மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்காக பில் கேட்ஸ் ஒரு நேர்முகத் தேர்வு நடத்துனாராம். நேரடியான தேர்வுன்னு சொன்னதால ஒரே நேரத்துல 2000 பேரு வந்திருக்காங்க.
கேட்ஸ் உடனே,"எல்லாரும் வந்திருக்கீங்க. சந்தோசம்.ஆனா, எனக்குத் தேவை எம் எஸ் சர்ட்டிஃபைட் ஆட்கள்"னு சொல்லியிருக்காரு. அந்தக் கூட்டத்துல நம்ம குட்டப்பனும் இருந்திருக்காரு.
குட்டப்பனுக்கு அப்படின்னா என்னன்னு தெரியலை. சுத்திப் பார்த்திருக்காரு. வந்ததுல பாதி பேரு வெளிய போயிட்டு இருக்கானுங்க. இவரும் வெளில போலாமான்னு யோசிச்சிருக்காரு. அப்புறம் 'இருக்கட்டும் பார்த்துக்கலாம்'னு சும்மா அப்படியே உக்காந்துட்டாரு.
இன்னும் 1000 பேரு இருக்குறதால 'கம்ப்யூட்டர்ல எம்.எஸ் படிச்ச்சவங்க மட்டும் இருங்க மத்தவங்க போலாம்'னு சொல்லிட்டாரு கேட்ஸ். குட்டப்பனுக்குத் தெரிஞ்சு டாக்டர்லதான் எம் எஸ் எல்லாம் இருக்காங்க. 'கம்ப்யூட்டர்லயுமா?'ன்னு ஒரே சந்தேகமாப் போச்சு. 'சரி பரவாயில்ல! காஸர்கோடுல எங்கயாவது சர்ட்டிபிக்கேட் அச்சடிச்சா போச்சு'ன்னு சும்மா இருந்துட்டான்.
மத்தவங்க எல்லாம் போயிட்டாங்க.ஆனாலும் 200 பேரு இருந்ததும் கேட்ஸ் கொஞ்சம் யோசிச்சுட்டு "கம்ப்யூட்டர்ல டாக்டரேட் வாங்கியிருந்திருக்கணும்'னு சொன்னாராம். குட்டப்பனுக்கு அது பெரிய விசயமாவே படலை. 'கேவலம் விஜயே வாங்கிட்டாரு டாக்டர் பட்டம். எனக்குக் கிடைக்காதா? ஜேப்பியார் கிட்ட பேசிக்கலாம்'ன்னு சிரிச்சுக்கிட்டே உள்ளே உக்காந்திட்டு இருந்திருக்கான்.ஆனா, டாக்டர்ன்னு கேட்டதும் குண்டு போட்ட மாதிரி கூட்டம் காணாமப் போயிடுச்சு. மிஞ்சுனது 10 பேருதான்.
கேட்ஸ் கொஞ்ச நேரம் 10 பேரையும் பார்த்துட்டு, "இப்ப எனக்கு சந்தோசமா இருக்கு. ரொம்பப் படிச்ச மேதாவிங்க் எல்லாம் இப்ப இங்க இருக்கீங்க. ஆனாலும் இந்த வேலை க்ரோஷியாலங்குறதால உங்கள்ல யாருக்கு க்ரோஷியன் மொழி தெரியுமோ அவங்க மட்டும் இருங்க. மத்தவங்க எல்லாம் போகலாம்'ன்னு சொல்லியிருக்காரு.குட்டப்பனுக்கு மலையாளமே குட்டநாடு வட்டார வழக்குதான் தெரியும். இதுல க்ரோஷியாவுக்கு என்ன செய்றது? அதுக்காகப் போயிட முடியுமா? அப்படியே அசட்டுச் சிரிப்போட உக்காந்திட்டிருக்கான்.
இப்ப அநேகமா எல்லாரும் போயிட்டாங்க. குட்டப்பனையும் இன்னொரு ஆளையும் தவிரகேட்ஸ் ரொம்ப சந்தோசமாயிட்டாரு. "இப்ப நீங்க ரெண்டு பேருதான் இருக்கீங்க. ரெண்டு பேருக்குமே க்ரோஷியன் பாஷை தெரியும்கறதால நீங்க உங்களுக்குள்ளேயே பேசிக்குங்க"ன்னு சொன்னார்.
குட்டப்பன் கொஞ்சமும் தயங்காம அந்த ஆளு கிட்ட, "எந்தா சுகமல்லே?" என்றான்.
"நீ போடா தெண்டி(பொறுக்கி)"என்று பதில் வந்தது மறுமுனையில் இருந்து.
நீதி:
எட்டப்பன்களைக் கூட நம்பலாம். குட்டப்பன்களை நம்ப முடியுமா???
Posted by போவாஸ்
|
at
1:55 PM
|
இவர் எந்த தேசத்தின் பாதுகாப்பு ஆலோசகர்? - பகுதி 3
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் அச்சுறுத்தலாகக் காட்டும் இந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு சீனா என்ன நட்பு நாடா? அப்படி ஒரு ஊடுறுவலே நடக்கவில்லை என்று இவர் கூறி, அதனை அயலுறவு அமைச்சகம் கூற, நாடே சிரித்தது. எல்லையைக் காக்கும் இராணுவத்திற்கல்லவா தெரியும் எவ்வளவு தூரம் உள்ளே வந்த சீனன் கோடு போட்டுவிட்டு போயுள்ளான் என்று. இலங்கைப் பிரச்சனையில் அடுக்கடுக்காக பொய் கூறி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும், இந்திய மக்களையும் ஏமாற்றியது போல, சீனா ஊடுறுவலையும் ‘நடக்கவே இல்லை’ என்று கூறி பூசி மொழிகிடப் பார்த்தார், நடக்கவில்லை.
எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவுடன் 13 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி கண்ட பலன் இது. எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனா துணை அமைச்சர் தாய் பிங்குவாவுடன் இந்தியப் பிரதிநிதியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இந்த நாராயணன்தான். “13வது சுற்றுப் பேச்சு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. நாங்கள் பல வரைபடங்களை கையளித்துள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் (சீனா) இறுதித் தீர்வுக்கான திட்டத்தை அளிப்பார்கள், அதன் மீது பேச்சுவார்த்தை நடக்கும்” என்று கூறினார்.
ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, இந்தியாவை துண்டு துண்டாக சிதறடிக்க வேண்டு்ம் என்று சீன அரசு ஆதரவு இணையத்தளத்தில் கட்டுரை வந்தது.
இதுநாள்வரை, அருணாசலப் பிரதேசத்தின் ஒரு மாவட்டத்தை (தவாங்) மட்டும் கேட்டுக் கொண்டிருந்த சீன அரசு, இப்போது அருணாசல பிரதேச மாநிலமே எங்களுடையது என்று கேட்கிறது! அங்குள்ள மக்கள் தேர்தலில் வாக்களித்து தேர்வு செய்ய முதலமைச்சர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அந்த மாநிலத்தில் நிறைவேற்றப்படும் திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கி கடன் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சீன அரசு. 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி எட்டிய ‘சுமூக நிலை’ இவ்வளவுதான்!
இதுதான் 5 ஆண்டிற்கு மேலாக நமது நாட்டின் தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் எம்.கே.நாராயணின் ‘சாதனை’.
இந்திய நாட்டிற்கு ஆதரவாக என்றென்றும் திகழ்ந்த ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க ராஜபக்சவிற்கு உதவி, அந்நாடு இன்று சீனத்தின் வலிமையாக கூட்டாளியாகிவிட்டது! இந்துமகா சமுத்திரத்தில் தனது வல்லாண்மையை நிலைநாட்ட அம்பாந்தோட்டாவில் துறைமுகம் நிறுவி்க்கொள்ள சீனாவிற்கு இடமளித்துள்ளது சிறிலங்க அரசு! இதன் மூலம் இந்தியாவின் தென் முனை கடல் வழியில் தனது மேலாதிக்கத்தை வலிமையாக நிறுவப்போகிறது சீனா. இதனால் அச்சமுற்ற இந்தியா மாலத் தீவில் தனது கடற்படை தளத்தை நிறுவும் முயற்சியில் அவசர அவசரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த இராஜ தந்திரப் பிலிகளின் சாமர்த்தியத்தால் சீனா வலிமையாக கால் பதித்துவிட்டது. விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழ் மக்களை கொன்றொழித்து இந்தியா கண்ட பலம் இதுதான். இந்திய நிறுவனங்கள் சிலவற்றிற்கு வணிக வாய்ப்புகள் கிடைத்ததைத் தவிர, இலங்கைக்கான அயலுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கு வேறென்ன கிடைத்தது? தமிழர்களை விரோதித்துக் கொண்டதுதான் மிச்சம்! தங்களுடைய இரகசியத் திட்டங்களை மறைத்துக் கொள்ள இவர்கள் எப்போதும் ஊதிவிடும் புகைதான் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்பது. இதுநாள் வரை இவர்கள் மேற்கொண்ட இராஜ தந்திரக் கூத்துக்களின் ‘பலன்களை’ இந்தியா அனுபவிக்கும் காலம் நெருங்குகிறது அப்போது தெரியும் இவர்கள் எந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று.
நன்றி : வெப்துனியா
Posted by போவாஸ்
|
at
7:45 PM
|