சபரி மலையா ? ஊழல் மலையா ? - ஐயப்பா நீயே சொல்லப்பா.


சபரிமலை : ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்படும் நெய் அப்பம், அரவணா, அன்னதானம் உட்பட பல்வேறு வகைகளில், சபரிமலையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில், கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வர்.
இங்கு முறைகேடுகள் நடக்காத வண்ணம் தடுக்க, கேரள ஐகோர்ட் தேவஸ்வம் போர்டு உயர்மட்டகமிட்டியை நியமித்தது.

இதில் தேவஸ்வம் போர்டு சேர்மன் சி.கே. குப்தா வை தவிர்த்து, கூடுதல் முதன்மை செயலாளர் கே.ஜெயக்குமார் தலைமையில் உயர்மட்டக் கமிட்டி அமைத்தது.
அக்கமிட்டி தான், சபரிமலையில் மேற்கண்ட காலங்களில் கண்காணித்து வந்தது.

அவ்வாறு உயர்மட்ட கமிட்டி அமைத்த பிறகும், லட்சக்கணக்கில் அங்கு
முறைகேடுகள் நடந்துள்ளதாக, தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. இதில் அங்கு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்ட நெய் அப்பம் முதல் அன்னதானம் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


மேலும், கெட்டுப் போன அரவணா பாயசம் வினியோகிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான முறைகேடுகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் இவ்வாண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி வரை நடந்துள்ளது. இவற்றை, தணிக்கை அதிகாரிகள் சன்னிதானத்திலும், பம்பையிலும் நடத்திய சோதனையில் கண்டறிந்துள்ளனர்.

முறைகேடுகளை மேல் அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் இருக்க, பல ஆவணங்களையும் மறைத்து வைத்துள்ளனர் அல்லது அழித்து விட்டனர்.

மேற்கண்ட சீசனில் அன்னதானத் திட்டத்திற்காக தனியாருக்கு சபரிமலையில் மூன்று கட்டடங்களை வழங்கிய வகையில், 40 லட்சம் ரூபாய் நஷ்டமேற்பட்டுள்ளது. தினமும், சபரிமலையில் ஆறாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக கூறி, அதற்காக போலியாக விளம்பர பலகையை வைத்து மோசடி நடந்துள்ளது.

இந்த சீசனில், பக்தர்கள் பலருக்கும் கெட்டுப்போன அரவணா பாயசம் தான் விற்கப்பட்டது. அதுவும் ஜனவரி மாதத்தில் பக்தர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட அரவணா பாயசம் டின்கள் உடைந்து நொறுங்கி போயிருந்தன.


இதுகுறித்து தபால் துறை அதிகாரிகள் பல முறை கேட்டுக்கொண்டும் கோவில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
வரலாற்றில் முதல் முறையாக, தபால் துறை இதற்காக நஷ்டஈடு கேட்டுள்ளது.

பல்வேறு டிக்கெட்டுக்கள் தனியார் வங்கி மூலம் விற்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு டிக்கெட்டுக்கள் அச்சடிக்கப் பட்டன, எவ்வளவு விற்கப் பட்டுள்ளது போன்ற விவரங்கள் இல்லை.

சீசன் துவங்குவதற்கு 18 நாட்கள் முன் 4,088 டின்கள் அரவணா மற்றும் 2,937 பாக்கெட்டுக்கள் நெய் அப்பம் ஆகியவை இருந்தன. அவைகள் கெட்டுப் போய் விட்டதாகக் கூறி அழிக்கப்பட்டன என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி:தினமலர்

ஏற்கனவே மகர ஜோதி விளக்கு எரிவது பொய் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

இப்போ இது வேறையா ?.

ஐயப்பா நல்ல பதிலைச் சொல்லப்பா (?). ( நீயே உண்மையாப்பா ? )

பக்தி நிறைந்த சபரி மலை இன்று முறைகேடுகள் நிறைந்த ஊழல் மலை.

Posted by போவாஸ் | at 7:31 PM | 0 கருத்துக்கள்

ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.



ஒரு சிலைய கூட விட மாட்டங்க போல. இன்னும் கல்லையும் சிலையையும் நம்பிக்கிட்டு இருக்குற இவங்களை என்னன்னு சொல்றது. நம்மாளுங்கள திருத்த ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

Posted by போவாஸ் | at 7:17 PM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள்

ஒரு பொண்ணு தல குணிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்டா மச்சான்?
தெரியலையே
அவ செல்லுல எஸ்.எம்.எஸ். ப்ரீன்னு அர்த்தம்

மாப்பிள்ளைக்கு பெரிய பேக்கிரவுண்ட் இருக்குன்னு தரகர் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேனே!
ஏன்... என்ன ஆச்சு?
மாப்பிள்ளைக்கு பின்னந்தலைல இருக்கற பெரிய வழுக்கையைத்தான் அப்படி சொன்னாறாம்.
அப்போ பிளேகிரவுன்ட்னு சொல்லுங்க.

ஏன் சார் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க . . .
அவ‌ன் கே‌ட்ட கே‌ள்‌வி‌க்கு...
அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்ன‌ப்பா‌ன்னு கேக்கறான் கொழுப்பெடுத்தவன்.

ஜக்கு: முதல் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்ப என்ன நடந்ததுன்னு தெரியுமா?
மக்கு: தெ‌ரியலையே?
ஜக்கு: க‌ண்டி‌ப்பா க‌ண்டு‌பிடி‌ச்சவரு‌க்கு பயங்கரமா ஷாக் அடிச்சிருக்கு‌ம்

விலைவா‌சி எ‌ல்லா‌ம் ஏ‌றி‌ப் போ‌ச்சு.. இ‌னிமே நாம ‌நிறைய ‌மி‌ச்ச‌ம் ‌பிடி‌க்கலா‌ம்
எ‌‌ன்ன‌ங்க சொ‌ல்‌றீ‌ங்க?
விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுல்ல இ‌னிமே எதையு‌ம் வா‌ங்க முடியாது. அ‌ப்போ எல்லாமே சேமிப்பு தானே.

மகன் - பல ரோஜாக்களை பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.
அப்பா - இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?
மகன் - 5 பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்

எ‌‌ப்போது‌ம் அழுது‌க்‌கி‌ட்டே இரு‌ப்பாளே உ‌ன் பொ‌ண்ணு.. இ‌ப்போ எ‌ன்ன ப‌ண்றா?
அவ பெ‌ரிய ‌ஸ்டா‌ர் ஆ‌யி‌ட்டா
எ‌ன்ன சொ‌ல்ற.. அ‌ந்த அழுமூ‌ஞ்‌சியா?
ஆமா‌ ஒரு மெகா தொடர்ல அவதா‌ன் கதாநாய‌கியே.

மனை‌வி : ஏ‌ங்க உ‌ங்களு‌க்கு இ‌ப்படி ஒரு பழ‌க்க‌ம்.
கணவ‌ன் : அ‌ப்படி எ‌ன்னடி செ‌ஞ்சு‌ட்டே‌ன்.
மனை‌வி : நான் குளிக்கும்போது ஏன் எட்டி எட்டிப் பார்‌த்‌தீ‌ங்க?
கணவ‌ன் : அ‌ய்யோ அது ‌நீயா... நா‌ன் வேலைக்காரின்னுல நெனைச்சிட்டேன்.

எ‌ன் பையனு‌க்கு ச‌ந்‌திரயா‌ன்னு பே‌ர் வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு.
ஏ‌ன் ந‌ல்ல பேருதானே.
நீ வேற எ‌தி‌ர் ‌வீ‌ட்டு ‌நிலாவை சு‌த்‌தி சு‌த்‌தி வ‌ந்து‌க்‌கி‌ட்டிரு‌க்கா‌ன்.

நே‌த்து உ‌ங்க ‌வீ‌ட்டுல உ‌‌ன்ன உ‌ன் மனை‌வி தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு ‌மி‌தி‌ச்சா போல..
அட ‌நீ வேற.. எனக்கு உடம்பு வலிச்சுதுன்னா என் மனைவிதான் மிதிச்சு விடுவா...
அட... மிதி வாங்குவதைக்கூட இவ்வளவு நாகரிகமா சொல்லலாமா!

Posted by போவாஸ் | at 4:23 PM | 1 கருத்துக்கள்

காங்கிரஸ் கட்சியினரின் தொடரும் நாடகம்

சில தினங்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் பிராணாப் முகர்ஜீ சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அமைச்சர்கள் அனைவரும் செலவினைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்றும், விமான பயணத்தின் போது பொருளாதார வகுப்பில் பயணம் செயுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன் உதாரணமாக அவர் தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு விமானத்தில் செல்லும் போது பொருளாதார வகுப்பில் பயணம் செய்தார்.

இதைத் தொடர்ந்து நம்ம இந்தியாவின் அன்னை (?) சோனியா காந்தி தில்லியிலிருந்து மும்பைக்கு விமானத்தில் செல்லும் போது பொருளாதார வகுப்பில் பயணம் செய்தார்.
சென்றார்.

இதற்கு அடுத்த படியாக நம்ம அறியாமைப் புகழ்......ராகுல் காந்தியும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

சதாப்தி எக்ஸ்பிரெஸ் ரெயிலில் டில்லியிலிருந்து லூதியானவிற்கு சென்றார். ரெயிலில் இவருக்கு என்று பிரேத்யேகமாக தயார் செய்யப்பட உணவு வகைகள் பரிமாற்றப்பட்டன.

இப்படிப்பட்ட நாடகங்கள் எத்தனை நாளுக்குத் தொடரும்.

உண்மையில் இப்படி பயணம் செய்தால் மட்டும் நிதி நிலை சரியாகிவிடுமா ?

நிதி நிலைமையை கட்டுப் படுத்த வேறு வழிகளே இல்லையா ?

வேறு வழிகள் தெரியவில்லை என்றால் பல பொருளாதார வல்லுனர்களிடம் ஆலோசனைக் கேட்கலாமே.

பல பிரச்சனைகளுக்கு நடுவே வாழும் நம்மை திசை திருப்ப இப்படி ஒரு நாடகமா?

சுதந்திரனத்தையே சுதந்திரமாக கொண்டாட முடியாத ஒரு கேவலமான நிலையில் நம் நாடு இருக்கும் சூழ்நிலையில், சிக்கனம் என்ற பெயரில் இப்படி பட்ட பயணங்கள் அவசியம்தானா?.

இப்படித்தான் நம்ம ஊரு ப்ரெண்டு ஒருத்தன் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடத்துக்கு போக கிளம்பினான்.

அந்த இடத்துக்கு பஸ்ல போனா 3.50 பைசா டிக்கெட் செலவாகும்.

நம்மாளு காச மிச்சம் பண்றேன்னு நெனப்புல அந்த இடத்துக்கு நடந்தே போயிருக்கான்.

ரெண்டு கிலோ மீட்டர் வெயில்ல நடந்து வந்ததுல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, உடையெல்லாம் அழுக்காக, காலெல்லாம் புழுதியாக, வேர்த்து வடிய, தாகத்தோடு போய் சேந்திருக்கான்.

போனவன் நேரா ஒரு பெட்டிகடைக்கு போய் தாகம் தீர்க்க ஒரு தண்ணி பாக்கெட்டும், ஒரு லெமன் சர்பத்தும் குடிச்சானாம்.

ஒரு தண்ணி பாக்கேட்டுகும், லெமன் சர்பத்துகும் சேத்து ஏழு ரூபாய் கொடுத்துட்டு வந்திருக்கான்.

மூணு ரூபாய் மிச்சம் பிடிக்க நெனச்சு எழு ரூபாய் செலவு ஆயிடுச்சேன்னு எங்கள்ட்ட சொல்லி வருத்தப் பட்டான்.

நம்ம நண்பர் நம்மகிட்ட இத சொல்லும் போது இன்னொன்னையும் சொல்லிட்டு போனார்.

மாப்ள எதுக்கு செலவு பண்ணனுமோ அதுக்கு செலவு பண்ணித்தான் ஆகணும். கஞ்சத்தனப் பட்டோ, காச மிச்சம் பன்றோம்னு நெனைச்சா அதுவே எக்கு தப்பா ஆயிடும், அது தப்பு மாப்ளன்னு சொன்னான்.

Posted by போவாஸ் | at 2:19 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails