வடிவேலு - கில்லி - ரீமிக்ஸ்

வடிவேலு - கில்லி - ரீமிக்ஸ்

Posted by போவாஸ் | at 8:49 PM | 2 கருத்துக்கள்

உங்க போட்டோக்களுக்கு அட்டகாசமான டிஜிடல் எபெக்ட்ஸ் மற்றும் அசையும் படமாக மாற்ற...

உங்க போட்டோக்களுக்கு அட்டகாசமான டிஜிடல் எபெக்ட்ஸ் மற்றும் அசையும் படமாக மாற்ற... 

 



உங்களுக்காக இரண்டு தளங்கள்...

www.photo505.com

www.photofunia.com


Posted by போவாஸ் | at 5:38 PM | 0 கருத்துக்கள்

வடிவேலு - WWE காமெடி ரீமிக்ஸ்

Posted by போவாஸ் | at 4:55 PM | 1 கருத்துக்கள்

வீட்டிற்கு ஒரு துளசி செடி வளர்ப்போம்


வீட்டிற்கு ஒரு துளசி செடி வளர்ப்போம் :
துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.
பல வீடுகளில் இன்று அழகுக்காக பல தினுசு தினுசா செடி வளர்க்கின்றனர்.மிகச் சிலரே துளசி செடியினை வளர்க்கின்றனர், அதன் பயனையும் அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய முதன்மையான செடி, துளசி செடிதான்.
துளசிச் செடியினை வளர்க்க பெரிய இடமோ , பராமப்பரிதற்கு நிறைய நேரங்களோ , அதிக செலவோ தேவையில்லை.

துளசி செடி வளரும் தன்மை:
அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்
வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண் தேவை.
வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.
துளசி செடியின் பயன் தரும் பாகங்கள்:
இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
துளசி செடியின் பயன்கள்:
தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம்.
இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது.
துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.
வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும்.
சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும்.
இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும்.
மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது.
தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.
வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.
துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.

மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.
இன்று பலவகையான மருந்துகளில் துளசி சேர்க்கப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் அப்படின்னு இன்னும் எத்தனை எத்தனை காய்ச்சல் நம்மை வதைக்க வருகிறதோ தெரியவில்லை.

தொடர்ந்து நாம துளசி உபயோகிசிகிடு வந்த...இந்த மாதிரி நோய்கள், காய்ச்சலில் இருந்து போராட உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
என்ன நண்பர்களே……. துளசி செடிய உங்க வீட்டுல வளர்க்கத் தயாராயிட்டிங்கலா

Posted by போவாஸ் | at 10:50 AM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails