கர்நாடகத்தில் ரூ.30,000 கோடியில் லட்சுமி மிட்டலின் உருக்கு ஆலை!

இரும்பு எஃகுத் தொழிலில் உலகிலேயே முன்னிலை வகிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலின் ஆர்செலார் மிட்டல் நிறுவனம் கர்நாடகத்தில் உருக்கு ஆலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. 

ரூ 30 ஆயிரம் கோடி முதலீட்டில் உருவாகும் இந்த ஆலை குறித்து கர்நாடக அரசுடன் முதல்கட்டப் பேச்சுக்களைத் துவங்கியுள்ளனர் அந்நிறுவன அதிகாரிகள்.

இந்த தொழிற்சைலை மட்டும் கர்நாடகத்தில் அமைந்தால், சர்வதேச முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதால், மிகுந்த கவனத்துடன் இந்த திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்செலார் நிறுவனத்தைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதி மற்றும் சலுகைகளும் ஒற்றைச் சாளர முறையில் உடனுக்குடன் கிடைத்தாக வேண்டும் என எதிர்ப்பார்க்கிறது. 

இந்த ஆலை குறித்த பிற விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும், சில நடைமுறைகள் முடியும்வரை மேற்கொண்டு எதுவும் கூற முடியாது என்றும் ஆர்செலார் மித்தல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில், ஆண்டுக்கு 6 லட்சம் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இன்னொரு நடுத்தர ஆலை ஒன்றை இதே கர்நாடகத்தில் அமைக்கவும் ஆர்செலார் மிட்டல் திட்டமிட்டுள்ளதாம். இந்த பிளாண்ட்டுக்கு ரூ 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாம். இதற்கான அனைத்து பூர்வாங்க வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளதாம். 

ஏற்கெனவே ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் உருக்கு ஆலைகளை ஆர்செலார் மித்தல் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனைகள் தொடர்வதால், கர்நாடக திட்டத்தில் கவனத்துடன் செயல்பட விரும்புகிறது.

Posted by போவாஸ் | at 10:26 PM | 0 கருத்துக்கள்

பிராமணர்கள் வாக்குகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறும்


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ்.வி.சேகர், திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். என்று கூறியுள்ளார்.


முதல்வர் கருணாநிதியால் மட்டுமே முற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு 16 சதவீதம், குறிப்பாக பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முடியும். இதன் மூலம் 40 லட்சம் பிராமணர்கள் வாக்குகள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு மாறும்’’என்று தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். இதனால் 20 லட்சம் குடும்பத்தினர் பயனடைவர். முல்லை பெரியார், காவிரி பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களை விட மழைதான் நமக்கு சாதகமாக உள்ளது’’என்று தெரிவித்தார்


'காலம் பதில் சொல்லும்' , 'கால சுழற்ச்சி' என்ற கூற்றுக்கு இதுவல்லவா சரியான சான்று.
ஆரியர் என்ற பார்ப்பன பிராமணர் இந்தியாவிற்கு வந்த முதலே பிராமணர் அல்லாத பிற இனத்தவர்களை அடிமை போலவே, தீண்டத்தகாதவர்கள் போலே நடத்தினர். சொல்லொண்ணா துயரத்திற்கு நம் முன்னோர்கள் தள்ளப்பட்டனர்.


வருடங்கள் உருண்டோடின...காலங்கள் மாறின...காட்சிகள் மாறின, பிராமணர் அல்லாத பிற ஜாதி இனத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்து வாழ்வாதார சூழ்நிலைகளைத் தந்தது அதிமுக, திமுக கட்சிகளின் அரசு. பிராமணர் மவுசு குறைந்தது. ஆட்டம் கண்டது பிராமணர் கூட்டம்.


'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று சொல்வார்கள். அதுபோல, இன்று பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பெற திமுக என்ற திராவிட கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றது. 


அப்பன் செய்த பாவம் பிள்ளையை வந்து சேரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.


அதைப் போல இப்போது இருக்கும் பிராமணர்களின் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு அவர்களது சந்ததிகளை வந்து சேர்ந்து இருக்கிறதோ ?

Posted by போவாஸ் | at 8:31 PM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails