மீன்பிடி மசோதா தள்ளிவைப்பு & சரத்பவாருக்கு கருணாநிதி நன்றி


மீன்பிடி சட்ட மசோதாவை ஒத்தி வைத்ததற்கு முதல்- அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று மத்திய வேளாண் மந்திரி சரத்பவாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி இருப்பதாவது:-


மீன்பிடி தொழிலை சீரமைக்க மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் குறித்து கடந்த 19-11-2009 அன்று நான் ஒரு கடிதம் எழுதி உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இந்த சட்ட திருத்தம் மீனவர்கள் நலனுக்கு சரியானது அல்ல என்று நான் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்.

மேலும் மீன்பிடி திருத்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் தமிழக மீனவர்களின் நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக இருப்பதை நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன். இது தொடர்பாக மத்திய மந்திரி தயாநிதிமாறன் உங்களை சந்தித்துப் பேசி ஆலோசித்தது நினைவு இருக்கலாம்.

என்னுடைய அறிவுரையை ஏற்று இந்த சட்ட திருத்தம் குறித்து நீங்கள் உடனடி முடிவு எடுத்தீர்கள். அதன் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நீங்கள் மீனவர்கள் நலனை பாதிக்கும் வகையில் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காது என்று அறிவித்தீர்கள். இதன் மூலம் மீனவர்கள் மனதில் இருந்த பயத்தை நீக்கினீர்கள்.

பாராளுமன்றத்தில் மீன்பிடி சட்ட திருத்த மசோதாவை கொண்டுவராமல் ஒத்திவைக்கும் முடிவை எடுத்ததற்காக என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். மீன்பிடி சட்டத்தை திருத்தும் மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்கும் முன்பு அனைத்து தரப்பினருடன் விரிவான, விளக்கமான விவா தம் நடத்தப்படும் என்று கூறினீர்கள். இதற்கும் என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வராமல் இருந்ததற்காக தமிழ்நாட்டு மீனவர்கள் சார்பில் நான் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்களின் பிரச்சினையை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுத்ததற்கு உங்களுக்கும் (சரத்பவார்) மத்திய அரசுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted by போவாஸ் | at 10:50 PM | 0 கருத்துக்கள்

விஜய்க்கு.......ஒரு ரூபா காயின் பாக்ஸ்!ஷாருக்கான் ஃபார் ஏர்டெல்

சூர்யா ஃபார் ஏர்செல் 

பிரகாஷ்ராஜ் ஃபார் வோடாபோன் 

ஹிருத்திக் ஃபார் ரிலையன்ஸ் 

ஸ்ரேயா ஃபார் ஐடியா 

நம்ம விஜய்க்கு?
கவலையே வேண்டாம்.
இருக்கவே இருக்கே,

ஒரு ரூபா காயின் பாக்ஸ்!

Posted by போவாஸ் | at 9:03 PM | 1 கருத்துக்கள்

உங்கள் குழந்தையும் 100-க்கு 100 வாங்க வேண்டுமா ?


“என் புள்ளதான் ஸ்கூல்ல பர்ஸ்ட் மார்க்’’ என்று சொல்ல எந்தப் பெற்றோரும் தயங்குவதில்லை. ஆனால் எவ்வளவு படித்தாலும் மனதில் பதியாத குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பள்ளி வாழ்க்கையே சிறைக்கூடமாக தோன்றும்.
பொதுவாக ஒவ்வொருவரும் வேறுபடுவது மூளைத்திறனில்தான். சிலர் அதிகமாக பயன்படுத்தி அதன் திறனை வளர்த்துக் கொள்வார்கள். சிலர் பயன்படுத்தாமலே மழுங்கட்டையாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் பிறவி நோயால் பாதிக்கப்பட்டு எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருப்பார்கள்.


இப்படி பிறப்பிலேயே வரும் மூளைப் பாதிப்பில் ஒன்று ‘டவுன் சிண்ட்ரோம்’ வியாதி. இதேபோல் அல்சீமர் போன்ற பல மூளைத்திறன் பாதிப்பு வியாதிகள் நிறைய இருக்கின்றன. இவைகளுக்கு தீர்வு காண புதிய மருந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதை பரிசோதித்துப் பார்த்ததில் வெற்றி கிடைத்து உள்ளது.
டவுன்சிண்ட்ரோம் பாதிப்பு 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களின் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இங்கிலாந்தில் 750 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இவர்களின் உடல் வளர்ச்சி மற்ற குழந்தைகள் போல இருந்தாலும் மூளைவளர்ச்சி மட்டும் 2 வயது பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்.
இந்த குறைவை சரிப்படுத்தி இயல்பான குழந்தைகளைப் போலவே செயல்பட உதவுகிறது இந்த புதிய மருந்து. இதன் பெயர் எல்டோப்ஸ் எனப்படும். இதை கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.
பரிசோதனைக்காக எலிகளில் செயற்கையாக டவுன்சிண்ட்ரோம் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டது. பிறகு எல்டோப்ஸ் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மூளையின் செயல்பாட்டுக்கு தேவையான நார்பின்பிரைன் என்ற வேதிப்பொருள் கிடைக்க எல்டோப்ஸ் துணைபுரிந்தது. இதனால் நாளடைவில் பாதிப்பு உடைய எலி, இயல்பான எலிகள்போல செயல்படத் தொடங்கியது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எதிர்காலத்தில் டவுன் சிண்ட்ரோம் உள்பட பல்வேறு டிஸ்ஆர்டர்களுக்கு ‘எல் டோப்ஸ்’ பயன்படுத்தபடும் என்று தெரிகிறது.

Posted by போவாஸ் | at 8:39 PM | 0 கருத்துக்கள்

சாமியார்களைக் கண்காணிக்க தனிப் பிரிவு தேவை!


மதத்தை அபினுக்கு ஒப்பிட்டார் கார்ல் மார்க்ஸ். நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டடமானது - மதம் என்னும் சிமென்ட் சுண்ணாம்பினால், கடவுள் கற்களைக் கொண்டு என்றும் அழியாதது மாதிரி பலமாகக் கட்டி, வேத சாஸ்திர, புராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூச்சுப் பூசப்பட்டிருக்கிறது” என்கிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (“குடிஅரசு” 30.6.1929)
மனிதன் தன்னறிவு பெறவும், தன்மீது அழுந்திக் குந்தியிருக்கிற ஆதிக்கக் கோட்டைகளைத் தகர்க்கவும் பகுத்தறிவு என்னும் பேராயுதம் தேவைப்படுகிறது.

மதம் தனி மனிதனை மட்டும் கெடுதலுக்கு ஆளாக்கவில்லை. ஒட்டு மொத்தமான சமுதாய வளர்ச்சிக்கே பெருங்கேடாகக் குடி கொண்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது நாட்டுக்கான ஒரு வளர்ச்சித் திட்டம். அதில் கொண்டுவந்து ராமன் என்ற இந்து மதச் கதா பாத்திரத்தைத் திணித்து, அந்தத் திட்டத்தையே முடக்கி விட்டார்களே! மதம் என்னும் வெறியில் திளைக்கிறார்களே தவிர, மனித சமூகத்துக்குத் தேவையான ஒரு வளர்ச்சித் திட்டம் தடுக்கப்படுவது பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லையே!
இந்த மதப் போதை சாதாரண பாமரனிடத்தில் மட்டுமல்ல, படித்தவர்களிடத்திலும், நீதிமன்றத்திலே குளுகுளு அறையிலே வாசம் செய்பவர்கள் மத்தியிலும்கூட ஆழமான இடம் பிடித்துவிட்டது.
மக்களிடத்திலே பரம்பரை பரம்பரையாக வந்து பழக்கப்பட்ட இந்தப் பக்திப் போதை மான உணர்ச்சியைக்கூட பறி கொடுக்கக் காரணமாக இருக்கிறது.
பக்தியின் பெயரால் பெண்கள் நிர்வாணப் பூசை நடத்துவது, சாமியார்களைத் தேடிச் சென்று தங்களின் உடலைப் பறிகொடுப்பது _சாமியார்களும் மக்களின் பக்திப் போதையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவது என்பதெல்லாம் நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டதே!
ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்படும் ஆசாமிகள் பெண்களைப் போகப் பொருள் என்று கருதி வேட்டையாடுகிறார்கள்.

கோயிலுக்கு வரும் பக்தைகளை கோயில் கருவறைக்குள்ளேயே அர்ச்சகப் பார்ப்பான் “காமப்பசி”யாறுகிறான். சென்னையில் வேலை தேடி வந்த ஒரு பெண்ணுக்குக் காபியில் மயக்க மருந்து போட்டுக் கொடுத்து அந்தப் பெண்ணைக் சூறையாடிதாக ஏடுகளில் தற்போது செய்திகள் வந்துள்ளன.
முற்றும் துறந்தவர்கள் என்பதற்கு அடையாளம் காவி வேட்டி என்று பிரச்சாரம் செய்து வைக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பி அந்த ‘முகமூடிக் கொள்ளையர்களிடம்’ பெண்கள் பரிதாபமாக மானத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
பணம் சம்பாதிக்க இந்தப் பக்தியும், மதமும் எளிய மார்க்கமாகி விட்டன. திருப்பதி உண்டியலில் கோடிக்கணக்கில் பணம் குவிவது அந்த அடிப்படையில் தானே! “முற்றும் துறந்த மடங்களில்” சொத்துகள் குவிந்து கிடப்பது எப்படி? பணத்தை பாதகாணிக்கை என்று கொட்டிக் கொடுக்கிறார்களே! அந்தப் பணத்தைக் கண்ணிவெடியாக வைத்துக் கன்னிகளைப் பிடிக்கிறார்களே!
ஒழுக்கம் குறைந்து வருவதற்குக் காரணம் _ பக்தி குறைந்து வருவதுதான் என்று சந்தடி சாக்கில் கந்தகப் பொடி தூவும் சில விளம்பரம் பெற்ற ‘பெரிய மனிதர்கள்’ உண்டு.
அந்த மனிதர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே போனார்கள்? காஞ்சிபுரம் தேவநாதன் லீலைகளையும், சென்னை மாம்பலம் ஈஸ்வர ஸ்ரீ குமார்களின் அயோக்கியத்தனங்களையும் விமர்சிக்க இவர்கள் முன்வராதது ஏன்?
திருநீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சாஸ்திரம் எழுதி வைத்துள்ள நாட்டில் எப்படி ஒழுக்கம் வளரும்?
ஆபாச சாமியார், கள்ளச் சாமியார், காம லீலைகள் புரியும் சாமியார், பிராந்தி சாமியார், பீர் சாமியார் என்று  தினமும் ஒரு சாமியார் என்று தொடர்ந்து சிக்கும் இச்சூழ்நிலையில், சாமியார்களைக் கண்காணிக்க காவல் துறையில் ஒரு தனிப் பிரிவை அரசு ஏற்படுத்தினால்கூட நல்லதுதான்!.
மேலும் பல மக்கள் மோசம் போவதற்குள் காத்திடலாமே.
நன்றி: விடுதலை.

Posted by போவாஸ் | at 6:31 PM | 0 கருத்துக்கள்

ஜீன்ஸ்பேண்ட்-டி.சர்ட், ஜன்னல் ஜாக்கெட் அணிய தடை: தமிழக அரசு உத்தரவு.


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் உடலை இறுக்கும் வகையிலான ஜீன்ஸ்- பேண்ட், டி-சர்ட் உடைகளை அணிந்து வருவதாகவும், ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிவதாகவும் பள்ளிக் கல்வித்துறைக்கு பெற்றோரிகளிடம் இருந்து புகார்கள் வந்தன.
 
மாணவ- மாணவிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஆசிரியர் -ஆசிரியைகள் இதுபோன்ற உடைகளை அணிவதால் தவறான சிந்தனைக்கு வழிவகுக்கும் என்று பெற்றோர்கள் முறையீடு செய்தனர்.
 
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளுக்கு இது போன்ற ஆடைகளை ஆசிரியர் -ஆசிரியைகள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
 
மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலான ஜீன்ஸ், டி-சர்ட், ஜன்னல் ஜாக்கெட் போன்ற ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பண்பாடு சார்ந்த உடைகளை அணிந்து வரவேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இணை இயக்குனர் உஷாராணி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அவை அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அவர்கள் அனுப்பியுள்ளனர்.
----------------
அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியைகள் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்து உள்ளார்களாம்.
ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் இவர்களைப் பாதித்திருக்கிறது ?. உங்களில் யாரோ ஒரு சிலர் அநாகரீகமான முறையில் உடை அணிந்து வந்ததால், பெற்றோர்கள் அதை சுட்டிக்காட்டி புகார் கொடுத்ததால் இன்று அரசே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிரியர், ஆசிரியரிகளின் வேலையே கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் கற்றுத் தருவது தான்.

இவர்களே அநாகரீகமான உடையில் வந்தால் மாணவர்களின் எப்படி இருக்கும்.?

பல தனியார் மேற்றி பள்ளிகளில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாணவர்களுக்கு இருப்பதைப் போல் யூனிபார்ம் உண்டு. தமிழக அரசும் அது போன்று யூனிபார்ம் சிச்ட்டத்தை கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரியான டிரஸ் கோட் (dress code) கொண்டு வரவேண்டும்.

ஆயிரம் படிச்சிருந்தாலும், சம்பாதிச்சாலும்...ஒழுக்கமில்லை என்றால் குப்பைக்கு சமம்தான்.

Posted by போவாஸ் | at 2:53 PM | 1 கருத்துக்கள்

ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் !!!


சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில், ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில், மலர் முழுக்கு நடந்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேய சிலை உள்ளது. 


ஆஞ்சநேய ஜெயந்தியை ஒட்டி இங்கு அதிகாலையில் கணபதி ஹோமம், அதை தொடர்ந்து ராமபிரானுக்கு சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து 7.30 மணிக்கு பால், தயிர், விபூதி, குங்குமம், இளநீர், களபம், பஞ்சாமிர்தம், மாதுளை, சந்தனம், எலுமிச்சை, பன்னீர், தேன் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. 10 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, மாலையில் மலர் முழுக்கு விழா நடந்தது.
-----------------------------------------------------------------
கல்லினாலும், மண்ணினாலும் செய்யப்பட ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் பண்றதே ஒரு வேஸ்ட்டான காரியம். அதுக்காக 10,000 லிட்டர் பால் எல்லாம் கொஞ்சம் அதிகமா தெரியல.
General India news in detail

எத்தனையோ பாவப்பட்ட ஏழை மக்கள் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாம கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு கொடுத்து இருக்கலாம். வெறும் கல்லும் மண்ணுமாக இருக்கும் எந்த சுவாமியும் தவறாக எடுத்துக் கொள்ளாதே.


இன்னைக்கு தேதிக்கு ஒரு லிட்டர் பாலின் விலை 23. 10,000 லிட்டர் பாலுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வீணாக்கப் பட்டுள்ளது.


பாலில் மட்டும் இவ்வளவு என்றால்....தயிர், விபூதி, குங்குமம், இளநீர், களபம், பஞ்சாமிர்தம், மாதுளை, சந்தனம், எலுமிச்சை, பன்னீர், தேன் உட்பட 16 வகையான அபிஷேகம் நடத்தியதில்...குறைந்தபட்சம் ஒரு பத்து லட்சமாவாது செலவிடப் பட்டிருக்கும் என்றே தெரிகிறது.


இவ்வளவு செலவு தேவைதானா இது..? 


இதற்கான செலவினைக் கொண்டு, படிப்பதற்கு வசதியில்லாமல் கஷ்டப்படும் ஒரு பத்து மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றிருந்தால்....ஒரு சிறந்த சமுதாயத்தினை உருவாக்கியிருக்க முடியும். பிறருக்கு எடுத்துக்காட்டாக இருந்து...பலரும் பின்பற்றக் கூடிய வாய்ப்பு உருவாகியிருக்கும்.


உடுக்க உடையில்லாதோருக்கு உடைகளைக் கொடுத்திருக்கலாம்.


மருத்துவ உதவி, இருப்பிட உதவி, திருமண உதவி என இன்னும் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ...அவைகளைச் செய்திருக்கலாம்.


ஆஞ்சநேயருக்கு பாலும், தேனும், தயிரும் ஊற்றி அபிஷேகம் பன்னபட்டதால் சாக்கடையில் கலந்து மேலும் கழிவு நீரை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பிரயோஜனம் இருந்திருக்க முடியும் ?.


கஷ்டப்பட்டு, வேர்வை சிந்தி உழைச்சு, சேமிச்சு வச்ச பணத்தை குப்பையில யாராவது தூக்கி போடுவாங்களா ?. புத்தியுள்ளவர்கள் செய்வார்களா ?. 


அதுபோலவே, கல்லால், மண்ணால் செய்த ஆஞ்சநேயர் சிலை மீது செய்த அபிஷேகமும்....வெட்டாந்தரைல வீணாய் கொட்டுவதும் ஒண்ணுதான்.

சிந்தியுங்கள்...சிறப்பாய் இருங்கள்...சமுதாயத்தை மாற்றுங்கள்.

Posted by போவாஸ் | at 1:44 PM | 0 கருத்துக்கள்

ஆண்டவன் உத்தரவு : கோவிலில் 500 ரூபாய் வைத்து பூஜை


உலகில் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத சிறப்பு, திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோவிலுக்கு உண்டு. இங்கு மூலவராக வீற்றிருக்கும் ஸ்வாமி சுப்பிரமணியர், பக்தர்களின் கனவில் தோன்றி கூறும் பொருட்களை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டியில் வைத்து, அதற்கு தினமும் சிறப்பு பூஜை நடத்துவது தொற்றுதொட்டு நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டம் வெள்ளோடு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "500 ரூபாய் பணத்தை வைத்து பூஜிக்குமாறு' உத்தரவிட்டுள்ளார்.
Human Intrest detail news
இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி திருக்கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். முறைப்படி மூலவர் சன்னதியில் பூ மூலம் உத்தரவு கேட்கப்பட்டது. பூ உத்தரவு கிடைத்ததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 500 ரூபாய் பணத்தை, கோவிலில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைத்து தினமும் பூஜை நடக்கிறது.
இதன்மூலம் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.


கடைசியாக இக்கோவிலில் வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை நடந்தது. இதனால், நாடெங்கும் சுபகாரியங்கள் அதிகம் நடந்தன. அதற்கு முன் விபூதி வைத்து பூஜை நடந்தது. அப்போது நாட்டில் அதிகப்படியான கோவில்களில் குடமுழுக்கு நடந்தது; மக்களிடம் ஆன்மிக ஈடுபாடும் அதிகரித்தது.
Hotel image
அதற்கு முன், மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து, பூமி விலை பல மடங்கு அதிகரித்தது. அதற்கு முன் ஒரு படி அரிசியும், நூறு ரூபாய் பணமும் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது.


இக்கோவிலில் துப்பாக்கியை வைத்து பூஜித்தபோதுதான் கார்கில் யுத்தம் துவங்கி; அது வெற்றியில் முடிந்தது.தற்போது 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடப்பதால், அன்னிய செலவாணி பல மடங்கு உயர்வு ஏற்பட்டு, நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமென சிவன்மலை முருக பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
-----------------------------------------------------------
மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து, பூமி விலை பல மடங்கு அதிகரித்தது. அதற்கு முன் ஒரு படி அரிசியும், நூறு ரூபாய் பணமும் வைத்து பூஜை நடந்தது. அதனால், அரிசி விலை பல மடங்கு உயர்ந்தது.
இப்போ 500 ரூபாய் பணம் வைத்து பூஜை நடத்துகிறார்கள்....அரிசி விலை இன்னமும் விலை எறக் கூடுமா ?.


என்று திருந்தப் போகிறது இந்த அறிவு மங்கிய சமுதாயம்.......?


ஆண்டவன் உத்தரவாம்,,ஆண்டவன் உத்தரவு.....என்னத்த சொல்றது போங்க.

Posted by போவாஸ் | at 1:07 PM | 0 கருத்துக்கள்

சேது சமுத்திரத் திட்டம் கைவிடப்படுகிறதா?ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக எதிர்பார்க்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் இதோ நிறைவேற்றப்பட இருக்கிறது என்கிற ஆர்வம் தமிழ்நாடு மக்கள் மத்தியிலே பொங்கிப் பிரவாகித்தது.
மத்தியில் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் டி.ஆர். பாலு அவர்கள் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், இத்திட்டத்தினை நிறைவேற்றிட அவர் காட்டிய ஆர்வம் தமிழர்கள் மத்தியிலே உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
ரூபாய் 2000 கோடி முதலீட்டில் தீட்டப்படும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் அந்நிய செலாவணியைத் திரட்டித் தரும் என்று கூறப்பட்டது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், 36 மணிநேரக் கடல் பயணம் மிச்சம்; சுமார் 555 கி.மீட்டர் தூரம் மிச்சம்; எரிபொருள் மிச்சம்; அந்நியச் செலாவணி மிச்சம்; தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி விரைவாக வந்து சேரும்; இதனால் தமிழ்நாட்டு மின் வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.24 கோடி மிச்சம்; ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ரூ.700 கோடி மிச்சம்.
சென்னை, தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம் துறைமுகங்கள் பன்னாட்டுத் துறைமுகங்களாகும். எண்ணூர் முதல் குளச்சல் வரை உள்ள பெருந்துறைமுகங்கள், சிறு துறைமுகங்கள் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்படும். புதிதாகவும் சிறு துறைமுகங்களும், மீன் பிடி துறைமுகங்களும் உண்டாகும்.
கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தொண்டி, கோடியக்கரை, இராமேசுவரம், தனுஷ்கோடி, குளச்சல் ஆகிய இடங்களில் மீன் பிடி துறைமுகங்கள் விரிவாக்கம் பெற வழி பிறக்கும். துறைமுகங்களை முக்கியமாகக் கொண்டு சிறிய, பெரிய தொழிற்சாலைகள் வளரும்.
இதன் காரணமாக, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் குறைந்தபட்சத் திட்டத்திலும் இது இடம்பெற்றது. குடியரசுத் தலைவர் உரையிலும்கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் பிறகு இந்தத் திட்டம் முடக்கப்பட்டுக் கிடக்கிறது என்றால், இதன் பொருள் என்ன?
தமிழர்களுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என்றே இந்த நாட்டில் ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் பார்ப்பனர்கள் கூட்டம்; சுப்பிரமணியசாமி, சோ. ராமசாமி போன்றவர்கள் கண்களுக்குத் தென்பட்டாலும், ஒட்டுமொத்தமாக எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கு மறைமுகமாகவேனும் முட்டுக்கட்டை போடுபவர்களே!
ரூபாய் 2000 கோடியில் உருவாகும் ஒரு விஞ்ஞானபூர்வமான திட்டத்தை 17 லட்சத்து 25,000 ஆண்டுகளுக்குமுன் ராமன் கட்டிய பாலம் என்ற ஒரு புராண புளுகு மூட்டையைக் கொண்டு வந்து இந்த நாட்டில் முடக்கப்படுகிறது என்றால், 21 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா இருக்கிறதா என்கிற கேள்விக்குறிதான் எழும்.
[r.s.jpg]
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
ஆனால், இராமன் என்ற புராணக் கற்பனைப் பாத்திரத்தைக் காட்டி தடைகோரும் ஒரு மனுவை இந்தியாவின் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்காலத் தடையும் விதிக்கிறது என்றால், இந்த நாட்டில் அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக் கூடியவர்கள்தானா என்ற கேள்வி எழாமல் போகாது.
ஏற்கெனவே பல நிபுணர் குழுக்களின் அறிக்கைகள் பெறப்பட்டுதான் ஆறாவது தடத்தில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கப்பட்டது.
இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதுக்கரடி ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளது. சுற்றுச்சூழல்பற்றி ஆய்வு நடத்திட மேற்கொண்டு 18 மாதங்கள் தேவைப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொல்கிறது என்றால், இதன் பொருள் என்ன?
சு.சாமி, ஜெயலலிதா, சோ. ராமசாமி வகையறாக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு துணை போகிறது என்றுதான் கருதவேண்டியுள்ளது.

உரிமைப் பிரச்சினை என்று வருகிறபோது பக்கத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தைப் பார்த்தாவது நமக்கு புத்தி வரவேண்டாமா?.
மயிலே, மயிலே என்றால் இறகு போடாது என்பது அனுபவ உண்மை.
திமுக அரசு மட்டுமே இவ்விசயத்தில் முழு அக்கரையுட செயல்படுகிறது.


எங்கே போயின பிற கட்சிகள் ?.

Posted by போவாஸ் | at 12:11 PM | 1 கருத்துக்கள்

ரூ3600 கோடியில் ஹெலிகாப்டர்கள்: இத்தாலி நிறுவனத்திடம் வாங்க மத்திய அரசு திட்டம்


மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகள் குறித்து பேசிவரும் நிலையில், விஐபிக்களின் போக்குவரத்துக்காக ரூ.3,600 கோடி செலவில் புதிதாக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.


இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த 12 ஹெலிகாப்டர்களையும் இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற ஒரே நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்க துடித்துக் கொண்டிருக்கிறது.

இதுதொர்பான ஒப்பந்தங்கள் எல்லாம் கிட்டதட்ட முடிந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால், விஐபி ஹெலிகாப்டர்கள் புதிதாக வாங்குவதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி நிதியமைச்சகம் ரூ.1,400 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் தந்துள்ளது. 


இதற்கு மிஞ்சிய தொகை தருவதற்கு நிதியமைச்சகம் தயக்கம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக இரண்டு அமைச்சகங்களுக்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களாகவே பிரச்சனை நடந்து வருவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கான அரசு ஒப்பந்தத்தில் பல விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக டாமன் எம்.பி ஒருவரும் மத்திய புலனாய்வு மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.


விஐபி ஹெலிகாப்டர்களுக்கான செலவு, முன்னணி போர் விமானம் வாங்குவதற்கு ஆகும் செலவை நெருங்குவதாக இருப்பது தெரிந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சகம் இதில் தனி அக்கறை காட்டிவருவதாகவும் அந்த எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.


உலகெங்கும் அரசுகள் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் கூட சமீபத்தில் அதிபருக்கான அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------
நெஞ்சு பொறுக்கவில்லையே...காங்கிரசின் கண்மூடித்தனமான செலவினங்களைக் கண்டு.


இது அடுத்த போபோபர்ஸா ? யார் கண்டது, போக போகப் தெரியும்...

Posted by போவாஸ் | at 10:37 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails