விஜயகாந்து அன்றும் இன்றும்.


அன்று: பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.
இன்று: பொருள் சேர்க்க வைத்த பெயர் விஜயகாந்து.


அன்று: விஜயகாந்து பார்வையில் கலைஞர் ஒரு காவியத் தலைவன்.
இன்று: விஜயகாந்து பார்வையில் கலைஞர் ஒரு தமிழினத் துரோகி.


அன்று: திமுகவே கதி, கலைஞரே தலைவர் என்று சொல்லிக்கொண்டு அட்டகாசமான நிஜ வாழ்க்கை நடிப்பு.
இன்று: எது நடந்தாலும் திமுகவின் சதி. கலைஞரே மூலக் காரணம்.


அன்று: கலைஞருடன் ஒட்டிக்கொண்டு நடித்த (நிஜ வாழ்க்கையில்) காலத்தில் கிடைத்த பட்ட பெயர் "புரட்சிக் கலைஞர்"
இன்று: அவருக்கு அவரே சூட்டிக் கொண்ட பட்ட பெயர் கருப்பு எம்ஜிஆர்.


அன்று: வாழ்நாளில் இனி போலீஸ் வேடத்தை ஏற்று நடிக்க மாட்டேன் என்று கூறியது.
இன்று: விருதகிரி சினிமாவில் விறுவிறுப்பாக போலீஸ் வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பது.


அன்று: டிவி மீடியாக்களுக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன்.
இன்று: சொந்தமாக கேப்டன் டிவி தொடங்குவது. சன் டிவி, தினமணி, தினமலர் போன்ற ஜால்ரா பத்திரிக்கைகளிடம் நட்பாக இருப்பது.


அன்று: சினிமாவில் பக்கம் பக்கமாய் வசனம்.
இன்று: தேர்தல் நேரத்தில் பக்கம் பக்கமாய் வசனம்.


அன்று: சினிமா வசனம் எழுத இப்ராகிம் ராவுத்தர்.
இன்று: தேர்தல், அறிக்கை வசனங்கள் எழுத பண்ரூட்டி ராமச்சந்திரன்.





அன்று: சினிமாவிற்கு கால் சீட் கொடுத்து வசனங்கள் பேசி நடிப்பது.
இன்று: தேர்தல் நேரத்தில் மட்டும் ஊர் ஊராக சென்று நிஜத்திலும் வசனம் பேசி நடிப்பது.


அன்று: திமுக ஒரு குடும்பக் கட்சியாக காட்சி அளிக்கிறது.
இன்று: தனது மனைவியும், மச்சானும் இல்லாமல் எந்த ஒரு கட்சி கூட்டமும் இல்லை.


அன்று: நடிகர் வடிவேலுவின் அலுவலகத்தில் தன் ஆட்கள் செய்த கலாட்டக்களையும், அட்டூழியங்களையும் பற்றி மனிதாபிமானமில்லாத் முறையில் ஜனநாயகத்துக்கு மாறாக, முரண்பாடாக பேசியது.
இன்று: தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மீண்டும் தர்மயுத்ததிற்கும், தியாகத்திற்கும் தேமுதிக தயாராக இருக்கிறது என்று அறிவித்தது.


அன்று: சொந்த கருத்துக்கள் கிடையாது. பேசவும் தெரியாது.
இன்று: இன்றும், சொந்த கருத்துக்கள் கிடையாது. பேசவும் தெரியாது.


அன்று: ஊழலை ஒழிப்பேன் இன்று வாய் கிழிய பேசுவது.
இன்று: எம்ஜிஆரே ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பண்ரூட்டி இராமச்சந்திரனை அருகிலே வைத்திருப்பது.


அன்று: மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி.
இன்று: யாருடனும் கூட்டணிக்கு தயார்.


அன்று: தேமுதிக ஏழைகளுக்காக பாடுபடும். வறுமையை ஒழிக்கும்.
இன்று: இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலுமே பணக்காரர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்தது.


படிப்பறிவு : எஸ்.எஸ்.எல்.சி.
பொதுஅறிவு: இல்லை.
பகுத்தறிவு: சுத்தமாக இல்லை.
நன்றி, விசுவாசம்: சிறிதும் இல்லாதது.
மரியாதை: மரியாதை என்ற படத்தினில் நடிக்கத் தெரிந்தவர்..நிஜத்தில் மரியாதை கொடுத்துப் பேசத் தெரியாதவர்.
கேள்வி மட்டுமே கேட்டு அறிக்கை மழைகளை விடுவது.
எதிர் கேள்வி கேட்டால் அல்லது பிரச்னைக்கு தீர்வைக் கேட்டால் ஓடி ஒழிவது.


தேமுதிக கட்சியால் இதுவரை செய்த சாதனை : தேர்தல் கூட்டம் என்று பலவற்றிற்கு கட்சியினர் பலரை செலவு செய்ய வைத்து ஆண்டியும் போண்டியும் ஆக்கினது..



ஊரில் உள்ளவனோட எல்ல காசையும் செலவு பண்ணி தமது ஆதரவு எவ்வளவு என்று முடிவு பண்ணிபுட்டு , இப்ப சீட்டுக்கு பேரம் பேச கெளம்பிட்டாரு . கிடைக்கிற சீட்டுல மச்சான் , மனைவி என்று கொடுத்து மீதி ஏதேனும் இருந்த அதில் தனது பினாமிகளுக்கு சீட் கொடுப்பார் இந்த ஓவராக வசனம் பேசி வந்த விஜய்காந்த்.இதுக்கு முந்தி செலவு செய்தவன் கதி அதோகதிதான்..

சூடு சொரனை இல்லாதவர்கள் தான் அரசியல் வாதிகள் என்பதை விஜய்காந் நிரூபித்து விட்டார் திமுக அதிமுகவையும், கட்சி ஆரம்பித்ததிலிருந்து குறைகூரிவந்தவர் கட்சியில் உள்ளவர்கள் விலகி போவதால் யாருடனும் கூட்டனி என்கிரார் தமிழக மக்களே இனியாவது இது போன்ற போலி தமிழன் வேஷம் போடும் விஜய்காந்தை ஒதிக்கிவையுங்கள்.

மக்களுடனான கூட்டணியும், கடவுளுடனான கூட்டணியும் முரிஞ்ச்சிபோச்சா? கை விட்டுட்டாங்களா ?.

Posted by போவாஸ் | at 1:34 PM | 0 கருத்துக்கள்

ஜெ. ஆட்சிக்கே வரமாட்டார்: தேமுதிக தேராத கட்சி: மு.க.அழகிரி கிண்டல்



ஜெயலலிதா இனி ஆட்சிக்கே வரமாட்டார் என்றும், தேமுதிக தேராத கட்சி என்றும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை இன்று (நேற்று) மதுரையில் அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். மு.க.அழகிரியும் அவர்களுக்கு வாழ்த்து கூறினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: 2011 சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

பதில்:
 நான் ஏற்கனவே இது குறித்து கூறியிருக்கிறேன். 20011 பொதுத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணிதான் அமோக வெற்றி பெறும். 200 இடங்களில் வெற்றி பெறுவோம். தென் மாவட்டங்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலை போல 100 க்கு 100 சதவீதம் அல்லது 95 சதவீதம் தி.மு.க. அணி வெற்றி பெறும்.


கேள்வி: பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது சந்தேகம் என்று கூறியிருந்தீர்களே?

ப.
 அப்போது சொன்னேன். அதற்காகத்தான் தேர்தலை தள்ளி வைக்க சொல்லி உள்ளார்கள். ஒரு இடைத்தேர்தலை அறிவிக்கும்போது அந்த மாநிலத்தின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் அரசிடம் கருத்து கேட்டுதான் தேர்தல் தேதியை அறிவிப்பார்கள். ஆனால் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தி.மு.க.வும், காங்கிரசும் தேர்தல் பணிகளை தொடங்கியது.


ஆனால் அ.தி.மு.க. தேர்தலை தள்ளி வைக்க சொல்லி வற்புறுத்தியது. அதன்படி தேர்தலை தள்ளி வைத்துள்ளனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா அ.தி.மு.க. உறுப்பினராக இருப்பாரோ என்று சந்தேகம் உள்ளது.
 
கேள்வி: கடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இயற்கையானது அல்ல என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

பதில்: 
 எப்போதும் உள்ள புலம்பல்தான் அது. ஏற்கனவே அவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தின் பட்டன் சரியில்லை என்றார்கள். இப்போது பட்டனை சரிசெய்து விட்டல்லாவா தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.


கேள்வி:அ.தி.மு.க.வில் இருந்து மேலும் சில தலைவர்கள் தி.மு.க.வுக்கு வருவார்களா?

பதில்: 
நிச்சயமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.


கேள்வி: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் களில் தே.மு.தி.க. 2 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து விட்டதே. உங்கள் கருத்து என்ன?

பதில்:
 ஏற்கனவே அது தேறாத கட்சிதான். கட்சியின் பெயரே வாயில் நுழையாதபடி உள்ளது. தேய்ந்த தேறாத கட்சியாக அது உள்ளது.


கேள்வி: கோவை செம்மொழி மாநாடு பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
 தலைவர் நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார். கடந்த 1967 ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையில் உலக தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்தி தந்தவர் தலைவர் கலைஞர். அதுபோல செம்மொழி மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டுவார். மாநாடு முடியும் வரை அவர் இரவு  பகலாக தூங்கமாட்டார்

நன்றி:நக்கீரன்.

Posted by போவாஸ் | at 1:38 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails