நகைச்சுவை - 'கடி' தத்துவங்கள்

அம்மா அடிச்சா வலிக்கும்...
போலீஸ் அடிச்சா வலிக்கும்...
ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...
ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?


" கண்ணா.... நல்லாக் கேட்டுக்க..... ஃபிகரோட கடல் மணலில் வீடு கட்டி விளையாடினதோட அருமை, ஃபிகரோட அண்ணன் 'வூடு கட்டி' அடிக்கும் போது தான் தெரியும்! ஸோ நீ உஷாரா இரு தம்பி!


பல்லு வலின்னா

பல்ல பிடுங்கலாம்............

கண்ணு வலின்னா

கண்ண பிடுங்க முடியுமா?


பஸ்சு மேலே நாம ஏறலாம்...தப்பில்ல...

பஸ்சு நம்ம மேல ஏறினால்....நாம தப்புவமா...???


என் ஜீனியரிங் காலேஜில்

மெடிக்கல் லீவு எடுக்கலாம்.

மெடிக்கல் காலேஜில்

என் ஜீனியரிங் லீவு எடுக்க முடியுமா?


நம்ம உடம்பு முழுவதும்தான் 'செல்' இருக்கு.

ஆனா அதுக்குன்னு ஒரு 'சிம் கார்டு' கிடைக்குமா?


எறும்பு நினைச்சா
யார் காதை வேணும்னாலும்
கடிக்கலாம்.
யார் நினைச்சாலும்
எறும்பு காதை
கடிக்க முடியுமா?


21 - ஐ ஆங்கிலத்தில் ட்வென்ட்டி ஒன் என்கிறோம்.

31 - ஐ தேர்ட்டி ஒன் என்கிறோம்.

11 - ஐ ஒன்ட்டி ஒன் என்று ஏன் சொல்வதில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கண்ணா
தண்ணீ சூடா இருந்தாலும் சில்லுன்னு இருந்தாலும் நெருப்பை அணைக்கத்தான் செய்யும் தெரிஞ்சுக்க

எண்ணை சூடா இருந்தாலும் சில்லுன்னு இருந்தாலும் நெருப்பை வளர்க்கத்தான் செய்யும் புரிஞ்சுக்க


டிக்கெட் வாங்கிட்டு
உள்ள போனா அது சினிமாத் தியேட்டர்.

உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினா
அது ஆபரேஷன் தியேட்டர்.


சேர்மன் சேர்ல உட்காரலாம்.
வாட்ச்மேன் வாட்ச்ல உட்கார முடியுமா?



தங்கச் செயினை உருக்கினா
தங்கம் வரும்.

வெள்ளிச் செயினை உருக்கினா
வெள்ளி வரும்.

சைக்கிள் செயினை உருக்கினா
சைக்கிள் வருமா?


இட்லி மாவால்
இட்லி செய்யலாம்

தோசை மாவால்
தோசை செய்யலாம்

கடலை மாவால்
கடலை செய்ய முடியுமா?


என்னதான் ரெண்டு காது இருந்தாலும்,
நாம ஒண்ணுன்னு சொன்னா,
ஒண்ணுன்னு தான் கேட்கும்


குடித்தனக்காரனுக்குக்
குடி தேவையில்லை;
குடிப்பவனுக்குக்
குடித்தனம் தேவையில்லை



தொடரும்...

Posted by போவாஸ் | at 1:45 AM | 1 கருத்துக்கள்

பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்

பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்


Woman ambulance driver noble serivce

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஜெனோவா புஷ்பம். இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவர் பெயர் ஜான்சன். ஜெனோவா புஷ்பத்திற்கு சிறுவயதிலேயே வாகனங்களை ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். இதனால் லைட் வெயிட் டிரைவிங் முடித்த இவர் திருமணத்திற்கு பின் ஹெவி வெயிட் டிரைவிங் பயிற்சிக்கு ஐஆர்சி மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

பின்பு நெல்லையில் ஹெவி டிரைவிங் பயி்ற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். கடந்த 2008ம் ஆண்டு சுகாதார துறையில் டிரைவராக இவருக்கு வேலை கிடைத்தது.

இதையடுத்து ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக ஜெனோவா புஷ்பம் பணியாற்றி வருகிறார். உயிர் காக்கும் முக்கிய வாகனமான ஆம்புலன்சில் ஜேனோவா புஷ்பம் டிரைவராக பணியாற்றுவது சவாலுக்குரியதாக உள்ளது.

இதுபற்றி ஜேனோவா கூறும்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுவது மற்ற வாகனங்களை ஓட்டுவதை விட சவாலானது. சில நிமிடங்கள் தாமதித்தால் கூட உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதோடு நாமும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸை ஓட்ட வேண்டும்.

ரிஸ்க் அதிகம் என்றாலும் உயிர் காக்கும் பணி என்பதால் இதை மனநிறைவோடு செய்து வருகிறேன். பெண்கள் பலர் கார் ஓட்டுகிறார்கள். ஆனால் அரசு துறை வாகனங்களில் டிரைவராக பெண்கள் இல்லை.

எனவே பெண்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் அவர்களுக்கு உடனடியாக அரசு துறைகளில் வேலை கிடைக்கும். இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


வாழ்த்துவோம், வணங்குவோம்,

Posted by போவாஸ் | at 9:58 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails