சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து:கபில்சிபல்


2011ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வுகள் அடியோடு ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் நாடாளுமன்றத்தில் அறிவித்-தார்.
நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தின்போது, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து அய்க்கிய ஜனதா தள கட்சித் தலைவர் சரத்யாதவ் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், இத்திட்டம் ஒரு பிரிவினருக்கு சாதமாக அமைந்து விடும் என்று குற்றம் சாற்றினார். இதற்கு பதில் அளித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் கூறியதாவது: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது யாருக்கும் சாதகமாக அமைந்து விடாது.
வருகிற 2011ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் இருக்காது. 10ஆம் வகுப்புக்கு பின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு போர்டு பள்ளிகளின் பாடத் திட்ட முறைகளுக்கு மாற இயலாது.
நடப்பு கல்வி ஆண்டில் (2009-_2010) இருந்து அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 9ஆம் வகுப்பில் மாணவர்களிடையே தொடர்ச்சியான மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறை தீவிரப்படுத்தப்படும்.
2010ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடிங் முறை அறிமுகம் செய்யப்படும். இதேபோல் 2009_10ஆம் ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும்.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது என்கிற புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கு முன்பாக கல்வித்துறையின் அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு கல்விக் குழுக்கள் தேர்வு முறையில் சீர்திருத்தம் தேவை என்று வற்புறுத்தி வந்தன. எனினும் அவை அமல்படுத்தப்படவில்லை.
சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்புதேர்வை ரத்து செய்வது குறித்த, இந்த மாற்றங்கள் எல்லாம், 1986ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 1992 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் செய்யப்பட்டதாகும். மேற்கண்டவாறு கபில் சிபல் கூறினார்.
அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இத் திட்டத்தை மாநில போர்டுகளில் அமல் படுத்த எங்களுக்கு அதிகாரம் கிடையாது.
எனினும், மாநில கல்வி அமைச்சர்கள் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர். மாநிலங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு முன்பாக அவர்கள் சி.பி.எஸ்.இ.க்கு கிடைக்கும் அனுபவங்களை ஆராய்வார்கள் என்று தெரிவித்தார்.

Posted by போவாஸ் | at 8:59 PM | 0 கருத்துக்கள்

வர​தட்​சிணை கேட்டதால் மாப்பிள்ளையை ஏற்க மறுத்த மணமகள்

தமி​ழ​கப் பகு​தி​யான திரு​வக்​க​ரை​யைச் சேர்ந்த தவ​மணி என்​கிற பிரி​யா​வுக்​கும் ​(21), வானூர் அரு​கே​யுள்ள கோரைக்​கே​ணி​யைச் சேர்ந்த வெங்​க​டே​சன் ​(25) என்​ப​வ​ருக்​கும் வெள்​ளிக்​கி​ழமை திரு​ம​ணம் நடை​பெ​று​வ​தாக இருந்​தது. புதுச்​சேரி அரு​கே​யுள்ள திருக்​க​னூர் பால​மு​ரு​கன் ​திரு​மண நிலை​யத்​தில் வியா​ழக்​கி​ழமை இரவு பெண் அழைப்பு ​ நடந்​தது. இதில் இரு தரப்​பி​ன​ரும் கலந்து கொண்டு விருந்து சாப்​பிட்​ட​னர். ​


​ வெள்​ளிக்​கி​ழமை காலை​யில் மண​மே​டை​யில் மண​ம​கள் வந்து அமர்ந்​தார். முகூர்த்த நேரம் நெருங்​கி​யும் மாப்​பிள்ளை வர​வில்லை. பெண் வீட்​டார் பதற்​றத்​து​டன் காணப்​பட்​ட


​னர். முகூர்த்த நேரம் முடிய 10 நிமி​டங்​க​ளுக்கு முன் மாப்​பிள்ளை வந்​தார். டி.வி., வாஷிங் மெஸின்,​ மிக்சி ஆகி​ய​வற்றை சீர் வரி​சை​யாக கொடுத்​தால்​தான் தாலி கட்​டு​வேன் என்​றார்.


​ முகூர்த்த நேரம் முடி​யப் போகி​றது. தாலி கட்​டுங்​கள். பிறகு பார்க்​க​லாம் என்று எல்​லோ​ரும் கூறி​யும் அவர் கேட்​க​வில்லை. திரு​ம​ணம் நின்​றது. அங்​கி​ருந்​த​வர்​கள் பஞ்​சா​யத்து பேசி​னர். பின்​னர் தாலி கட்ட மாப்​பிள்ளை ஒப்​புக் கொண்​டார். ஆனால் மண​ம​கள் பிரியா அந்த மாப்​பிள்​ளையை ஏற்​றுக் கொள்​ளத் தயா​ராக இல்லை. அவர் எனக்கு வேண்​டாம் என்று கூறி​விட்​டார்.


​ இருப்​பி​னும் உற​வி​னர்​க​ளும்,​ நண்​பர்​க​ளும் அதே தினத்​தில் மண​ம​க​ளுக்கு திரு​ம​ணம் செய்து வைக்க முயற்சி எடுத்​த​னர். அப்​போது மண​ம​க​ளின் அத்தை மக​னான திண்​டி​வ​னம் அரு​கே​யுள்ள பேர​டிக்​குப்​பத்​தைச் சேர்ந்த விஜய் என்​கிற விஜ​ய​கு​மார் ​(25) சம்​ம​தித்​தார். இதை​ய​டுத்து அரு​கில் உள்ள ​ ​ ​ ​முத்​து​மா​ரி​யம்​மன் கோயி​லில் திரு​ம​ணம் நடந்​தது. ​


​ பிரியா கூறு​கை​யில்,​ ""திரு​ம​ணம் நின்​று​போ​னால் எங்​கள் குடும்ப கெüர​வம் என்ன ஆகும் என்று பயந்​தேன். என்​னு​டைய அத்தை மகன் அதைக் காப்​பாற்​றி​விட்​டார். அவ​ருக்கு அன்​பான மனை​வி​யாக இருப்​பேன். மாப்​பிள்ளை வெங்​க​டே​சன் ஏற்​கெ​னவே கேட்ட வர​தட்​சி​ணையை எங்​கள் வீட்​டி​னர் செய்​தி​ருந்​த​னர். மண​மே​டை​யில் கூடு​த​லாக வர​தட்​சிணை கேட்​டது என் மனதை வேத​னைப்​ப​டுத்​தி​யது. எங்​கள் குடும்​பத்​தில் 3 பெண்​கள். மூத்த மகள் நான்'' என்​றார் பிரியா.


​ புதிய மாப்​பிள்ளை விஜ​ய​கு​மார் கூறு​கை​யில்,​ ""வர​தட்​சிணை கேட்​கும் மாப்​பிள்ளை வீட்​டா​ருக்கு இந்​தத் திரு​ம​ணம் ஒரு பாட​மாக அமை​யட்​டும். என் மனை​வி​யைக் கடைசி வரை காப்​பாற்​று​வேன். இப்​படி நடக்​கும் என்று எதிர்ப்​பார்க்​க​வில்லை. என் மாமா குடும்​பத்​தின் கெüர​வம் பாதிக்​கக் கூடாது என்​ப​தற்​காக முழு மன​து​டன் பிரி​யா​வைத் திரு​ம​ணம் செய்து கொண்​டேன்'' என்​றார். ​
-------------------------------------------------------
மணமகள் பிரியாவின் தைரியத்தையும், திடமனதையும் பாராட்டியே ஆகவேண்டும்.
பிரியாவிற்கு கை கொடுத்து, குடும்ப கௌரவத்தையும் காத்த புதிய மாப்பிள்ளை விஜயகுமாருக்கும் பாராட்டுக்கள்.
வரதட்சனைப் பிரச்சனையால் கணவனுடன் சேர்ந்து வாழமுடியாமல் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கும், செய்வதறியாது திகைத்த்ப் போய் நிற்கும் பல பெண்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுக்கும் ஒரு உதாரணச் சம்பவமாக இருக்கும்.
வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு இது ஒரு படிப்பினை.


மணமக்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

Posted by போவாஸ் | at 2:58 PM | 1 கருத்துக்கள்

"ஓ" போடுங்கள் : பாமகவின் பரிதாப நிலை.திருச்செந்தூர், வந்தவாசி, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட வில்லை என்பது பயந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை. ஒரு பாராளுமன்ற தொகுதியிலோ, சட்டமன்ற தொகுதியிலோ கோர்ட்டு தீர்ப்பு மூலம் பதவி காலியானால் தவிர வேறு காரணங்களால் வெற்றிடம் ஏற்பட்டால் அந்த தொகுதியில் இருந்து பொது தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் எந்த கட்சியில் இருந்தாரோ அந்த கட்சிக்கே பதவி வழங்க வேண்டும். இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்பது பா.மக.வின் கொள்கை.


அதே போன்று தற்போது இடைத்தேர்தல் வெற்றியை பணம் தான் முடிவு செய்கிறது என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபாலசுவாமி, தற்போதைய தேர்தல் அதிகாரி ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.


அதை தடுக்க அதிகாரம் இல்லை என்கிறார்கள். தேர்தல் முறைகேடுகளை தடுக்க முடியாத எந்திரமாக தேர்தல் ஆணையம் உள்ளது. பா.ம.க. இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு இவைகளும் காரணம்.


அதே போன்று தற்போதுள்ள மின்னணு எந்திரம், நம்பகத்தன்மை குறித்து நாடு தழுவிய நிலையில் சந்தேகம் உள்ளது. அதை போக்க எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் தற்போதைய தேர்தல் அர்த்தமற்றதாகி விடுகிறது.


பா.ம.க. போட்டியிடா விட்டாலும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். இடைத்தேர்தலில் பா.ம.க. வாக்காளர்கள், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள். அதே வேளை, யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என்று அங்கு பிரசாரம் செய்ய மாட்டோம்.


மின்னணு எந்திரம் சர்ச்சை இடைத்தேர்தலில் பணம் போன்ற பிரச்சினைகள் பொதுத் தேர்தலுக்குள் மாறிவிடும் என்று நம்புகிறோம். பொதுத் தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்.


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
--------------------------------------


தமிழ், தமிழர், தமிழுணர்வு என்று சொல்லிக்க கொள்வது , முன்னேற்றத்திற்கு தடை போடுவது என்று செய்து , ஆளும் கூட்டணியில் இருந்ததால்தான் பரபரப்புக்கு இவரின் கருத்தை பிரசுரம் செய்து வந்தார்கள் என்பதை கூட உணரமறுத்து , தனக்கும் தார்மீக பொறுப்பு இருக்கும் பல பிரச்சனைகளில் கூட பொறுப்பில்லாமல் நடந்தும் மக்கள் நம்பிக்கையையும், சமுதாய மக்களின் நம்பிக்கையையும் இழந்தது, நாங்கள் இருக்கும் அணி தான் வெல்லும் என்று மார்தட்டிக் கொண்டு அலட்டலாக பேசிக் கொண்டிருந்த  பாமகவை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் இருந்த இடமில்லாமல் செய்து விட்டார்கள். தற்போது (பாட்டாளி) மக்களை "ஓ" போடச்சொல்லும் அளவுக்கு வந்திருக்கும் நிலைமை கொஞ்சம் பரிதாபம் தான். 
49 போட்டால் கூட, அதில் எவ்ளோ வாக்குகள் விழுகுதோ அது தான் பாமகவின் ஒட்டுவாக்கு வங்கி என்று எடுத்துக் கொள்ளமுடியும்.  பாமகவின் உண்மை செல்வாக்கு, பாமக ராமதாசின் பேச்சினை பாமகவினரே கேட்டனரா என்பது தேர்தல் முடிவு அன்று நிருபனமாகும்.


இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாது, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடாமல் இருந்தால், அதுவே தமிழக மக்களுக்கும், வன்னிய சமுதாயத்துக்கும் பாமக செய்யும் மிகப் பெரிய மகத்தான தொண்டு.


கலைஞர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் சேர்க்காத பாமக கட்சி அரசியல் அநாதை என்று நிரூபணம் ஆகிறது. ஒரு கொள்கையுமில்லாமல், கோட்பாடுமில்லாமல் வீம்புக்காக தனித்து நிற்கும் விஜயகாந்த் "அரசியல் அனாதை" என்றால் என்ன என்பதை பாமக வை கண்டும் , தொடர் தோல்விகள் மூலம் மனத்தளர்ச்சி கொள்ளும் தன் கட்சியினரை தக்கவைப்பது என்பது குதிரைகொம்பான விஷயம் என்பதை வைகோ அவர்களை கண்டு உணரலாம். 


பத்திரிக்கைச் செய்திகளைப் பார்த்து அரசியல் நடத்தும், பத்திரிக்கைகளில் தினமும் வரவேண்டும் என்பதற்காக மட்டும் தினமும் அறிக்கை மேல் அறிக்கையாய் வெளியிடுபவர்கள், குறிப்பாக விஜயகாந்த் சிந்திக்க வேண்டும்.

Posted by போவாஸ் | at 11:56 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails