கலைஞர் காப்பீட்டு திட்டம்:கருணாநிதிக்கு மருத்துவர்கள் பாராட்டு


ஏழை எளிய மக்களைப் பாதித்திடும் கொடிய நோய்களிலிருந்து அரசு மேற்கொண்டுவரும் பல் வேறு மருத்துவ நலத்திட்டங்களில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்றுப் பாராட்டுகளை குவித்து வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 443 பேருக்கு ரூ. 76 கோடியே 63 லட்சம் செலவில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைகளை அளிப்பதில் தனியார் மருத்துவ மனைகளில் பங்கு பாராட்டத்தக்கது.
 கருணாநிதிக்கு மருத்துவர்கள் பாராட்டு

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் வெற்றிக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வரும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சென்னை செனாய் நகரிலுள்ள “பில்ராத்” மருத்துவமனை, ரத்தினவடிவு என்ற ஏழை விவசாயிக்கு இத் திட்டத்தின்கீழ் முதல் இருதய அறுவை சிகிச்சையை பெற்றிகரமாகச் செய்த மருத்துவமனை. இங்கு இதுவரை 400-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை படைத்துள்ளது


இதனையொட்டி “பில் ராத்” மருத்துவமனையின் இயக்குநர்கள் நாராயண சாமி, கோபி, அறுவை சிகிச்சை நிபுணர் தியாகராஜ மூர்த்தி, மயக்க மருந்து நிபுணர்கள் நெடுமாறன், மகாதேவன் ஆகியோர் இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியமைக்காக தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் கூறியதாவது:-

பில்ராத் குடும்பத்தின் சார்பில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மிகச்சிறந்த முறையில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டம் வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டு வரும் தாங்களும், தங்கள் தலைமையின் கீழ் செயல் படுகின்ற தமிழக அரசுதான் காரணம்.

மேலும், நல்ல முறையில் நடைபெற்று வரும் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் எங்களையும் பங்கு பெறச்செய்து 400-க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய அரிய வாய்ப்பை ஏற்படுத்தியக் கொடுத்த தங்களுக்கு, எங்கள் பில்ராத் மருத்துவமனையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு தாங்கள் செய்யும் சீரிய பணி மேலும் பல்லாண்டு காலம் தொடர எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


நன்றி:மாலைமலர்.

Posted by போவாஸ் | at 4:44 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails