கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும்போது குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி தேடுனா இப்படித்தான்.




மனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்து தனியே வசிக்கிறார் இயக்குநர் செல்வராகவன். நடிகை ஆண்ட்ரியா மீது இவர் கொண்ட மோகன்தான் இருவருக்கும் இடையே விவாகரத்து வரை மோதல் எழக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் ஆண்ட்ரியாவும் செல்வராகவனும் ஜோடியாக பல இடங்களில் சுற்றித் திரிவது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் சென்னையின் அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு டிஸ்கொத்தேயில் பங்கேற்று டான்ஸ் ஆட ஆண்ட்ரியா விரும்பியிருக்கிறார். ஆனால் டான்ஸ் ஆட வேண்டாம் என செல்வராகவன் தடுத்துவிட்டாராம். மனைவியா என்ன சொன்னதும் அதைக் கேட்டு நடக்க...! செல்வராகவன் பேச்சை சட்டை செய்யாமல் ஆண்ட்ரியா டிஸ்கொத்தே ஜோதியில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், அவரை தடுத்து இழுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வேகமாக கிளம்பிய ஆண்ட்ரியா ஹோட்டல் நிர்வாகியிடம் செல்வராகவன் மீது புகார் செய்தாராம்.
உடனே அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் செல்வராகவனை வெளியே செல்லுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, பலவந்தமாக இழுத்துச் சென்று வெளியே விட்டுள்ளனர். இச்சம்பவம் ஹோட்டலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளி மாதிரி பொண்டாட்டி இருக்கும்போது குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி தேடுனா இப்படித்தான் அவமானப் படவேண்டும்.

Posted by போவாஸ் | at 1:10 PM | 3 கருத்துக்கள்

தினமலரின் தவறான கண்ணோட்டம்

தினமலரின் தவறான கண்ணோட்டம்.
இன்றைய தினமலரில் வெளிவந்திருக்கும் ஒரு செய்தி, அதுவும் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக..
செம்மொழி' தமிழ்நாட்டில் ஆங்கிலம் : ஒன்றாம் வகுப்பிலேயே ஆரம்பம் : அடுத்த ஆண்டு முதல் அமல்!

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. 
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, மனப்பாடம் செய்யும் வகையில் பாடத்திட்டம் அமையாமல், மாணவர்களின் சிந்தனைத் திறனை தூண்டும் வகையிலும், மதிப்பீட்டு முறையில் மாற்றங்களை உள்ளடக்கியதாகவும் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.சமச்சீர் கல்வி அமலுக்கு வருவதன் எதிரொலியாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப்படும்.

இது குறித்து  தினமலர் தனது தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து செம்மொழியின் கதி என்ற ஒரு கட்டுரை அளவு செய்தியை தந்துள்ளது.

அதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகள் பல ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் படிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாகவும் இருக்கிறது. இதனால் தான், இத்தனை ஆண்டுகளாக ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. 
ஆரம்பக் கல்வியை தமிழ் வழியில் படித்தால் தான் மாணவர்களுக்கு புரியும் என்பதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் காலம் காலமாக முழுக்க முழுக்க தமிழ் வழிக்கல்வி திட்டம் அமலில் இருந்தது. 
இனி அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு, இந்த பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். 
ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பிப்பதால் தமிழ் மீதான மோகம் குறையும் என்று கூறியுள்ளது.

தமிழ் மீது அக்கறை கொண்ட தினமலருக்கு நன்றி.

ஆனால், மக்கள், பெற்றோர்கள் என அனைத்து சமூகத்தினரும் சமச்சீர் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதை வரவேற்று உள்ளனர். பாமக ராமதாசே வரவேற்றுள்ளார்.

சமச்சீர் திட்டத்தை அமல் படுத்துவதினால் எவ்வாறு தமிழ் மீதுள்ள மோகம் குறையும் ?.

இத்தனை நாட்களாக நம் தமிழ் மக்கள் ஏக்கத்துடன் காத்திருந்ததிற்கு நல்லதொரு முடிவை எடுத்து நல்லதொரு திட்டத்தினை தீட்டி மக்களுக்காக செயல்பட காத்திருக்கிறது.

இப்பவாவது தமிழக அரசு முழித்துக்கொண்டு இந்த திட்டத்தை தீட்டியதிற்கு பலர் பாராட்டுகின்றனர்.அரசு பள்ளியில் படிக்கும் மாணவமணிகளும் இனி தஸ் புஸ  என்ற ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு நிறைவேறப் போகிறது.

மேலும் உலக அளவில் துவக்கப்பள்ளியில் இருந்து ஆராய்ச்சி படிப்பு வரை  ஆங்கில மொழிகளிலேயே இருக்கின்றன. ஆங்கிலம்  சரளமாக எழுத பேசத் தெரிந்தால்தானே கற்று தேர்ந்து  பல சாதனைகள் புரியமுடியும்

இத்தனை காலம் தங்கள் தாய் மொழியிலேயே பயின்று வந்த ஜப்பான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் இப்பொழுது ஆங்கில புலமை இல்லாததால் மிகவும் தடுமாறுகின்றன. இப்பொழுது அவர்கள் ஆர்வத்துடன் ஆங்கிலத்தை கற்க ஆரம்பித்துள்ளனர். ஏன்..ஹிந்தி ஹிந்தி என்று உயி மூச்சாக நினைத்த வட மாநிலத்தோர் கூட இன்று ஆங்கிலம் கற்று தேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

நம் தமிழக மாணவ மணிகளுக்கு இத்திட்டம் ஒரு வரபிரசாதம்.கிராமப்புற குழந்தைகள், ஏழைக் குழந்தைகள் தவிர ஏனையோர் ஆங்கிலவழி தனியார் பள்ளிகளையே நாடும் இச்சூழலில் ஒருபாடமாக ஆங்கிலத்தை முதல் வகுப்பிலேயே துவங்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கது தான்.அரசு பள்ளிகளுக்கு உந்த திட்டம் ஒரு வலுவை சேர்க்கும்.


உலகில் ஒவ்வொரு நாடும் Globalization என்ற பொருளாதார கொள்கைத் திட்டங்களைப் போடும் பொது, Global language ஆங்கிலத்தை கற்பதில் தவறேதுமில்லையே.
எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பலமான அடித்தளம் அமைய இத்திட்டம் உதவும் என்று எள்ளளவும் ஐய்யமில்லை.

ஆங்கில மொழித் தேவையை அன்றே உணர்ந்ததால்தான் பெரியார்,அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பலர் இந்தி மொழியை கட்டாயமாக்கக் கூடாது, வேண்டுமானால் உலக மொழியான ஆங்கிலத்தை கட்டாயமாக்கலாம் என்று போராட்டங்கள் நடத்தினர்.

லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டா வந்த திட்டத்தை வரவேற்காமல் குறை கூறினால், தினமலருக்கு சமுதாயத்தின் மீதும், தமிழக மக்களின்  நலனிலும், முன்னேற்றத்திலும் துளியும் அக்கறையில்லை என்றுதான் அர்த்தம். 

சே...எனக்கு கிடைக்காத வாய்ப்பு என் குழந்தைக்கு கிடைத்திருக்கிறதே என்று பல பெற்றோர்கள் படும் சந்தோசம், ஆனந்த கண்ணீர் துளிகள் இந்த தினமலருக்கு தெரியவில்லை போல.


தமிழிலில் பத்திரிக்கையையும், டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியை நடத்துவதைத் தவிர, இந்த தினமலர் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்ததோ தெரியவில்லை. 


தமிழக அரசின் இது போன்ற திட்டங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மிக முக்கிய பங்கு மீடியாக்களுக்கு இருக்கின்றது. விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் குறைகளைக் கூறுவது ஒரு தரமான பத்தரிக்கைக்கு அழகல்ல

Posted by போவாஸ் | at 12:28 PM | 0 கருத்துக்கள்

போட்டோ கமெண்ட்ஸ் - 3


ஓஹோ, இதுதான் தொப்பி அரசியலா...?
எங்களுக்கென்னவோ தொப்பியிலேயே அரசியல் இருக்கற
மாதிரி தோணுது கேப்டன்...


சர்க்கஸ் ஜோக்கர்ஸ் தான் இந்த மாதிரி தொப்பிய வச்சுபாங்க.
அரசியல் ஜோக்கர்ஸ்னு proof பன்றிங்களோ..?


நாங்கதான் ORIGINAL AGMARK அரசியல் ஜோக்கர்ஸ்.
நான் தான்
ஜோக்கர் டீம் கேப்டன். 
பெரிய கார்த்திகை நாளின் போது இந்த 
சொக்க பான கொளுத்துவாங்கள..
அது மாதிரி இருக்கு கேப்டன் தலைல இருக்குறது.




Posted by போவாஸ் | at 2:57 AM | 0 கருத்துக்கள்

என்ன செய்ய போகிறார்கள், நம் தலை(வலி)வர்கள்....?

என்ன செய்ய போகிறார்கள்...நம் தலை(வலி)வர்கள்....?
கடந்த சில நாட்களாக நம் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது, கடலில், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கப்பட்டு,உதைபட்டு,பொருட்களையும்,மீன்களையும் பறிகொடுத்துவிட்டு, உயிரை கையில் பிடித்து வந்து சேர்ந்தனர்.இது நித்தமும் தொடரும் சம்பவம் என்ற ரீதியில் இப்பொழுது போய்க்கண்டிருக்கிறது.

தமிழக அரசும், முதல்வரும் தெளிவான, நிலையான முடிவினை எடுக்க முயலாமல், தன் மக்களின் கண்ணீரை துடைக்க மத்திய அரசிடம் அழுத்தமான முறையில் முறையிடாமல் மந்தமான முறையில் கடிதம் எழுதுவதும், புறா காலில் கட்டி கடிதம் அனுப்புவதுமாய் இருக்கிறார்.
மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு சாதகமான செயலுமில்லை. இதுவரையில்லை. இதை பற்றி அனைத்து கட்சியினரும் பாகுபாடில்லாமல் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஏன்...தமிழக காங்கிரஸ் கூட கண்டனங்களைத் தெரிவித்தது.இதுக்கு எல்லாம் ஒரு படி மேல போயி நம்ம டிரமாகாந்து sorry..விஜயகாந்து தில்லியில போயி உண்ணாவிரதம் இருந்தார்.

இப்போ என்னடான்னா...நேத்தைக்கு,தென் மாநிலங்களுக்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் ஒரு பேட்டியில என்ன சொல்லிருக்காருனா...


1. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
2. தமிழ்நாடு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடந்த மாதம் 9ம் தேதி என்னைச் சந்தித்த போது, "இலங்கை கடற்பகுதிக்குள் தடைகளை மீறி உட்புகும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை; கைது செய்வதுமில்லை' என்று தெரிவித்துள்ளனர்.
3. மீனவர்கள் மீது யார் தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை, பத்திரிகையாளர்கள் தான் ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.
கொஞ்சமும் வாய் கூசாம இப்படி மூன்று கருத்தை(பொய்ய) சொல்லியிருக்காரு.

பாமக,வைகோ பரவாயில்லை...மீனவப் பிரச்னையை அறிக்கையோடு நிறுத்திக் கொண்டனர்.
பெரிய அளவில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தவில்லை.
திமுகவோ தனது எம்பிக்களை பிரதமரை சந்திக்க செய்து மனு கொடுக்க செய்தது.
தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
பிரதமரும் பதில் கடிதம் எழுதி ஆவன செய்வோம் என்று சொன்னார்.
நம்ம டிராமாகாந்து தில்லியிலேயே போயி உண்ணாவிரதம் இருந்து ஓவர் சீனெல்லாம் போட்டார்.
மத்திய மாநில அரசிடமிருந்து, இந்த பிரச்சனையைக் குறித்து ஒரு, நிரந்தர தீர்வு காணும் அறிக்கையாவது வரும்னு எதிர்பாத்தா..இலங்கைத் துணைத் தூதர் வந்து இப்படி பேசியிருக்காரு.

இப்போ இவுங்கெல்லாம் என்ன செய்ய போகிறார்கள், என்ன பதில் சொல்லப்போறாங்க. குறிப்பா..திமுகவும், விஜயகாந்தும்.
தமிழக பத்திரிகை நாளிதழ்களில் பக்கம் பக்கமாய் செய்திகள் வந்தது. டிவி மீடியாக்களிலும் காலை முதல் இரவு வரை அரைத்த மாவை அரைப்பதுபோல இது குறித்த செய்திகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தியாக ஒளிபரப்பப் பட்டது,NDTVயில் கூட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதும்,அவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றதையும் ஓரளவு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பினர்.

இப்போ இந்த மீடியாக்களில்....ஏதேனும் ஒரு மீடியாவாவது தைரியத்துடன் வந்து இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களையும்,அவர்கள் நம் மீனவ மக்களுக்கு செய்யும் அட்டுழியங்கள் அக்கிரமங்களை படம் பிடித்து காட்டும் அளவுக்கு புலனாய்வு செய்து, ஆதாரத்துடன் நிரூபிக்குமா?.

இந்த வடிவேல் கிருஷ்ணமூர்த்தி சொல்றது உண்மைனா...நம்மாளுங்க எல்லாம் முட்டாளுங்களா?.
இல்லைனா இப்படி சொல்லி நம்மை முட்டாளா ஆக்குராங்களா?

Posted by போவாஸ் | at 1:56 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails