புற்று நோயை உருவாக்கும் சி.டி.ஸ்கேன்கள் - மருத்துவ ஆய்வில் தகவல்


உடலில் உள்ள நோய்களை கண்டறிய தற்போது சி.டி.ஸ்கேன்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை தேவையில்லாமல் அதிக அளவு பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் என புதிய மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
 
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், மற்றும் சான்பிரான் சிஸ் கோவில் உள்ள ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
 
இந்த ஆய்வில் சி.டி.ஸ்கேன் கருவிகளில் இருந்து அதிக அளவில் வெளியாகும் ஒளிக்கதிர்கள் செல்களில் ஊடுருவி புற்று நோயை உருவாக்கும் என்று கண்டு பிடித்துள்ளனர்.
 
அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் அதிக அளவில் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டவர்களில் லட்சக்கணக்கானவர்களுக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளதும் மேலும் வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் பலியாவதும் தெரியவந்துள்ளது.
 
இதே கருத்தை தான் சமீபத்திய பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இதற் கிடையே சாதாரண சி.டி. ஸ்கேன் மூலம் மார்பு பகுதியில் ஒரு தடவை சோதனை செய்வது 100 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமமாகும்.
சில சி.டி. ஸ்கேன்கள் 440 எக்ஸ்ரேக்கள் எடுக்க கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடியவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Posted by போவாஸ் | at 2:08 PM | 0 கருத்துக்கள்

அவசரம் + ஆத்திரம் + ஆணவம் = விஜயகாந்து.


இடைத்தேர்தல் வரும்  19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.
மழையின் காரணமாக தலைவர்கள் கால தாமதமாக வரும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டதால், இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து கார் மூலம் ஜெயலலிதா வந்தவாசி சென்றார்.

ஸ்டாலினாலும் குறித்த நேரத்திற்கு வரமுடியவில்லை. 
அதே நிலைதான் விஜயகாந்திற்கும்.


ஆனால் மூவரும் தெள்ளூர் எனும் இடத்தில் மூன்று வழிகளில் வந்து நேருக்கு நேர் செல்லும் சூழல் நிலவியது. மூன்று பேரும் அந்த இடத்தில் பிரச்சாரம்  செய்ய வேண்டும் என்று திட்டமிடப்படிருந்தது.


மூன்று கட்சி தொண்டர்களும் குவிந்துவிட்டதால் அப்பகுதி மிகவும் பதட்டமாக காணப்பட்டது.


தவிர்க்க முடியாத, இக்கட்டான நிலைமையைப் புரிந்து கொண்ட ஜெயலலிதா  வேறு வழியாக சென்றுவிட்டார்.


பொறுமையில்லாத விஜயகாந்து :
பின்னர், துணை முதல்வர் ஸ்டாலின் தெள்ளூர் பகுதியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அதே இடத்தில் பிரச்சாரம் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார்.


’துணை முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார்.  அவர் பேசிச்சென்றபின் நீங்கள் பிரச்சாரம் செய்யலாம்’ என்று போலீஸ் விஜய்காந்த்தை தடுத்து நிறுத்தினர்.


’அவர் பிரச்சாரம் செய்வதற்கும் எனக்கும் சம்பநதமில்லை.  எனக்கு நேரம் ஆகிவிட்டது.  இன்னும் நிறைய இடங்களூக்கு செல்ல வேண்டியிருக்கிறது.   என்னை விடுங்கள்’ என்று விஜயகாந்த் எகிறினார்.


அவர் பேசிக்கொண்டிருக்கும் போது நீங்கள் எப்படி அந்த வழியாக செல்வீர்கள்.  கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர் போலீசார்.



ஆத்திரமடைந்த விஜயகாந்த்,  பிடிவாதமாக அதே வழியாகத்தான் செல்வேன் என்று அடம்பிடித்து, பிரச்சார வேனை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். இப்படி 1 -1/2 கிலோ மீட்டர் நடந்தே சென்றார் விஜயகாந்த். (உடம்பு குறையுமே).


ஆவேச கத்தல் :
பிரச்சாரப்பகுதிக்கு வந்ததும்,  ‘’என்னை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்’’என்று விஜயகாந்த் ஆவேசமாக கத்தினார்.
மூன்று பேரின் பிரச்சாரமும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது.
------------------------------------------------------------
அவசரம் + ஆத்திரம் + ஆணவம் + பிடிவாதம் = விஜயகாந்து.
இதே நிலைதான் இரு தினங்களுக்கு முன் திருசெந்தூர் அருகில் பிரசாரத்தின் போது வைகோவும், கனிமொழி அவர்களும் எதிரெதிரே சந்திக்கும் நிலை வந்தது.


தமிழக காவல்துறையினர், சூழ்நிலைகளை வைகோவிடமும், கனிமொழியிடமும் எடுத்துக் கூறிய பின்னர், கனிமொழி அவர்களும் சீக்கிரமாக பிரசாரத்தை முடித்து வைகோவிற்கு வழி விட்டார். வைகோவும் கனிமொழி அவர்களின் பிராச்சாரம் முடியும் வரை பொறுமையுடன் காத்திருந்து, அவர் போனவுடன் தனது பிராச்சாரத்தை தொடங்கினார். இதுவே நாகரிகமான அரசியல். 


இதே போலதான் இன்று வந்தவாசியில் ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த் மூவரும் எதிரெதிரே சந்திக்கும் நிலை வந்ததும், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஜெயலலிதா நாகரிகமாக வேறு பாதையில் சென்று விட்டார்.


ஆனால், பிடிவாதம், எகத்தாளம், பொறுமையின்மை, அவசரம், ஆத்திரம், ஆணவம் ஆகியவற்றின் மொத்த உருவமாக தன்னைக் காட்டிக் கொண்டு, வெளிப்படுத்தினார் விஜயகாந்து. பிடிவாதமாக அதே வழியாகத்தான் செல்வேன் என்று அடம்பிடித்து, பிரச்சார வேனை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.


இதுவே இவரது குண நலன்கள், பண்புகள்.


அரசியலில் பொறுமை, அடக்கம், பண்பு மிக மிக அவசியம்.


இவை எதுவுமில்லாத விஜயகாந்து எப்படி ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆசைப்படலாம் ?. (இந்த ஜென்மத்தில் நடக்காத விஷயம்)


எல்லோருக்கும் ஆசை உண்டு...ஆனால் தகுதிக்கு மீறி ஆசைப் படக் கூடாது.


ஐந்து நிமிடம் கூட பொறுமையுடன் காத்திருக்க முடியாத இவர் கையில் பொறுப்புகளைக் கொடுத்தால் ஒன்றும் உருப்படியாக இருக்காது. எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற  நிலைதான் இருக்கும்.


நாகரீகமான அரசியல் செய்ய விஜயகாந்து கற்றுக் கொள்ள வேண்டும்.


"ஆத்திரகாரனுக்கு(விஜயகாந்த்) புத்தி மட்டு"ன்னு சும்மா சொல்லி விடவில்லை நம் முன்னோர்கள்.


செய்திக்கு நன்றி : நக்கீரன். 

Posted by போவாஸ் | at 1:08 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails