இவரு நடிச்சாலே பாக்க முடியாது. இப்போ டைரக்ட் வேற பண்ணப் போறாரா ?


இவரு நடிச்சாலே பாக்க முடியாது. இப்போ டைரக்ட் வேற பண்ணப் போறாரா ?



விஜயகாந்த்
, கிடப்பில் போடப்பட்ட 'விருதகிரி' திரைப்படத்தை இப்போ எடுக்க ரெடி ஆகிட்டு இருக்காராம்.
இதுல
சுவாரசியமான விஷயம் என்னன்னா...இவரே இயக்கி நடிக்க போறாராம். இவரு நடிச்சாலே பாக்க முடியாது. இப்போ டைரக்ட் வேற பண்ணப் போறாரா ?
இதுல இன்னொரு பிரச்சனை என்னன்னா, விஜயகாந்துக்கு ஜோடியா நடிக்க ஒருவரும் தயாரில்லை. இவர் அழகுக்கு(?) ஜோடியா நடிக்க நடிகை பாவனாவிடம் கேட்டு இருக்காங்க.
பாவனாவோ, வடிவேலு சொல்ற மாதிரி ' அப்படியே ஷாக் ஆயிட்டாங்களாம்' . அப்புறம் அஜீத் நடிக்கும் 'அசல்' படத்தில் தான் நடிப்பதாகவும், பிற மாநிலப் படங்களை நடிக்க ஒப்புக் கொண்டதாலும் நடிக்க இயலாது என்று ஒரு வழியா பேசி திருப்பி அனுப்பி இருக்காங்க.

மனம் தளராமல் வலை வீசி தேடியதில் ஒரு ஜூனியர் நடிகை கூட கிடைக்க வில்லையாம்.

இப்பொழுது
விஜயகாந்தின் அறிவுரைப்படி வட மாநிலத்தில் நடிகைக்கான தேடுதல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். மும்பை இறக்குமதியோ அல்லது பஞ்சாபியாக இருக்கலாம் என்று பேச்சாம்.

இவ்வளவு சிரமப் பட்டு இவரு நடிக்கலைனா யார் அழுதா?
இவரை தியேட்டர் ஸ்கிரீன்ல பாக்க முடியலைனு பல பேச்சுகள்.
ஒழுங்கா அரசியல் பண்ணி மக்களின் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தி தன்னால் முடிந்ததை ஏதாவது உபயோகமா பேசலாம், செய்யலாம்.

ஏற்கனவே இவரு நடிச்சு பல பிரச்சனைகளுக்கு அப்புறம் வெளிவந்த எங்கள் ஆசான் திரைப்படம், வாங்கக் கூட ஆளு இல்லாம, அதையும் மீறி வெளி வந்த வேகத்தில பொட்டி பாம்பா படபெட்டிகுள்ள சுருண்டு போனது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான்.

இனி இந்த 'விருதகிரி' படம் என்ன பாடு படப் போகுதோ. படத்த எடுத்து முடிப்பாரா ? விருதகிரி சோனகிரியாக போய் விடாமல் அட் லீஸ்ட் வடகறி ஆனாலே பெரிய விசயம்தான். பாக்கலாம் இவர் என்னதான் பன்றாருன்னு.

ஆனா, ஒன்னு இவர் படம் எடுக்க ஆரம்பிச்சார்னா கொறைஞ்சது ஒரு நூறு பெருக்காவாது வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுக்காக இவர் வருஷம் 4 படம் எடுக்கலாம். இந்த விசயத்துக்காக இவர பாராட்டலாம்.

Posted by போவாஸ் | at 7:58 PM | 0 கருத்துக்கள்

விஜயகாந்துக்கு ஜால்ரா போடுகிறதா தினமலர் ?.

விஜயகாந்துக்கு ஜால்ரா போடுகிறதா தினமலர் ?.

எண்ணற்ற தினமலர் வாசகர்களில் நானும் ஒருவன்.

தினமலர் செய்தித்தாளிலும் சரி, தினமலர் இணையதளத்திலும் சரி சமீப காலங்களாகவே ஒரு வித்தியாசம் தெரிகிறது.
ஒரு நபருக்கு தேவையற்ற அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

அந்த நபர் வேறு யாருமில்லைங்க.

வாய்க்கு வந்ததைப் பேசும் வாய்ச் சவடால் மன்னன்,
ஜெயலலிதாவினால் 'குடிகாரன்' என்று அழைக்கப்பட்டவர்,
கலைஞரால் 'அரைவேக்காடு' என்று அழைக்கப்பட்டவர்,
கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த கேப்டன்

விருத்தகிரி விஜயகந்துதாங்க.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிராச்சாரத்தில் இருந்தே பாத்துட்டு வரேன்,தினமலர் ரொம்பவே கவனம் செலுத்தி அதிக முக்கியத்துவம் தராங்க. விஜயகாந்த் பத்தி எந்த செய்தி வந்தாலும் உடனே அதை தினமலரில் பார்க்க முடியும்.

பனையூர் கொலைவழக்கில் அதிமேதாவி அங்குசாமி போல பல கேள்விகளைக் கேட்டார். இதை பயங்கர பரபரப்பாக செய்தி தினமலர் இணையதளத்தில் வெளியிட்டது.

செய்தியுடன் இணைக்கப்பட்ட விஜயகாந்தின் புகை படத்தை கிட்டத்தட்ட ஐந்து முறை மாற்றி மாற்றி செய்தியைவிட விஜயகாந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

முதல்வர் கலைஞர் அவர்கள் பத்திரிகை மூலமாகவும், தமிழக போலீஸார் சம்மன் மூலமாகவும் விஜயகாந்திடம் கொலையைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் என்று கேட்டனர். பயந்துபோய் ஜகா வாங்கி விட்டார் விஜயகாந்த்.

இதே தினமலரில் இந்த ஜகா வாங்கிய மேட்டரை பெரிதாக போடவில்லை. இவரது அறியாமை, வாய்க்கு வந்ததைப் பேசும் வாய்ச்சவடாலைப் பற்றி பெரிதாக எப்போதுமே போடுவதில்லை.

இன்று கூட தினமலர் செய்தித்தாளில், அண்ணாவிற்கும் தனக்கும் துளியும் சம்மந்தமில்லாத விஜயகாந்த், அண்ணா பிறந்தநாளான நேற்று தன அலுவலகத்தில் மலர் தூவி வணங்கினார் என்று புகைப்படத்துடன் வெளி வந்துள்ளது.


இந்த விஜயகாந்திற்கு , அண்ணாவின் மேல் இத்தனை வருடம் இல்லாதப் பாசம், மரியாதயும் இப்ப மட்டும் எங்க இருந்து பீறிட்டு வந்ததுன்னு தெரியுல.

இதற்கு தினமலர் தந்துள்ள அதிக முக்கியத்துவம் ஏன் ?


ஆனால், அண்ணாவின் அரசியல் வாரிசு, பாசத்திற்கு உரிய தம்பி என்று அழைக்கப்படும் நம் முதல்வர் கலைஞர், அண்ணா பிறந்தநாளான நேற்று அவரை மலர் தூவி வணங்கியதை பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் போடவில்லை.



இந்த புகைப்படம் தினமணி இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் முதல்வர் செல்லும் இடங்களுக்கு எப்போதுமே செய்தி சேகரிக்க செல்லும் நிருபர் ஒருவர் இருப்பார்?. அவர் செல்லவில்லையோ?

இல்லையில்லை வேண்டுமென்ற இச்செய்தி புறக்கணிக்கப் பட்டுள்ளது.


இதைப் போல .தி.மு. கட்சியின் தலைவர் ஜெயலலிதா அவர்கள் அண்ணாவை மலர் தூவி வணங்கும் புகைப்படத்தையும், அதைப் பற்றியச் செய்தியையும் போடவில்லை.

இந்த புகைப்படம் தினமணி இணையதளத்தில் வெளியாகி உள்ளது.


தமிழகத்தின் பிராதான எதிர்கட்சியின் தலைவர் அவர்களுடைய செய்திக்கும் முக்கியம் தரவில்லை, தமிழக முதல்வரின் செய்திக்கும் முக்கியத்துவம் தரவில்லை.

விஜயகாந்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் என்ன?

கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப் படவேண்டும் எண்டு நான் கூறவில்லை.

அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தித் தந்தால் வேறுபாடுகள் கழையப்படும்.

ஒரு நேர்மையான பத்திரிக்கையாக இருக்கும்.

இல்லையென்றால் 'தினமலர்' என்பதை 'ஜால்ரா மலர்' என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

Posted by போவாஸ் | at 12:44 PM | 0 கருத்துக்கள்

ஸ்வைன் ப்ளூவிற்கு மாத்திரை டமி ப்ளூவா ? தமிழ் ப்ளூவா

Tamiflu or Tamilflu ?

பன்றிக்காய்ச்சல் நோய்க்கான Tamiflu என்ற மாத்திரை சில்லறை விற்பனை
நிலையங்களிலும் விரைவில் கிடைக்கும் என்ற செய்தியை நான்
ndtv
வெப்சைட்டில் பார்த்தேன், படித்தேன்.

இந்த செய்திக்கு தலைப்பில் Tamiflu என்பதற்கு பதிலாக Tamilflu என்று இருந்தது.

வடிவேலு சொல்வது போல்..அப்படியே நான் ஷாக் ஆய்ட்டேன்.

இந்த படத்தினைப் பாருங்கள்.



படத்திற்குரிய செய்தி லிங்க்
http://www.ndtv.com/news/india/tamilflu_in_stores_from_next_week.php

டிவியை விட இப்பொழுது பெரும்பாலானோர் செய்திகள் படிப்பது உங்களைப் போன்ற செய்தி நிறுவனங்களின் இணையத்தளத்தில்தான்.

ஒரு தேசிய அளவில் செய்தி சேனலாகச் செயல்படும் ndtv செயல்பாடு இதுதானா ?

டைப் செய்யும்போது தவறுதல் வருவது சகஜம் என்றாலும் செய்த வேலையை ஒழுங்காகச்செய்தோமா என்று சரி பார்க்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை.

நான் இந்த செய்தியை படித்து பல மணி நேரங்கள் கழித்தே இதை நான் எழுதுகிறேன்.

இந்த நிமிடம் வரை இந்த தலைப்பில் உள்ள தவறை அவர்கள் பார்க்கவில்லை, சரி செய்யவுமில்லை.

தனக்கு தேவை ஒரு பரபரப்பான ஒரு செய்தி மட்டுமே என்ற குறிக்கோளுடன் செயல்படுகின்றன.

செய்திகளை யார் முந்தித் தருவது என்ற போட்டியில் செயல்படுவதால்தான் இது போல கவனக் குறைவு, தவறான் புள்ளி விவரம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

20 வருடங்கள் தேசிய அளவில் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற ndtv இப்படி செய்யலாமா ?.

இது வெறும் கவனக் குறைவா ?

அல்லது

தமிழ்நாட்டுக்கு ஒரு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செய்ததா ?

Posted by போவாஸ் | at 10:16 AM | 1 கருத்துக்கள்

இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா?

இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா?



நன்றி:தினமலர்.

Posted by போவாஸ் | at 3:48 AM | 2 கருத்துக்கள்

அண்ணா பிறந்தநாள் : சீன் போட்ட விஜயகாந்த்.

முதல்வர் கலைஞர் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசு. கலைஞரும் அண்ணாவின் பாசத்திற்குரிய தம்பியாய் இருந்தார். தி.மு. கட்சியை அண்ணா கலைஞரிடம் ஒப்படைத்தார்.




அந்த நன்றி விசுவாசத்திற்கும், பாசத்திற்கும். மரியாதைக்கும் அண்ணாவை, கலைஞர் அவர்கள் அவரது பிறந்தநாள் போது மலர் தூவி வணங்குகிறார். ஏற்றுக் கொள்ளலாம்.



அடுத்து நம்ம 'அம்மா' ஜெயலலிதா.

கலைஞர் எப்படி பாசத்திற்குரிய தம்பியாய் அண்ணாவிடம் இருந்தாரோ, அது போலவே அளவற்ற பாசத்துடனும், பற்றுடனும் எம்.ஜி.ஆரிடமும் இருந்தார்.
எம்.ஜி.ஆர் தி.மு..வில் இருந்து வெளியே வரும் போது புதிய கட்சிக்கு பெயராக தன் பாசத்திற்குரிய அண்ணாவின் பெயரை சேர்த்து அண்ணா தி.மு. என்று வைத்தார்.
அவர்
மறைந்த பின் அவர் வழியில் வந்த ஜெயலலிதாவும் அண்ணாவை ஏற்றுக் கொண்டு, .தி.மு. கட்சியையும் நடத்தி வருகிறார்.



இந்த நன்றிக்காக அம்மாவும் பேரறிஞர் அண்ணாவுக்கு மலர் தூவி வணங்குகிறார்.

இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.



ஆனால், பேரறிஞர் அண்ணாவுக்கும் இந்த விஜயகாந்துக்கும் என்ன சம்மந்தம்னு புரியலங்க.

இவரு போடுற சீனுக்கும் அளவே இல்லைங்க...

இவருக்கு அண்ணாவைப் பற்றி என்ன தெரியும் ?
அவரது கொள்கை தெரியுமா?
அவர் உழைத்த உழைப்பு தெரியுமா?
அவர் வழிநடத்திய போராட்டங்கள், தீர்வுகள்...இது ஏதாவது இவருக்கு தெரியுமா?
அவர் பேசிய பேச்சுக்களைக் கேட்டதுண்டா?
அவர் எழுதியவைகளை படித்ததுண்டா?
அட...அண்ணா எழுதிய நாடகங்களையாவது படித்ததுண்டா.?

இந்த விஜயகாந்திற்கு , அண்ணாவின் மேல் இத்தனை வருடம் இல்லாதப் பாசம், மரியாதயும் இப்ப மட்டும் எங்க இருந்து பீறிட்டு வந்ததுன்னு தெரியுல.

இந்த படத்தை பாருங்க.


பேரறிஞர் அண்ணா படத்திற்கு முன் வாழைபழமும், ஆப்பிளும், ஆரஞ்சும்.

ஓஹோ..... இதெயெல்லாம் கொடுத்து அண்ணாவுக்கு வாழைப் பழம் கொடுத்த வள்ளல், ஆப்பிள் கொடுத்த வள்ளல், ஆரஞ்சு கொடுத்த விஜயகாந்து...அப்படின்னு பேப்பர் செய்திக்காக (குறிப்பா தினமலர்), வெட்டி பப்ளிசிட்டிக்காக இருக்குமோ ?

இந்த படத்தைப் பாத்தா வணங்கி மரியாதை செலுத்துற மாதிரி தெரியல....போட்டோவுக்கு போஸ் கொடுக்குற மாதிரி தெரியுது.

நானும் google, bing, etc இப்படி பல search engine வெப்சைட்டுல தேடி பாத்துட்டேனுங்க. அண்ணாவுக்கும் விஜயகாந்துக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்மந்தம் இருக்கும்னு பாத்தா ஒன்னுமே இல்லைங்க.

இதப் படிக்கிறவுங்க உங்களுக்காவது ஏதாவது தெரியுமுங்களா?

Posted by போவாஸ் | at 2:14 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails