ரூ.315 கோடி செலவில் ராஜசேகர ரெட்டி நினைவாலயம்.


ஆந்திர முதல்- மந்திரியாக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவர் சென்ற ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலை காட்டுப்பகுதியில் சிறு மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
ராஜசேகர ரெட்டி உயிரிழந்த அந்த மலையில் மிகப்பிரமாண்டமான நினைவாலயம் அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. 1412 ஹெக்டர் நிலப்பரப்பில்,ரூ.315 கோடி செலவில் ராஜசேகர ரெட்டி இந்த நினைவாலயம் அமையும்.
நல்லமலை காட்டுப்பகுதி வன இலாகாவுக்கு உரியதாகும். அந்த இடத்தின் சுற்றுச்சூழல் பாதிக்காதபடி மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ராஜசேகர ரெட்டிக்கு உருவாக்கப்படும் இந்த நினைவாலயம், இந்தியாவில் இதுவரை எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் மிக, மிக பிரமாண்டமாக இருக்கும். மொத்தம் 315 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இந்த நினைவாலயம் கட்டி முடித்து திறக்கப்படும் என்று ஆந்திர மந்திரி கீதா ரெட்டி கூறினார். ராஜசேகர ரெட்டி நினைவிடத்தை சுற்றுலா தலம் போல மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடப்பா,சித்தூர், கர்னூல் போன்ற மாவட்டங்கள் நீர் நிலையுள்ள மாவட்டங்கள் . காரணம் பசுமை குறைவில்லாத பிரதேசம் அது. அதனால் விவசாயம் என்பது எப்போதும் செழிப்போடு இருக்கும். டிவியிலேயே நல்ல காமிச்சாங்க..அவ்வளவு ஒரு அடர்ந்த காடா இருக்குது. இப்போ அதை அழித்து, முன்னூற்றி பதினைந்து கோடி பணத்தை விரயம் செய்வதென்பது வடிகட்டின முட்டாள்தனம். 

யாரு வீட்டு காச யாரு இப்படி வீணா செலவு செய்யுறது , கட்சி நிதியிலோ அல்லது ரெட்டியோட சொந்த பணத்துல செஞ்சா பரவாயில்லை. அரசாங்க பணத்துல ஏன் செய்யணும். மக்களோட வரிப்பணத்துல ஏன் செய்யணும்.

1412. ஹெக்டேர் நிலப்பரப்பில் 315 கோடி செலவில் ஒரு தொழிற்சாலை தொடங்கினால், கிட்டத்தட்ட 1000 குடும்பங்கள் நிரந்தரமாக பிழைக்க வழி பிறக்கும். தொழிற்சாலை லாபகரமாக செயல்பட்டால், அரசாங்கத்திற்கு வருமானம் வரும். அதை விடுத்து நினைவாலயம் கட்டினால் 1412. ஹெக்டேர் நிலம் வேஸ்ட், 315 கோடி பணம் வேஸ்ட், அதோடுமட்டுமல்லாமல் எதிர் காலத்தில் பராமரிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
 
மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில் இது போன்ற முட்டாள்தனமான் செயல்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 
பிரதமர், பிரணாப் முகர்ஜீ, அறியாமை பகழ் ராகுல் காந்தி, அன்னை சோனியா எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். 

இது மிக மிக தவறான, கண்டிக்கத்தக்க செயல்.எல்லா அரசியல் தலைவர்களும் இதை பின்பற்ற ஆரம்பித்து விடுவர். மக்கள் பணத்தை இப்படியா விரயம் செய்வது. இதை தடுக்காவிடில், இது ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு வழி செய்துவிடும். 
இதை பின்பற்றி இனி பலர் எதிர்காலத்தில் செய்யக்கூடும்.  
இதை தடுக்காவிடில், இனி காங்கிரஸ் அரசு, சிக்கன நடவடிக்கை என்பதைக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும், அதை பற்றி பேச ஒரு அருகதையுமில்லை.  

1412. ஹெக்டேர் என்பது கிட்டத்தட்ட 3489 ஏக்கர். 
3489 ஏக்கர் என்பது கிட்டத்தட்ட 1,52,024,400 சதுர அடி. 
இவ்ளோ பெரிய பரப்பளவு கொண்ட இடத்தில் சராசரியாக 1000 அடி கொண்டு வீடுகளை கட்டினால் கிட்டத்தட்ட 1,50,000 வீடுகள் கட்ட முடியும். 
315 கோடியில், வீடில்லாதோருக்கு, வீடுகளைக் கட்டிக் கொடுத்தால்... 5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 6300 பேருக்கு கட்டிகொடுக்க முடியும். 
10 லட்சம் செலவில் பள்ளிகளைக் கட்டினால், கிட்டத்தட்ட 3000 பள்ளிகளைக் கட்ட முடியும்.  
இன்னும் என்னென்னமோ நல காரியங்களைச் செய்யலாம்.


இதெயெல்லாம் விட்டுட்டு நினைவாலயம் கடடுறாங்கலாம். யாரு பணத்துல யாரு கட்டுறது. பரதேசி பசங்க. முட்டாள்கள்.
தலைவர்கள் மீது பற்றும், பாசமும், பிரியமும் இருக்க வேண்டியதுதான். அதற்காக மக்கள் வரிப்பணத்தில் இது போன்று செலவு செய்வது தேவைதானா?

இன்னும் என்னன்ன கூத்து நடக்கப் போகுதோ.

Posted by போவாஸ் | at 11:18 PM | 1 கருத்துக்கள்

போட்டோ கமெண்ட்ஸ் - 2 
என்னம்மா, உலகத் தமிழ் மாநாட்டுல ”உலகத் தமிழ் நாயகி”-ன்னு உனக்கு ஒரு பட்டம் கொடுத்திடுவோமா...?


 அம்மா, தாயே... ஆளாளுக்கு என்னை வம்புக்கு இழுக்காதீங்க... அப்புறம் நான் ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி ஏதாவது பிரச்னையாகிடப் போகுது... எனக்கே நேரம் சரியில்லை..


கை விரல்களை வேட்டிடுவோம்னு சின்னதா ஒரு மிரட்டல் கடிதம் வந்ததுக்கே..இப்படி பயந்தா எப்படி சேகர்ஜி...? 


லோக்சபா கூட்டத் தொடர் இல்லாததனால க்ளோசப் பேஸ்ட் 
விளம்பரத்துல நடிக்க போறேன்.


 
இடைத்தேர்தல்ல தோத்துட்டமேன்னு வருத்தமா ஷீலாஜி...? எப்படி ஜெயிக்கறதுன்னு எங்க கிட்டே கேட்டிருந்தா சொல்லியிருப்போமே...?

 
ஹலோ, பைலட்... நான் இந்தக் கரும்புக் காட்டுக்குப் பக்கத்துல நிக்கறேன்... ஹெலிகாப்டரை இங்கே கொண்டு வர்றீங்களா..?

Posted by போவாஸ் | at 8:56 PM | 0 கருத்துக்கள்

தேர்தலை புறக்கணிக்கும் விசயகாந்துதமிழக உள்ளாட்சி மன்றங்களில் தற்போது காலியாக உள்ள 603 பதவிகளுக்கான இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இதை தமிழக தேர்தல் ஆணையம் நடத்துகின்றது.
இதுல என்ன இருக்குன்னு கேக்குறிங்களா ? 
நம்ம வீர்ர்ரரு, தீர்ர்ரரு, சுர்ர்ரரு கேப்டன் விசயகாந்தின் தே.மு.தி.க கட்சி போட்டியிடவில்லை.
நாங்க யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம், மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டும்தான் கூட்டணி, மக்களைக் காக்க வந்த கருப்பு (வெறுப்பு) எம்ஜிஆர், புத்தரின் மறுபிறவி, மக்களுக்காக இருக்கும், பாடுபடும் ஒரே கட்சி,ஒரே தலைவர் என்று வெட்டி வாய்ச்சவடால்கள் பேசிக் கொண்டு இருக்கும் விசயகாந்தின் கட்சி போட்டியிடாத காரணம் என்ன ? 
 விஷயம் தெரிஞ்சும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும், புரிந்து புரியாமலும் எல்லாத்துக்கும் ஆஜராகி பேசுகின்ற விசயகாந்து இதை பற்றி வாய் திறக்காமல் எங்கயோ எஸ்கேப் ஆகிவிட்டார் போல.
தலைவர் சிக்காததால, நம்ம பண்ருட்டி (பன் & டி ) ராமச்சந்திரன்ட்ட கேட்டுருக்காங்க. 

அவரு என்னா சொல்லிருக்காருன்னா  "இப்போது நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை நாங்கள் பெரிதாக கருதவில்லை. மத்திய தேர்தல் ஆணையத்தாலேயே தமிழகத்தில் முறையான தேர்தலை நடத்த முடியவில்லை. இப்படி இருக்கையில் தமிழக தேர்தல் ஆணையம் முறையான தேர்தலை எப்படி நடத்திவிடும்.
தேர்தலில் போட்டியிட எங்களுக்கு முரசு சின்னம் கிடைக்கவில்லை என்பதும், தேர்தலில் போட்டியிடாததற்கு ஒரு காரணமாகும். இது குறித்து நாங்கள் தேர்தல் அதிகாரிகளையும் சந்திக்கவில்லை. இந்த தேர்தலை நாங்கள் புறக்கணித்துவிட்டதாக கூறுவது தவறு, ஒதுங்கி நிற்கிறோம் என்பதுதான் சரி என்றார் அவர்".
இதெல்லாம் ஒரு காரணமா ?.

எம்.பி எலெக்சன்ல ஜெயிக்க முடியலை. மக்களுக்கு ஒன்னும் செய்ய முடியலை. சரி . 
எம்.எல்.ஏ. எலெக்சன்ல கட்சித் தலைவரைத் தவிர யாரும் ஜெயிக்க முடியல.மக்களுக்கு ஒன்னும் செய்ய முடியலை.சரி. 
இப்பொழுது உள்ளாட்சி மன்ற தேர்தலில் நிற்காமல் ஒதுங்கியது (புறக்கணித்தது) ஏன் ?.மக்களுக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் விலகியது ஏன் ?.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் வாய்ப்பு தாருங்கள். அரியணையில் அமர்த்திப் பாருங்கள் என்று தெரு தெருவாக ஊருக்கு ஊர் கத்திய, கெஞ்சிய விசயகாந்த்.....இந்த வாய்ப்பைப் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எம்.பி., எம்.எல்.ஏவை விட மக்களுடன் கலந்து, மக்களிடம் நெருங்கி பழகி, மக்களுக்கு செய்பவர்கள் உள்ளாட்சி மன்றங்களில் இருப்பவர்கள்தான். 
ஒரு கட்சியை நடத்தும் விசயகாந்துக்கு இது தெரியாதா என்ன ?.
போட்டியிடுவதற்கு ஆள் இல்லையா ? பொருளாதாரம் சூழ்நிலைகள் சரியில்லையா ? அல்லது அதிமுக கூட்டணிக்காக விட்டு கொடுத்து ஒதுங்கிக் கொண்டதா? .

தகுந்த பதிலனை ஓய்வு நேர அரசியல்வாதி, எங்கள் ஆசான், கேப்டன் விசயகாந்துதான் சொல்ல வேண்டும். 
மத்திய தேர்தல் ஆணையத்தாலேயே தமிழகத்தில் முறையான தேர்தலை நடத்த முடியவில்லை என்று பண்ருட்டி (பன் & டி ) ராமச்சந்திரன் சொல்லிருக்காரு. அப்படினா அடுத்த வர சட்டமன்றத் தேர்தலையும் மத்திய தேர்தல் ஆணையம்தான் நடத்தும். அப்போதும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.மிக நன்றாக இருக்கும். தேர்தல் ஆணையத்துக்கும், உங்க கட்சித் தொண்டர்களுக்கும் செலவு மிச்சமாகும்.

இவுங்கெல்லாம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது பண்ணி...எப்போ நாம முன்னேறது..இதுக்கு பேசாம 10 திட்டத்துல 5 நல்லது 5 கேட்டது பண்ணுற நம்ம அம்மாவோ அல்லது கலைஞரோ ஆட்சில கிடைக்கறத வாங்கிகிட்டு புள்ளைங்கள படிக்க வச்சு நமக்கு நாமே முன்னேருரத தவிர வேற வழியில்லை.
நல்லது பன்றவன நம்பலாம்.
சில சமயம் கேட்டது பன்றவன கூட நம்பலாம்.
ஆனா நல்லது பண்றேன்னு நல்லது பண்றேன்னு சொல்லிட்டு திரியரவன 
நம்பவே முடியாது. 
மக்களுக்கு எப்போ புரியப் போகுதோ ?. ம்ம்ம்ம்  
கொசுறு தகவல் :
மாநில தேர்தல் அலுவலக வட்டாரங்கள் கூறியது:  2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள்தான் இப்போதும் பின்பற்றப்படுகின்றன. தே.மு.தி.க. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து எங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. மேலும் முரசு சின்னம் குறித்து தே.மு.தி.க. சார்பில் யாரும் எங்களைச் சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது.
 செய்திக்கு நன்றி : தினமணி. 

Posted by போவாஸ் | at 2:05 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails