அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ்.வி.சேகர், திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். என்று கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியால் மட்டுமே முற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு 16 சதவீதம், குறிப்பாக பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முடியும். இதன் மூலம் 40 லட்சம் பிராமணர்கள் வாக்குகள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு மாறும்’’என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். இதனால் 20 லட்சம் குடும்பத்தினர் பயனடைவர். முல்லை பெரியார், காவிரி பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களை விட மழைதான் நமக்கு சாதகமாக உள்ளது’’என்று தெரிவித்தார்
'காலம் பதில் சொல்லும்' , 'கால சுழற்ச்சி' என்ற கூற்றுக்கு இதுவல்லவா சரியான சான்று.
ஆரியர் என்ற பார்ப்பன பிராமணர் இந்தியாவிற்கு வந்த முதலே பிராமணர் அல்லாத பிற இனத்தவர்களை அடிமை போலவே, தீண்டத்தகாதவர்கள் போலே நடத்தினர். சொல்லொண்ணா துயரத்திற்கு நம் முன்னோர்கள் தள்ளப்பட்டனர்.
வருடங்கள் உருண்டோடின...காலங்கள் மாறின...காட்சிகள் மாறின, பிராமணர் அல்லாத பிற ஜாதி இனத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்து வாழ்வாதார சூழ்நிலைகளைத் தந்தது அதிமுக, திமுக கட்சிகளின் அரசு. பிராமணர் மவுசு குறைந்தது. ஆட்டம் கண்டது பிராமணர் கூட்டம்.
'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று சொல்வார்கள். அதுபோல, இன்று பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பெற திமுக என்ற திராவிட கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றது.
அப்பன் செய்த பாவம் பிள்ளையை வந்து சேரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
அதைப் போல இப்போது இருக்கும் பிராமணர்களின் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு அவர்களது சந்ததிகளை வந்து சேர்ந்து இருக்கிறதோ ?
Posted by போவாஸ்
|
at
8:31 PM
|
மனித உடல் பாகங்களை அமைக்க உதவும் திசுக்களை செயற்கையாக உருவாக்குவதன் மூலம் தோல், ரத்தம், எலும்பு ஆகியவற்றை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
விபத்துக்களாலும், நோய்களாலும் பலருக்கு எலும்பு முறிவு, கண்ணில் கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன. ரத்தத்திலும், தோலிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை சரிசெய்ய முடியாமல் மருத்துவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரத்தம், தோல், எலும்பு ஆகியவற்றை செயற்கையாக உருவாக்குவதற்கான முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ராபர்ட் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். மனித உடல் எடையில் 25 சதவிகிதம் கல்லகன் என்ற புரதச்சத்து நிறைந்து உள்ளது. இதில் இருந்து தண்ணீரை எடுத்து அதன் மூலம் மனித உடல் திசுக்களை உற்பத்தி செய்யும் வழிமுறையை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த திசுக்களில் ஒரு பகுதியை கொண்டு தான் தோல், எலும்பு, விழி வெண்படலம் ஆகியவை உருவாகின்றன.
தோல், ரத்தம், எலும்பு விழி வெண்படலம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி அடைந்து வருகிறார்கள். இந்த பாகங்கள் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் மருத்துவ முறை பரிசோதனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திசுக்களை தயாரிப்பதற்கான கருவி (டிஷ்யூ மெஷின்) சிறிய அளவில் மேஜையில் வைத்து கொள்ளக்கூடிய அளவுக்கு இருக்கும். இதன் மூலம் உடல் உதிரிபாகங்களை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். இந்த உற்பத்தியில் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள ஆட்டோமேஷன் பார்ட்னர்ஷிப் என்ற நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
Posted by போவாஸ்
|
at
8:51 PM
|