நகைச்சுவை துணுக்குகள்மனநல ஆசிரியர் : "தம்பி அங்க பாரு பசங்களெல்லாம் பந்த எடுத்துட்டு அங்கயும் இங்கயும் ஓடி விளையாடறாங்க நீ மட்டும் இப்டி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா சொல்லு."
மாணவன் : "அய்யோ! நான் தான் கோல் கீப்பர் சார்."
நண்பர் 1 : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
நண்பர் 2 : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்
கோபு : ஓட்டப்பந்தயத்துல தங்க மெடல் வாங்கினா "ஊக்க மருந்து"ன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க. சரி கடைசில வந்தவங்களையும் ஏன் செக் பண்றாங்க?
பாபு : இவங்க ஏதாவது "தூக்க மருந்து" சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.
நண்பர் 1 : பரவாயில்லையே நாங்க எவ்வளவு அடிச்சும் உங்க பையனுக்கு "ழ" வரவே இல்லை. இன்னிக்கு கரெக்டா சொல்றானே. என்ன செஞ்சீங்க?
நண்பர் 2 : நீங்க எவ்வளவு அடிச்சும் வராத "ழ" அவன் தண்ணியடிச்சதும் தானா வந்துடுச்சு.
ஒருவர் : லோகோ எதுவும் சட்டைல போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு தெரியுமில்ல?
மற்றொருவர் : டிரிங்க்ஸ் குடிக்கறப்ப ஜூஸ் சிந்திடுச்சி சார்!
கணவன் : "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"
மனைவி : "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."
மகன் : அப்பா பைத்தியம்னா என்னப்பா?
தந்தை : சம்பந்தா சம்பந்தமில்லாம நீளமா எதையாவது உளறிகிட்டே இருப்பாங்க பேசறது எதுவுமே புரியாது என்ன புரிஞ்சுதா?
மகன் : சுத்தமா புரியலையேப்பா . . .
ஆசிரியர் : துரியோதனன் தன்னோட உயிர தொடைலதான் வச்சுண்டுருந்தானாம்.
மாணவன் : இதென்ன சார் பெரிய விஷயம் நம்ம கிளா ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
அப்பா : டேய் உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.
மகன் : ஏன் கடன் வாங்கலாமே . . .
நண்பர் 1 : "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"
நண்பர் 2 : "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.
போலிஸ் : டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?
திருடன் : கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா ஐயா?
நோயாளி : "டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க. எனக்கு பயங்கரமா வலிக்குது."
டாக்டர் : கொஞ்சம் பொறுத்துக்குங்க. கொஞ்ச நேரத்துலதான் "எல்லாமே" முடிஞ்சுடுமே."
நீதிபதி : ஏன் இப்படி கைதிகளை முதுகு வளைஞ்ச நிலைலே கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர்றீங்க இப்படியா ட்ரீட் பண்றது?
போலிஸ் : நாங்க மடக்கி பிடிச்சதுல இது மாதிரியாயிடுச்சு சார்.
நீதிபதி : கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம் . . . இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே . . .
குற்றவாளி : என்ன செய்யறது எஜமான் . . . தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா "0001"ன்னு அடிச்சிட்டோம் . . .
மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."
வேலு : யாரது டெய்லி ராத்திரி 2 மணிக்கு வந்து உங்கள கூட்டிட்டு போறது?
ரமனன் : என் பிரண்டுதான். அவனுக்கும் தூக்கத்துல நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால நான் தான் ஒரு கம்பெனிக்காக வந்து எழுப்பச் சொல்லியிருக்கேன்.


Posted by போவாஸ் | at 11:41 PM | 2 கருத்துக்கள்

டீ கடையான தேமுதிக அலுவலகம்.


டீ கடையான தேமுதிக அலுவலகம்.


போன வருஷம், தலைநகர் தில்லியில தே.மு.தி.க., ஆபீசை விஜயகாந்த் திறந்து வச்சாரு. அப்ப நடந்த தடபுடல் விழாவுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து கட்சிக்காரங்க விமானத்தளையும் ரயில்லயும் கைகாசப் போட்டு கஷ்டப்பட்டு போனாங்க. தில்லி கட்சி ஆபீஸ்ல இருந்த ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டு, எல்லாரும் சந்தோசப்பட்டு, அடுத்த பிரதமர் & ஜனாதிபதி விஜயகாந்துதான் என்று கோஷம் போட்டுட்டு தமிழகம் வந்து சேந்தாங்க.
இப்போ என்ன மேட்டருன்னா , செப்டெம்பர் மாசம் 29ம் தேதி, தமிழக  மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்காக, தில்லியில விஜயகாந்த் உண்ணாவிரதம் (நாடகம்) இருந்தாரு. அதுல கலந்துகிரதுக்காக, வழக்கம் போல தங்களது கை காசை போட்டு விமானத்திலும் ரயில்லயும் இங்கிருந்து போன கட்சிக்காரங்க,  ஆசை ஆசையா மிகுந்த பொறுப்புணர்வோடு ஒரு ஆர்வக் கோளாறுல, தில்லி கட்சி ஆபீஸில் இருக்கும் ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட கட்சி ஆபீஸ தேடிப் போய் இருக்காங்க.

தேடு தேடுன்னு தேடி இருக்காங்க..கட்சி ஆபீசைக் காணோமாம். வடிவேலு காமெடி பாணியில்  "கட்சி ஆபீசைக் காணோம் " "கட்சி ஆபீசைக் காணோம் " அப்படின்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தங்களுக்குள் புலம்பிகிட்டு இருந்தாங்களாம்.
கடைசியா அக்கம்பக்கம் விசாரிச்சு கட்சி ஆபீஸ் இருந்த இடத்தை கண்டுபிடுச்சவுங்க....அப்படியே ஷாக் ஆயிட்டாங்களாம்.
கட்சி ஆபீஸ் இருந்த இடத்துல டீக்கடைதான் இருந்துச்சாம்.
ஒரு நிமிஷம் ஆடிப்போன கட்சிக்காரங்க என்ன எதுன்னு விசாரிச்சப்ப, மாசம் 13,000 வாடகை தர முடியாம கட்சி ஆபீசைக் காலி செஞ்சுட்டதா சொல்லி இருக்காங்க.
இதை கேட்டு மேலும் அதிர்ச்சியான கட்சிக்காரங்க நொந்து போய் திரும்பி வந்து இருக்காங்க.

தமிழ்நாட்டுலேயே இன்னும் பெரிதாக சாதிக்க முடியாம இருக்கும் தேமுதிக கட்சிக்கும், விஜயகாந்துக்கும் தில்லியில் கட்சி ஆபீசை ஆரம்பித்தது எல்லாம் தேவையா.
அப்படியே தேவை என்றால் வாடகையை கொடுத்து கட்சி ஆபீசை மூடாமல் இருந்திருக்கலாம். குறைந்த வாடகைக்கு வேறு இடம் மாறி இருக்கலாம்.
ஒரு வேளை இப்படி இருக்கலாம், கட்சி ஆபீசுக்கு மாசா மாசம் வாடகை கட்ட சரியான ஒரு உண்மைத் தொண்டர் கிடைக்கவில்லை போல.
ஆகாயத்தில் கோட்டைகட்ட ஆசைப் பட்டால் இப்படித்தான்.
விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்.
படிப்படியாக முன்னேற நினைக்காமல் ஓவர் நைட்டுல முதல்வரா, பிரதமரா, ஜனாதிபதியா ஆயிடலாம்னு நினைச்சா இப்படித்தான்.
எதுக்கு இப்படி கட்சி ஆபீஸ திறக்கனும், வாடகை கூட கட்ட முடியாம மூடனும்.இந்த பந்தா எல்லாம் தேவையா.
தன்னோட கட்சி ஆபீசுக்கு 13,000 ரூபாய் கட்ட முடியாத நிலையிலா இருக்கிறார் விஜயகாந்த்?.எல்லா செலவுகளையும் தொண்டர்களின் தலையில் கட்டுவிடலாம் என்ற ஒரு அற்ப புத்திதான்.
என்னிக்கு இவரைப் பத்தி, இவரோட கட்சிக்காரங்க தெரிஞ்சு புரிஞ்சிக்கப் போறாங்களோ. பாவம்.

Posted by போவாஸ் | at 8:10 PM | 0 கருத்துக்கள்

புத்தகங்களை விட மனிதனை படித்தவன் நான் - கமலஹாசன். 
  


ரு காலத்துல விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத்துணியோடு  பூஜையை முடிச்சிட்டு, வீட்ல இருக்கிறவங்களுக்கு தீர்த்தம் கொடுத்திருக்கேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவுபூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடுச்சு!'' - எடுத்தவுடனேயே வெளிப்படையாக பேசத் தொடங்குகிறார் கமல்.

'கமல் 50 - ஒரு தொடரும் சரித்திரம்' நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறது, விஜய் டி.வி. இந்த கொண்டாட்டங்களுக்கிடையே கமலை  அவருடைய ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தோம். லேட்டஸ்ட் 'ஸ்பைக்' ஹேர்ஸ்டைலில் இன்னும் ஹேண்ட்ஸம்மாக கமல். சினிமாவில் பயணித்த இந்த ஐம்பது வருடங்களில் தட்டிக் கொடுத்தவர்களையும், சிந்திக்க வைத்த தருணங்களைப் பற்றியும் கமல் பேசிய விஷயங்கள் கமலைவிட அழகு!

என்னை உற்சாகப்படுத்திய கேள்வி!

''குடும்பத்தோட நான் வளர்ந்த சூழல்தான் என் சினிமா பயணத்தின் ஆரம்பம். எனக்கு ஐந்து வயசு இருக்கும்போதே எந்த விஷயமா இருந்தாலும் 'நீங்க என்ன நினைக்கிறீங்க?ன்னு என்கிட்ட வீட்ல கேட்பாங்க. இந்தக் கேள்வியை கேட்டாலே உற்சாகமாகிடுவேன். சின்ன வயசில் என்னுடைய கருத்துக்குக் கொடுத்த முக்கியத்துவமும் மரியாதையும்தான் என்னுடைய தனித்தன்மையை எனக்கே புரிய வைச்சது. 

பொறுப்புகள் தந்தவர்!!

விஜய் டி.வி.யின் 'கமல் 50- ஒரு தொடரும் சரித்திரம்' நிகழ்ச்சியில் 16 எபிஸோடுகள் என்னைப் பற்றி பாலசந்தர் சார் பேசியிருக்கார். அவரைப் பற்றி நான் பேச 36 எபிஸோடுகள் தேவை. அவருடன் 36 படங்கள் பண்ணியிருக்கேன். ஆரம்பத்துல அவர் சொல்லிக் கொடுத்ததை நடிச்சிருக்கேன். பல படங்களுக்குப் பிறகு 'எல்லாம் கமல் பார்த்துப்பார்'ன்னு நம்பி பொறுப்புகளைக் கொடுப்பாரு. சினிமாவில் அவர் எனக்குக் கொடுத்தது எல்லாமே டபுள் புரமோஷன்தான்.

தட்டிக் கொடுத்தவர்கள்!

'களத்தூர் கண்ணம்மா'வில் 'எவ் வளவுப்பா சம்பளம் வேணும்?'னு பெரியவர் கேட்டார். 'பிளைமோத் காரும், ரெண்டு அல்சேஷன் நாய்க்குட்டியும் வேணும்'னு கேட்டேன். 'கெட்டிக்காரன்பா'ன்னு தட்டிக் கொடுத்தாரு.  சைக்கிள் சீட்டைப் பிடித்துக்கொண்டு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தவர், நூல்விட்டு காத்தாடி விட சொல்லிக் கொடுத்தவர், இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் சொல்லிக் கொடுத்தவங்க எல்லாருமே எனக்கு வாத்தியார்தான்!

படிச்சாதானா?

சில சமயங்களில் சில இடங்களில் கல்வித்தகுதி என் ஆசைகளுக்குத் தடையாக இருந்திருக்கு. சமீபத்தில் ஃபிளையிங் கிளப்பில் சேர விரும்பினேன். அப்ளிகேஷன் ஃபார்மில் தேவைப்படும் கல்வித்தகுதி இல்லாததுனால எனக்கு இடம் கிடைக்கலை. இங்கே பரீட்சை எழுதிதான் புத்திசாலின்னு நிரூபிக்க வேண்டியிருக்கு. அதனால அடிப்படை கல்வித் தகுதிங்கிற 'கேட் பாஸ்' நிச்சயம் தேவை. படிப்பை முடிச்சிடுங்கன்னு மகள்களிடம் சொல்லிட்டு வரேன்!

விட்டுக் கொடுக்கமாட்டேன் !

ஸ்ருதியின் பிறப்புச் சான்றிதழில் மதத்துக்கான இடத்தை வெற்றிடமாதான் விட்டிருக்கிறேன். போராடித்தான் அந்த சான்றிதழை வாங்கினேன். என்ன மதம்னு அப்ளிகேஷனில் கேட்காத பள்ளியில்தான் மகள்களைப் படிக்க வைச்சேன். என்னுடைய கொள்கைகளை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டேன்.

மனிதர்களைப் படிச்சவன்!

புத்தகங்களை விட நிறைய மனிதர்களைப் படிச்சிருக்கேன். அனந்துவைப் படிச்சேன், பாலசந்தர் சாரை இன்னும் படிச்சிட்டிருக்கேன்.

விஜய் டி.வி.யில் தொடரும் சரித்திரம்!

என்னைப் பற்றி ஒரு சரித்திர நிகழ்ச்சின்னு சொன்னவுடன் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால், விஜய் டி.வி. இந்த நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்திக்காட்டுவாங்கன்னு ஒப்புக்கிட்டேன். கமலும் காதலும், கமலும் தமிழும் எபிஸோடுகள் இதமான நினைவுகள். 

ஹெல்த் இஸ் வெல்த்!

புகை பிடிப்பதில்லை... 'பிடிச்சதேயில்லை’னு சொல்லமாட்டேன். பிடிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே நிறுத்திவிட்டேன்!

ரஜினி!
ஒரு போட்டி இருந்தால்தான் நமக்குள் ஒரு உற்சாகம் கிடைக்கும். அந்த ஒரு ஆரோக்கியமான போட்டி எனக்குக் கொடுத்தவர் ரஜினி! அந்தப் போட்டிக்கிடையே எங்களுக்குள் இருக்கிற நட்பு கொள்ளை அழகு...''


நன்றி: குமுதம்

Posted by போவாஸ் | at 5:41 PM | 0 கருத்துக்கள்

கலைஞர்' மாதிரி 'அம்மா'வும் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டாங்களாஅப்போ நான் போயிட்டு வரேங்க மேடம். 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கலைஞரால் கூட்டணியிலிருந்து வெளியேற்றப் பட்டது, ராமதாசின் பாமக கட்சி.
இதை சற்றும் எதிர்பாராத ராமதாஸ் சிக்கித் தவிக்கும் வேளையில் நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவிடம் ஒட்டி உறவாடி கூட்டணி வைத்தது. தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதியிலும் வரலாறு காணாத அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

இதன் பின்னர் அதிமுக கூட்டணியில் இருக்கும் பிற கட்சித் தலைவர்கள் அம்மாவை சந்தித்த போதும் இவர் சந்திக்கவில்லை. சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்றே பேச்சு.
பலரும் பல வகையில் கிண்டல் செய்து எழுதினர். அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக பாமக ராமதாஸ், அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், எங்களது கூட்டணித் தொடரும், பொய் செய்திகளை தமிழக அரசு பரப்புகிறது என்றும், செயததாள்கலும் பொய்யான இந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்றும் கூறினார். நேரில் பார்க்காவிட்டாலும் போனில் பேசிக் கொள்வோம் என்று ஒரு வாறு கூறிக் கொண்டிருந்தார்.
நேற்றுகூட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு எங்கள் கட்சி ஆதரவு தரும் என்றே கூறி பரபரப்பு ஆக்கினார்.
24 மணி நேரத்திற்குள் என்ன ஆனதோ, ஏதானதோ....இன்று அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிப் பணி, எதிர்கால திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற முடிவு எடுக்கப்பட்டது என்று பாமக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

எனது ஆசை என்னவென்றால்...இனி இவரை எந்த கட்சியும் தங்களுடன் கூட்டணி சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதே. முக்கியமாக திமுக சேர்க்கக் கூடாது. தனியே திரிந்தால்தான் அருமை புரியும்.
இவரால் தன், வன்னிய ஜாதி சமுதாயத்திற்கும் உபயோகமில்லை, தமிழக மக்களுக்கும் உபயோகமில்லை. உபத்திரவம்தான்.
ஒட்டிகொண்டிருந்த துளி மரியாதையும் இப்போ போச்சு.
-----------------------------------------------------------------------------------------------------------


 "டமில் குடிதாங்கி அவர்களே, நீங்களாவே கூட்டணியிலிருந்து விலகிட்டிங்களா? இல்ல 'கலைஞர்' மாதிரி 'அம்மா'வும் உங்களை கழுத்த பிடிச்சு வெளிய தள்ளிட்டாங்களா. அட...சும்மா...கூச்சப்படாம உண்மைய சொல்லுங்க".

Posted by போவாஸ் | at 4:40 PM | 2 கருத்துக்கள்

சாதியைக் கூறாமல் "தமிழன்' என்று கூறும் நிலை வர வேண்டும்: ஸ்டாலின்


" நீங்கள் யார்? என்று கேட்டால், நம்மில் எத்தனை பேர் நான் தமிழன் என்றோ, மனிதன் என்றோ கூறுகிறோம். எல்லோரும் அவரவர் சாதியைதான் கூறுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். நான் தமிழன் அல்லது நான் மனிதன் என்று கூறும் நிலை வர வேண்டும்.

சதிக்கு கால் முளைத்ததால் அது சாதி; அதேபோல, சா"தி'-க்கு கொம்பு முளைத்தால் அது "தீ'யாக மாறிவிடும் " என்றார் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நல்ல எண்ணத்தில் கூறிய மிகச் சரியான கருத்து, வரவேற்கிறோம்.

ஆனால் சொல்பவர்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டால்தான் மற்றவர்களுக்கும் தம்மைச் சாதிவழியாகச் சிந்திக்காமல் தமிழனாகவோ மனிதனாகவோ சிந்திப்பர்.

பள்ளியில் குழந்தையை சேர்க்கும்போது தேவைப்படுகுறது ஜாதி என்ற அங்கீகாரம்.
அதிலிருந்து தொடங்கி உத்தியோகம் வரை ஜாதி அடிப்படையிலேயே உதவிகளும், சலுகைகளும், ஏன், பெரிய பதவிகள்கூட ஜாதி அடிப்படையிலேயே கிடைக்கின்றது.
திமுக தொடங்கி நேற்று கட்சி ஆரம்பித்த ஓய்வு நேர அரசியல்வாதியான விஜயகாந்த் வரை தங்களது வேட்பாளர்களை ஜாதி,மத அடிப்படையிலேயே நிறுத்துகிறார்கள்.

அறிவுரைகளையும், இது போன்ற நல்ல கருத்துக்களையும் சொல்வது எளிது. ஆனால், அதை செயல்படுத்துவது மிக மிகக் கடினம்.

சமச்சீர் கல்வியைப் போல பொதுவான, சமமான கல்வி அறிவைக் கொடுத்தாலே பகுத்தறிவு பிறக்கும்.
பகுத்தறிவினால் தான் ஜாதி மத பேதங்கள் ஒழியும்.

துணை முதல்வரால் முடிந்தால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொது ஜாதி என்ன என்று கேட்கக்கூடாது, குறிப்பிடக்கூடாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும்.
இதை செயல்படுத்தினால், பள்ளியில் படிக்கும் 1000 பேரில் ஒரு 100 பேராவது ஜாதி மத பேதமில்லாமல் வளர முடியும், இருக்க முடியும்.
காலப் போக்கில் 100 பேரில் இருந்து 1000 பேர் என்று மாறுவது நிச்சயம்.
முற்றிலும் மாற குறைந்தது ஒரு தலைமுறையாவது தேவைப்படும்.
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

வெறும் வாய் சொல்லோடும், கைத் தட்டலுக்காக மட்டுமில்லாமல், தமிழக முதல்வர் & கோ தெளிவான முறையான நிலையான முடிவை எடுக்க வேண்டும்.

பேஷ்மன்ட் ஸ்ட்ராங்கா இருந்தா பில்டிங்கும் ஸ்ட்ராங்கா இருக்கும்.

Posted by போவாஸ் | at 3:34 PM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails