இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 3

இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 3

ஈழத
் தமிழர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் அச்சுறுத்தலாகக் காட்டும் இந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு சீனா என்ன நட்பு நாடா? அப்படி ஒரு ஊடுறுவலே நடக்கவில்லை என்று இவர் கூறி, அதனை அயலுறவு அமைச்சகம் கூற, நாடே சிரித்தது. எல்லையைக் காக்கும் இராணுவத்திற்கல்லவா தெரியும் எவ்வளவு தூரம் உள்ளே வந்த சீனன் கோடு போட்டுவிட்டு போயுள்ளான் என்று. இலங்கைப் பிரச்சனையில் அடுக்கடுக்காக பொய் கூறி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், இந்திய மக்களையும் ஏமாற்றியது போல, சீனா ஊடுறுவலையும் ‘நடக்கவே இல்லை’ என்று கூறி பூசி மொழிகிடப் பார்த்தார், நடக்கவில்லை.

எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவுடன் 13 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி கண்ட பலன் இது. எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனா துணை அமைச்சர் தாய் பிங்குவாவுடன் இந்தியப் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இந்த நாராயணன்தான். “13வது சுற்றுப் பேச்சு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. நாங்கள் பல வரைபடங்களை கையளித்துள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் (சீனா) இறுதித் தீர்வுக்கான திட்டத்தை அளிப்பார்கள், அதன் மீது பேச்சுவார்த்தை நடக்கும்” என்று கூறினார்.

ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, இந்தியாவை துண்டு துண்டாக சிதறடிக்க வேண்டு்ம் என்று சீன அரசு ஆதரவு இணையத்தளத்தில் கட்டுரை வந்தது.

இதுநாள்வரை, அருணாசலப் பிரதேசத்தின் ஒரு மாவட்டத்தை (தவாங்) மட்டும் கேட்டுக் கொண்டிருந்த சீன அரசு, இப்போது அருணாசல பிரதேச மாநிலமே எங்களுடையது என்று கேட்கிறது! அங்குள்ள மக்கள் தேர்தலில் வாக்களித்து தேர்வு செய்ய முதலமைச்சர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அந்த மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சீன அரசு. 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி எட்டிய ‘சுமூக நிலை’ இவ்வளவுதான்!

இதுதான் 5 ஆண்டிற்கு மேலாக நமது நாட்டின் தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் எம்.கே.நாராயணின் ‘சாதனை’.

FILE
இந்திய நாட்டிற்கு ஆதரவாக என்றென்றும் திகழ்ந்த ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க ராஜபக்சவிற்கு உதவி, அந்நாடு இன்று சீனத்தின் வலிமையாக கூட்டாளியாகிவிட்டது! இந்துமகா சமுத்திரத்தில் தனது வல்லா‌ண்மையை நிலைநாட்ட அம்பா‌ந்தோட்டாவில் துறைமுகம் நிறுவி்க்கொள்ள சீனாவிற்கு இடமளித்துள்ளது சிறிலங்க அரசு! இதன் மூலம் இந்தியாவின் தென் முனை கடல் வழியில் தனது மேலாதிக்கத்தை வலிமையாக நிறுவப்போகிறது சீனா. இதனால் அச்சமுற்ற இந்தியா மாலத் தீவில் தனது கடற்படை தளத்தை நிறுவும் முயற்சியில் அவசர அவசரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த இராஜ தந்திரப் பிலிகளின் சாமர்த்தியத்தால் சீனா வலிமையாக கால் பதித்துவிட்டது. விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழ் மக்களை கொன்றொழித்து இந்தியா கண்ட பலம் இதுதான்.

இந்திய நிறுவனங்கள் சிலவற்றிற்கு வணிக வாய்ப்புகள் கிடைத்ததைத் தவிர, இலங்கைக்கான அயலுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கு வேறென்ன கிடைத்தது? தமிழர்களை விரோதித்துக் கொண்டதுதான் மிச்சம்!

தங்களுடைய இரகசியத் திட்டங்களை மறைத்துக் கொள்ள இவர்கள் எப்போதும் ஊதிவிடும் புகைதான் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்பது. இதுநாள் வரை இவர்கள் மேற்கொண்ட இராஜ தந்திரக் கூத்துக்களின் ‘பலன்களை’ இந்தியா அனுபவிக்கும் காலம் நெருங்குகிறது அப்போது தெரியும் இவர்கள் எந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று.


நன்றி : வெப்துனியா

Posted by போவாஸ் | at 7:45 PM | 0 கருத்துக்கள்

இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 2

இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 2


மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட விடுதலைப் புலிகளின் பன்னாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனை இன்றுவரை சித்ரவதை செய்து, அவரிடம் இருந்து அவர்கள் பெறத் துடிக்கும் தகவல், புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி மூலத்தை கண்டறிவதுதான்.

ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க பெரும்பாடுபடும் சிறிலங்க அரசு மேற்கொண்டிருக்கும் அந்த முயற்சிக்கு நீங்களும் உதவுங்கள் என்றுதான் டெல்லியில் இருந்து நாராயணனனும் காவல் துறைத் தலைவர்களுக்கு அறிவாலோசனை வழங்கியுள்ளார்.

விடுதலையின் வேர் நிதியில் இல்லை!

ஓர் இனத்தின் நிதி மூலத்தை அழித்துவிட்டால், அதன் விடுதலைப் போராட்டம் செத்துவிடும் என்று இந்த இனப் படுகொலை கர்த்தாக்கள் கணக்கு போடுகின்றனர்!

தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சாத்வீக வழிகளில் நீதி பெற முடியாத நிலையிலேயே, அநீதிக்கு எதிரான நீதியாக விடுதலை வேட்கை பிறக்கிறது. அந்த வேட்கையே விடுதலை உணர்வின் வேர். அது துளிர்விட்டு, கிளைவிட்டு தழைக்கும்போது போராட்ட வடிவத்தை பெறுகிறது. அதற்குப் பிறகுதான் நிதி, பன்னாட்டு ஆதரவு என்பதெல்லாம். இது மக்களுக்காக வாழ்பவர்களுக்குப் புரியும், நாட்டின் பாதுகாப்பை அன்னிய நாட்டிற்கு அடிமைப்படுத்துபவர்களுக்கு எப்படித் தெரியும்?

அதனால்தான் கோத்தபயவலிருந்து நாராயணன் வரை குழம்புகிறார்கள். வன்னியின் மீது இரத்தக் களரியை கட்டவிழ்த்து மக்களையும் அவர்களுக்காக நின்ற புலிகளையும் துடைத்தெறிந்த பின்னரும் விடுதலைச் சிறகுகள் விரிகிறதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு! முன்னெப்பொழுதையும் விட, தமிழீழத்தின் விடுதலைக்கான வேர் இப்போதுதான் வலிமையாக படர்கிறது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய இராணுவ வல்லமைகளின் பேராதரவோடு மே இரண்டாம் வாரம் வரை நடத்திய இனப் படுகொலை வன்னியில் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம், ஆனால் உலக நாடுகளின் கண்களை அது திறந்துவிட்டது. இப்போது எல்லா நாடுகளும் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உணரத் தொடங்கிவிட்டன. அதுவே இவர்களை இப்படித் தறிகெட்டுப் பேசச் செய்கிறது.

இப்பேச்சுகளை தமிழினம் சட்டை செய்யத் தேவையில்லை.

சீன ஊடுறுவலிற்கு பதிலென்ன?

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டப்பட்ட காவல் துறை மாநாட்டில் இப்படி சம்மந்தமில்லாமல் பேசிய இந்திய தேச ஆலோசகர் நாராயணன், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதியில் சீனப் படைகள் ஒன்றரை கி.மீ. தூரம் ஊடுறுவி வந்தது மட்டுமின்றி, அது தங்களுக்குச் சொந்தமான பகுதி என்று சிகப்பில் குறியிட்டுவிட்டுச் சென்றது எப்படி? என்று இன்று அனைவரும் எழுப்பும் கேள்விக்கு பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தொடரும்...


நன்றி : வெப்துனியா

Posted by போவாஸ் | at 4:04 PM | 0 கருத்துக்கள்

இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 1

நமது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன், சமீபத்தில் டெல்லியில் நடந்த காவல் துறை இயக்குனர்கள், தலைமை ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசிய பேச்சின் ஒரு பகுதி தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி உதவி செய்துவந்த புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகளாவிய அளவில் பரவியுள்ளதால், அந்த இயக்கம் மீண்டும் தலைத்தூக்கும் அச்சுறுத்தல் உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களிடையே உள்ள அதிருப்தியுற்ற சக்திகள் ஒன்றிணைந்து அந்த பயங்கரவாத அமைப்பிற்கு ஆயுதம் வழங்கி மீண்டும் உயிரூட்டும் சாத்தியம் உள்ளது” என்று எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, “அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், அப்படி நிகழ்ந்தால் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் தேசப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்துகொண்டு நாராயணனும், அயலுறவுச் செயலராக இருந்த சி‌வ் சங்கர் மேனனும், சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச சகோதரர்களான கோத்தபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருடன் இணைந்து, ஒவ்வொரு நாளும் பேசி, திட்டமிட்டு ஈழத் தமிழர்கள் இனப் படுகொலையை கச்சிதமாக நிறைவேற்றியவர்கள் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நன்கு அறிந்துள்ளனர்.


தங்களை இன ரீதியாக ஒடுக்கும் சிங்கள பெளத்த இனவாத அரசிடமிருந்து விடுதலைப் பெற ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராளிகளை - தமிழீழ விடுதலைப் புலிகளை -பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்தி, அதனை ஒடுக்குவதாகக் கூறி, இந்திய மக்களையும், உலக நாடுகள் பலவற்றையும் ஏமாற்றி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த மாபெரும் இனப் படுகொலையின் காரணக் கர்த்தாக்களில் ஒருவரான எம்.கே. நாராயணன் இவ்வாறு பேசியிருப்பது தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகில் வாழும் எந்தத் தமிழருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது.

ஆனால், “அந்த இயக்கம் மீண்டும் தலையெடுத்து விடக்கூடாது, உன்னிப்பாக கவனியுங்கள், எதையும் எதிர்கொள்ள தயாராகுங்கள்” என்று அவர் கூறியிருப்பது, உலகத் தமிழர்கள் அனைவரையும் கோபம் கொள்ளச் செய்துள்ளது.

தன்னை மறந்து ஒப்புக் கொண்ட உண்மை!

நாராயணின் பேச்சில் அவர் தன்னை அறியாமலேயே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ‘உலகெங்கிலும் வாழும் தமிழர்களை மிரட்டி நிதிச் சேர்த்தே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளனர்’ என்று கூறிவந்த இவர், இப்பொழுது, “அவர்களுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள்” என்று கூறியுள்ளார்! இதன் மூலம் விடுதலைப் புலிகள் மிரட்டிப் பணப் பறித்து ஆயுதம் வாங்குகிறார்கள் என்ற பொய்யுரைப்பை தனது வாயாலேயே உடைத்து உண்மையைக் கூறியுள்ளார்.

நாராயணனின் வார்த்தைகள் புதியதல்ல, இவை யாவும் வேறொரு நாளில் கோத்தபய ராஜபக்ச பேசியதுதான்! விடுதலைப் புலிகளின் மூல பலம் அவர்கள் எந்த மக்களின் விடுதலைக்காக போராடுகிறார்களோ அவர்கள்தான் என்பதை முழுமையாக உணர்ந்துள்ள காரணத்தினால்தான், புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒற்றுமையை உடைக்க எல்லாவிதமான பகீரத முயற்சியிலும் கோத்தபய ராஜபக்ச ஈடுபட்டு வருகிறார்.

தொடரும்...


நன்றி : வெப்துனியா

Posted by போவாஸ் | at 12:54 PM | 0 கருத்துக்கள்

தில்லியில் விஜயகாந்தின் உண்ணாவிரத நாடகம் - ஓர் அலசல்


ராமேஸ்வரம் கடற்பகுதியில், 16ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கி கட்டையால் தாக்கி கடத்தியுள்ளனர்.

மீனவர்களின் படகுகளைசேதப்படுத்தியும், வலைகளை அறுத்தும், மீன்பிடி சாதனங்களை கடலில் எறிந்தும் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர்.இலங்கை அரசுடன், மத்திய அரசு 1974ல் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தமே இத்தனை சிக்கல்களுக்கும் காரணம்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துகிறது என்றால், தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்று கருதுகிறதா? இலங்கை அரசின் போக்கு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே பறித்துவிட்டது. கடலோர மீனவர்கள் என்ற இனத்தையே அழித்து வருகிறது.

முதல்வர் கருணாநிதி அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதுமான கண் துடைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

மத்திய அரசோ தமிழக மக்களைப் பற்றி சிறிதுகூட அக்கறையில்லாமல் மெத்தனப் போக்கை கையாண்டு வருகிறது. தே.மு.தி.க., சார்பில், எனது தலைமையில், டில்லியில் வரும் 29ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நிஜமாகவே இவர் தமிழக மீனவர் மேல் உள்ள அக்கரையில் தில்லியில் உண்ணாவிரதம் இருக்க போகிறாரா அல்லது உண்ணாவிரதம் என்ற நாடகத்தினை அரங்கேற்ற போகிறாரா ?

விஜயகாந்த் உண்மையில் முழு மனதுடன் தமிழக மீனவர்களுக்காக இந்த உண்ணாவிரத போராட்டம் மூலம், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் மிக்க சந்தோஷம். வாழ்த்துவோம், வரவேற்போம்.

ஆனால், இந்த விஷயத்தில் எதோ உள் அர்த்தம் இருப்பது போல தெரிகிறது. இவரது அறிக்கையில் இரண்டு விஷயங்கள் முரண்பாடாக இருக்கிறது.
ஒன்று உண்ணாவிரதம் இருக்கப் போகும் தேதி.- செப்.29. ,
மற்றொன்று - உண்ணாவிரதம் இருக்கப் போகும் இடம் -
தில்லி .



இடம் - தில்லி.

22 நாட்களாக தொடர் போராட்டத்தில் மீனவர்கள் இருந்தபோது, இவர் பெரிய அளவுக்கு அறிக்கைகளோ, போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ ஏதும் செய்யவில்லை.

ஏனென்றால்
அந்த நாட்களில் இவர் சிந்தித்துக் கொண்டு இருந்தது, அக்கறை எடுத்துக் கொண்டது பனையூர் கொலை வழக்கு, விஜய் - ராகுல் சந்திப்புக்கு பின் பேசப்பட்ட பேச்சுகள் என்னவாக இருக்கும்?, விஜயின் முடிவென்ன? ராகுலின் மூன்று நாள் தமிழக சுற்றுப் பயணம்,அதற்கு பின் அரங்கேறுவது என்னவாக இருக்கும் என்பதை பற்றித்தான் இருந்திருக்க வேண்டும்.

மேற்கூறிய எல்லாப் பிரச்சனைகளும் புயலைப் போல சீறி வந்து இப்பொழுது ஓய்ந்து விட்டது.

22 நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டம் செய்த பொது இவர் எங்கே போனார். ஏன் அப்பொழுது இதைப் பற்றி பேசாத இவர் இப்பொழுது பேசுகிறார்.
நெருப்பில்லாமல் புகையுமா? இதற்கு காரணம் இருக்கிறது.

விஜய் ராகுல் சந்திப்பாலும், ராகுலின் வருகையாலும் சற்றே அதிர்ந்து போயிருந்தார் விஜயகாந்த். ராகுல் வந்துவிட்டு திரும்பும் வரை இவருக்கு பக்கு பக்கு என்றுதான் இருந்திருக்க வேண்டும்.

ராகுல் வந்தார்...சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ரஜினிகாந்தும், விஜயும் தங்கள் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று சொன்னார். இதனால் மேலும் கலக்கமடைந்தார் விஜயகாந்த். அமைதியாக இருந்துகொண்டு, நடப்பதை கூர்ந்து கவனித்தார்.

ராகுல் தில்லி திரும்பிய மறுதினம் ரஜினிகாந்த் அரசியலில் இப்பொழுது ஈடுபடப் போவதில்லைஎன்று அறிக்கைவிட்டார்.

அதைத் தொடர்ந்து விஜயும் இப்போதைக்கு அரசியல் வேணாங்கனா என்று ஒதுங்கிக் கொண்டார்.

இந்த அறிவிப்புகளால் தற்போது உற்சாகமாக இருக்கிறார் விஜயகாந்த்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இவர் சார்பாக சுதீசும், பண்ருட்டி ராமச்சந்திரனும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள, காங்கிரஸின் மேலிடத்தை பார்ப்பதற்கு அவசரமாக தில்லி சென்று திரும்பினர். பின்னர் தனித்து நிற்கிறோம், மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி என்றனர். ( கூட்டணி பேரம் படியவில்லை என்று பத்திரிக்கைகளில் வெளிவந்தது)

காங்கிரஸில் விஜயும், ரஜினியும் சேர மாட்டார்கள் என்று நிச்சயமான இன்றைய சூழ்நிலையில் இவர் மீண்டும் காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகிறார், அதற்கேற்ப காய் நகர்த்துவது போல தெரிகிறது.

நானும் ஒரு பெரிய கட்சியின் தலைவன், எனக்கும் ஆட்கள் உண்டு, என் பின்னால் லட்சக்கனக்கனோர் உண்டு என்று காங்கிரஸ் மேலிடம் அறிந்துகொள்ளும்படி தன்னுடைய பவரைக் காட்டுவதற்காகவே இவர் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்.

இவர் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கும் போது தன் தொண்டர்களை தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் உண்ணாவிரதம் இருக்க சொல்லுவார். சொல்லவில்லை என்றாலும் இவர் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருப்பார்கள்.(அப்படி ஒரு பாசம்)
காங்கிரசைக் கூப்பிட்டு, பாருங்கள் என் பவரை என்று காட்டுவார்.

