PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ?


இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனி மேல் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது.


இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்களையும் Bing தேடுபொறியில் இருந்து Image களையும் நேரடியாக PowerPoint Slide இல் இணைக்க முடியும்.


இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக்கலாம் என்று பார்ப்போம்.

முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள்


பின் PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ தேயைப்படும் இடத்தில் PowerPoint இல் authorSTREAM என்ற tab ஐக் click செய்து அதில் உள்ள Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து வீடியோ என்பதைக் Click செய்யவும்.


அப்போது authorSTREAM ஆனது YouTube தளத்தில் உங்களுக்கான வீடியோவைத் தேடி பட்டியலிடும் அதில் உங்களுக்கு விரும்பிய வீடியோவின் கீழ் இருக்கும் பச்சைக் நிற Preview button ஐக் click செய்து அந்த வீடியோவின் Preview ஐப் பார்த்துவிட்டு Insert பண்ணிக் கொள்ள முடியும். அல்லது Insert by URL என்பதைக் Click செய்து உங்களுக்கு விரும்பிய வீடியோவின் URL ஐக் கொடுப்பதன் மூலமும் வீடியோக்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.


அதே போல Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து Image என்பதைக் Click செய்து Bing தேடுபொறியில் தேடிக் கிடைக்கும் படங்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.


நீங்கள் authorSTREAM தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உருவாகிய PowerPoint Presentation களை Upload பண்ணி உங்களுக்கு விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .


மென்பொருளைத் தரவிறக்க : http://www.authorstream.com


நன்றி:http://www.tamilhackx.com/

Posted by போவாஸ் | at 10:50 PM | 0 கருத்துக்கள்

ஜாதி, மதம் இல்லாத திருமண பதிவுச்சான்று அறிமுகம்




திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஜாதி, மதம் குறிப்பிடாத திருமண பதிவுச்சான்றிதழை பத்திரப்பதிவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, கடந்த நவ. 24 முதல் திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும், காதல் திருமணம் செய்தவர்கள் தான் அதை பெரும்பாலும் பயன்படுத்தினர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பதிவுச்சான்று தரப்பட்டது. அதில் ஜாதி, மதம், பெற்றோர் விவரம், தொழில் உட்பட அனைத்து விவரங்களும் இடம்-பெற்றிருந்தன. இதற்கான விண்-ணப்பத்தை பூர்த்தி செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதை தவிர்க்க, ஜாதி, மதம் இல்லாத புதிய திருமணப்பதிவுச் சான்றிதழை தமிழ், ஆங்கிலத்தில் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தம்பதியின் பாஸ்போர்ட் போட்டோக்கள் ஒட்டிய அந்த சான்றிதழில், பெற்றோர் பெயர், ஊர் மற்றும் திருமணம் நடந்த தேதி, ஊர் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய-தாக உள்ளது.
கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஜாதி குறிப்பிடாத இந்த சான்றிதழால் அரசின் நிதியுதவி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இது குறித்து மதுரை பத்திரப்பதிவு டி.அய்.ஜி., அண்ணாமலையிடம் கேட்டபோது, “தம்பதியினர் அவரவர் ஜாதி சான்றிதழை சமர்ப்பித்-தால் நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது. மேலும், ஏற்கெனவே திருமணம் செய்தவர்கள் கூட, தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம்,’’ என்றார்

Posted by போவாஸ் | at 7:20 PM | 0 கருத்துக்கள்

15-ந்தேதி முதல் காபி -ரூ.6; டீ-ரூ.5 அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் விற்க முடிவு


சென்னையில் வருகிற 15-ந்தேதி முதல் காபி ரூ.6 ஆகவும், டீ ரூ.5 ஆகவும் விலை உயருகிறது. அனைத்து கடைகளிலும் ஒரே விலையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் விலை உயர்ந்தது. மேலும் பால் விலை, சர்க்கரை விலை ஆகியவையும் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக கடைக்காரர்கள் காபி மற்றும் டீ விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
ஏற்கனவே சில கடைகளில் காபி விலை ரூ.6 ஆகவும், டீ விலை ரூ.5 ஆகவும் உயர்த்தப்பட்டு விட்டது. சில கடைக்காரர்கள் மட்டுமே பழைய விலைக்கே விற்று வருகிறார்கள்.
 
இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி முதல் அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியான விலையில் காபி-டீ விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறைவான விலைக்கு விற்கும் கடைகளில் காபி, டீ விலை உயர்த்தப்படுகிறது.
 
அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியாக காபி ரூ.6 ஆகவும், டீ ரூ.5 ஆகவும் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
 
இதுகுறித்து டீக்கடை உரிமையாளர்கள் கூறியதாவது:-
 
வர்த்தக ரீதியிலான கியாஸ் சிலிண்டர்களை மட்டுமே டீக்கடைகளில் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது நுகர்வோர் வாணிபக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். வர்த்தக ரீதியிலான சிலிண்டர் ஒன்று ரூ.1080-க்கு விற்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களுக்கும் சாதாரண டீக்கடைகளுக்கும் ஒரே விலையில்தான் சிலிண்டர் விற்கப்படுகிறது.
 
ஆவின் பால் விலை உயர்ந்தபோதே சென்னையில் உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் டீவிலை ரூ.5 ஆக அதிகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் அனைத்து கடைகளிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வரவில்லை.
 
தற்போது சர்க்கரை, சிலிண்டர், பால் போன்ற பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க காபி, டீவிலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற 15-ந்தேதி முதல் காபி, டீ விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி சிங்கள் டீ ரூ.5 ஆகவும், காபி ரூ.6 ஆகவும் விற்கப்படும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 
ஏற்கனவே ஆவின் நிறுவனத்தின் சூடான பால் 120 மி.லி. கொண்ட கப் விலை ரூ.5-ல் இருந்து ரூ.6 ஆக உயர்ந்தது. இந்த விலைக்கு இணையாக காபி, டீ விலையும் அதிகரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------

Posted by போவாஸ் | at 11:34 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails