முல்லா ஸ்பெஷல் - III
காதலும் திருமணமும்
ஒரு பெண் முல்லா நசுருதினிடம் “ நீ என்னை காதலிக்கிராயா ? “ எனக் காதில் கிசு கிசுத்தாள்.
முல்லா “ கண்டிப்பாக , நாண் உண்னை காதலிக்கிரேன், இதில் என்ன சந்தேகம் ? “ என பதில் கூறினாள்
“ அப்படியானால் என்னை திருமணம் செய்துகொள்வாயா ?” என அந்தப் பெண் கேட்டாள்
“ நாம் பேசிக்கொண்டிருக்கும் விசயத்தை விட்டுவிட்டு ஏன் வேறு விசயத்திற்க்கு மாறுகிறாய் ? எனக்கேட்டார்.
துண்டைக் காணோம் துணியைக் காணோம்முல்லா தனது நன்பர்களுடன் வேட்டைக்குச் சென்றார், வழியில் ஒரு சிங்கத்தை அவர்கள் கண்டுவிட்டனர், அந்த சிங்கமும் இவர்களைப் பார்த்து துரத்த ஆரம்பித்தது, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக துண்டை காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தனர். ஆனால் பாவம் முல்லாவினால் சிங்கத்தின் பார்வையிலிருந்து தப்பமுடியவில்லை, சிங்கம் அவரை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.
நண்பர்கள் முல்லாவின் கதை முடிந்தது என்றே நினைத்தனர். மிகவும் கவலையுடன் ஊருக்குள் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு முன்னால் முல்லா ஊருக்குள் வந்து சேர்ந்திருந்தார்,நண்பர்களுக்கு தங்களின் கண்களையே நம்ப முடியவில்லை . அவர்கள் முல்லாவை பார்த்து “அடப்பாவி! எப்படி சிங்கத்திடம் இருந்து தப்பித்தாய் ! ” என வினவினர்
முல்லா “ நான் வந்த திசையிலே விடாமல் துரத்தி வந்தது சிங்கம் ! நானும் விடாமல் ஓடிவந்தேன் , எனக்கும் சிங்கத்திற்க்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது, சிங்கம் என் மிக அருகில் நெருங்கி என் மீது பாயும் சமயம் ஒரு சிறிய பள்ளத்தாக்கு குருக்கிட்டது , நான் அதை உயிரைக்கொடுத்து தாண்டினேன் ! சிங்கம் தாண்டும் போது வழுக்கிவிழுந்தது! “ எனச் சொன்னார்
அப்போது அந்த நண்பரில் ஒருவர் “ முல்லா நீங்கள் மிகவும் தைரியசாலி , நாங்களாக இருந்தால், பயத்தில் பேன்டு ஒழப்பியிருப்போம் “ என்றார்
முல்லா “ பின்னே சிங்கம் எப்படி வழுக்கிவிழுந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் ?! “ என்றார்
எனது தாத்தாவுக்கு ஆறு இஞ்ச்!
முல்லா நசுருதீன் ஒரு பரம்பரை பிரியர்.
குளிருக்காக ஒரு அதிசய கருப்பு நிறக் கோட்டை அணிந்திருந்தார் இதை கண்ட அவரது நண்பன் , “ என்ன முல்லா உனது கோட் மிகவும் பழையதாக் உள்ளது “ என்று கேட்டான்.
முல்லா “ இதை அணிந்து கொள்ளும் பழக்கம் எங்கள் இல்லத்தில் பரம்பரையாக உள்ளது ,என்னுடைய தாத்தாவும் இதை அணிந்திருந்தார். என்னுடைய தந்தையும் இதையே அணிந்திருந்தார்; இப்போது இதனை நான் அணிந்துள்ளேன் “ என்று பெருமையுடன் கூறினார்.
“ நீ ஏன் தாடி வைத்துள்ளாய் ? “என்று கேட்டான் முல்லாவின் நண்பன்.
“ தாடி வளர்ப்பதும் எமது பரம்பரை வழக்கமே ! எனது தாத்தாவிற்க்கு ஆறு இஞ்ச் தாடி இருந்தது . எனது தந்தைக்கும் ஆறு இஞ்ச் தாடி இருந்தது!”. என்றார் முல்லா.
“ முல்லா, இதுவரை நீ ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை ? அது கூட உன்னுடய குடும்பத்தின் ஏதாவது பழைய பரம்பரை பழக்கமா ? “ என்று கேட்டான் நண்பன்.
“ அதில் என்ன சந்தேகம் ! “ என்ற முல்லா உணர்ச்சிவசப்பட்டு , “ என்னுடைய தாத்தாவும் வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாதவராக இருந்தார். பிறகு எனது தந்தையும் அவ்வாறு திருமணம் இல்லாதவராக இருந்தார். நானோ எனது பரம்பரை பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன்!”என்றார் பெருமையுடன்!
முல்லா தனது வீட்டின் கூறை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் , முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விசயம் எதற்க்காக என்னை கிழே வருமாறு அழைத்தீர்கள் “ எனக்கேட்டார்.
அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் “ என்றார்
உடனே முல்லா “ எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு ! சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூறை மேல் ஏறினார்.
அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கோண்டு முல்லாவை தொடர்ந்தார்
சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையை பார்க்கத்தொடங்கினார்.
சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் சற்று பொறுமை இழந்தவராக
முல்லா “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை, sorry ! “ என்றார்
சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் ! “
முல்லா “ என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்க்கமாக இருந்தது அதான்- மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்! ஹீ ஹி… “ என்றார்
“ அனுபவப் பாடம் எப்போதுமே உபயோகமானது"
இன்று இரவை வித்யாசமாக அனுபவிப்போமா ?
முல்லா தனது மனைவியிடம் “ இன்று இரவை நாம் சற்று வித்யாசமாக முற்றிலும் நேர் மாறாக அனுபவிப்போமா ? “
அவரது மனைவி “ ???? , சொல்லித்தொலை எப்படியென்று ! “ என்றாள்
முல்லா “ இன்றைக்கு நீ எனக்கு முத்தம் கொடு, ஒரு மாறுதலுக்காக நான் உன் கன்னத்தில் அறைகிறேன் “ என வழிந்தார்
முதலில் எனக்கு ஒரு முத்தம் கொடு!
முல்லாவும் அவரது நன்பர் ஷேக் அப்துல்லாவும் அடர்ந்த காட்டில் வழிதவறி மாட்டிக்கொண்டனர், மாலை கடந்து இரவும் வந்தது. அந்தக் காடு மிகவும் கொடிய மிருகங்கள் நிறைந்த காடு , அதனால் அன்று இரவு முழுதும் அவர்கள் முழித்திருக்க வேண்டிய கட்டாயம், அல்லது ஏதாவது மிருகங்கள் அவர்களை கொன்றுவிடக்கூடும். அதனால் அவர்கள் இருவரும் நாம் முழித்திருப்போம் என உறுதி கொண்டனர்.
நேரம் கடந்து கொண்டிருந்தது , அவர்கள் எவ்வள்வோ முயன்றும் தூக்கம் வந்தது. முல்லா சொன்னார் “ நாம் இப்படியே இருந்தால் தூக்கம் வருவதை தடுக்க முடியாது ! அதனால் இதற்க்கு ஏதாவது கண்டுபிடி , எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது பகல் முழுதும் நடந்த களைப்பு ! “
அப்துல்லா “ என்னை என்ன செய்ய சொல்கிறாய் ? “எனக் கேட்டார்
அதற்க்கு முல்லா “ நாம் இப்படி செய்தால் என்ன ? நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம், கண்டுபிடிக்கும் விளையாட்டு – ஏதாவது ஒரு நடிகையைப் பற்றிய குறிப்பு சொல்வது அதை மற்றவர் கண்டுபிடிப்பது ! “ என சொன்னார்
அப்துல்லா “ சூப்பர் ஐடியா ! இதை எப்படி ஆரம்பிப்பது ? “ எனக் கேட்டார்
முல்லா “ ம்.. முதலில் நீ உன்னை ஒரு நடிகையாக நினைத்து விவரி நான் கண்டுபிடிக்கிறேன், பிறகு நான் விவரிக்கும் போது நீ கண்டுபிடி “
அப்துல்லா “okey! wait “என்றார் பிறகு சிறிது நேரம் யோசித்துவிட்டு “ எனது கண்கள் சிநேகாவின் கண்கள் போன்றது, இடை சிம்ரன் போன்றது , தொடை ரம்பா போன்றது மற்றும் எனது இத்யாதி இத்யாதி “என விவரித்தார்
அவரது வர்ணனை கேட்க கேட்க முல்லா மிகவும் உண்ர்ச்சிவயப்பட்டார்,அவரது இரத்த நாளங்கள் துடித்தது . இருட்டிலும் அவரது கண்களில் அது பிரதிபலித்தது . அப்துல்லா மேலும் தொடர்ந்தார் “ எனது உடம்பின் அளவுகள் 36-24-36 இப்போது சொல் நான் யார்” என்று அப்துல்லா முடிக்கும் முன் முல்லா எழுந்து அப்துல்லாவின் மீது பாய்ந்தார்.
அப்துல்லா “ பொறு ! நான் யார் கண்டுபிடி “ என்று சொன்னார்.
முல்லா “ கண்டுபிடிப்பதைப் பற்றி யாருக்கு கவலை! நீ யார் என்பது பற்றிய கவலை எனக்கில்லை ! முதலில் எனக்கு ஒரு முத்தம் கொடு!” என்றார்
“மனிதனின் மனதின் நிலை இதுதான் , கனவு மற்றும் ஆசைகளால் உண்மையை உண்ர்வதில்லை ! மனிதன் கனவுகானத் துவங்குகிறான் பிறகு அதன் பிடியில் மாட்டிக்கொண்டு தன்னை இழக்கிறான்! “