இடைத்தேர்தல் கூத்து - அட்ரா சக்க அட்ரா சக்க


திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கும் நிலையில் பிரச்சாரத்தில் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.


இந்நிலையில் உடன்குடி ம.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. பிரமுகர்கள் அனிதாராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

உடன்குடி நகர தே.மு.தி.க. செயலாளர் தாமோதரன்,

துணை செயலாளர் ஏ.ஆர்.கமல்,
அவைதலைவர் உலகநாதன், 
ஒன்றிய துணை செயலாளர் தர்மராஜ், 
இளைஞரணி செயலாளர் சதீஷ் 
மற்றும் 
உடன்குடி பேரூராட்சி கவுன்சிலரும்
புதுமனை ம.தி.மு.க. கிளை கழக செயலாளருமான முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் இன்று தண்டுபத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர்.
---------------------------------------
தேர்தல் முடியும் முன் இன்னும் பலர் திமுகவில் ஐக்கியம் ஆவார்கள் என்று எண்ணுவோம். 

Posted by போவாஸ் | at 9:37 PM | 0 கருத்துக்கள்

ஓசோன் 2010


Front page news and headlines todayவரும் 2010 புத்தாண்டு தினத்திலிருந்து, இந்த உலகை அச்சுறுத்தி வந்த, ஓசோன் படலத்தில் துளையிடக்கூடிய குளோரோ புளூரோ கார்பன் (சி.எப்.சி.,), ஹேலான், கார்பன் டெட்ரா குளோரைடு மாசுகள் இந்த உலகிலிருந்து வெளியேறுவது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது.


சூரியனிலிருந்து வரக்கூடிய புறஊதாக் கதிர்களை, பூமியை சுற்றி உள்ள ஓசோன் படலம் போர்வை போல் காப்பதால், நாம் அதிகப்படியான வெப்பத்திலிருந்து தப்புகிறோம். கடந்த 1970ம் ஆண்டுகளிலிருந்து ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக, 1985ல் வியன்னாவில் நடந்த மாநாட்டில் விரிவாக விளக்கப்பட்ட போது உலகம் அதிர்ச்சி அடைந்தது. ஓசோன் துளையால், புவியின் வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. பருவநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.


1987ல் கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் ஓசோனை காப்பாற்றும் வகையில் ஐ.நா., சார்பில், மாநாடு நடந்தது. ரெப்ரிஜிரேட்டர், ஏர்கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் குளோரோ புளூரோ கார்பன் (சி.எப்.சி.,), தீ அணைப்பு கருவி உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் ஹேலான்கள், ஜவுளி மற்றும் மெட்டல் கிளீனிங் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படும் மீத்தைல் குளோரோபார்ம் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் உபயோகத்தை, 2010ம் ஆண்டுக்குள் படிப்படியாக நிறுத்திவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.


195 நாடுகள் கையொப்பம் இட்டுள்ள மான்ட்ரியல் உடன்படிக்கையின் படி, தற்போது 97 சதவீத ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் மாசுகள் தடுக்கப்பட்டுள்ளன. இதுதான், உலகிலேயே மிகவும் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்ட சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தம். 2010ம் ஆண்டிலிருந்து முற்றிலுமாக இந்த மாசுகள் வெளியேறாது. என்றாலும், ஓசோன் படலம் தன்னை சரிசெய்து கொண்டு பழைய நிலைக்கு, 2050ம் ஆண்டில்தான் திரும்பும் என்று 2006ல் நடந்த ஓசோன் துளை தொடர்பான அறிவியல் பூர்வ மதிப்பீடு தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும், தற்போது ஏர்கண்டிஷனர் மற்றும் பிரிட்ஜ்களில் சி.எப்.சி.,களுக்குப் பதிலாக, ஓசோனுக்கு கேடு விளைவிக்காத "ஹைட்ரோபுளூரோ கார்பன்' மற்றும் "ஹைட்ரோகார்பன்கள்' பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஓசோனுக்கு கேடு விளைவிக்காவிட்டாலும், கார்பன் டை ஆக்சைடைப் போலவே இவையும் பசுமை இல்ல விளைவை ஏற்படுத்துவதால் புவியின் வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக அமைகின்றன. எனவே, அடுத்து இவற்றையும் முற்றிலும் நீக்கும் முயற்சிகளும் சவால் நிறைந்ததாகவே தொடர்ந்து வருகின்றன.


1931ல் அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சியில் "டுயுபாண்ட்' எனும் நிறுவனம்தான் முதன் முதலில், சி.எப்.சி.,யில் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கியது. தற்போது இதுபோன்று "சி.எப்.சி.,' உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு முடிவு வந்துவிட்டது என்று கூறலாம். சட்டவிரோதமாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை கடத்துவதை தடுக்கவும், ஐ.நா.,வின் சர்வதே சுங்க நிறுவனம் கடினமான சுற்றுச்சூழல் குற்ற சட்ட விதிமுறைகளை அமல் செய்துள்ளது.


இந்தியா வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளது குறித்து, புதுடில்லியில் உள்ள மத்திய அரசின் "ஓசோன் செல்' இயக்குனர் துரைசாமி, தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி: இந்தியா 1992ல் மான்ட்ரியல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. 2003ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பிரிட்ஜ்களில் சி.எப்.சி., உபயோகம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக "ஆர் 134-ஏ' எனும் ஓசோனுக்கு கேடு விளைவிக்காத பொருள் பயன்படுத்தப்படுகிறது. சில நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் பயன்படுத்துகின்றன. 2008 ஆக. 1லேயே இந்தியாவில் சி.எப்.சி., உபயோகம் மற்றும் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இது 2010ம் ஆண்டுக்கு முன்னரே இந்தியா தனது கடமையை செய்துவிட்டது. ஹேலான்களை 2002ல் இந்தியா முழுவதுமாக குறைத்துக் கொண்டது.


கார்பன் டெட்ரா குளோரைடைப் பொறுத்தவரை 2007லேயே 85 சதவீதத்தை இந்தியா குறைத்துக் கொண்டது. தற்போது முற்றிலும் குறைத்துவிட்டது. இந்தியாவில் ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை ஒழித்துக் கட்டியபோதே, நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறிக் கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு அளித்துள்ளதால் நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படையவில்லை. ஆஸ்துமா நோயாளிகளுக்கான இன்ஹேலர்கள் தயாரிப்பில் மட்டுமே இனி சி.எப்.சி., இருக்கும். அது மான்ட்ரியல் வரைமுறையின் படி, அனுமதிக்கப்பட்டதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார். மான்ட்ரியல் உடன்படிக்கையை சிறந்த முறையில் அமல் செய்த நாடு என்பதற்கான ஐ.நா.,வின் விருதையும் இந்தியா பெற்றுள்ளது. ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு விடை கொடுத்து புதிய சுவாசத்துடன் 2010 புத்தாண்டு விடியப்போகிறது.

உருகும் பனி: ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் இழப்பு குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது. அப்போது வெப்பநிலை - 78 டிகிரிக்கு செல்லும் போது, குளிர்ச்சி அடைந்த மேகங்கள் பனிக்கட்டிகளாக மாறுகின்றன. இந்த பனியில் மாசுகளான நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் ஆகியன கலந்து குளோரோ புளூரோ கார்பன் (சி.எப்.சி.,) வினைபுரிய தூண்டுகின்றன. ஆகவே அப்பகுதியில் வெப்பம் அதிகரித்து பனி உருக காரணமாக அமைகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அண்டார்டிகா பகுதியில் ஓசோனில் துளை ஏற்பட்டுள்ளது.


பூமியை காக்க: வளிமண்டலத்தில் சேர்ந்துள்ள மாசுகளில் கார்பன் டை ஆக்ச�டு 86 சதவீதம். "ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் சி.எப்.சி., உபயோகத்துக்குப் பதிலாக ஹைட்ரோபுளூரோகார்பன் பயன்படுத்துவதால் அது வளிமண்டலத்தில் இந்த மாசு அளவு 9 சதவீதமாக கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது' என்று சர்வதேச தட்பவெப்பநிலை நிறுவன தலைமை செயலாளர் மைக்கேல் ஜக்கார்ட் தெரிவித்துள்ளார். இவையும் புவி வெப்பமாக காரணமாக அமைகின்றன.


ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்களை குறைத்தது போல், தொழிற்சாலை, வாகன மற்றும் பிற மாசுகளின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, டிசம்பர் 15ல் கோபன்ஹேகனில் நடைபெறும் உச்சி மாநாட்டில் நாடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளும் பிற நாடுகளும் அதை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் இந்த பூமி நாம் வாழத்தகுந்ததாக தொடரும்.காடுகளுக்கு பாதிப்பு: ஓசோனில் ஏற்பட்டுள்ள துளை புவி வெப்பமயமாவதற்கு காரணமாக அமைவதால் காடுகளின் அடர்த்தி குறைகிறது. காடுகள் அழிவதாலும், மனித தேவைகளுக்கு அழிப்பதாலும் கார்பன் மறு சுழற்சி பாதிக்கப்படுவதால், புவி மேலும் வெப்படைகிறது.
பருவநிலை மாற்றம்: வெப்பம், ஈரப்பதம், காற்று மற்றும் வளிமண்டலத்தில் உள்ள ரசாயனப் பொருட்கள் ஓசோனை பாதிக்கின்றன. ஓசோன் பாதிக்கப்பட்டால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியை அடைவதால் பருவ நிலை மேலும் பாதிக்கிறது. பருவநிலை பாதிப்பு வறண்ட பூமியையும் மகசூலில் பாதிப்பையும் ஏற்படுத்தி விவசாயத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றன.அண்டார்டிகா பகுதியில் ஏற்பட்டுள்ள துளை தற்போது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரிதாக உள்ளது. தரையிலிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள ஸ்ராடஸ்பியர் வளிமண்டல பகுதியில்தான் ஓசோன் வாயு காணப்படுகிறது. சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பமிக்க, தோல் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய புற ஊதாக் கதிர்களை இந்த வாயுப்படலம் பிரதிபலித்து பூமியில் விழாமல் தடுத்து விடுகிறது. இதனால் மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் காக்கப்படுகின்றன. ஓசோன் துளை உள்ள இடங்களில் புற ஊதாக் கதிர்கள் புகுந்துவிடுவதால், பூமியின் தரைப்பகுதியில் வெப்பத்தை அதிகரிக்கிறது.


நன்றி:தினமலர்.

Posted by போவாஸ் | at 8:22 PM | 0 கருத்துக்கள்

அப்போதெல்லாம் அவர்களைக் காப்பாற்றிய கடவுள் இப்போது இவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லையே; ஏன்?


ஆற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றது ஒரு யானை, அது தண்ணீர் பருகிக் கொண்டிருக்கும்போது தண்ணீருக்கடியிலிருந்த முதலை ஒன்று யானையின் காலைப் பற்றித் தண்ணீருக்குள் இழுத்தது. யானை வலி தாளாமல் கதறியது. முதலை வாயிலிருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கடவுள் பெயரைச் சொல்லிச் சொல்லி கதறியழுதது.
அந்த யானையின் கூக்குரல் கேட்டு கடவுள் அந்த இடத்தில் பிரசன்னமானார். யானையை முதலை வாயிலிருந்து மீட்டுக் காப்பாற்றினார் என்பது ஒரு கதை!


மிருகண்டு முனிவருக்கு பல வருடங்களாகப் புத்திரபாக்கியம் இல்லை. தனக்கு ஒரு மகன் பிறக்கவேண்டும் என்று வேண்டி அவர் போகாத ஊர் இல்லை; பிரார்த்திக்காத கடவுள் இல்லை.
ஒருநாள் கடவுள் மிருகண்டு முனிவர் கனவில் தோன்றினார்.
உனக்கு நீண்டகாலம் வாழக்கூடிய மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரையில் மட்டுமே வாழக்கூடிய நற்குணங்கள் படைத்த மகன் வேண்டுமா? - என்று கேட்டார்.
மிருகண்டு முனிவர் 16 வயது வரையில் வாழும் நல்ல குழந்தை கொடுத்தால்போதும் என்று வரம் கேட்கிறார்.
மிருகண்டு முனிவருக்கு ஓர் அழகான குழந்தை பிறக்கிறான்; அவனைப் பாலூட்டிச் சீராட்டி பாசத்தோடு வளர்க்கிறார். மார்க்கண்டேயன் என்பது அவனது பெயர்.
அவனுக்கு 16 வயது நிறையப் போகிறது. 16 வயது நிறைவு நாளன்று_- மரணத்துக்குக் கடவுளான எமதர்மனின்_தூதர்களான யமகிங்கரர்கள் அவனது உயிரை எடுக்க வருகிறார்கள்.
அவன் கோவிலுக்குள் ஓடிப்போய் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பகவானே காப்பாற்று என்று கதறுகிறான். யமகிங்கரர்களோ பாசக் கயிற்றை வீசுகிறார்கள்.
சிவலிங்கத்தையும் சேர்த்துப் பாசக் கயிற்றால் இழுக்கிறார்கள். அப்போது அங்கே சிவபெருமான் தோன்றி யமனுக்கு சாபம் கொடுத்துவிட்டு மார்க்கண்டேயனைக் காப்பாற்றுகிறார். அது மட்டுமல்ல, அவனுக்கு எப்போதும் 16 வயதுதான் என்று வரமும் தருகிறார்.
இதுவும் ஒரு கதைதான்!


மயிலாப்பூரில் ஒரு சிவபக்தர். அவருக்கு ஒரு மகள். பூம்பாவை என்று பெயர்.
அவளைத் திருஞான சம்பந்தருக்குத்தான் திருமணம் முடிப்பது என்று சபதமிட்டுக் கொள்கிறார் அந்த சிவபக்தர். ஒருநாளஅந்தப் பெண் இறந்து போய்விடுகிறாள். மனமுடைந்த சிவபக்தர் அந்தப் பெண்ணின் உடலை எரித்து சாம்பலை சேகரித்து ஒரு செம்பில் வைத்து பத்திரமாக மூடிவைக்கிறார்.
சில காலம் கழித்து -
மயிலாப்பூருக்கு திருஞான சம்பந்தரே வருகிறார். அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்து வந்து அவர் முன் சாம்பலடங்கிய செம்பை முன் வைத்து கண்ணீர் மல்க உங்களுக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்ற ஆசையோடு வளர்த்து வந்தேன் என்று கம்மிய குரலில் கூறுகிறார்.
திருஞான சம்பந்தர் கவலைப்-பட வேண்டாம்; உங்கள் பெண்ணை நான் உயிர்ப்பித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு
மட்டிட்ட புன்னைக் கான
மடமயிலை கட்டிட்டம் கொண்டான்
கபாலீச்சுரம் அமர்ந்தான்...
என்ற பதிகத்தைப் பாடினார். என்ன ஆச்சரியம் அந்தப் பெண் உயிரோடு எழுந்துவிட்டாள்!
இதுவும் ஒரு கதைதான்!


திருநாவுக்கரசர் என்னும் அப்பரடிகளுக்கு ஒரு வெறி பிடித்த பக்தர் பெயர் அப்பூதியடிகள்.
தனது பிள்ளைகளுக்கெல்லாம் அப்பர் சுவாமிகளின் பெயரையே சூட்டியிருந்தார்! ஒருநாள் அப்பர் அவரது வீட்டிற்கு எழுந்தருளினார். அவருக்கு விருந்து படைக்க அப்பூதியடிகள் அறுசுவை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரது மகன் தலைவாழை இலை பறித்து வரக் கொல்லைப்புறம் சென்றான். அவன் இலை அறுத்துக் கொண்டிருந்தபோது ஒரு பாம்பு அவனைத் தீண்ட அங்கேயே விழுந்து இறந்துவிட்டான்.
தகவலறிந்த அப்பூதியடிகள் பதறிப் போனார். எனினும் மகன் இறந்த செய்தியை வெளியிட்டால் அப்பர் தன் இல்லத்தில் விருந்துண்ணும் பாக்கியம் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமே என்று நினைத்து மகன் இறந்த செய்தியையே மறைத்துவிட்டு விருந்து படைக்க முன்வந்தார். அப்பர் கேட்டார் உன்னுடைய இன்-னொரு மகன் எங்கே? என்று!
அவரது காலடியில் வீழ்ந்து கதறி நடந்தவற்றைச் சொல்லி மன்னிப்புக் கோரினார் அப்பூதியடிகள்.
அப்பர் சுவாமிகள் அவரது பக்தியை மெச்சினார். ஒரு பாடலைப் பாடினார்;
பாம்பு கடித்து இறந்த மகன் உயிர் பிழைத்து எழுந்து வந்தான்!
- இதுவும் ஒரு கதைதான்!


திருச்செங்காட்டாங்குடி என்று ஒரு ஊர். அந்த ஊரிலே ஒரு சிவனடியார். சிறுத்தொண்டர் என்று பெயர். அவர் சிவபக்தர்தான். அவரை அணுகி என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கேட்டதைக் கொடுக்கக்கூடியவர். அவரது இல்லத்துக்கு ஒரு சிவனடியார் வந்தார். வழக்கம் போல் சிறுத்தொண்டர் என்ன வேண்டுமென்று கேட்டார்.
‘‘உன் மகனை வெட்டிக் கறி சமைத்து எனக்கு விருந்து வை’’ என்று கேட்டார் சிவனடியார்.
சிறிதும் தயக்கமின்றி சிறுத்தொண்டர் தனது மகனை வெட்டி பிள்ளைக்கறி சமைத்து சிவனடியா-ருக்கு விருந்து படைக்க முன் வந்தார்.
பிள்ளைக் கறி கேட்ட அந்த சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான்,
சிறுத்தொண்டர் முன் தோன்றி பக்தா உன் பக்திக்கு மெச்சினேன் என்று பாராட்டி கறி சமைக்கப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தார்.
- இதுவும் ஒருகதைதான்!


திருவாரூரில் மனுநீதிச் சோழன் தனது அரண்மனை வாயிலில் ஓர் ஆராய்ச்சி மணியைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான்.
பொதுமக்களுக்கு ஏதாவது குறை என்றால் அந்த மணியை அடித்தால் மன்னனே நேரில் வந்து குறை கேட்டு கோரிக்கையை நிறை வேற்றி வைப்பான்!
ஒருநாள் ஆராய்ச்சி மணி ஒலித்தது. மன்னன் வெளியே வந்து பார்த்தபோது மணியின் கயிற்றை தன் வாயால் கவ்வி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது ஒரு பசு மாடு. அதன் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று சுரந்து கொண்டே இருந்தது.
மந்திரியை அழைத்த மன்னன்,
‘‘இந்தப் பசுவுக்கு என்ன குறை?’’ என்று கேட்டான்.
‘‘மன்னா, இந்தப் பசுவின் கன்று மீது நமது இளவரசர் தேரேற்றிக் கொன்றுவிட்டார்’’ என்று கார-ணம் சொன்னார் அமைச்சர்.
அப்படியா? - கன்றை இழந்து தவிக்கிறது இந்தப் பசு; இது போலவே கன்றின் மேல் தேரை ஏற்றிக் கொன்ற எனது மகனை - இளவரசனை நடுவீதியில் கிடத்தி தேரை ஏற்றிக் கொன்று விடு என்று கட்டளையிட்டான் மனுநீதிச் சோழன்.
இளவரசனைத் தெருவில் கிடத்தி தேர் ஏற்றி நீதி வழங்கப்பட்டபோது தியாகேசப் பெருமான் தோன்றி கன்றுக் குட்டிக்கும் இளவரசனுக்கும் உயிர் கொடுத்து அருள் பாலித்தார்!
இதுவும் ஒரு கதைதான்!இதோ - இன்னொரு கதை - அல்ல - நடந்த உண்மை நிகழ்வு.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக இருந்த தேவனாதக் குருக்கள்(?), கோவிலுக்குள் சாமி சிலையின் பின்புறம் பல பெண்களை அழைத்துச் சென்று அந்த மறைவிடத்தில் மன்மத லீலைகள் நடத்தி வந்தார். இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தேவநாதக் குருக்களின் காமவலை-யில் சிக்கி வாழ்வை இழந்த எத்தனையோ பெண்களில் ஒரு பெண் போலீசாரிடம் தந்த வாக்குமூலம்:-
நான் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள மச்சேஸ்வரர் கோவி-லுக்கு சாமி கும்பிட சென்றேன். அப்போது அர்ச்சகர் தேவநாதன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டிய பிறகு திடீரென அவர் நாக்கை நீட்டு என்றார். உடனே அவர் நாக்கில் ஏதோ மருந்தை லேசாக தடவினார்.
அதை தடவிய சிறிது நேரத்தில் நான் அரை மயக்கத்திற்கு தள்ளப்பட்டேன்.
அப்போது கருவறையில் என்னுடன் உறவு கொள்ள விரும்புவதாக கூறினார். நான் மறுத்தேன்.
அதையும் மீறி எனது சம்மதம் இல்லாமல் என்னுடன் உறவு கொண்டார்.
மேலும் அந்த காட்சியை அவரு-டையசெல்போனில் படம் பிடித்தார்.
பிறகு அடிக்கடி எனக்கு போன் செய்து, செல்போனில் உனது படம் உள்ளதென மிரட்டி பலமுறை கோவில் கருவறையிலும், வீட்டிலும் என்னுடன் உறவு கொண்டார்.
இப்போது நான் உண்மையை சொல்ல வேண்டிய மனநிலையில் வந்துள்ளேன்.
- இவ்வாறு அந்த பெண் வாக்கு மூலத்தில் கூறி இருக்கிறார்.


யானையைக் காப்பாற்றிய கடவுள், கறி சமைக்கப்பட்ட பாலகனை உயிர்ப்பித்துத் தந்த கடவுள்; தேர் ஏறிக் கொலையுண்ட கன்றையும், இளவரசனையும் காப்பாற்றிய கடவுள்,தான் குடிகொண்டுள்ள கோவிலில் தன் பின்பக்கமே வாழ்விழந்த பெண்களை காமக் கொடூரனின் மிருக இச்சையிலிருந்து காப்பாற்றாமல் சும்மா இருந்து விட்டாரே; ஏன்?
நன்றி: ‘முரசொலி’, 2.12.2009

Posted by போவாஸ் | at 7:13 PM | 0 கருத்துக்கள்

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாய் சொல்ல வேண்டாமா ?பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாய் சொல்ல வேண்டாமா ?


எம்ஜிஆரை கொச்சைப்படுத்துவதா ? - என்று பார்ட்டைம் அரசியல்வாதி விஜயகாந்து முதல்வர் கலைஞருக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
என்ன விஷயம் ? - லிபரான் அறிக்கை 'கசிந்த'தற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டுமென்று - விஜயகாந்தின் ரகசிய கூட்டாளி ஜெயலலிதா கோரினார்."எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் - பால் கமிஷன் அறிக்கையை நானே வெளியிட்டேனே! அப்போது பால் கமிஷன் அறிக்கை வெளிவந்ததற்குப் பொறுப்பேற்று - எம்ஜிஆர் மந்திரிசபையில் யாராவது ராஜினாமா செய்தார்களா ? " - என்று முதல்வர் கலைஞர் கேள்வி எழுப்பினார்.


யோக்கியதன்மையும் - அறிவு நாணயமும் பொருந்திய யாராக இருந்தாலும் கலைஞரின் கேள்விக்கு உரிய பதிலை நேரடியாக சொல்வார்கள். பதில் சொல்ல முடியாதவர்கள் - வாயையும், இன்னொன்றையும் பொத்திக் கொண்டு சும்மா இருப்பார்கள்.


ஜெயலலிதா அப்படிப்பட்டவரா ?. அவர், கலைஞரின் நேரடியாக பதில் சொல்ல வக்கின்றி வகையின்றி, "அன்று அந்த அறிக்கையை வெளியிட்டதற்காக கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று பிரச்னையை திசைதிருப்பும் வகையில் குயுக்திவாதம் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இப்போது - ' விருத்தகிரி; படத்துக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் விஜயகாந்து 'நானும் அரசியலில் இருக்கிறேன்" என்று காட்டிக்கொள்ள "எம்ஜிஆரைக் கொச்சைப்படுத்துவதா?" என்று ஒரு விதண்டவாத அறிக்கைவிட அதனை ஆர்.எஸ்.எஸ் வைத்தியநாத அய்யர் பரம சந்தோசத்துடன் 'தினமணி'யில் பிரசுரித்து விட்டார்.


லிபரான் கமிஷன் அறிக்கை 'கசிந்த'தற்கே ப.சிண்டம்பரம் ராஜினாமா செய்யவேண்டும் என்றால் - பால் கமிஷம் அறிக்கை முழுவதுமே வெளியிடபட்டதற்க்காக - எம்ஜிஆர் காலத்தில் யாராவது ராஜினாமா செய்தார்களா? - என்று கேட்டால் - அது எப்படி எம்ஜிஆரைக் கொச்சைப் படுத்துவதாகும் ?.


அப்போது - 
எம்ஜிஆர் மந்திரி சபையில் பதவிச்சுகம் அனுபவித்து கொண்டிருந்தவரும் - இப்போது விஜயகாந்துக்கு ஏடாகூட அறிக்கைகள் தயார் செய்து தருபவருமான சகுனி பண்ருட்டி ராமச்சந்திரனிடம் - விஜயகாந்து கேட்டிருக்கலாமே, "அன்று ஏன் ராஜினாமா செய்யவில்லை " என்று.


அதை விட்டுவிட்டு - கலைஞர் மீது பாய்ந்த பிராண்ட வேண்டிய அவசியம் என்ன ?


"பொருளை வாங்குபவர்கள் யாரும் இல்லையென்றால் அதை யாரும் உற்பத்தி செய்யமாட்டாகள்" என்று ஒரு பொருளாதார முத்தை உதிர்த்திருக்கிறார் விஜயகாந்து.


2006 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்து.


பேரரசு
சபரி
தர்மபுரி
நிறைஞ்ச மனசு
அரசாங்கம்
எங்கள் ஆசான்


என்று வதவதவென்று உற்பத்தி செய்யப்பட பொருள்களை - அல்லது படச் சுருள்களை மக்கள் சீந்தவில்லையே - கடைசிப் படம் எங்கள் ஆசானுக்கு தியேட்டரே கிடைக்கவில்லையே திரையிட .
பொருளை வாங்குபவர்கள் யாரும் இல்லையென்றால் அதை யாரும் உற்பத்தி செய்யமாட்டார்கள் என்ற பொருளாதார தத்துவ முத்தின் அடிப்படையில் - விஜயகாந்து படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு - முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டாரா ? மறுபடியும் விருதகிரியை உற்பத்தி செய்ய வெளிநாடுகள் செல்ல மூட்டைக் கட்டிவிட்டாரே !


பொய் சொல்வது விஜயகாந்து போன்ற புதிய வரவுகளுக்கு வழக்கந்தான் - பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்லத் தெரிய வேண்டும்.


நன்றி: முரசொலி.

Posted by போவாஸ் | at 3:31 PM | 4 கருத்துக்கள்

ஸ்டா​லின் தலை​மை​யில் சென்னை நதி​நீர் ஆணை​யம்


கூவம் உள்​ளிட்ட நதி​க​ளின் சீர​மைப்​புத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்த சென்னை நதி​நீர் ஆணையம் என்ற தனி அமைப்பு ஏற்​ப​டுத்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.

​இந்த ஆணை​யத்​துக்கு துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​வ​ராக இருப்​பார்.

கூவம் ஆற்​றைச் சீர​மைத்​தல்,​ வானூர்தி தொழிற்​பூங்கா மற்​றும் நிதி​ந​க​ரம் ஏற்​ப​டுத்​து​தல் ஆகிய திட்​டங்​கள் தொடர்​பாக துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மை​யி​லான குழு சிங்கப்பூர் சென்றது. அங்கு,​ அமைச்​சர்​கள் மற்​றும் அதி​கா​ரி​க​ளைச் சந்​தித்து பல்​வேறு ஆலோ​ச​னை​களை நடத்​தி​யது அந்​தக் குழு.

​இந்த நிலை​யில்,​ தங்​க​ளது பய​ணம் குறித்து முதல்​வர் கரு​ணா​நி​தி​யி​டம் தலை​மைச் செயலகத்தில் வியா​ழக்​கி​ழமை விளக்​கி​னார் துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின்.

இது​கு​றித்து,​ அரசு வெளி​யிட்ட செய்தி:​

கூவம் நதி​யின் இன்​றைய நிலைக்​குக் கார​ண​மாக உள்ள பல்​வேறு சுற்​றுச்​சூ​ழல் பிரச்​னை​கள்,​ அவற்​றைக் களை​வது,​ சிங்​கப்​பூர் நதி​யைப் போலவே கூவத்​தை​யும் மாற்​றி​ய​மைத்​திட தேவையான நட​வ​டிக்​கை​கள் பற்றி துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் விளக்​கி​னார்.

65 கி.மீ., தூரத்​துக்கு:​ கூவம் உற்​பத்​தி​யா​கும் இட​மான திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள கூவம் ஏரி​யில் இருந்து அது கட​லில் கலக்​கும் இடம் வரை மொத்​தம் 65 கி.மீ., தூரம் உள்​ளது.

​இந்த தூரத்​துக்கு செயல்​ப​டுத்​தப்​பட வேண்​டிய திட்​டங்​கள் பற்​றி​யும் முதல்​வ​ருக்கு விளக்கப்பட்டதாக அர​சின் செய்​தி​யில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. ​

​சென்னை நதி​நீர் ஆணை​யம்:​ கூவம் மற்​றும் சென்​னை​யில் உள்ள மற்ற நதி​க​ளின் சீர​மைப்​புத் திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்த முதல்​கட்​ட​மாக சென்னை நதி​நீர் ஆணை​யம்' என்ற தனி அமைப்பு ஏற்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் இந்த அமைப்​பின் தலை​வ​ராக இருப்பார். இதில்,​ குடிசை மாற்று வாரிய அமைச்​சர்,​ சுற்​றுச்​சூ​ழல் துறை அமைச்​சர்,​ தலை​மைச் செய​லா​ளர் மற்​றும் சம்​பந்​தப்​பட்ட துறை​க​ளின் செய​லா​ளர்​கள் உறுப்​பி​னர்​க​ளாக இருப்​பார்​கள் என்று அரசு தெரி​வித்​துள்​ளது.

​அதி​கா​ரி​கள் ஆய்வு:​அர​சின் இந்த அறி​விப்​பைத் தொடர்ந்து,​ கூவத்​தைத் தூய்​மைப்​ப​டுத்​தும் திட்டத்​துக்​கான பூர்​வாங்​கப் பணி​களை பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​கள் தொடங்​கி​யுள்​ள​னர். கூவம் ஆற்​றுப் பகு​தி​களை வியா​ழக்​கி​ழமை மாலை ஆய்வு செய்​த​னர்.

​இது​கு​றித்து,​ பொதுப்​ப​ணித் துறை அதி​கா​ரி​க​ளி​டம் கேட்ட போது,​ ""65 கி.மீ. நீள​முள்ள கூவம் நதியைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணி பல்​வேறு கட்​டங்​க​ளாக மேற்​கொள்​ளப்​ப​டும். முதல்​கட்டமாக,​ தொழில்​நுட்ப ரீதி​யாக ஆய்வு செய்​யும் பூர்​வாங்​கப் பணி​கள் நடை​பெ​று​கின்​றன'' என்று தெரிவித்தனர்.
---------------------------------------------------------------
முன்பு கருணாநிதி கூவத்தைச் சுத்தப்படுத்தி, சீரமைப்பதாகக் கூறி, அது முடியாமல் போயிற்று. ஆனால் இப்போது நெற்குன்றம், ரயில்நகர், கோயம்பேடு பகுதிகளில் கூவம் கரைகள் சுத்தம் செய்யப்பட்டு, செடிகொடிகள் அகற்றப்பட்டு சாக்கடை (நதி) ஆழப்படுத்தப்பட்டு, நீர் விரைவாக ஓடுவதைப் பார்த்ததும் நிச்சயம் இப்போது ஏதாவது நல்லது நடக்கும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.

கரைகளில் தடுப்பு கட்டப்பட்டு, தண்ணீர் தேங்காமல் ஓடினாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.  சுற்றுச் சூழல், நல வாழ்வு, சுற்றுலா முதலிய பிற நோக்கிலும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.எனவே, சென்னையில் கழிவு நீரும் குப்பைக்கூளங்களும் தொழிற் குப்பைகளும் கூவத்தில் சேராமல் இருக்கவும் நிலையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் துணையில்லாமல், ஆதரவில்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெறாது. ஆதலால் தமிழக அரசு கோவத்தை சுத்தப் படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவையும் பெற வேண்டும்.

பேச்சை குறைத்து செயலில் சிறப்பாக செயல்படுவதே துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொள்கை. சென்னை நதிநீர் திட்டத்துக்கு தலைமை ஏற்றுள்ள துணை முதல்வர் திட்டத்தை விரைவாகவும், நிறைவாகவும் நிறைவேற்றுவார் என்பதில் ஐயமில்லை.

ஒரு குறையுமில்லாமல் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் நல்லது செய்தால் பாராட்ட வேண்டியதுதானே.

Posted by போவாஸ் | at 2:50 PM | 0 கருத்துக்கள்

மாலுமி விஜயகாந்தின் அறிக்கைக்கு கலைஞரின் நெத்தியடி பதில்.


ஊனமுற்றோருக்கு யாருடைய பரிந்துரையும் இன்றி நன்மைகளை செய்து வருகிறோம் என்று 'மாலுமி' விஜயகாந்தின் அறிக்கைக்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இன்று (நேற்று) உலக உடல் ஊனமுற்றோர் தினம். ஊனமுற்றோர் தன்னம்பிக்கை பெற்று பொருளாதார நிலையில் கவலை தவிர்த்து நிற்கும் நிலையை அடையச் செய்ய சிறப்புக் கல்வி அளித்தல், வாழ்க்கைத் தொழில் பயிற்சி அளித்தல், பணியிலே அமர்த்துதல், சுயவேலைவாய்ப்புக்கு உதவி அளித்தல், உதவி உபகரணங்களை இலவசமாக வழங்குதல் ஆகியவை அடங்கிய விரிவான மறுவாழ்வு அளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கழக அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதை அனைவரும் அறிவார்கள்.

ஊனமுற்றோருக்கு உதவிட வேண்டும் என்பதில் கழக அரசைப் பொறுத்தவரையில் வேறு யாருக்கும் குறைந்ததல்ல என்பதை ஊனமுற்றவர்களே நன்கறிவார்கள். ஊனமுற்றவர்களுக்கு உண்மையாக உதவிட வேண்டுமே தவிர, வெறும் அறிக்கைகளாலே மட்டும் அவர்களுக்கு இது செய்தேன், அது செய்தேன் என்று எழுதிவிட்டால் மாத்திரம் அவர்களுக்கு நன்மைகள் விளைந்திட முடியாது.

இந்த நாளையொட்டி ஊனமுற்றோரின் வாழ்க்கை மேம்பட கழக அரசில் என்னென்ன நலத்திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதை சுருக்கமாக எடுத்துக்கூற விரும்புகின்றேன்.

2006 2007ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் இத்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை சுமார் ரூ.39 கோடியாகும். 2007 2008ல் இது ரூ.78 கோடி அளவிற்கு கழக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. 2009 2010ல் இது ரூ.107 கோடியாக உயர்த்தப்பட்டது என்றால், ஊனமுற்றோர்மீது கழக அரசுக்கு உள்ள உண்மையான அக்கறையைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக முன்மாதிரி திட்டமாக "தசை சிதைவு'' நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தில் ஆண்டொன்றிற்கு 1000 நபர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

கடும் ஊனமுற்றோருக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.500 வழங்கும் திட்டத்தில் தற்போது 10,000 நபர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

60 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் மனவளர்ச்சி குன்றியோருக்கு உச்சவரம்பின்றி மாதம் ஒன்றிற்கு ரூ.500 வீதம் பராமரிப்பு உதவித் தொகையாக 50,600 நபர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

2007 2008ல் 20,000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித் தொகை, கடந்த ஆண்டில் மேலும் 30,600 மனவளர்ச்சி குன்றியோர் கூடுதலாக சேர்க்கப்பட்டு, மொத்தம் 50,600 நபர்கள் பயன்பெறும் வகையில் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களில் 61,600 நபர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சி, ஊனமுற்றோரிடம் அக்கறை கொண்ட ஆட்சி என்பதால்தான், ஊனமுற்றோருக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஊனமுற்றோர் நலவாரியம் அமைத்து ஆணை யிடப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் நலவாரியம் மூலம் செயல்படும் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியிலிருந்து இதுவரை 3471 நபர்கள் பயனடையும் வகையில் மொத்தம் ரூ.2 கோடி செலவிடப்பட்டுள்ளது.

450 பேருக்கு கல்வி உதவித் தொகையும்   115 பேருக்கு திருமண உதவித் தொகையும்   17 பேருக்கு மகப்பேறு உதவித் தொகையும்   57 பேருக்கு மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான உதவித் தொகையும்   180 பேருக்கு ஈமச் சடங்கிற்கான உதவித் தொகையும்   2 பேருக்கு விபத்திற்கான நிவாரணத் தொகையும்   100 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகளும்   150 பேருக்கு பொது இடங்களில் வியாபாரம் செய்வதற்கான பெட்டிக் கடைகள் வைக்க உதவித் தொகையும்   2250 பேருக்கு கையுறை மற்றும் முட்டிப்பட்டை வழங்கும் திட்டமும்   150 பேருக்கு சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகையுமாக மொத்தம் 3,471 பேருக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அளவிற்கு இந்த வாரியத்தின் சார்பில் உதவிகள் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஒதுக்கிய நிதிக்கு மேலாகவே தொகை செலவிடப்பட்டிருக்கும்போது, அதனை மூடி மறைக்கும் வகையில் "போதுமான நிதி ஒதுக்கவில்லை என்றும், வாரியம் என்ற பெயரில் ஊனமுற்ற மக்களை ஏமாற்றுகின்ற வேலை" என்றும் ஒரு சிலர் அறிக்கை விட்டிருப்பது எத்தகைய மவுடீக (கீழ்த்தரமான) அரசியல் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்ளவே செய்வார்கள்.

ஊனமுற்றவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை திட்டத்தின்கீழ், 2006 2007ல் 19,982 பேர்களுக்கும், 2007 2008ல் 20,818 பேர்களுக்கும், 2008 2009ல் 31,243 பேர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மூன்றாண்டுகளில் இந்த திட்டத்திற்கு அரசு செலவிட்ட தொகை ரூ.28.35 கோடிகளாகும்.

ஊனமுற்றோருக்கென வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டத்தின்கீழ், திருமண செலவிற்கென ரூ.10,000மும்; அத்துடன் அவர்களின் வருங்கால தேவையை கருத்தில் கொண்டு தேசிய சேமிப்பு பத்திரமாக ரூ.10,000மும் ஆக மொத்தம் ரூ.20,000 வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும் ரூ.10,000 ஏழரை ஆண்டுகளுக்கு பின் இருமடங்காக கிடைக்கப்பெறும்.

ஊனமுற்ற நபர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் இலவசமாக வழங்கும் திட்டம் 2007 2008ம் ஆண்டு முதல் கழக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 2007 2008 மற்றும் 2008 2009 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 120 ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவசமாகவும், பணிக்குச் செல்லும் 580 ஊனமுற்ற நபர்களுக்கு ரூ.10,000 வீதம் மானியமாகவும் வழங்கப்பட்டு, இதற்கென ரூ.1 கோடி செலவு செய்யப்பட்டது.
மேலும் தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியத்தின் மூலம் இந்த ஆண்டு 100 ஊனமுற்ற நபர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் வழங்க ரூ.34.50 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

ஊனமுற்றோர் சங்கங்களின் பிரதிநிதிகளை 19 8 2007 அன்று நானே நேரில் சந்தித்து, பின்வரும் மறுவாழ்வு உதவிகளை உடனடியாக அறிவித்தேன்:

300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பார்வையற்றோரைக் கொண்டு சிறப்பு நேர்வாக நிரப்பப்படும் என்று அறிவித்து, அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பிற்கு 3 சதவீத இடஒதுக்கீட்டினை உறுதிப்படுத்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்ற நபர்களுக்கு அரசு பேருந்துகளில் 75 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 சதவீத விளிம்புத்தொகையினை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வி பெறும் ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்குக் கல்வி கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

பார்வையற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரண தொகையைப் போலவே இதர வகை ஊனமுற்றோருக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

ஊனமுற்றோருக்கென மாநில கொள்கை ஏடு வெளியிடப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் மறுவாழ்விற்காக இவ்வாண்டு மானியக் கோரிக்கையில் பின்வரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன:

ஊனமுற்றோருக்கு இலவசமாக மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றியோருக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயனாளிகளின் எண்ணிக்கையினை 20,000 லிருந்து 50,600ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது.

1 8ம் வகுப்பு வரை பயிலும் உடல் ஊனமுற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கும், ஊனமுற்றோர் சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மானியம் வழங்கவும், கடும் ஊனமுற்றோர் பராமரிப்பு உதவித்தொகை பெறவும் ஊனமுற்றோர் உதவி உபகரணங்கள் பெறவும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வருமான உச்சவரம்பு ரூ.12,000 என்பதை ரூ.24,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

செவித்திறன் குறையுடைய 6000 நபர்களுக்கு காதொலி கருவி மற்றும் சூரிய ஒளியினால் சக்தி பெறும் பேட்டரிகள் வழங்க ஒரு சில நாட்களில் ஆணை வெளியிடப்பட உள்ளது.

பார்வையற்ற நபர்களுக்கு 77 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

ஊனமுற்றோரை ஊனமுற்றோரே திருமணம் செய்து கொண்டால் ரூ.20,000 உதவித்தொகை வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே தி.மு.க. அரசு ஊனமுற்றோருக்கு யாருடைய பரிந்துரையையும் எதிர்பார்க்காமலே இத்தகைய நன்மைகளையும், சலுகைகளையும் ஆற்றி வருகின்றது. இன்று உலக உடல் ஊனமுற்றோர் தினம் என்ற வகையில் அதனைப் பயன்படுத்திக்கொண்டு இந்த விவரங்களையெல்லாம் தெரிவிப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். ஊனமுற்றவர்களுக்கு மேலும் எந்த வகையில் எல்லாம் உதவிட முடியுமோ அந்த அளவிற்கு கழக அரசு தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இந்த நாளில் உறுதி கூறுகிறேன்.

Posted by போவாஸ் | at 12:10 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails