வேகமாக உருகும் ஆர்க்டிக் பனி சொந்த இனத்தையே அழிக்கும் துருவக்கரடிகள்

புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக துருவக்கரடிகளின் வேட்டைப் பரப்பு சுருங்கியுள்ளதால் அவை தமது சொந்த இனத்தையே தின்று அழிக்கத்துவங்கியுள்ளதாக ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றன. 

துருவக்கரடிகள் பெரும்பாலும் வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியிலேயே வாழ்கின்றன. அதையொட்டிய ஆர்க்டிக் கடல் மற்றும் நிலப்பரப்பில் அவற்றின் வாழ்விடம் பரந்துள்ளது. நிலத்தில் வாழும் மாமிச உண்ணிகளிலேயே மிகப்பெரியது என்று அறியப்படும் துருவக்கரடிகளின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. வரைமுறையற்ற வேட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை அருகி வரும் உயிரினங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. மொத்தம் உள்ள 19 துருவக்கரடி இனங்களில் 5 இனங்கள் இத்தகைய பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக கடல்வாழ் உயிரினமான சீல் எனும் கடற்சிங்கம் துருவக்கரடிகளின் விருப்பமான இரையாகும். ஆனால் தற்போது புவி வெப்பமடைதல் காரணமாக ஆர்க்டிக் பகுதி பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் துருவக்கரடிகளின் வேட்டைப்பரப்பு சுருங்கியுள்ளது. கரடிகளால் நிலத்தில் வேட்டையாடுவதைப் போல அவ்வளவு எளிதாக கடலினுள் நீந்திச் சென்று வேட்டையாட முடிவதில்லை. இதன் காரணமாகவே அவை இவ்வாறு தமது சொந்த இனத்தையே இரையாக உட்கொள்ளத் துவங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு அவர்கள் கனடாவின் ஹட்சன் வளைகுடா பகுதியில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை உதாரணமாகக் காட்டுகிறார்கள். அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் ஒரு ஆண் துருவக்கரடி மற்றொரு கரடியின் தலையை இரத்தத்துடன் கொணர்வது படம் பிடிக்கப்பட்டிருந்ததாம். உண்மையில் அனைத்து கரடி இனங்களும் தங்களது சொந்தக்குட்டிகளையே இரையாக உட்கொள்ளும் தன்மை கொண்டவையாகும். துருவக்கரடிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்றாலும், தற்போதைய நிகழ்வுகள் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியவையல்ல என்கிறார்கள் உயிரியல் ஆர்வலர்கள்.

ஹட்சன் பகுதியில் அண்மைக்காலத்தில் குட்டிகளை உணவாகக் கொள்ளும் தன்மை துருவக்கரடிகளிடையே வழக்கத்தை விட மிக அதிகமாகக் காணப்படுகிறது என்கிறார்கள் அவர்கள். ஜான் குன்டர் என்பவர் இதுகுறித்து கூறுகையில், ஒரு துருவக்கரடி தனது குட்டியையே இரையாக உட்கொண்டு தான் கடைசியாக பார்த்தது 10 ஆண்டுகளுக்கு முன்பு என்கிறார். அதுவும் கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இவ்வாறு வெறும் 3 சம்பவங்களே நடந்துள்ளன என்கிறார் அவர். ஆனால் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று கவலையுடன் கூறுகிறார் அவர். 

இந்த ஆண்டு துருவக்கரடிகள் தங்களது உடலில் சேகரமாக உள்ள கொழுப்பை நம்பியே பெரும்பாலான நாட்களைக் கழித்துள்ளன என்று கூறும் ஆய்வாளர்கள், பனிப்பொழிவு மீண்டும் துவங்கும் என்று அவை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகவும், பசி தாங்க முடியாததால்தான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடத்துவங்கியுள்ளன என்றும் கூறுகிறார்கள். 

தற்போது டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் புவி வெப்பமடைதல் குறித்த முக்கிய மாநாடு நடந்து வரும் நிலையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted by போவாஸ் | at 8:24 PM | 0 கருத்துக்கள்

மூட நம்பிக்கையின் விளைவினை பாரீர்.

நிலத்தில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாகக் கூறி நள்ளிரவில் பிராந்தி பூஜை நடத்தி மோசடி செய்த ஜோதிடரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். 

கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூர் மணமேடு பகுதியை சேர்ந்த முத்துசாமி. விவசாயியான இவர் உறவினரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். 

ஒரு வாரம் முன்பு திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் (48) என்ற ஜோதிடர் தங்காயூர் பகுதிக்கு ஜோதிடம் பார்க்க வந்துள்ளார்.
முத்துசாமி, தன் குடும்பத்தினரின் ஜாதகத்தை ஜோதிடர் ராஜேந்திரனிடம் காட்டினார்.

அப்போது, 'உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. நீங்கள் விவசாயம் செய்யும் நிலத்தில் புதையல் உள்ளது. அதை கண்டுபிடித்து எடுக்க ரூ.30,000 செலவாகும்' என்று ஜோதிடர் கூறியுள்ளார்.

ஜோதிடரை நம்பிய முத்துசாமி முதல்கட்டமாக ரூ.10,000 கொடுத்துள்ளார். முதலில் ஜோதிடர் அந்த மண்ணை வைத்து வேறு இடத்தில் பூஜை செய்தார். பின் நேற்று முன்தினம் வந்து நள்ளிரவு பூஜை நடத்த வேண்டும் என ஜோதிடர் கூறினார்.

5 கோழி, 50 பாட்டில் குவார்ட்டர் பிராந்தி ஆகியவற்றை வாங்கிவரச் சொல்லி பூஜை செய்தார். பூஜை முடித்த பின் குவார்ட்டர் பாட்டில்களை காலி செய்யுமாறு மற்றவர்களை வற்புறுத்தி, தானும் குடித்தார் ஜோதிடர்.

அனைவரும் போதையில் இருந்த சமயத்தில், ஜோதிடர் ராஜேந்திரன் தான் ஏற்கனவே பையில் மறைத்து கொண்டு வந்த மீனாட்சி சிலை, புத்தர் சிலை, அம்மன் சிலையை எடுத்து, 'புதையல் கிடைத்துவிட்டது' என ஆரவாரமாக கத்தினார். 

புதையல் என்றால் பணமோ தங்கமோ இருக்கும் என நினைத்திருந்த கிராமத்தினர், சிலைகளை கண்டதும் ஆத்திரமடைந்தனர். மேலும் ஜோதிடர் பையில் இருந்து சிலைகளை எடுத்ததையும் அருகில் இருந்தவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

இதில் மிகவும் ஆத்திரமடைந்த முத்துசாமி, பெருமாள், தியாகராஜன் உள்ளிட்டவர்கள் நள்ளிரவில் அதே இடத்தில் ஜோதிடர் ராஜேந்திரனை நையப் புடைத்தனர்.

மேலும், ஜோதிடரின் மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'எங்களை ஏமாற்றிய உங்கள் கணவரை பிடித்து வைத்திருக்கிறோம். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துவிட்டு கணவரை மீட்டு செல்லுங்கள்' என்று முத்துசாமி உள்ளிட்டோர் மிரட்டினர். 

ஜோதிடர் மனைவி மணி, இதுகுறித்து இடைப்பாடி போலீசிடம் உடனடியாக புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இருதரப்பையும் சமாதானம் செய்து ஜோதிடரை மீட்டனர். 

புதையலில் எடுத்ததாக கூறப்பட்ட மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டது. இரண்டு தரப்பில் இருந்தும் புகார்கள் பெற்றுக்கொண்ட போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------------------------------------------------------------------------
டுபாக்கூர் ஜோதிடரை அடித்து விரட்டி விடலாம்..மிஞ்சி போனால் சிறையில் சில காலங்கள் உள்ளே தள்ளலாம். 

ஆனால், 
பொன், பொருள், புதையலுக்கு ஆசைப்பட்டு ஜோதிடரின் பேச்சுக்கு 'ஆமாம் சாமி' போட்டு, கோழியையும், பிராந்தியையும் வாங்கி கொடுத்த 
மதியில்லாத முத்துசாமி மற்றும் அவரது சகாக்களையும், ஜோதிடரை அடித்து உதைத்த கிராம மக்களை என்ன செய்வது ?.

மூடநம்பிக்கை என்ற போதையினால் அறிவு மங்கி போயிருக்கும் இவர்களை என்ன செய்வது ?.

இந்த சம்பவத்தாலாவது இவர்களது அறிவுக் கண் திறந்திருக்குமா ?.

இனியாவது இது போன்ற நபர்கள் திருந்த வேண்டும்.

இன்னொரு முறை பெரியார் வர முடியாது. பெரியாரின் கொள்கைகளையாவது படிக்க வேண்டும். 

பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் ஒன்றாம் வகுப்பு முதல், பாடத்தில் சேர்க்க வேண்டும். 100 மாணவ மணிகளில், ஒரு 10 பேராவது யோசிப்பார்கள். உணருவார்கள். மூடநம்பிக்கையில்லாத பகுத்தறிவு மனிதனாக வருவார்கள்.

ஒரு சிறப்பான சமுதாயம் அமையும்.

Posted by போவாஸ் | at 7:17 PM | 1 கருத்துக்கள்

இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல்


1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அன்றைய தினத்தில் பெரும்பாலான பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. ஆல்வாரின் மகாராணிக்கு தனிப்பட்ட முறையில் செயல்பட ஒரு விமானி தேவை. அதுவும் ஒரு பெண் விமானி தேவை என்று.
அந்த நாள்களில் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தனி விமானத்தில் பறப்பது வினோதமல்ல. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் பெண் விமானிகள் மிகவும் அபூர்வம். 
இந்தியப்பெண்மணியும் இளம் வயதினருமான சரளா தாக்ரல் அந்தப் பணியில் சேர்ந்தார். விமானம் என்பதே அபூர்வமான விஞ்ஞான முன்னேற்றம் என்று கருதப்பட்ட அன்றையக் காலக்கட்டத்தில் முதன் முதலில் விமானம் ஓட்டிய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை சரளா தாக்ரல் பெற்றார். ‘’விமானம் ஓட்ட கற்ற பிறகுதான் கார், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
Sarla Thakral - First lady pilot of India - Successful Stories of Women in Tamil
பயிற்சி பெற்ற நேரம் பத்து மணிநேரம். அதற்குப் பிறகு, தனியாக விமானம் ஓட்டி சாதனை புரிந்தேன்’’ என்கிறார் சரளா. அய்ம்பதுகளில் நகை வடிவமைப்பாளராகவும் டெக்ஸ்டைல் பிரின்டிங்கிலும் சாதனை புரிந்தவர் இவர். திரு-மணத்திற்குப் பிறகு சரளா விமானம் ஓட்ட பயிற்சி எடுத்தார்.
இவருடைய குடும்பத்தில் 9 விமான ஓட்டிகள் இருந்தனர். புகுந்த வீட்டில் ஹமாலயா ஃப்ளை-யிங் கம்பெனி வைத்திருந்ததால் இவர் பயிற்சி பெறுவது கஷ்டமாக இருக்கவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் ‘’ஏ’’ நிலை உரிமம் பெற்றார். ‘’பி’’ நிலை உரிமம் பெற முயற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விமான விபத்தில் கணவரை இழந்தார். இது 1939ஆம் ஆண்டு நடந்தது. சோகத்திலிருந்து மீண்டு மறுமணம் செய்து கொண்டார்.
பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தினார். இவருடைய கண்காட்சிகளில் பெரும்பாலும் பெண்களின் உருவங்களே நிறைந்திருக்கும். சில காலம் கழித்து ‘’பி’’ உரிமம் பெற்றுத் திரும்பவும் விமானியாக பணியாற்றினார். ஆறுமாத காலம் ஆல்வார் ராணிக்கு தனிப்பட்ட விமானியாக இருந்து பிறகு விலகினார்.
88 வயதாகும் சரளா இன்னும் நகை வடிவமைப்பாளராகவும், தேசிய நாடகப் பள்ளிக்காக பல வேலைகளைச் செய்பவருமாக இருக்கிறார். தினமும் காலையில் கண்விழிக்கும் போது அன்றைய தினம் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு விடுவதாகக் கூறும் இவர், திட்டமிடாத வாழ்க்கை வீண் என்கிறார். இவ்வளவு வேலைகள் செய்யவும் இவர், வீட்டு வேலைக்காக யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. அதையும் தானே செய்கிறார் இந்தச் சுறுசுறுப்பான பெண்மணி

Posted by போவாஸ் | at 6:32 PM | 0 கருத்துக்கள்

அரவாணிகளுடன் விஜயகாந்த்


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்....விஜயகாந்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்த அரவாணிகள் குரூப்ஸ்.

Posted by போவாஸ் | at 6:18 PM | 0 கருத்துக்கள்

திரைப்படத் துறையினர் நலவாரியம்:சிவக்குமார், குஷ்புக்கு பொறுப்பு: கலைஞர் அறிவிப்பு!


முதலமைச்சர் கலைஞர் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் மாநாட்டில் 9.10.2009 அன்று  கலந்து கொண்டு உரையாற்றிய போது, “தொழிலாளர் சமுதாயத்தின் நலன்களை உறுதிப்படுத்திடும் வகையில், அரசின் சார்பில் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, அந்த வாரியங்களின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்தவகையில், தமிழ்த் திரையுலக வளர்ச்சியிலும், அதன் வாழ்விலும் பல்வேறு நிலைகளில் தங்கள் உழைப்பை நாளும் அளித்திடும் கலையுலகத்தினரின் நலன்களுக்காகத் தனி நலவாரியம் அமைக்கப்படவேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும், தமிழ்த் திரையுலகின் சார்பிலும் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கையினை ஏற்று, தமிழக அரசு சின்னத்திரையினருக்கும் சேர்த்து “திரைப்படத் துறையினர் நலவாரியம்” ஒன்றினை புதிதாக உருவாக்கும் என்று அறிவித்தார்.  

      அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, இன்று (15.12.2009) முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திரைப்படத்துறையினர் நலவாரியத்தைப் பின்வருமாறு அமைத்து ஆணையிட்டுள்ளார்.தமிழக செய்தித்துறை அமைச்சர் தலைவர், செய்தி மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் உறுப்பினர், மற்றும் செயலாளர் அலுவல்சாரா உறுப்பினர்கள்: 


வி.சி.குகநாதன் பெப்சி தலைவர்  அபிராமி ராமநாதன் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர். ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம் தயாரிப்பாளர்.

நடிகர் சிவகுமார், நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் கோவை தம்பி, தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன். தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளர் வாகை சந்திரசேகர். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் அன்பாலாயா” பிரபாகரன், தயாரிப்பாளர் (சின்னத்திரை) சத்யஜோதி” டி.ஜி.தியாகராஜன், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை.

மேலும், செய்தித் துறை, நிதித்துறை, வருவாய்த் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகிய அரசுத் துறைகளின் செயலாளர்களும்; தொழிலாளர் நலத்துறை மற்றும் நிலநிர்வாகத் துறை ஆகிய துறைகளின் ஆணையர்களும் வாரியத்தின் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள்/

Posted by போவாஸ் | at 3:54 PM | 0 கருத்துக்கள்

திமுக, அதிமுக - ஒரு வித்தியாசம்.

எளிதில் அணுகக் கூடிய தலைமையையும், தலைவர்களையும், மக்களோடு மக்களாக இருந்து, மக்களுக்காகவே பாடுபடும் ஒரே கட்சி திமுக மட்டுமே என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.
திமுகவிற்கு நேர்மாறாக, மக்களை விட்டு விலகி இருக்கும் கட்சியாக அதிமுக உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

Posted by போவாஸ் | at 2:02 PM | 0 கருத்துக்கள்

காம​ரா​ஜ​ருக்கு பெருமை சேர்த்​தது திமுக: ஸ்டா​லின்

திருச்​செந்​தூர் தொகுதி திமுக வேட்​பா​ளர் அனிதா ஆர்.​ ராதா​கி​ருஷ்​ணனை ஆத​ரித்து,​​ மு.க.​ ஸ்டா​லின் தனது 2-வது நாள் பிர​சா​ரத்தை திருச்​செந்​தூர் அரு​கே​யுள்ள முரு​கன்​கு​றிச்​சி​யில் திங்​கள்​கி​ழமை தொடங்​கி​னார்.​

​ அப்​போது அவர் பேசி​யது:​

​ கடந்த 2 நாள்​க​ளாக இங்கு முகா​மிட்டு பிர​சா​ரம் செய்த அதி​முக பொதுச்​செ​ய​லர் ஜெயல​லிதா முரண்​பட்ட ஒரு கருத்தை தெரி​வித்​துள்​ளார்.​ காம​ரா​ஜர் பெயரை திமுக மறைத்து வரு​வ​தாக அவர் கூறிச் சென்​றுள்​ளார்.​

​ அதி​முக ஆட்சி நடை​பெற்​ற​போ​து​ தான் காம​ரா​ஜர் நூற்​றாண்டு விழா கொண்​டா​டப்​பட்​டது.​ அந்த விழா​வுக்கு எதிர்க்​கட்சி தலை​வர்​களை அழைக்​கக்​கூட இல்லை.​ சமு​தா​யப் பெரி​ய​வர்​கள் கலந்​து​கொண்ட அந்த விழா​வில்,​​ அவர்​க​ளுக்கு உரிய மரி​யாதை கொடுக்​கப்​ப​ட​வில்லை.​

​ மேலும்,​​ காம​ரா​ஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறி​விக்க வேண்​டும் என,​​ சமு​தாய மக்​கள் வைத்த கோரிக்​கையை அதி​முக அரசு நிறை​வேற்​ற​வில்லை.​

தமி​ழ​கத்​தில் முதல்​வர் கரு​ணா​நிதி தலை​மை​யில் திமுக அரசு பத​வி​யேற்​ற​தும் காம​ரா​ஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறி​வித்து அவ​ருக்கு பெருமை சேர்த்​த​வர் முதல்​வர் கரு​ணா​நிதி.​

காம​ரா​ஜர் மறைந்​த​போது,​​ அப்​போது முதல்​வ​ராக இருந்த கரு​ணா​நிதி அவ​ருக்கு உரிய மரி​யாதை செலுத்​தி​ய​து​டன்,​​ நினை​வி​டம் அமைக்க இடத்​தை​யும் ஒதுக்​கிக் கொடுத்​தார்.​

​ கன்​னி​யா​கு​ம​ரி​யில் கடற்​க​ரை​யோ​ரம் காம​ரா​ஜர் மணி​மண்​ட​பம் அமைக்க கோரிக்கை வைக்​கப்​பட்​ட​போது,​​ முதல்​வர் கரு​ணா​நி​தி​யும் அதனை வலி​யு​றுத்​தி​னார்.​ கடற்​க​ரை​யில் எந்த கட்​ட​ட​மும் கட்ட அனு​மதி கிடை​யாது என்ற சட்​டம் அம​லில் இருந்​த​தால்,​​ மத்​திய அர​சி​டம் வலி​யு​றுத்தி காம​ரா​ஜர் மணி​மண்​ட​பம் கட்ட நட​வ​டிக்கை எடுத்​தார்.​

வி.பி.சிங் பிர​த​ம​ராக இருந்​த​போது,​​ சென்​னை​யில் உள்ள வெளி​நாட்டு விமான நிலை​யத்​திற்கு அண்ணா பெய​ரும்,​​ உள்​நாட்டு விமான நிலை​யத்​திற்கு காம​ரா​ஜர் பெய​ரும் சூட்ட வேண்​டும் என்று கோரிக்கை வைத்து,​​ அதனை நிறை​வேற்​றி​ய​வர் முதல்​வர் கரு​ணா​நிதி.​

பள்​ளிக் குழந்​தை​க​ளுக்​காக மதிய உண​வுத் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் காம​ரா​ஜர்.​ அத் திட்​டத்தை எம்.ஜி.ஆர்.​ விரி​வு​ப​டுத்​தி​னார்.​ தற்​போது அதனை மேலும் மேம்​ப​டுத்தி வாரத்​தில் மூன்று முட்​டை​க​ளு​டன் வழங்கி வரு​கி​றார் முதல்​வர் கரு​ணா​நிதி.​

இவற்​றை​யெல்​லா​மல் அறி​யா​மல் ஜெயல​லிதா முரண்​பட்ட கருத்​து​க​ளைக் கூறி வரு​கி​றார்.​

திமுக அரசு தொடர்ந்து மக்​கள் நல திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்தி வரு​கி​றது.​ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி,​​ ரூ.7 ஆயி​ரம் கோடி விவ​சா​யக் கடன் தள்​ளு​படி,​​ இந்​தி​யா​வில் எந்த மாநி​லத்​தி​லும் இல்​லாத திட்​ட​மான பெண்​க​ளுக்கு ரூ.20 ஆயி​ரம் திரு​மண உத​வித்​தொகை வழங்​கும் திட்​டம்,​​ மகப்​பேறு உத​வி​யாக கர்ப்​பி​ணி​க​ளுக்கு ரூ.6 ஆயி​ரம் உத​வித்​தொகை,​​ மாண​வர்​க​ளுக்கு சத்​து​ண​வில் வாரம் 3 முட்டை என திட்​டங்​க​ளைக் கூறிக் கொண்டே போக​லாம் என்​றார்.​

Posted by போவாஸ் | at 1:31 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails