் கொள்ள கடை சூப்பர்வைசர்கள் மற்றும் ஏரிய சூப்பர்வைசர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்களிடமிருந்து தேவையான சரக்குகளுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டு, சப்ளை செய்யப்பட்டது.
குடிமகன்கள் விரும்பும் சரக்குகள் எவை என ஏரியா வாரியாகவும், கடை வாரியாகவும் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அதற்கு ஏற்பவும், சரக்குகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

மதுபானங்கள் அதிகம் விற்கப்படும் சென்னை, திருப்பூர், கருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு வழக்கமான சரக்கு சப்ளையுடன் மும்மடங்கு சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது. கடந்த ஆண்டு சாதாரண நாட்களில் அயல்நாட்டு மதுவகைகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள், பீர் வகைகள் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு சாதாரண நாட்களில் அயல்நாட்டு மதுவகைகள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பெட்டிகளும், பீர் வகைகளில் 80 ஆயிரம் பெட்டிகளும் விற்கப்பட்டன. சாதாரண நாட்களில் 50 கோடி முதல் 70 கோடி சரக்குகள் கொண்ட பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

டாஸ்மாக் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விற்பனையும் தமிழகம் முழுவதும் கனஜோராகவே நடந்துள்ளது. தீபாவளியன்று மட்டுமல்ல, நேற்றும் டாஸ்மாக் கடைகள் நிரம்பி வழிந்தன. குடிமகன்களின் கூட்டத்தால் பார்களும் களை கட்டின. கடந்த ஆண்டை விட சரக்கு விற்பனை இரண்டு நாட்களில் 100 சதவீதத்தையும் தாண்டிவிட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 100 கோடி ரூபாய் வரை மதுவகைகள் விற்பனையாயின. இந்த ஆண்டு, தீபாவளியை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டை விட விற்பனை 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. மொத்தத்தில் 220 கோடி ரூபாய்க்கு மேல் சரக்குகள் விற்று தீர்ந்துள்ளன" என்றாலும் அதுபற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அனைத்து மட்டத்திலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
நன்றி:தினமலர்
       --------------------------------------------------------------------------------------------------------
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி - என்று மீண்டும் நிரூபித்துள்ளனர் நம் தமிழ் 'குடி' மக்கள்.

படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவிலேயே ஓணம் பண்டிகையின்போது அதிக அளவிலான மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் சொல்லவா வேண்டும்!
இது வரை எந்த அரசும் செய்யாத சாதனை. திமுக அரசின் மிகப் பெரிய சாதனை இதுவாகத் தான் இருக்கும்.தமிழக அரசு கடைகளின் எண்ணிக்கையை குறைத்திருக்க வேண்டும்.குறைக்க வேண்டும்.

இருந்தாலும், கருணாநிதியை சபிப்பதும், திட்டுவதும், தமிழக அரசை குறை கூறுவதும் சரியல்ல.

குடிக்கும் மக்களுக்கு அதனால் வரும் கேடுகள் பற்றி இன்னனும் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.

தமிழக அரசையும், கருணாநிதியையும் குறை கூறுபவர்கள் முடிந்தால் தங்கள் அக்கம் பக்கம் இருக்கும் குடிமக்களிடம் - குடிப்பதால் வரும் கேடுகள் குறித்து விளக்கி கூறி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

தமிழக அரசு கடை திறந்தால் என்ன ?. கண்டிப்பாக குடிக்கனும்னு கட்டளையா போட்டிருக்கிறது ? குடிப்பவர்களுக்கு எங்கே போனது அறிவு ?.

திமுக ஆட்சியில் 220 கோடிக்கு விற்பனையாயிருக்கிறது. இதுவே அதிமுக ஆட்சி என்றால் ஒரு 200 கோடிக்கு விற்பனை அடைந்து இருக்கலாம். இதுவே வித்தியாசம்.
தமிழ் 'குடி' மக்களின் குடியைக் காக்க ஒரே வழி...தமிழ்நாட்டில் மது பானமும், விற்பனையும் முற்றிலும் தடை செய்யப் பட வேண்டும். அது ஜென்மத்தில் நடக்காத காரியம்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அது போலத்தான் குடி குடியை கெடுக்கும் என்று உணராதவரை இது தொடரத்தான் செய்யும்.

இன்றைய நவ நாகரீக உலகத்தில் மதுபானம் தவிர்க்க முடியாத விஷயம் என்றளவுக்கு வந்துவிட்டது.தமிழ் மக்கள் மட்டும் கெட்டுப் போகவில்லை.உலகெங்கிலும் இதே நிலைதான்.
உலகமே அழிவை நோக்கி செல்கிறது.....மதுபானம் அதில் ஒரு வழி.

Posted by போவாஸ் | at 7:46 PM

1 கருத்துக்கள்:

Anonymous said...

நடுநிலையான பதிவு இது தான்!

சில பேர் என்னவோ கருணாநிதி தன் குடும்பத்துக்கே இந்த வருமானம் எடுத்துக்குறார் என்று எழுதுறாங்க.

படித்த டை கட்டிய சாப்ட்வேர் மக்கள் குடிப்பதை பெருமையாய் சொல்லி பதிவு எழுதுறாங்களே அதுக்கு என்ன சொல்றிங்க?

நாளும் நலம் விளையட்டும்

Post a Comment

Related Posts with Thumbnails