இதனால், அடுத்து வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கு காங்கிரசுடன் கூட்டணி சேரும் வாய்ப்பைத் தானாகவே வழிய போய் உருவாக்கப் போகிறார்.
இன்னும் அதிக பப்ளிசிட்டி கிடைக்கும். அது இவருக்கு மேலும் உபயோகமாக இருக்கும். (ஒரு வேளை காங்கிரசுடன் கூட்டணி அமையலாம்.)

இந்த காரணங்களுக்காகவே இவர் தில்லியில் உண்ணாவிரதம் இருக்க போகிறார்.

நாள்: செப். 29

செப்.29 அன்று ஏன் உண்ணாவிரதம் நடத்த வேண்டும் ?.
பொதுவாக
தமிழா நாட்டிலேயே இது போன்ற உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் முன்கூட்டியே தகுந்த அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

இவர் உண்ணாவிரதம் நடத்தபோவதோ இந்தியாவின் தலைநகர் தில்லியில். ஆக, தமிழகத்தில் அனுமதி பெற இரண்டு நாட்கள் தேவை என்றால் தில்லியில் குறைந்தது ஆறு நாட்களாவது தேவைப்படும். அதன் பின்னரே உண்ணாவிரதம் நடத்த முடியும். அனுமதி பெற வில்லையென்றால்...சட்டப்படி கைது செய்வார்கள்.

அனுமதி வாங்க காலதாமதம் ஏற்படும் என்று விஜயகாந்துக்கு தெரியாதா என்ன?...அதனாலேயே இவர் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றிலிருந்து சரியாக 10 நாட்கள் கழித்து, 29 ந் தேதி என்று அறிவித்திருக்கிறார். அதற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கூறியிருக்கிறார்.

இன்று முதல் நம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையாகவே இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு அக்கறை இருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள தன் தொண்டர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி தமிழக அரசுக்கு நெருக்கடி தந்திருக்கலாம்.

தி.மு.கவின் எதிர்கட்சிகள் அனைத்தையும் அழைத்து ஒன்றாக குரல் எழுப்பி போர்க் கோடி தூக்கி மீனவ மக்களுக்கு ஆதரவாக செயல் பட்டிருக்கலாம்.
ஏன், தி.மு.கவியும் சேர்த்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

இதன் மூலம் ஒரு நிரந்தரத் தீர்வு காண ஒரு வழிவகை செய்திருக்க முடியும்.

ஆனால் இவரது எண்ணம் அதுவல்ல.

முழுக்க முழுக்க இவரது சுய நலத்திற்காகவே, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே தன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இதற்காக இவருக்கு கிடைத்துள்ள ஆயுதம்தான் தமிழக மீனவ மக்களின் பிரச்சனை.

கடந்த சில வருடங்களாகவே தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப் பட்டு வருகின்றனர். இவர் கட்சி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரை மீனவர்களுக்காக எத்தனை முறை போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடத்தியுள்ளார் ?

செப்.29 முன்பு ஒரு சுமூக தீர்வு காணப்பட்டுவிட்டால் இவர் கதை என்னவாகும். எந்த காரணத்திற்காக உண்ணாவிரதம் இருப்பார் ?.

ஈழத்தமிர்களுக்காகவா ? இருந்தால் சந்தோஷம். ஆனால், அந்த அளவுக்கு தில் இவருக்கு இருக்கா ?

இவரு உண்மைலேயே உத்தமர், நேர்மை தவறாதவர், சிறந்த அரசியல்வாதி என்றால் தினம் தினம் ஒரு உண்ணாவிரதமும், போராட்டமும் நடத்த வேண்டி இருக்கும். அந்த அளவிற்கு நம் நாட்டின் நிலை உள்ளது.

"
நான் சொல்றதை செய்பவன்" என்று கூறும் இவர், கலைஞரின் செயல் பாடுகளை வெறும் கண்துடைப்பு என்று விமர்சிக்கும் இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்.

ஒரு வேளை இவரெல்லாம், ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல்வர் ஆகிவிட்டால்...நமக்கு அதோ கதிதான்.

தொடர்ந்து இவரது செயல்பாடுகளைக் கவனித்து வந்துதான் இதைஎழுதியுள்ளேன்.

ஜப்பான் காரன் வேளை செஞ்சே கெட்டான்,
அமெரிக்க காரன் அதிகாரம் பண்ணியே கெட்டான் ,
இந்தியாக் காரன் பேசியே கெட்டான் என்று சொல்வதுண்டு.

அது விஜயகாந்தின் விஷயத்தில் உண்மையாகும் நாட்கள் வெகு தூரமில்லை.

Posted by போவாஸ் | at 1:44 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails