ரூ.100 கோடி வசூல்?அ.தி.மு.க., தேர்தல் பின்னணி


ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கிளைக் கழகங்கள்; 115 நகரம்; 400 ஒன்றியங்கள்; 600 பேரூராட்சி; 10 மாநகராட்சி என, பிரம் மாண்ட தேர்தல் திருவிழாவிற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அ.தி.மு.க., கிளைக்கழகம் துவங்கி மாவட்டச் செயலர் தேர்வு வரையில், ஐந்து கட்டமாக நடக்கவுள்ள இந்த தேர்தலால், அ.தி.மு.க., வட்டாரம் பரபரப்புஅடைந்துள்ளது.


கிளைச் செயலருக்கு 100 ரூபாயில் துவங்கி, மாவட்டச் செயலருக்கு 15 ஆயிரம் ரூபாய் என, தேர்தல் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க.,விற்கு 100 கோடி ரூபாய் வரை கட்டண வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்த, மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். கட்சியின் சீனியர்களான ஓ. பன்னீர்செல்வம், முத்துசாமி, பொன்னையன், மதுசூதனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செங்கோட்டையன், தம்பிதுரை, செம்மலை உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


கட்சியின் தற்போதைய "ஸ்டாரான' இளைஞர் பாசறை வெங்கடேசுக்கு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு, தேர்தல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், இன்னொரு மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தே.மு.தி.க.,வில் இருந்து தாய்கழகம் திரும்பிய கு.ப.கிருஷ்ணனுக்கு கோவை உக்கடம் பகுதி தேர்தல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.த.மா.கா., சார்பில், கோவை மாநகராட்சியில் மேயராக இருந்து, அ.தி.மு.க.,வில் இணைந்த கோபாலகிருஷ்ணனுக்கும், துணைமேயராக இருந்த வேலுச்சாமிக்கும் கீழ்கோத்தகிரி ஒன்றியத்தில் தேர்தல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.


கட்சித் தேர்தல் அறிவிப்பு, அ.தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தேர்தல் நடத்த தலைமை வகுத்துள்ள வியூகம் குறித்த பரபரப்பு தகவல்கள், பல நிர்வாகிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.


இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அ.தி.மு.க., வின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சித் தேர்தல் என்ற பழைய முறை மாறி, தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கிளை, ஒன்றியம், நகரம், மாவட்டம் என, படிப்படியாக தேர்தல் நடத்தப்பட்டு, அதன் முடிவில் பொதுச் செயலரை தேர்வு செய்யும் முறையும் தற்போது நடைமுறையில் இல்லை.தொண்டர்களே நேரடியாகப் பொதுச்செயலரை தேர்வு செய்யும் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2003ம் ஆண்டு கிளைக்கழகத்திற்கு மட்டும் தேர்தல் நடத்தி விட்டு, மற்ற நிர்வாகிகள் கொளப்பாக்கத்தில் நடந்த நேர்காணலில் நியமனம் செய்யப்பட்டனர்; இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; அடுத்து நடந்த லோக்சபா தேர்தலில் அதன் பலனும் தெரிந்தது.


அதன்பின், அதிரடியாக நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். ராவணன், கலியமூர்த்தி, வெங்கடேஷ் என, கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்ட "மானேஜர்'களின் கட்டுப் பாட்டில், கட்சி நிர்வாகிகள் கொண்டு வரப்பட்டனர். இன்று வரை அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நிர்வாகிகளும் தொடர்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 25 வயது வரை இளைஞர் பாசறை; 35 வயது வரை எம்.ஜி.ஆர்., இளைஞரணி; 45 வயது வரை ஜெ., பேரவை, அதன்பின் கட்சிப் பொறுப்பு என ஏற்கனவே பொதுக்குழுவில் அறிவிக் கப்பட்டுள்ளது.இந்த "சிஸ்டம்' தேர்தலில் பின்பற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெ., பேரவைக்கு வகுக்கப்பட்டுள்ள விதிப்படி 45 வயதுக்குட்பட்டவர்கள்தான் செயலர் பதவிக்கு வர வேண்டும். இதே வயது வரம்பை, கட்சி கிளைச் செயலர் பதவிக்கும் கொண்டு வர கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.


தற்போதுள்ள கட்சி நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர், 45 வயதைக் கடந்தவர்கள். கட்சியில் பழைய ஆட்களை ஒதுக்கிவிட்டு, ஜெ.,பேரவையில் தற்போது உள்ள செயலர்களை கட்சிக்கு செயலர் ஆக்க திட்டமிடப் பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்சியின் "பவர்புல்' பொறுப்பான செயலர் பதவி தவிர மற்ற பதவிகளை வகிக்கலாம்.இதை அமல்படுத்தும் வகையில், கிளைச் செயலர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப் பட்டு அறிவிப்பு வெளியானது. இது போன்ற ஒவ்வொரு கிளையாக மாற்றம் செய்வதற்கு பதில், தேர்தல் என்ற பெயரில், வயது வரம்பை காரணம் காட்டி, இளையவர்களை பொறுப்புக்கு கொண்டு வர கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.இளைஞர் பாசறை, ஜெ., பேரவை இவையிரண்டுக்கும், கட்சித் தலைமை முக்கியத்துவம் கொடுப்பது இதை உணர்த்துகிறது. தேர்தல் மூலம் இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைக்கும் திட்டம் கட்சியில் பல பூகம்பங்களை ஏற்படுத்தும். அது வளர்ச்சிக்கு வழிவகுக்குமா, வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுமா என்பதை காலம் நிர்ணயிக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நன்றி:தினமலர்.

Posted by போவாஸ் | at 11:36 PM | 0 கருத்துக்கள்

ஆதிக்கத்தை இழக்கிறது அமெரிக்க டாலர் !!!


Top global news update
அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இனி உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது.உலகப் பொருளாதாரத்திற்கு தரப்படும் ஊக்குவிப்புகளால், அடுத் தடுத்து ஓரளவு நிலைமை சீராகும் என்ற கருத்து பேசப்பட்டாலும், அது அமெரிக்க கரன்சியான டாலரின் ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்க்கவில்லை.


பல்வேறு நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கையிருப்பு கரன்சியாக 64 சதவீதம் அமெரிக்க டாலர் இருக்கிறது. அப்படியிருக்கும் போது யூரோ கரன்சி, அல்லது அந்தந்த நாட்டின் கரன்சி எப்படி முன்னுக்கு வரும் என்ற கேள்வி எழும்.


சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம் மேற்கொள்ளும் போது, அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடையாமல், ஏற்பாடுகள் செய்வார் என்ற பேச்சு இருக்கிறது.நெருடல் உறவு :அதிக அளவு அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்திருக்கும் நாடுகளில் சீனாவுக்கு முதலிடம் உண்டு.


அமெரிக்காவின் பொருளாதார வெற்றி சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி எதிர்பார்த்த வெற்றி ஏற்படவில்லை என்றால், அது அமெரிக்க - சீன பொருளாதார உறவை பாதிக்கும். வேண்டுமென்றே தன் கரன்சியான யுவானை சற்று மதிப்புக் குறைவாக சீனா வைத்திருப்பதின் மூலம், அமெரிக்காவுக்கு தன் பொருட்களை அதிக ஏற்றுமதி செய்யப் பார்க்கிறது என்ற பேச்சும் இருக்கிறது. இந்த நெருடல்களை எப்படி அமெரிக்காவும், சீனாவும் பேசித் தீர்க்கப் போகின்றன என்பது இனி தான் முடிவாகும்.


கடந்த சில வாரங்களில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கரன்சிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் மதிப்பு கூடி நிற்கின்றன. இதில், மற்றொரு கரன்சியான யூரோ அதிக நம்பிக்கை தரும் கரன்சியாக பிரிட்டன் ஸ்டெர்லிங் பவுண்டை விட முந்தி நிற்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் மட்டும் உள்ள பொருட்கள் மவுசு குறைந்து வருகிறது.


இவை எல்லாம் பார்க்கும் போது, என்னதான் வளர்ந்த நாடுகள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகப் பணத்தை ஊக்குவிப்புகள் என்ற பெயரில் கொட்டினாலும், மேலும் ஏதாவது அபாயம் வந்து விடுமோ என்ற அச்சம் வந்து விட்டது. அதன் எதிரொலியாக, அதிக அளவு நிதி வைத்திருப்பவர்கள் வழக்கத்திற்கு மாறாக தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.


ஐரோப்பாவில் எந்த ரசீதும் இல்லாமல் தங்கக் கட்டிகளை வாங்கி சேமிப்பாக வைக்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், வெள்ளிக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. நூறு கிராம் எடையுள்ள தங்கக்கட்டி உள்ளங்கையில் அடங்கிவிடும், அதன்விலை 3,500 டாலர், அதாவது அதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய். உலக கோல்டு கவுன்சில் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது.


இந்தியாவில் ரிசர்வ் வங்கியும், கையிருப்பில் உள்ள டாலரைக் கொண்டு 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எப்.,மிடம் இருந்து வாங்கியிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் பிரணாபோ, "பணம் இருந்ததால் தங்கம் வாங்கினோம்: இன்னமும் அன்னியச் செலாவணிக்கு போதிய கையிருப்பு இருக்கிறது' என்றிருக்கிறார்.ஆஸ்திரேலிய நாடு, தொழில்துறைக்கு தேவையான கச்சாப் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு. இங்கே, அந்த நாட்டு டாலர் மதிப்பு கூடியிருக்கிறது. அடுத்தாற்போல் தங்கள் நாட்டு டாலர் மதிப்பு சரியவிடாமல் இருக்க யுக்தியை வகுக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்.


முக்கியமாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் மத்தியில் டாலர் மதிப்பு வீழ்ச்சி கவலை தருகிறது. அமெரிக்காவின் நெருக்கமான நாடான சவுதி எண்ணெய் வர்த்தகம் டாலர் கரன்சியில் தொடர்ந்து இருக்க விரும்புகிறது. ஆனால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ( ஒபெக்) கூட்டத்தில் வெனிசூயலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும், கடந்த இரு ஆண்டுகளாகவே கேள்வி எழுப்புகின்றன.


கச்சா எண்ணெயை விற்று டாலராகப் பெற்று, அதை வைத்து நமக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் போது டாலர் வீழ்ச்சியால் அப்பொருட்கள் கூடுதல் விலை மதிப்பு பெறுகின்றன. இதைத் தடுக்க யூரோ, யென் போன்ற கரன்சிகளுக்கும் வர்த்தகம் செய்தால் என்ன என்பது இவர்கள் கேள்வி. இதற்கு இன்னமும் விடை காணவில்லை.


ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்குள் நடக்கும் வர்த்தகத்தில் டாலர் தேவையின்றி, பரஸ்பரம் இருநாட்டு கரன்சிகளை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து ஒப்பந்தமும் ஆகியிருக்கிறது. இப்பாணியில் பிரேசில், இந்தியா பேச்சு நடைபெறுகிறது.


இவைகளை எல்லாம் பார்க்கும் போது, அடுத்த சில மாதங்களில் டாலர் வலுப்பெறும் தன்மை அதிகரிக்காத பட்சத்தில், உலக நாடுகள் பலவும் தங்களது கரன்சியை சரிய விடாமல் காக்க, புதிய அணுகுமுறைகளை அமல் படுத்த நேரிடும் நிலைக்கு தள்ளப்படும் புதிய சூழ்நிலை உருவாகி வருகிறது.


பைபிளின் உள்ளபடி பார்த்தால்,பிரிந்து இருக்கின்ற ஐரோப்பா நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததும், ஒன்று சேர்ந்த ஐரோப்பா நாடுகள் ஒரு மனிதரின் கட்டுபாட்டுக்குள் வரும். 


தற்போது ஐரோப நாடுகளில் மட்டும் பயன் படுத்தக் கூடிய யூரோ கரன்சி அந்நேரத்தில் உலகெங்கும் அங்கீகரிக்கப்பட்டு ஒரே நாணயமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து நாடுகளின் வர்த்தகமும் யுரோவிலே இருக்கும்.


இது கண்டிப்பாக நடக்கும்..நடந்தே தீரும். எனென்றால் பைபிளில் குறிப்பிட்டுள்ள அனைத்து சம்பவங்களுமே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Posted by போவாஸ் | at 6:40 PM | 0 கருத்துக்கள்

பிரேமலதாவுக்கு என்ன பொறுப்பு


                                            Special news today
கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மூன்று நாட்கள் நடந்தன.

இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு பதில் அவரது மனைவி பிரேமலதா கலந்து கொண்டார். அதற்கு முன் நடந்த தொழிற்சங்க அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். ஆனால், மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி, கட்சி ஆபீஸ் பக்கமும் எட்டிப் பார்க்கவில்லை. சென்னையில் இருந்தால் கட்சி ஆபீஸ் வந்து செல்லும் விஜயகாந்த், மகளிர் அணி கூட்டம் நடந்த மூன்று நாட்களும் அங்கு வராததால், மாநில நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். 

கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா, விஜயகாந்த் பாணியில் மகளிர் அணியினருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அவர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து அளித்தார். ஆனால், கடைசி வரை கட்சியில் பிரேமலதாவுக்கு என்ன பொறுப்பு என தெரியாமலே மகளிர் அணியினர் கலைந்து சென்றனர்.

நன்றி:தினமலர்


இதப்படிக்கிற விஜயகாந்து ரசிகர், தேமுதிக தொண்டர் யாரவாது இருந்தீங்கனா பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சில என்ன பொறுப்புன்னு கொஞ்சம் சொல்லுங்கபா,

Posted by போவாஸ் | at 1:11 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails