ஆட்டம் காணும் ஐயப்பனின் சபரி மலை.

சபரிமலை சன்னிதானம் அருகே நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். வெடிபொருளுடன் வந்த நபர்கள் யார் என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. 



சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நெருங்குவதால் பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அதிவேக அதிரடிப்படை போலீசார் உள்பட 1,500-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நேற்று ஞாயிறு என்பதால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர்.


இரவு 8 மணி அளவில் சன்னிதானம் அருகே சரங்குத்தி பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நடை சாத்துவதற்குள் தரிசித்துவிட வேண்டும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தனர். கயிறு கட்டி, பகுதி பகுதியாக பிரித்து பக்தர்களை போலீசார் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பக்தர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பக்தர்கள் பதற்றம் அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.


சன்னிதானம் எஸ்.பி. சசிக்குமார் தலைமையிலான போலீசார், ஆயுதப்படை மத்திய அதிவேக அதிரடிப்படை, மற்றும் வெடிகுண்டு பிரிவு போலீசார் உடனடியாக விரைந்து வந்தனர். குண்டு வெடித்த இடத்தில் கிடந்த பொருட்களை சேகரித்தனர்.
Swine Flu
காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளை விரட்ட பெரிய பாதையில் பல இடங்களில் வெடி வழிபாடு என்ற பெயரில் வெடிகள் வெடிக்கப்படும். பக்தர்கள் கட்டணம் செலுத்தினால் அவர்களது பெயரை சொல்லி வெடி வழிபாடு நடத்தப்படும். இந்த வெடிகளை பக்தர்களே சிலர் கொண்டு வந்து வெடித்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பக்தர்கள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் பம்பையில் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. அதை மீறி வெடிபொருளை எப்படி கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவில்லை.


"சரங்குத்தி பகுதியில் நின்றிருந்தபோது 2 பேர் வெடிபொருட்களை வைத்திருந்தது போல தெரிந்தது. அது என்ன என்று அருகே இருந்தவர்கள் விசாரித்துக் கொண்டு இருக்கும்போதே வெடித்துவிட்டது" என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.


அதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிபொருளுடன் நடமாடியதாக பக்தர்கள் கூறும் 2 நபர்கள் யார், தீவிரவாதிகளா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. பம்பை மற்றும் சிறிய பாதை உள்பட சபரிமலை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் இருமுடி கட்டுகள், பை உள்பட அனைத்துப் பொருட்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
----------------------------------------------------------------------------------
யப்பப்பா ஐயப்பா....என்னப்பா இது சோதனை...
உன் இருப்பிடத்தையும், உன்னை நாடி, தேடி வரும் பக்தர்களையே காக்க முடியலையே...
உன் சக்தி குறைஞ்சிடுச்சாப்பா...இல்லை மூட்டை கட்டி வசிட்டியாப்பா.
பதில் நீயே சொல்லப்பா...

Posted by போவாஸ் | at 4:34 PM | 3 கருத்துக்கள்

ஆ‌ட்‌சி‌ப் பொறுப்பில் இருந்து விலகுவது உறுதி: கருணாநிதி


"அரசுப் பொறுப்பிலிருந்து சற்று ஒதுங்கி செயல்படுவேன் என்று நான் முன்பு சொன்னதை நான் ஒதுக்கிவிடவில்லை. முன்பு சொன்னது அப்படியேதான் உள்ளது" என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூ‌றினா‌ர்.

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு தமிழ்த் தலைமகன் என்னும் விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நே‌ற்று மாலை நடைபெற்றது.

முன்னாள் துணைவேந்தர் வி.சி. குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், கொல்கத்தா தமிழ்ச் சங்க ஆலோசகர் த. ஞானசேகரன், கருணாநிதிக்கு விருதினை வழங்கினார்.
















பின்னர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், கொல்கத்தா தமிழ்ச் சங்கம், டெல்லி தமிழ்ச் சங்கம், மும்பை தமிழ்ச் சங்கம் என தமிழுக்கு சேவை செய்யும் அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் தி.மு.க. அரசு துணை நிற்கும்.

அரசியல் மேடைகளில் மாற்றுக் கட்சியினர் கூட என்னைப் பாராட்டியுள்ளனர். ஆனால், இந்த விழாவில் எனக்கு ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறித்து பேசிய விழா தலைவர் வி.சி.குழந்தைசாமி, தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படும் சமத்துவபுரம் திட்டத்தை ஒரு காரணமாகக் குறிப்பிட்டார். இது உண்மையிலேயே என்னை ஒருபடி மேலே உயரச் செய்தது.

கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 95 சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஒரு சமுதாய மறுமலர்ச்சித் திட்டம். இங்கு சாதி, மத பேதங்கள் இல்லை என்ற நிலை ஏற்படும் வரை சமத்துவபுரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னோட்டமாக இந்த விழா நடைபெறுவதாக இங்கே குறிப்பிட்டார்கள். தமிழன் தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக செம்மொழி மாநாட்டை நடத்துகிறோம்.

இந்த மாநாட்டுக்கு வர இயலாது, முடியாது என சிலர் கூறியுள்ளனர். அந்த ஓரிருவர் இல்லாவிட்டாலும்கூட, அவர்கள் இருந்தால் எந்த அளவு சிறப்போடு நடைபெறுமோ, அதே சிறப்போடு, உரிய பண்பாட்டோடு மாநாடு நடைபெறும். தமிழ்ப் பெருங்குடி மக்கள் உரிய ஒத்துழைப்பு அளித்தால், நாம் விரும்புகிற தமிழ்ச் சமுதாயத்தை அமைக்க முடியும். அது ஒரு புரட்சிகர, பகுத்தறிவு நிறைந்த சமுதாயமாக இருக்கும்.

எனக்கு இப்போது 86 வயதாகிறது. நான் இருக்கின்றவரை தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இடையில் அரசுப் பொறுப்பிலிருந்து சற்று ஒதுங்கி செயல்படுவேன் என்று நான் முன்பு சொன்னது என்ன ஆனது என சிலர் கேட்கலாம். அதை நான் ஒதுக்கிவிடவில்லை. முன்பு சொன்னது அப்படியேதான் உள்ளது என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூ‌றினா‌ர்.

Posted by போவாஸ் | at 2:12 PM | 0 கருத்துக்கள்

ஜொலி.ஜொலிக்கிறது மெரீனா கடற்கரை.

உலகில் உள்ள நீளமான கடற்கரையில் சென்னை மெரீனா கடற்கரையும் ஒன்றாகும். மெரீனா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பொழுதைக் கழித்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை வாரவிடு முறை, பண்டிகை நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்து வந்தது. 

மெரீனா கடற்கரைக்கு வந்து செல்லும் பொது மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு சென்னை மெரீனா கடற்கரையை உலக கடற்கரைத் தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 25 கோடியே 92 லட்சம் ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது. 
 
கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெரீனா கடற்கரையை அழகு படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை காமராஜர் சாலையில் கிழக்குப்பக்கம் 3.1 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை கருங்கல் பலகை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 
 
நடைபாதையின் ஓரத்தில் அழகிய, கண்ணை கவரும் தூண்கள், துருப்பிடிக்காத ஸ்டீல் பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மெரீனா கடற்கரைக்கு வரும் பொது மக்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும், கடற்கரையின் அழகை ரசிக்கவும் 14 இடங்களில் வண்ண வண்ண கருங்கற்கள், கிரானைட் கற்கள் கொண்டு கடற்கரையை பார்த்த வண்ணம் உட்காரும் வகையில் நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 
 
நடைபாதைக்கும் கடற்கரை பயன்பாட்டு சாலைக்கும் இடையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்காக 4 இடங்களில் நவீன பொது கழிபபிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 
 
கண்ணகி சிலை அருகே நவீன முறையில் நடைபாதையும், சுரங்கப்பாதையும், கடற்கரையை சுற்றிலும் கண்கவரும் வகையில் பறவை வடிவிலான மின் விளக்குகளும் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகில் அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
இரவில் பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்காக நீர் வீழ்ச்சிகளுக்கு இடையில் வண்ண விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடற் கரையைச்சுற்றி நவீன வசதிகளுடன் பஸ் நிறுத்தங்கள், வாகனங்களை நிறுத்துவதற்காக நவீன கார் நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை நகர் முழுவதும் முக்கிய பகுதிகளில் பூங்காக்கள் கட்டி வரும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையை அழகு படுத்துவதிலும் பெரும் முனைப்பு காட்டினார். 
 
இதனால் இப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. மேலும் அவ்வப்போது அதிகாலையில் திடீரென்று இந்த பணிகளை பார்வையிட்டு தீவிரப்படுத்தினார். அவரின் மின்னல் வேக நடவடிக்கையால் இந்த பணிகள் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது. 
 
நவீன முறையில் அழகு படுத்தப்பட்டுள்ள மெரீனா கடற்கரையின் திறப்பு விழா 20ஆம் தேதி காலை, காந்தி சிலை அருகே நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். 
 
முதல்வர் கருணாநிதி அழகுபடுத்தப்பட்ட மெரீனா கடற்கரையை காலை 10.20 மணிக்கு திறந்து வைத்தார். அங்கு மரக்கன்றும் நட்டார். பின்னர் அழகு படுத்தப்பட்ட கடற்கரையை பார்வையிட்டார். 
 
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுரேஷ்ராஜன், பூங்கோதை, பரிதி இளம்வழுதி, ராமச்சந்திரன், மத்திய அமைச்சர் ஆ.ராசா, மேயர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா. 
 
தலைமை செயலாளர் ஸ்ரீபதி, குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சட்டசபைசெயலாளர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ். பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கா.கிட்டு மற்றும் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.























































Thanks to : Nakkheeran.

Posted by போவாஸ் | at 11:21 AM | 2 கருத்துக்கள்

பா.ம.க.,விற்கு " செக் " வைத்த ஸ்டாலின்


லோக்சபா தேர்தலின்போது, கூட்டணியை விட்டு வெளியேறிய பா.ம.க.,வை மீண்டும் சேர்ப்பதில் தி.மு.க., தயக்கம் காட்டுகிறது. இடைத்தேர்தலில் ஆதரவு தர, பா.ம.க., முன்வந்த போதிலும், அதை ஏற்காமல் தி.மு.க., புறக்கணித் துள்ளது.

கடந்த லோக்சபா பொதுத் தேர்தலில், திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் 15 ஆயிரம் ஓட்டுக்களும், வந்தவாசி சட்டசபை தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுக்களும் எதிர்கட்சியை விட கூடுதலாக தி.மு.க., பெற்றது.லோக்சபா தேர்தலில் பதிவாகிய ஓட்டுக்களை விட, இடைத்தேர்தலில் அதிகமான வித்தியாசத்தில் ஓட்டுக்களை பெற முடியும் என்ற நம்பிக்கை தி.மு.க.,விற்கு பலமாக இருக்கிறது.



இடைத்தேர்தலைக் காரணம் காட்டி, ஆளுங்கட்சியுடன் நெருங்கி விடலாம் என நினைத்த பா.ம.க.,வை புறக்கணிக்க, இந்த நம்பிக்கை காரணமாக அமைந்துள்ளது."எந்த நேரமும் முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை சந்திக்க முடியாது' என்றெல்லாம் கூறி, ராமதாஸ் தனது கூட்டணி ஆசையை வெளிப்படுத்தினார். செம்மொழி மாநாட்டுக்கும் ஆதரவு தெரிவித்தார்.இடைத்தேர்தலில் ஆதரவு தருவது குறித்தும் ராமதாஸ் ஆளுங்கட்சிக்கு தூது விட்டார். ஆனால், பா.ம.க.,வின் ஆதரவை துணை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இல்லாமல் வந்தவாசி தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டுக்களை தி.மு.க., பெற்றுள்ளது. தி.மு.க.,விலும் வன்னியர்கள் அதிகமாக உள்ளனர். பா.ம.க.,வின் ஆதரவை பெற்றால், அக்கட்சியால் தான் வந்தவாசியில் தி.மு.க., விற்கு வெற்றி கிடைத்தது என, ராமதாஸ் தம்பட்டம் அடிப்பார்.அதுமட்டுமல்லாமல், தேவையற்ற கோரிக்கைகளையும் வைத்து, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருப்பார். அ.தி.மு.க., கூட்டணியை விட்டு பா.ம.க., வெளியேறி விட்டதால், அக்கட்சிக்கும் பா.ம.க.,வின் ஓட்டுக்கள் விழ வாய்ப்பு இல்லை. பா.ம.க.,வின் ஆதரவு இல்லாமல் தி.மு.க.,வால் வெற்றி பெற முடியும்.

பா.ம.க.,வினர் ஓட்டுக்களை எப்படி தி.மு.க.,வுக்கு கொண்டு வர வேண்டும் என்ற வித்தை, அமைச்சர் வேலுவுக்கு நன்றாக தெரியும். எனவே, அக்கட்சியை கண்டு கொள்ள வேண்டாம் என, துணை முதல்வர் சொல்லி விட்டார். அதனால்தான், பா.ம.க.,வின் ஆதரவை தி.மு.க., ஏற்கவில்லை.பா.ம.க.,விற்கு துணை முதல்வர் வைத்த "செக்'கிற்கு பின்னால், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். பா.ம.க.,வின் ஆதரவு தேவையில்லை என்பதற்கு போதுமான விளக்கங்களை அவர்கள் அளித்ததால் தான், துணை முதல்வர் திருப்தியானார்.

அதன் விளைவாகவே, பா.ம.க., ஆதரவு தேவையில்லை என்ற திடமான முடிவை, கட்சித் தலைமைக்கு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.பா.ம.க.,விற்கு துணை முதல்வர் வைத்துள்ள "செக்' இடைத்தேர்தலோடு முடிவுக்கு வருமா அல்லது பொதுத்தேர்தலிலும் தொடருமா என்பது, இடைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்.

Posted by போவாஸ் | at 2:20 AM | 0 கருத்துக்கள்

காஞ்சி செக்ஸ் சாமியார், சேலம் சாமியார், சென்னை சாமியார் : பாலியல் கொடூர வன்முறை, மோசடி பித்தலாட்டங்கள் அம்பலம்


சேலம், சாமியார், காஞ்சிபுரம் செக்ஸ் சாமியார், சென்னை சாமியார் என மேலும் பல சாமியார்களின் பாலியல் வன்கொடுமைகள் மோசடி செய்திகள் குவிகின்றன.இதைக் கண்டு பெண்கள் கோவிலுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த சாமியார்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டுமென்று பெண்கள் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் பெண்களிடையேயும், பக்திமான்களிடையேயும் கடவுள் நம்பிக்கை குறைந்து வருகிறது.
இவைகளைப்பற்றிய செய்திகள் வருமாறு:




காஞ்சிபுரம் செக்ஸ் சாமியார்
கோவில் கருவறையில் ஆபாச நடவடிக்கை-களில் ஈடுபட்ட அர்ச்சகருக்கு எதிராக காஞ்சிபுரத்தில் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவிலில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டதாக அர்ச்சகர் தேவநாதன் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மய்யம், ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவிலின் கருவறையில் செக்ஸ் லீலை நடத்திய அர்ச்சகர் தேவநாதனுக்கு கடுங்காவல் தண்டனை அளிக்க வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் பிரமிளா தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜான்சிராணி, இந்திய தொழிற்சங்க மய்ய மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் முத்துகுமார், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க நிருவாகி சுந்தர், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் மகஷ்சிங் மற்றும் நிருவாகிகள் பிரேமா, வசந்தா, புவனேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஜீவா உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 


மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறியதாவது: கோவில் என்பது புனிதமான இடம். அதுவும் கருவறை என்பது அதை விட புனிதமான இடம். அந்த கருவறையில் பெண்களுடன் செக்ஸ்சில் ஈடுபட்ட அந்த அர்ச்சகர் தேவநாதனுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்க வேண்டும். தேவநாதனுக்கு கொடுக்கும் தண்டனை தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். காவல் துறையினர் மெத்தன போக்குடன் செயல்படாமல் துரிதமாக செயல்பட்டு தகுந்த ஆதாரங்களை திரட்டி தேவநாதனுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் சாமியார்
சேலம் சின்னத்திருப்பதி கொள்ளக்குட்டை ஏரி எழில்நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜி.எம்.வேலு (வயது 29). இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூர் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயிற்று பிழைப்புக்காக சேலம் வந்த அவர், அங்குள்ள சாலையோரக் கடையில் (பரோட்டா போடும் மாஸ்டர்) வேலை பார்த்தார்.
இந்த நிலையில் அந்த கடையின் உரிமையாளரின் மகளான தனலட்சுமியை திருமணம் செய்து கொண்ட வேலு, எழில்நகரில் மனைவியுடன் வசித்து வருகிறார். வேலு, கடையில் வேலைபார்க்கும் போதே பலருக்கு குறி சொல்வது வழக்கம். தான் குடியிருக்கும் வீட்டையொட்டி ஆசிரமம் அமைத்து குறி சொல்லி வருகிறார்.
அவரது வீட்டுக்கு குறி கேட்க சேலம் மட்டுமின்றி திருச்சி, கோவை, சங்ககிரி, ஓமலூர் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் கூட்டம், கூட்டமாக ஆட்டோ, வேன்களில் வருவதுண்டு.
வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் வேலு அருள்வாக்கு கூறி, குறி சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். நேற்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பெண்கள் வேலுவிடம் குறி கேட்பதற்காக மண்தரையில் அமர்ந்திருந்தனர். உடன் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் உதவியாளர்களும் இருந்தனர்.
இந்த நிலையில் வேலுவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் முனியம்மாள், அவரது மகள் அலமேலு மங்கை உள்பட சிலர் திரண்டு வேலுவின் சாமிகூடாரத்துக்குள் நுழைந்து, இவன் போலி சாமியார், நம்பாதீர்கள். கடந்த 2 நாள்களுக்கு முன்பு அமாவாசை தினத்தில் மந்திரித்த தாயத்தை காலையில் புதைத்தார். பெண்களை ஏமாற்றி மயக்கிவிடுவார் என கூச்சல்போட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்-டது.
அப்போது முனியம்மாள், சாமியார் வேலுவின் உடம்பில் அணிந்திருந்த அங்கவஸ்திரத்தை பிடித்து உலுக்கினார். அதை சாமியாரின் மனைவி தனலட்சுமி தடுக்க இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டனர்.
மேலும் அங்கு பூஜைக்காக வைத்திருந்த பொருள்கள் தூக்கி வீசப்பட்டன. தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தினார்கள். பிறகு வேலுவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பெண்கள் குமுறல்
எழில்நகரை சேர்ந்த முனியம்மாள், விருதாம்பாள், அலமேலு, ராசாக்குமார் ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியூரை சேர்ந்த சாமியார் என்ற பெயரில் வேலு, செந்தில், மணி, வெள்ளையன் மற்றும் சிலர் வந்து குடியமர்ந்தனர். இவர்கள் எங்கிருந்தோ சாமி சிலைகளை எடுத்து வந்து, நாங்கள் சொன்னால் அப்படியே நடக்கும் என கூறி மிரட்டி பணம் வாங்கி வருகிறார்கள். மேலும் இவர்கள் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்வதாகவும், படிக்காதவர்களை தேர்வில் தேர்ச்சிபெற வைப்பதாகவும் கூறுகிறார்கள். அமாவாசையன்று சிறுமிகளை வரவழைத்து பூஜை செய்வதாக கூறி வீட்டை தாழிட்டு விடுகிறார்கள். எனவே, இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளோம். இந்த சாமியார்களால் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் தடுத்து நிறுத்தி காக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை சாமியார்
சாமியார் ஈஸ்வர சிறீகுமார் மீது செக்ஸ் புகார் கூறிய ஹேமலதாவுக்கு சென்னை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று காவல்துறை விசாரணைக்கு சாமியார் ஆஜராகவில்லை.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா (வயது 30). இவர் சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் கடந்த செப்டம்பர் மாதம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் சென்னை அடையாறில் வசிக்கும் ஈஸ்வர சிறீகுமார் என்ற சாமியாரிடம் வேலைக்கு சேர்ந்ததாகவும், அவர் தன்னை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும், அதை வெளியில் சொன்னால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறியிருந்தார். மேலும் பல முறை தன்னை மிரட்டி அவருடைய இச்சைக்கு பணிய வைத்ததாகவும் தெரிவித்திருந்-தார்.
சாமியார்மீது கற்பழிப்பு வழக்கு
இந்த புகாரில் அடிப்படை ஆதாரம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்துமாறு ஆணையர் ராஜேந்திரன் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உளவுப்பிரிவு காவலர் கொடுத்த அறிக்கை அடிப்படையில் மாம்பலம் காவல்துறையினர் சாமியார் சிறீகுமார் மீது கற்பழிப்பு மற்றும் கொலைமிரட்டல் வழக்குகளை பதிவு செய்தனர். மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் சரவணன் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
2 நாள்களுக்கு முன்பு ஹேமலதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியவற்றை வாக்குமூலமாக பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினமும், நேற்றும் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை-யிலும், சென்னை அரசு மருத்துவமனையிலும் இந்த சோதனைகள் நடந்தன. மருத்துவ பரிசோதனையின் அறிக்கை விரைவில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும்.
சாமியார் ஆஜராகவில்லை
இதற்கிடையே இந்த வழக்கில் கார் ஓட்டுநர் ஆனந்தன், சாமியாரின் அடையாறு வீட்டு காவலாளி உள்பட 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது. மேலும் தியாகராயநகரில் சாமியார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமும், அங்குள்ள காவலாளிகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நேற்று சாமியார் ஈஸ்வர சிறீகுமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறையினர் கூறியிருந்தனர். ஆனால் நேற்று மாலை வரை அவர் ஆஜராகவில்லை.

Posted by போவாஸ் | at 2:04 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails