நகைச்சுவை துணுக்குகள்

என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.
எப்படி சொல்ற?
உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்'னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு
எங்க ஆபிஸ் மேனேஜருக்கு குழந்தை மனசு

எப்படிச் சொல்ற?

என் மடியில படுத்துதான் தூங்குவார்.
என்ன உன் கணவர் தூக்கதுல 'ஹலோ.. ஹலோ..'ன்னு டெலிபோன்ல பேசறது மாதிரி பேசறாரு?.
நான்தான் சொன்னேனே, அவருக்கு தூக்கத்துல 'கால்' போட்ற பழக்கம் இருக்குன்னு.
நண்பர் 1: எப்பவும் 'காப்பி' அடிச்சே பாச பண்ணுவானே, உன் பிரண்டு..இப்ப என்ன பண்றான்?.
நண்பர் 2: ஒரு பத்திர்க்கை ஆபிசில 'காப்பி' ரைட்டரா இருக்கான்.

நண்பர் 1: டேய் நீ வெப்சைட் வெச்சிருக்கியா..?
நண்பர் 2: இல்லடா.. பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்

அமலா : என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!
விமலா : இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்.

நண்பர் 1 : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
நண்பர் 2 : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்.

என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?
பின்ன நீ செஞ்சு வச்ச பலகார‌த்தை எ‌ல்லா‌ம் சா‌ப்‌பிட‌ணு‌ம்னா வேற எ‌ன்ன ப‌‌ண்றது சொ‌ல்லு?

நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?
சோமு : ம் .. .. .. உங்க வீடா ?

Posted by போவாஸ் | at 7:13 PM | 1 கருத்துக்கள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை - கலைஞர்உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதில் தமிழ்மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர; அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்று தமிழக முதுல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தைப் புறக்கணித்துவிட்டு கழக அரசு எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஏகடியம் செய்வதும்; நாளுக்கொரு அறிக்கை வெளியிடுவதும் எதிர்க்கட்சியின் தலைவி அம்மையார் ஜெயலலிதாவின் அன்றாட நடைமுறையாகிவிட்டது. கோவையில் 2010 ஜூன் திங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பற்றி இன்றைக்கு அவர் அறிக்கை எழுதியுள்ளார்.

உலகத்தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது ‘‘சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்’’தான் என்று அவர் தனது அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார். அப்படி அவர் குறிப்பிட்டிருப்பது அவர் ஆட்சியில் அவர் தஞ்சையில் நடத்திய எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டுக்கே எந்தவகையிலும் முன்மாதிரியாக அமைந்திடவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் 1993 1994ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் (பக்கம் 53, பத்தி 106) 12.3.1993 அன்று, ‘‘எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1994ல் தமிழ்நாட்டில் நடைபெறும் என்பதை அறிவதில் இம்மன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைவார்கள்’’ என்று அச்சியற்றி அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1994ஆம் ஆண்டில் நடத்தப்படவில்லை. மீண்டும் 1994 1995ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் (பக்கம் 36, பத்தி 109) 23.3.1994 அன்று, ‘‘எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சாவூரில் 1995ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 1ஆம் நாள் அன்று தொடங்கி மிகப்பெரிய அளவில் நடத்தப்படவிருக்கிறது என்பதை அறிவதில் இம்மாமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்கள் பெருமகிழ்ச்சியடைவர்’’ என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக செய்யப்பட்ட இந்த அறிவிப்பின்படிதான் தஞ்சையில் 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இரண்டு நிதிநிலை அறிக்கைகளில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு குறித்து அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட அறிவிப்பு தன்னிச்சையான அறிவிப்பே தவிர; உலகத்தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்தான் என்று ஜெயலலிதா தற்போது குறிப்பிட்டிருப்பதைப் போல அப்போது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் அறிவிக்கவில்லை. உபதேசம் அனைத்தும் மற்றவர்களுக்குத்தானே தவிர அவர்களுக்கில்லை.

நமக்குத் தரப்பட்டுள்ள தகவலின்படி, உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, அதன் பின்னரே உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர் அப்போது இந்தியாவிலே இருப்பது அறிந்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து அன்றைய நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அவருக்கு மாநாடு பற்றி தெரிவித்தார்.

இப்போது கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு; உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவராக விளங்கும் முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களையும், பொருளாளர் திரு.இரா.முத்துக்குமாரசாமி அவர்களையும், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஒய்.சுப்புராயலு அவர்களையும், உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தில் நெடுங்காலமாக இணைந்து ஆய்வு செய்துவரும் தொல்லியல் அறிஞர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களையும் கலந்து பேசியே மாநாட்டுத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.

கட்டுரை தயாரித்திட ஆய்வாளர்களுக்குப் போதிய கால அவகாசம் கூடுதலாகத் தேவைப்படும் என்றும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் விடுமுறைக்காலம் ஜூன்   ஜூலையில் அமைகிறது என்பதாலும், 2010 ஜனவரிக்குப் பதிலாக, 2010 ஜூன் ஜூலையில் மாநாட்டை நடத்தலாம் என்று தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ள ஜப்பான் நாட்டுப் பேராசிரியர் நொபுரு கரஷிமா அவர்கள் தமிழகத்தில் மாநாட்டினை 2011 ஜனவரி மாதத்தில் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், 2011 ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால்; அவரது கருத்தினை ஏற்றுச் செயல்படுவதில் உள்ள பிரச்சினைகள் தமிழறிஞர்களுக்கு விளக்கப்பட்டு; அவர்களும் அதனை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு தமிழக அரசின் முயற்சிகளுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்துள்ளார்கள்.

உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் பொறுப்புகளில் உள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் இசைவளித்துள்ள நிலையிலும், உலக அளவிலும், இந்தியாவிலும் வாழக்கூடிய தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களுமாக 50க்கும் மேற்பட்டோர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்திட முன்வந்ததற்குப் பாராட்டினையும், 2010 ஜூன் மாதத்தில் மாநாட்டை நடத்த முடிவெடுத்ததற்கு நன்றியினையும் தெரிவித்துக் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகள் தொடர்பான உலகத் தமிழ் ஆய்வுக்கழகப் பொறுப்பாளர்கள், ஐம்பெருங்குழு எண்பேராய உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள், பல்துறை ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு பலமுறைக் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பெற்று, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முக்கியக் கூறாக இருப்பது ஆய்வரங்கம். உலக அளவில் ஆய்வாளர்களைக் கொண்டு நடத்தப்பெறத்திட்டமிடப்பட்டுள்ள தரம்மிக்க கட்டுரைகளைக் கொண்டதாகத் திகழவிருக்கின்ற ஆய்வரங்க அமைப்புக் குழு உலகளாவிய நிலையில் ஒருமித்துஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இலங்கைப் பேராசிரியர் முனைவர் கா. சிவத்தம்பி அவர்களைத் தலைவராகக் கொண்டும்; முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ ஆகியோரை இணைத் தலைவர்களாகக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கிறது.

1995க்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதியிலும் தமிழுக்கென்று ஒரு மாநாடு நடைபெறவில்லையே எனும் பெரும் குறையைத்துடைத்திடவும்; அண்மைக்கால தொல்லியல், வரலாற்றியல், மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு தமிழ் மொழி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும்; உலகளாவிய நிலையில் தமிழ் மொழி இலக்கியப் பண்பாடு தொடர்பான ஆய்வாளர்களை ஒருங்கிணப்பதற்கும்; அவர்கள் அனைவரும் ஓரிடத்திலே கூடிச் சிந்திப்பதற்கும் வசதியாகத்தான் இந்த மாநாட்டை தமிழக அரசு நடத்த முன்வந்திருக்கிறது.

தமிழர்களின் நூறாண்டு கனவாக இருந்து வந்ததும், தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் முதலாக தொடர்ந்து காலந்தோறும் தமிழுக்குச் செம்மொழித் தகுதி வேண்டிப் போராடி வந்த நிலையிலும், 2004ஆம் ஆண்டு தமிழுக்குச் செம்மொழித் தகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் பங்குபெற்றிருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழங்கிப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலும், கடந்த மாநாடுகளை விடவும் இந்த மாநாட்டிற்கு ஒரு தனிப்பெரும் சிறப்பு சேர்ந்திருக்கிறது.

எனவே, கடந்த மாநாடுகள் தமிழ் மாநாடுகளாக நடைபெற்றிருக்க, தமிழ்ச் செம்மொழித் தமிழாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாட்டை   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று நடத்துவதே பொருத்தம் என்று தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும் கருதியதன் அடிப்படையிலும்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் வேறு அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்பதைத் தொடக்கம் முதலே இம்முயற்சியில் இணைந்து பணியாற்றிவரும் தமிழறிஞர்கள் அனைவரும் நன்றாகவே அறிவார்கள்.

தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆய்வு, தமிழ் அறிஞர்கள் தொடர்பானவற்றில் ஜெயலலிதா போன்றவர்கள், முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Posted by போவாஸ் | at 12:02 PM | 0 கருத்துக்கள்

தமிழ் சமூகம், கலாச்சாரம் சீரழிவிற்கு இதுவும் ஒரு காரணம்.


தமிழ் சமூகம், கலாச்சாரம் சீரழிவிற்கு இது போன்ற அழகு போட்டிகளும் ஒரு வகையில் காரணம்தான்.


அதிலும் குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வேதனைதான். கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, சமூக அக்கறையுடன் கூடிய பட்டிமன்றங்கள், உரையாடல்கள், கருத்து மேடை, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, அறிவு சார்ந்த போட்டி போன்றவைகளை நடத்தினால் மனதிற்கும் ஒரு சந்தோஷம், உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒருவித உற்சாகம், தனக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.
அழகு போட்டியின் மூலம் என்ன சமுதாய சீர்திருத்த ஏற்றத்தை ஏற்படுத்த முடியும் ?. சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்க இதைப் பிரபலப்படுத்த போகிறார்களாம், நடத்தப் போகிறார்களாம்.
இது அழகு போட்டியன்று, அடங்காபிடாரிகளின் ஆணவப் போட்டியென்று நான் நினைக்கிறேன்.

Posted by போவாஸ் | at 2:40 AM | 0 கருத்துக்கள்

மனநலம் பாதிக்கப்பட்டோர் அனுபவிக்கும் அவலங்கள்

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோர் அனுபவிக்கும் அவலங்கள்:

Posted by போவாஸ் | at 12:09 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails