சொன்னதை செய்து காட்டிவிட்டோம்-அழகிரி, எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி: மு.க.ஸ்டாலின்

சொன்னதை செய்து காட்டிவிட்டோம்-அழகிரி

திருச்செந்தூர் இடைத் தேர்தலில் 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். திமுக கொடுத்த வாக்குறுதிகளை எப்போதும் காப்பாற்றும். இப்போதும் சொன்னதை விட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது என்று மத்திய அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.



திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், திமுக வாக்குறுதிகளைக் கொடுத்தால் அதை நி்ச்சயம் நிறைவேற்றும். திருச்செந்தூரில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தோம்.


இப்போது அதை விட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 


திமுக அரசின் சாதனைத் திட்டங்களால் மக்கள் மன நிறைவுடன் உள்ளனர். குறிப்பாக கலைஞர் உயிர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என மக்கள் மன நிறைவுடன் உள்ளனர்.


இந்தத் தேர்தல் முடிவைப் பார்க்கும்போது பென்னாகரம் தொகுதியில் அதிமுக போட்டியிடுமா என்பதே சந்தேகம்தான் என்றார் அழகிரி.


எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி: மு.க.ஸ்டாலின்



திருச்செந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற்றுள்ளார். வந்தவாசி திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் 33,810 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது இனிப்புகள் வழங்கி பேசிய ஸ்டாலின்,

எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் பெற்று அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இது திமுக கூட்டணிக்கும், மக்களுக்கு திமுக அரசு அறிவித்த நல்ல திட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி என்றார். திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி வாக்காளர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வெற்றியை அடுத்து இன்னும் விழிப்போடு மக்களுக்கு பணியாற்றுவோம் என்று ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறினார்.



வாக்காளர்களுக்கு நன்றி: கலைஞர்


மாபெரும் வெற்றியை அளித்த திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். மக்களுக்கு அறிவித்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்

Posted by போவாஸ் | at 2:02 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails