நகைச்சுவை துணுக்குகள்



மனநல ஆசிரியர் : "தம்பி அங்க பாரு பசங்களெல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடறாங்க நீ மட்டும் இப்டி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு."
மாணவன் : "அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்."
நண்பர் 1 : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
நண்பர் 2 : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்
கோபு : ஓட்டப்பந்தயத்துல தங்க மெடல் வாங்கினா "ஊக்க மருந்து"ன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க. சரி கடைசில வந்தவங்களையும் ஏன் செக் பண்றாங்க?
பாபு : இவங்க ஏதாவது "தூக்க மருந்து" சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.
நண்பர் 1 : பரவாயில்லையே நாங்க எவ்வளவு அடிச்சும் உங்க பையனுக்கு "ழ" வரவே இல்லை. இன்னிக்கு கரெக்டா சொல்றானே. என்ன செஞ்சீங்க?
நண்பர் 2 : நீங்க எவ்வளவு அடிச்சும் வராத "ழ" அவன் தண்ணியடிச்சதும் தானா வந்துடுச்சு.
ஒருவர் : லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமில்ல?
மற்றொருவர் : டிரிங்க்ஸ் குடிக்கறப்ப ஜூஸ் சிந்திடுச்சி சார்!
கணவன் : "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"
மனைவி : "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."
மகன் : அப்பா பைத்தியம்னா என்னப்பா?
தந்தை : சம்பந்தா சம்பந்தமில்லாம நீளமா எதையாவது உளறிகிட்டே இருப்பாங்க பேசறது எதுவுமே புரியாது என்ன புரிஞ்சுதா?
மகன் : சுத்தமா புரியலையேப்பா . . .
ஆசிரியர் : துரியோதனன் தன்னோட உயிர தொடைலதான் வச்சுண்டுருந்தானாம்.
மாணவன் : இதென்ன சார் பெரிய விஷயம் நம்ம கிளா ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
அப்பா : டேய் உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.
மகன் : ஏன் கடன் வாங்கலாமே . . .
நண்பர் 1 : "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"
நண்பர் 2 : "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.
போலிஸ் : டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?
திருடன் : கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா ஐயா?
நோயாளி : "டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க. எனக்கு பயங்கரமா வலிக்குது."
டாக்டர் : கொஞ்சம் பொறுத்துக்குங்க. கொஞ்ச நேரத்துலதான் "எல்லாமே" முடிஞ்சுடுமே."
நீதிபதி : ஏன் இப்படி கைதிகளை முதுகு வளைஞ்ச நிலைலே கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க இப்படியா ட்ரீட் பண்றது?
போலிஸ் : நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரியாயிடுச்சு சார்.
நீதிபதி : கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம் . . . இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே . . .
குற்றவாளி : என்ன செய்யறது எஜமான் . . . தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா "0001"ன்னு அடிச்சிட்டோம் . . .
மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."
வேலு : யாரது டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்கள கூட்டிட்டு போறது?
ரமனன் : என் பிரண்டுதான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால நான் தான் ஒரு கம்பெனிக்காக வந்து எழுப்பச் சொல்லியிருக்கேன்.


Posted by போவாஸ் | at 11:41 PM | 2 கருத்துக்கள்

டீ கடையான தேமுதிக அலுவலகம்.


டீ கடையான தேமுதிக அலுவலகம்.


போன வருஷம், தலைநகர் தில்லியில தே.மு.தி.க., ஆபீசை விஜயகாந்த் திறந்து வச்சாரு. அப்ப நடந்த தடபுடல் விழாவுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து கட்சிக்காரங்க விமானத்தளையும் ரயில்லயும் கைகாசப் போட்டு கஷ்டப்பட்டு போனாங்க. தில்லி கட்சி ஆபீஸ்ல இருந்த ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டு, எல்லாரும் சந்தோசப்பட்டு, அடுத்த பிரதமர் & ஜனாதிபதி விஜயகாந்துதான் என்று கோஷம் போட்டுட்டு தமிழகம் வந்து சேந்தாங்க.
இப்போ என்ன மேட்டருன்னா , செப்டெம்பர் மாசம் 29ம் தேதி, தமிழக  மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்காக, தில்லியில விஜயகாந்த் உண்ணாவிரதம் (நாடகம்) இருந்தாரு. அதுல கலந்துகிரதுக்காக, வழக்கம் போல தங்களது கை காசை போட்டு விமானத்திலும் ரயில்லயும் இங்கிருந்து போன கட்சிக்காரங்க,  ஆசை ஆசையா மிகுந்த பொறுப்புணர்வோடு ஒரு ஆர்வக் கோளாறுல, தில்லி கட்சி ஆபீஸில் இருக்கும் ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட கட்சி ஆபீஸ தேடிப் போய் இருக்காங்க.

தேடு தேடுன்னு தேடி இருக்காங்க..கட்சி ஆபீசைக் காணோமாம். வடிவேலு காமெடி பாணியில்  "கட்சி ஆபீசைக் காணோம் " "கட்சி ஆபீசைக் காணோம் " அப்படின்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தங்களுக்குள் புலம்பிகிட்டு இருந்தாங்களாம்.
கடைசியா அக்கம்பக்கம் விசாரிச்சு கட்சி ஆபீஸ் இருந்த இடத்தை கண்டுபிடுச்சவுங்க....அப்படியே ஷாக் ஆயிட்டாங்களாம்.
கட்சி ஆபீஸ் இருந்த இடத்துல டீக்கடைதான் இருந்துச்சாம்.
ஒரு நிமிஷம் ஆடிப்போன கட்சிக்காரங்க என்ன எதுன்னு விசாரிச்சப்ப, மாசம் 13,000 வாடகை தர முடியாம கட்சி ஆபீசைக் காலி செஞ்சுட்டதா சொல்லி இருக்காங்க.
இதை கேட்டு மேலும் அதிர்ச்சியான கட்சிக்காரங்க நொந்து போய் திரும்பி வந்து இருக்காங்க.

தமிழ்நாட்டுலேயே இன்னும் பெரிதாக சாதிக்க முடியாம இருக்கும் தேமுதிக கட்சிக்கும், விஜயகாந்துக்கும் தில்லியில் கட்சி ஆபீசை ஆரம்பித்தது எல்லாம் தேவையா.
அப்படியே தேவை என்றால் வாடகையை கொடுத்து கட்சி ஆபீசை மூடாமல் இருந்திருக்கலாம். குறைந்த வாடகைக்கு வேறு இடம் மாறி இருக்கலாம்.
ஒரு வேளை இப்படி இருக்கலாம், கட்சி ஆபீசுக்கு மாசா மாசம் வாடகை கட்ட சரியான ஒரு உண்மைத் தொண்டர் கிடைக்கவில்லை போல.
ஆகாயத்தில் கோட்டைகட்ட ஆசைப் பட்டால் இப்படித்தான்.
விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்.
படிப்படியாக முன்னேற நினைக்காமல் ஓவர் நைட்டுல முதல்வரா, பிரதமரா, ஜனாதிபதியா ஆயிடலாம்னு நினைச்சா இப்படித்தான்.
எதுக்கு இப்படி கட்சி ஆபீஸ திறக்கனும், வாடகை கூட கட்ட முடியாம மூடனும்.இந்த பந்தா எல்லாம் தேவையா.
தன்னோட கட்சி ஆபீசுக்கு 13,000 ரூபாய் கட்ட முடியாத நிலையிலா இருக்கிறார் விஜயகாந்த்?.எல்லா செலவுகளையும் தொண்டர்களின் தலையில் கட்டுவிடலாம் என்ற ஒரு அற்ப புத்திதான்.
என்னிக்கு இவரைப் பத்தி, இவரோட கட்சிக்காரங்க தெரிஞ்சு புரிஞ்சிக்கப் போறாங்களோ. பாவம்.

Posted by போவாஸ் | at 8:10 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails