கோவில் கருவறையில் காமலீலை

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (வயது 35). வாலாஜாபாத்தை அடுத்துள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த இவர் தான் பூஜை செய்து வந்த கோவிலை காமக்கூடாரமாக மாற்றி பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வந்தது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
நெற்றி நிறைய விபூதி பட்டை, வாரி முடித்து கட்டிய கொண்டை, மடித்து கட்டிய வேட்டி...என பக்தி பழமாக காட்சி அளித்த அர்ச்சகர் தேவநாதன் இவ்வளவு மோசமான பேர் வழியா என்று.. காஞ்சீபுரம் நகரமே கதிகலங்கி போய் கிடக்கிறது. ஒன்றல்ல...இரண்டல்ல... மொத்தம் 6 பெண்களுடன் தேவநாதன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு கள்ளக்காதல் மன்னனாக வலம் வந்தகதை பற்றித்தான் ஊர் முழுக்க பேச்சாக உள்ளது.
 
தேவநாதனின் துணிகர செக்ஸ்லீலைகள் வெளிச்சத்துக்கு வந்ததும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. துரைராஜ் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தேவநாதன் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் தொடர்ந்து தேவநாதன் போலீசுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிறார்.
 
சென்னை நங்கநல்லூரில் தேவநாதனின் உறவினர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களின் தயவில் சென்னையில் தேவநாதன் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
இதையடுத்து அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இது தொடர்பாக போலீசார் கூறும்போது அர்ச்சகர் தேவநாதனுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்து விட்டது. எனவே எங்களது பிடியில் இருந்து அவர் எங்கும் தப்பிச்சென்று விட முடியாது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றனர்.
 
கோவில் என்று கூடபாராமல் தேவநாதனுடன் ஒன்றாக இருந்த பெண்கள் அனைவருமே குடும்ப பாங்கான பெண்கள் போல தோற்றம் அளிப்பதாக போலீசார் கூறினார்கள். இவர்களில் ஒரு பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் ஒரு வித மிரட்சியுடனே காணப்படுகிறார்.
 
உள்ளூர பயத்துடன் காட்சி அளிக்கும் அவர் அர்ச்சகரின் ஆபாசவலையில் சிக்கிய பின்னர் மெய்மறந்து விடுகிறார். இவரைப்போல கோவிலுக்கு வந்த பல பெண்களுடன் நைசாக பேச்சு கொடுத்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வந் துள்ளார் தேவநாதன். இப்படி தேவநாதனின் காமப்பசிக்கு இரையான பெண்களின் பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.
 
இதற்கிடையே ஆபாச அர்ச்சகரின் செக்ஸ் படங்கள் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அமோகமாக விற்பனை யாகிறது. திருட்டுத்தனமாக ஆபாச படங்களை சி.டி.யில் பதிவு செய்து விற்பனை செய்யும் வக்கிர கும்பல் ஒன்று தேவநாதன் பெண்களுடன் செக்ஸ்லீலையில் ஈடுபடும் சி.டி.க்களை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து சி.டி. விற்பனை கும்பலை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெளியில் தெரிந்தது ஒன்றுதான். தெரியாமல் எத்தனையோ...?....

Posted by போவாஸ் | at 8:57 PM | 2 கருத்துக்கள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலியிடங்களுக்கான நாளை தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், வேற்று மாநிலத்தவரை மும்பையில் பணியமர்த்தக் கூடாது என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால், வங்கி வட்டாரம் மற்றும் தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில், சுமார் 20,000 கிளார்க் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் மட்டும், 2,980 பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மகாராஷ்டிராவில் உள்ள இப்பணியிடங்களுக்கு அதே மாநிலத்தவரைத் தவிர வேறு நபர்களை நியமிக்கக் கூடாது என வலியுறுத்தி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் சிவசேனா கட்சியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் 1500 இடங்களுக்கு தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வு நடைபெற உள்ள நிலையில், வங்கிக்கு ராஜ் தாக்கரே சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா பாரத ஸ்டேட் வங்கிக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், வேற்று மாநிலத்தவரை மும்பை வங்கியில் பணியமர்த்தக் கூடாது என அதில் ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

இந்திய நாட்டின் ஒற்றுமையை குலைக்கும், பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியிருக்கும் ராஜ் தாகரே மீது தடா, போடா போன்ற சட்டங்கள் பாயாதா ? இந்திய நாட்டு இறையாண்மைக்கு எதிரான பேச்சல்லவா ? என்ன செய்யப் போகிறது மத்திய அரசு ?

Posted by போவாஸ் | at 5:31 PM | 1 கருத்துக்கள்

'மாலுமி' விஜயகாந்துக்கு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்.




துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
 
கேள்வி:- மிசாவில் சிறையில் இருந்த நாட்கள் தொடங்கி இப்போது துணை முதல்வரானது வரை உங்கள் பயணம் மிகவும் நெடியது. இந்தப்பயணத்தை எண்ணிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
 
பதில்:- மிசா கைதியாக நான் சிறையில் அடைக்கப்பட்டபோது, எனக்கு வயது 23. அதன்பின் 33 ஆண்டுகள் உருண்டோடி இருக்கின்றன. பொதுவாழ்க்கைப் பயணம் என்பது மலரும், பஞ்சும் பரப்பப்பட்ட மிருதுவான, சுகமான பயணம் அல்ல, கல்லும் முள்ளும் நிறைந்த கடுமையான பயணம் அது. ஏற்றுக்கொண்டிருக்கும் இலட்சியங்களை ஈடேற்றுவதற்கு, உடலை வருத்திக்கொள்ளவும், உள்ளத்தைக் கசக்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பலவற்றை இழப்பதற்கும் பழகிக்கொள்ள வேண்டும். மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
எனது இந்தப் பயணம் நெடியது எனினும், நெஞ்சுக்கு நிறைவைத் தரக்கூடியதாகவே அமைந்திருக்கிறது.
 
கேள்வி:- இந்தப் பதவி உயர்வை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? கட்சிக்காகவும், நீங்கள் செய்த கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இந்தப் பதவியை பார்க்கிறீர்களா? அல்லது உங்கள் தந்தையும் முதல்வருமான கலைஞருடன் பொறுப்பையும், பணிச்சுமையையும் பகிர்ந்து கொள்வதாக இதனைக் கருதுகிறீர்களா?
 
பதில்:- பதவியை எப்போதுமே, நமக்குக் கிடைத்த பரிசாகவோ, அந்தஸ்தாகவோ கருதி, கருத்தை இழந்து விடக்கூடாது என்பது தலைவர் கலைஞர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாலபாடம். நான் சென்னை மேயராக இருந்த போதும் சரி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது துணை முதல்-அமைச்சரான போதும் சரி, எந்த ஒரு கட்டத்திலும் அந்தப் பாலபாடத்தை நொடிப்பொழுதும் நான் மறந்ததில்லை.
 
கேள்வி:- தி.மு.க.வில் உங்களின் நீண்ட அனுபவத்தில் எது மிகவும் திருப்தி தருவதாக இருக்கிறது? அரசில் உங்களுக்கு மிகவும் திருப்தி அளிப்பது எது?
 
பதில்:- கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தைப் பொறுத்தவரை, இளைஞர் அணியை உருவாக்கிப் பெருக்கி வளர்த்ததில் எனக்கு மகிழ்ச்சியும், நிறைவும் கிட்டின.
 
தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை, அரசில் திருப்தி அளிப்பது என்பதை பொறுத்தவரை மக்களுக்கு பணியாற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பு. அமைச்சர் என்கின்ற முறையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி அவற்றின் நற்பயன்கள் மக்களை சென்றடைவதை கண்கூடாக காணும் வாய்ப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிநீர் வழங்கல் பணிகள், உள்ளாட்சி நிர்வாகம், தமிழக தொழில்வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கும் வாய்ப்பு மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடர்பான பணிகள் எனக்குப் பெரிதும் மனநிறைவைத் தருகின்றன.
 
கேள்வி:- பொருளாதார வல்லுனர்கள் மீனை தானமாக கொடுப்பதை விட, மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுப்பதே நல்லது” என்ற சீன பழமொழியை மேற்கொள் காட்டுவார்கள். உங்கள் அரசு ஏராளமான பணத்தை டி.வி. போன்ற இலவசங்களை வழங்க செலவிடுகிறது. நடுத்தர, உயர் நடுத்தர குடும்பத்தினர் கூட தங்கள் ரேஷன் அட்டைகளைக் காட்டி டி.வி. வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற செலவிடப்படும் பணத்தை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் செலவிடலாம் என்று நீங்கள் எண்ணவில்லையா?
 
பதில்:- மீன்பிடிக்கத் தேவையான பயிற்சியைப் பெற்று, மீன்பிடிக்கக் கற்றுக்கொள்ளும் வரை, வெறும் வயிற்றோடு இருந்துவிட இயலாது.
 
ஏழை, எளியோருக்கு- வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு- தேவையானவற்றை மலிவு விலையிலோ, மான்ய விலையிலோ, இலவசமாகவோ வழங்குவதென்பது ஏளனத்திற்குரியதல்ல.
 
நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பத்தினர், ஏழை எளியோருக்குரிய இலவசப் பொருள்களைப் பெற முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல. நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பத்தினர் இலவசப் பொருள்களைப் பெறுவதைத் தமது உரிமையாக- உரிமைக்கான அங்கீகாரமாகக் கருதுவது ஆச்சரியமாக இருக்கிறது. அது நமது சமூகக்கட்டமைப்பின் நெருடலான பகுதியை வெளிக்காட்டுவதாகவும் இருக்கிறது.
 
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகுதான் வேலை நியமன தடைச்சட்டம் நீக்கப்பட்டது அனைத்து காலிப்பணியிடங்களும் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அரசுப் பணியாளர் தேர்வாணையம், மாவட்ட வேலை வாய்ப்பகம் மூலம் கடந்த 3 1/2 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.
 
கேள்வி:- 2011 தேர்தலில் காங்கிரசுடன் உங்கள் கூட்டணி தொடருமா? பா.ம.க. போன்ற புதிய கட்சிகள் உங்களுடன் இணையுமா?
 
பதில்:- 2011 தேர்தலில் கழகம்- காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தொடரும். இதில் யாருக்கும் ஐயப்பாடு வேண்டாம். புதிய கட்சிகள் இணைவது குறித்து, தலைவர் கலைஞர் தேர்தல் நேரத்தில் பரிசீலித்துத் தக்க முடிவெடுப்பார்கள்.
 
கேள்வி:- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தமிழகம் வந்தபோது காங்கிரஸ் தமிழகத்தில் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்றார். நீங்கள் அந்த நம்பிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
பதில்:- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் நம்பிக்கை ஒரு தீவிர கட்சிக்காரருக்கு இருந்திட வேண்டிய நம்பிக்கை. பாரம் பரியம்மிக்க குடும்பத்தில் தோன்றியவருக்கு இருந்தே தீரவேண்டிய நம்பிக்கை! 

கேள்வி:- 2011 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆவேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சொல்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து?
 
பதில்:- அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
 
கேள்வி:- கலைஞருடன் நெருங்கி பணியாற்றியவர் என்ற முறையில் அவரை இப்போதும் துடிப்போடு ஆரோக்கியமாக வைத்திருக்கும் காரணிகள் என்ன என்று பட்டியலிட முடியுமா?
 
பதில்:- எழுதி எழுதி இமயம் அளவுக்குக் குவித்திட வேண்டும் என்னும் தணியாத ஆர்வம், மேலும் மேலும் உழைத்து, ஓயாத உழைப்புக்கு உயர்தனி இலக்கணம் வகுத்திட வேண்டும் என்னும் உத்வேகம், சாதனை மேல் சாதனை என யாரும் தொட்டுக்கூடப் பார்த்திட இயலாத சாதனைச் சரித்திரம் படைத்திட வேண்டும் என்னும் தொலைநோக்கு. இவையே எண்பத்தாறு வயதிலும், இருபத்தாறு வயது இளைஞனுக்குள்ள துடிப்போடு, தலைவர் கலைஞரை இயக்கிக் கொண்டிருக்கும் காரணிகள் ஆகும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : மாலைமலர்.


Posted by போவாஸ் | at 2:44 PM | 0 கருத்துக்கள்

யாரிடம் முறையிடுவது : முதல்வர் வேதனை


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தி்ல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத்தையே இயற்றிய கேரள அரசு மீது உச்ச நீதிமன்றம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் அதன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி, தீர்ப்பளிக்கப்பட்டது திகைப்பையும் வியப்பையும் ஏற்படுத்துவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டிற்கும், கேரளாவிற்கும் இடையிலான முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்று 10.11.2009 அன்று உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்திருக்கின்றது.

உச்சநீதிமன்றம் அல்ல, வேறு எந்த நீதிமன்றமாக இருந்தாலும், அதன் தீர்ப்பை எதிர்த்து கருத்து சொல்வதை நான் இப்போதும், எப்போதும் கடைப்பிடிப்பதில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாத வகையில் புதிதாக ஒரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றிட கேரள முதல்வரை போன்று துணிவும் எனக்கில்லை.

இருந்தாலும் கூட, அந்த தீர்ப்பையொட்டி எனக்கு எழுந்துள்ள ஒரு சில ஐயப்பாடுகளை பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். இது எந்தவிதத்திலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கருத்தல்ல.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு என்னவாயிற்று?. உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் எல்லாவற்றிற்கும் உச்சக்கட்டம் என்று சொல்லப்படுகிறதே.
அந்த உச்ச நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு கேரளாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா?.

கேரள அரசு, அந்த தீர்ப்பை ஏற்க மறுத்து, அந்த தீர்ப்பை முடக்கும் வகையில் 15.3.2006 அன்று புதிய சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறி, அந்த தீர்ப்பையே செல்லுபடியாகாத வகையில் ஒரு புதிய சட்டத் திருத்தமே இயற்றலாமா? அது ஏற்புடையதுதானா?.

இதுபோன்ற பிரச்சனைகளில் ஒவ்வொரு மாநிலமும் இவ்வாறு உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருக்குமானால், அதை எதிர்த்து தங்கள் தங்கள் மாநில சட்டமன்றங்களில் சட்டம் இயற்றிக் கொள்ள முனைந்தால் நாடு என்னவாகும்?.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத்தையே நிறைவேற்றிய மாநில அரசு மீது உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன?.

அவ்வாறு கேரள அரசு சட்டம் இயற்றியதைப் பற்றி தற்போது உச்ச நீதிமன்றம் எதுவும் குறிப்பிடாமல், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, தீர்ப்பு சொன்ன காரணத்தால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக கேரள அரசு போல் வேறு சில மாநிலங்களும் நம்மை என்ன செய்து விடப்போகிறார்கள் என்ற எண்ணத்தோடு செயல்பட வழிவகுக்கும் அல்லவா?.

ஜனநாயக நாட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதற்கு மாறாக ஒரு மாநில அரசே சட்டமன்றத்தை கூட்டி சட்டம் ஒன்றை இயற்றுகின்றது, அதற்கு பிறகும் உச்சநீதிமன்றம் அதற்காக எந்தவிதமானநடவடிக்கையும் எடுக்காமல், அந்த மாநில அரசு நிறைவேற்றிய சட்டத்தை பற்றி எதுவும் கூறாமல் அந்த மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளிக்கிறது என்றால் ஏன் இப்படி? என்ற திகைப்பும், எதற்காக இப்படி என்ற வியப்பும் ஏற்படுமா இல்லையா?.

தமிழக அரசின் சார்பில் மார்ச் 2006ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபிறகு, கேரள அரசின் சார்பில் 3.4.2006 அன்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று மனுதாக்கல் செய்தார்கள். அந்த மனுவிலே தற்போது எழுப்பிய சட்டப் பிரச்சனை குறித்து கருத்தினைத் தெரிவித்தார்களா என்றால் கிடையாது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 31.3.2006 அன்று சிவில் வழக்கு தொடர்ந்தது. அது முதல் இந்த வழக்கு நடைபெறுகிறது.

இந்த வழக்கிற்கு கேரள அரசின் சார்பில் எதிர் மனு தாக்கல் செய்தபோதோ அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சட்டம் நிறைவேற்றியதைப் பற்றி கேரள வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்ட போதோ தெரிவிக்காத ஒரு கருத்தை தற்போது திடீரென்று 10.11.2009 அன்று 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்றும்,

இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சினையில் அரசமைப்புச் சட்டங்கள் தொடர்புடைய கேள்வி எழும்போது, அதை அரசமைப்பு சட்டத்தின் 131வது பிரிவின் கீழ்தான் உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்பானது அரசமைப்பு சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் வருகிறது என்றும், எனவே அந்தத்தீர்ப்பு சட்டப்படியானது அல்ல என்றும் கேரள வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதாவது உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு அளித்த தீர்ப்பையே குறைகண்டு உச்சநீதிமன்றத்திலேயே வாதிட்டார். அது சரியா, முறைதானா என்று விவரத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

நான் கேட்க விரும்புவதெல்லாம் 2006ம் ஆண்டு உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பு சரியானதல்ல, முறையானதல்ல என்று மூன்றாண்டுகள் கழித்து அந்த வழக்கு பற்றி பல நாட்ககள் உச்ச நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தைச்செலவிட்டு விசாரணைகள் நடைபெற்றபோதெல்லாம் சொல்லாமல், அதைப்பற்றி கேள்வி எழுப்பிய போதெல்லாம் சொல்லாமல் எதிர்மனு தாக்கல் செய்தபோதும் தெரிவிக்காமல் தற்போது முடிவு சொல்லப்படுகின்ற நேரத்தில் திடீரென்று கேரள வழக்கறிஞர் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

கேரள வழக்கறிஞர் இந்த கேள்வியை 10ம் தேதி திடீரென்று எழுப்புவதற்கு என்ன காரணம் என்பதை கூட இந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி நமக்கு புலப்படுத்துகிறது. அது வருமாறு:

உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான லோதா சென்ற வாரம் கேரள வழக்கறிஞரை பார்த்து ஒரு ரிட் மனு மீது நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த சிவில் வழக்கில் உங்களை எப்படி கட்டுப்படுத்தாது என்று நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டார் என்றும், அதற்கு கேரள வழக்கறிஞர் தவான் செவ்வாய்க்கிழமை பதில் அளிக்கையில் ஒரு அசாதாரண சூழ்நிலையில் நீதிமன்றம் தனது வரம்பிற்கு அப்பாற்பட்டு அளித்த தீர்ப்பு தங்களை கட்டுப்படுத்தாது என்று வாதிட்டார் என்றும் “இந்து” நாளேட்டில் செய்தி வந்துள்ளது.

அப்போது தமிழக வழக்கறிஞர் கே.பராசரன் இந்த பிரச்சனை தொடர்பான எல்லா விவகாரங்களும் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புடன் முடிந்துவிட்டது. அதனை மீண்டும் எழுப்ப முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் நீதிபதிகள், கேரள அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சட்ட பெஞ்ச் விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் கருதுவதாக சொல்லியிருக்கிறார்கள். தமிழக வழக்கறிஞர் துவக்கத்தில் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தபோதும் பின்னர் அதனை ஏற்றுக் கொண்டார்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை சம்மந்தமாக முதன் முதலாக நாம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது டிசம்பர் 1998. பதினோறு ஆண்டுகள் ஆகி, தமிழகத்திற்கு ஒரு நீதி கிடைக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அதற்குமாறாக மீண்டும் ஒரு விசாரணை, அதற்கு ஐந்து நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்ற முடிவு இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்து விடாமல் இருக்க யாரிடம் நாம் முறையிடுவது என்றே தெரியவில்லை.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.



பல மாநிலங்களின் கொண்ட ஒரு நாடு. அந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அந்த தீர்ப்புக்கு கட்டுப்பட மறுக்கிறது ஒரு மாநிலம். பாதிக்க பட்ட மாநிலத்தின் முதல்வர் செய்வதறியாது தன் நிலையை மக்களிடம் விளக்குகிறார். ஆனால் மக்களோ நிலைமையின் விபரீதத்தை புறந்தள்ளிவிட்டு அரசியல் காழ்புணர்வால் தனிப்பட்ட முறையில் அவரை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றன. உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட மறுக்கும் முதல்வர் பற்றி யாரும் வாய்திறக்க வில்லை.


மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 27.2.2006 அன்று தீர்ப்பளித்தபோது, தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் இருந்தது. தீர்ப்பை அமல்படுத்த, ஜெயலலிதாவும் அந்நேரத்தில் எந்த ஒரு அழுத்தமும் கேரளா அரசுக்கு கொடுக்க வில்லை. இப்பொழுது லபோ திபோ என்று அடித்துக்கொண்டு கலைஞர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் போல வாய்ச்சவடால் அறிக்கை அளித்துக்கொண்டு இருக்கின்றனர். 


வைகோ என்ற சைகோ ஒரு படி மேலே போய் கலைஞரை துரோகி என்று கூறுகிறார். 2006ல் உச்சமன்றத்தில் தீர்ப்பு வெளியான சமயத்தில் இதே வைகோ திமுக அணியில் இருந்தார். அப்போது வையை மூடிக்கொண்டு, அதிமுக ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசாமல் இருந்தார். இப்பொழுதுதான் இவரின் புத்திக்கு எட்டியது போல. வாய்கிழிய பேசிக் கொண்டு உண்ணாவிரதம் என்று ஒரு நாடகத்தை நடத்துகிறார்.


தமிழர்களின் மீது உண்மை அக்கறை இருக்குமாயின் இவர்களெல்லாம் தமிழக அரசுடன் சேர்ந்து போராட வேண்டும். அது எதுவும் செய்யவில்லை. மனமுமில்லை. என்னதான் கேரளாவில் கம்யுனிஸ்ட் ஆட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியும் , பிற கட்சிகளும்முல்லை பெரியாறு விசயத்தில் ஒற்றுமையாக இருக்கின்றன.இதே போல ஒரு சூழல் தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள்ளும் வரும் வரை முல்லை பெரியாறு மட்டுமல்ல, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படாது. மக்களும் புரிந்து கொள்ளவேண்டும்.


முன்னர் பார்ப்பனர்களின் ஆட்டுவித்தளுக்கு ஏற்ப ஆடினர், இன்று மலையாளிகளின் ஆட்டுவித்தளுக்கு ஆடுகின்றனர் என்பதே இது மூலம் நமக்கு தெரியவரும் உண்மை. ஒற்றுமையில்லாத தலைவர்களும், தமிழர்களும் இருக்கும் வரை எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு வராது.

Posted by போவாஸ் | at 2:05 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails