மொட்டை அடித்து பெண் சித்ரவதை



கோவையில், குடும்பத் தகராறில் மனைவியை சித்ரவதை செய்து, மொட்டை அடித்து அவமானப்படுத்திய கணவர், உடந்தையாக இருந்த மாமியார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான நாத்தனாரை போலீசார் தேடுகின்றனர்.
Important incidents and happenings in and around the world

கோவை, கோட்டைமேடு, சாமராவ் வீதியில் வசிப்பவர் இப்ராகிம்ஷா(35); ரெடிமேடு ஆடை விற்பனை மையம் வைத்துள்ளார். இவரது மனைவி நதீரா பானு(26). இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.


சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நதீராபானு கோபித்துக் கொண்டு, உக்கடம் சுப்ரமணியசுவாமி கோவில் வீதியில் வசிக்கும் பெற்றோரிடம் சென்று விட்டார். ஜமாத்தில் நடந்த சமரசத்துக்குப் பின் நதீராபானு, மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.


நேற்று முன்தினம் இரவு, இவர்களது குழந்தைகள் மூவரும் சுப்பிரமணியசுவாமி கோவில் வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றனர். அம்மா எங்கே இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை என கேட்டதற்கு, பதிலளித்த குழந்தைகள், அப்பா, சித்தப்பா, அத்தை மற்றும் பாட்டி ஆகியோர் அம்மாவுக்கு மொட்டை அடித்து விட்டனர். அதனால் வெளியில் வரவில்லை என சோகத்துடன் தெரிவித்தனர்.


குழந்தைகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நதிராபானுவின் பெற்றோர், உக்கடம் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன் விசாரித்ததில், "இப்ராகிம்ஷாவின் தங்கை ஆமீனாவின் பேச்சை கேட்டு, நதிராபானுவின், நீளமான தலைமுடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு நதீரா மறுப்பு தெரிவித்துள்ளார்.


ஆமினா வற்புறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று, வலுக்கட்டாயமாக நதீராபானு மொட்டை அடிக்கப்பட்டார். இதற்கு இப்ராகிம்ஷாவின் தம்பி பைரோஷ், மாமியார் சரீபா(55) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது தெரிந்தது.


இதைத் தொடர்ந்து, நதீராபானுவுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த, கணவர் இப்ராகிம்ஷா, இவரது தம்பி பைரோஷ், மாமியார் சரீபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக்கொடுமைக்கு தூபம் போட்ட நாத்தனார் ஆமினா தலைமறைவாகி விட்டார்.


கைது செய்யப்பட்ட மூவர் மீதும், குடும்பப் பெண்கள் வன்கொடுமை சட்டம், மானபங்கப்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மனைவியை மொட்டை அடித்து, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது



நன்றி : தினமலர் 


குடும்பத்தில் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக பெண்ணைக் கொடுமைப்படுத்தி மொட்டையடிப்பது கீழ்த்தரமான எண்ணங்கொண்ட மனிதர்களின் செயல். காவல்துறையும், சட்டமும் குற்றம் செய்தோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். குறிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. அவர்களுக்கு எந்த ஒரு வக்கீலும் வாதாடக் கூடாது. முக்கியமாக இப்படி ஒரு மனிதாபிமானமில்லாத குற்றம் புரிந்த நபர்கள் முஸ்லிம் மதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். குறைந்த பட்சம் ஜமாத்திலிருந்தாவது நீக்கவேண்டும்.

Posted by போவாஸ் | at 12:10 PM | 1 கருத்துக்கள்

உங்க பிளாகின் மதிப்பு எவ்வளவு?

உங்க பிளாகின் மதிப்பு எவ்வளவு ?. 
சராசரியா தினமும் உங்க பிளாக்குக்கு எத்தனை பேரு வந்துட்டு போறாங்க ?. 
எத்தனை பேரு பாக்குறாங்க ?. 
உலகில் உள்ள இணையதளத்தினில் உங்க பிளாக்கு எத்தனையாவது ரேங்க்?. 
இந்தியா அளவுல எத்தனையாவது ரேங்க் ?  
............தெரிந்து கொள்ள ஆசையா ?. 
வாங்க ஒரு நொடியில தெரிஞ்சுக்கலாம்.


http://www.bizinformation.org அப்படிங்குற இணையதளத்திற்கு போங்க.  
முதல் & முகப்பு பக்கம் வந்ததும். அதுல address bar மாதிரி இருக்கறதுல, நீங்க எந்த இணையதளத்தின் விவரங்களை தெரிஞ்ச்ய்கனுமோ, அதோட இணையதள முகவரியை கொடுத்து, வழக்கம்போல ENTER Keyயை தட்டவும்.  



இப்போ இரண்டாம் பக்கம் லோட் ஆகி வரும். அதில் நீங்கள் எதிர்பார்த்த விவரங்கள் கிடைக்கும்.



உங்கள் பிளாகின் மதிப்பு குறித்த விவரங்களை உங்கள பிலாகினிலும் Gadegetஆக இணைத்துக் கொள்ளலாம்.
நம்ம பிளாக் மட்டுமல்ல, நாம அன்றாடம் போய் படிக்கிற, பார்க்குற இணையதளங்கள் மதிப்பும் தெரிஞ்சுக்கலாம்.

Posted by போவாஸ் | at 3:09 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails