80 வயதில்தான் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் - ஆய்வு

வயதானால் 'எல்லாம்' முடிந்து விடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த எண்ணமே அவர்களது இயல்பான செக்ஸ் ஆர்வத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறி விடுவதுண்டு.

ஆனால் 80 வயதில்தான் செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எட்வர்ட் வியூமான் தலைமையிலான குழு இதுகுறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில், 57 முதல் 85 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரிடமும் எந்த வயதில் செக்ஸ் ஆசை அதிக அளவில் இருந்தது என்று கேட்கப்பட்டது.

இந்த ஆய்வில், 1,550 ஆண்களும், 1,755 பெண்களும் கலந்து கொண்டனர். அவர்களைத் தேடிப் போய் கருத்து கேட்கப்பட்டது.

கருத்துச் சொன்னவர்களில் 68 சதவீதம் ஆண்களும், 42 சதவீதம் பெண்களும் தாங்கள் தற்போதும் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். 

அதிலும் 80 முதல் 85 வயது வரைக்குட்பட்டவர்கள்தான் பெருமளவில் செக்ஸ் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், 'அதை' வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திரு்நதவர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளுடன் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களிடையே, கணவன் மனைவி உறவும் நெருக்கமாக இல்லாததும் தெரிய வந்தது.

செக்ஸ் உறவு வைத்து கொள்பவர்களில் 60 வயதினரைவிட 80 வயதினர் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
--------------------------------------------
ஆந்திராவின் ஆளுநர், 86 வயாதான என்.டி. திவாரி ராஜ் பவனில் ஆடிய காமக் களியாட்டங்கள் மூலம் இப்போது இந்த ஆய்வு உண்மை என்று நம்ப முடிகிறது.

Posted by போவாஸ் | at 11:41 PM | 0 கருத்துக்கள்

இந்தியாவின் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள 20 தொழிற்பேட்டைகளில் 3 தமிழகத்தில்



அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பின் படி இந்தியாவில் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள 20 தொழிற்பேட்டைகளில் 3 தமிழகத்தில் உள்ளது. அவ்வறிக்கையின் படி இந்தியாவில் அதிக மாசுபடுத்தப்பட்டுள்ள தொழில் பகுதிகளில் வேலூர், கடலூர், சென்னை புறநகர் பகுதியான மணலி ஆகியவை முறையே 8,16,20 வது இடத்தை பிடித்துள்ளன.


ஐஐடி டெல்லி, மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுபாடு வாரியங்களின் உதவியுடன் இவ்வறிக்கையை தயாரித்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 88 தொழிற்பேட்டைகளில் 85 சதவிகிதம், 75 தொழிற்பேட்டைகள் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ளன. முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் குஜராத்தில் உள்ள அங்கலேஸ்வர் மற்றும் வாபி ஆகியவை தான் இந்தியாவிலேயே அதிக மாசுபடுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர், திருப்பூர், மேட்டூரும் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள பட்டியலில் இடம் பிடித்துள்ளன. ஈரோட்டில் மட்டுமே மாசு அரசாங்கம் நிர்ணயித்த வரம்புக்குள் உள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது. இவ்விபரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மாசு கட்டுப்படுத்தப்படும் வரை இப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் கட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழக தொழிற்பேட்டைகள்
தரவரிசை
தொழிற்பேட்டை
மாசு-காற்றில்
மாசு-தண்ணீரில்
மாசு-நிலத்தில்
8
வேலூர்
அபாய அளவு
அபாய அளவு
அபாய அளவு
16
கடலூர்
அதிக மாசு
அபாய அளவு
அபாய அளவு
20
மணலி
அபாய அளவு
அதிக மாசு
அதிக மாசு
34
கோவை
அபாய அளவு
அதிக மாசு
வரம்புக்குள்
51
திருப்பூர்
அதிக மாசு
அதிக மாசு
அதிக மாசு
56
மேட்டூர்
வரம்புக்குள்
அதிக மாசு
வரம்புக்குள்
78
ஈரோடு
வரம்புக்குள்
வரம்புக்குள்
வரம்புக்குள்




Posted by போவாஸ் | at 8:37 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails