ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு மதிப்பெண் இனி 80 சதவீதம்


இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) சேர நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் அளவை 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம்.
                                                              



இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது தற்போது ஐ.ஐ.டி., மற்றும் ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. இது மாற்றப்பட உள்ளது. ஐ.ஐ.டி., மாணவர் சேர்க்கைக்கான தகுதி அளவை அடுத்த ஆண்டு முதல் மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 80 முதல் 85 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐ.ஐ.டி., மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள் எழுத தகுதி உடையவர்களாக அறிவிக்கப்படுவர். ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைவாக உள்ளதால், இந்த நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது.



அதனால், ஐ.ஐ.டி., போன்ற முதன்மையான நிறுவனங்களில் சேர நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்விலும் அதிக அளவில் மதிப்பெண் பெற்றிருப்பதை உறுதி செய்ய உள்ளோம். வரும் 2011ம் ஆண்டில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு, இந்த அடிப்படையில் தான் நடைபெறும். இந்த புதிய முறையை உருவாக்குவதற்காக ஐ.ஐ.டி., இயக்குனர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுக்கு சரியாக எவ்வளவு தகுதி மதிப்பெண்களை நிர்ணயிப்பது என்பதையும் இந்த கமிட்டியே முடிவு செய்யும்.


ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு பல மையங்கள் பயிற்சி அளிப்பதால், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதில் மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை. நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என, தகுதி அளவு நிர்ணயித்தால் பல பயிற்சி மையங்கள் காணாமல் போய் விடும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.


Updated News - தற்போதைய செய்தி :
கபில் சிபிலின் இந்த திடீர் முடிவால், நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அமைச்சர் கபில் சிபலுக்கு எழுதிய கடிதத்தில்,"அரசின் இந்த முடிவால், பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள், ஐ.ஐ.டி.,க்களில் சேர முடியாத நிலை ஏற்படும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அமைச்சர் கபில் சிபல் இந்த தகவலை நேற்று மறுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐ.ஐ.டி.,யில் சேர, நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்ணை உயர்த்தப் போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல. சில மீடியாக்கள் இதை தவறாக வெளியிட்டு விட்டன. கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.,) நடைமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து தான் பேசப்பட்டது. தகுதி மதிப்பெண் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மதிப்பெண்களை அதிகரிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. இதில் நேரடியாகவே, மறைமுகமாகவோ தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted by போவாஸ் | at 8:25 PM | 1 கருத்துக்கள்

டி. ராஜேந்தரின் அதிரடி பதில்

டி. ராஜேந்தரின் அதிரடி பதில்

சமீபத்தில் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் நிலையை கண்டு திரும்பி இருக்கும் தமிழக நாடாளுமன்ற குழுவைப் பற்றி எதிர்க்கட்சியினர் அனைவரும் தங்களது வழக்கமான எதிர் வாதங்களையும், கருத்துக்களையும் கூறிவிட்டனர்.


நமது, லட்சிய திமுக தலைவர் திரு.டி.ராஜேந்தர் அவர்களும் தனது பாணியிலே , எதுகை மோனையுடன், அடுக்கு மொழி சொற்றொடர்களுடன் தனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.


கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் கேடு, பார்த்து ரசிக்கலாம்.

Posted by போவாஸ் | at 7:51 PM | 1 கருத்துக்கள்

5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை - வித்தியாசமான மருத்துவர்











சேவை நோக்கத்தோடு செயல்படும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அதிகாரி ஜி.புஷ்பவனம்.
சாதாரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்றாலே "கணினி பில் புனிதமாகப் போற்றப்படும் மருத்துவத்துறை வணிகமயமாகி வரும் இந்தக் காலத்தில்' போட்டு பணம் கறக்கும் இந்த ஹைடெக் "மெடி' யுகத்தில், வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார் இவர். தற்போது 63 வயதாகும் புஷ்பவனம், மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார்.

எப்படி இந்த 5 ரூபாய் சிகிச்சை? என அவரிடம் கேட்டோம்.

மருத்துவம் என்பது நோயாளியின் நோயைத் தீர்க்கும் பணியாக இருக்க வேண்டுமே ஒழிய, பணத்தைப் பறிக்கும் ஒரு கருவியாக இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். எப்பொருளும் விலையின்றி கொடுத்தால் மதிப்பிருக்காது. அதனால்தான், குறைந்த கட்டணமாவது வாங்கி இச் சேவையை அளித்து வருகிறேன். 28 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் இச் சேவையைச் செய்து வருகிறேன்.
தொடக்கத்தில் ரூ.3 கட்டணம்தான் வசூலித்தேன். தற்போது ரூ.5 வசூலிக்கிறேன். இக்குறைந்த கட்டணத்தில் சிசிச்சை அளிப்பதற்கு போதும் என்ற மனநிறைவுதான் காரணம். நான் வசித்த பகுதிகள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணி கொண்டதால், மருத்துவத்துக்கு பல ஆயிரம் பணம் செலவழிக்கும் நிலையில் பெரும்பாலானோரும் இல்லை என்பதை நன்கறிவேன். இதனால், புற்றுநோயாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயாளிகள், காசநோயாளிகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை.
இதுதவிர, அவசர நேரத்தில் தொலைபேசி மூலமும் தெரிந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பேன் என்று கூறும் புஷ்பவனம், தொழுநோயாளிகள், காசநோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி பரிந்துரையும் செய்கிறாராம்.
500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டுள்ளதாக கூறும் இவர், இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறார் இந்த வித்தியாசமான மருத்துவர். நன்றி : தினமணி.

Posted by போவாஸ் | at 12:15 AM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails