வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பிடு‌ங்க‌ள் சுறுசுறு‌ப்பாக வாழு‌ங்க‌ள்

bananas-1-DHD.jpg
வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.

ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌நிறை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மரு‌ந்தாகவு‌ம் கூட வாழை‌ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப்பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அ‌ந்த கால‌த்‌தி‌ல் அத‌ற்காக‌த்தானோ எ‌ன்னவோ வெ‌ற்‌றிலையுட‌ன் வாழை‌ப்பழ‌த்தை வை‌த்து‌க் கொடு‌க்கு‌ம் முறை கடை‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களு‌க்கு‌த் தெ‌ரியாததா எ‌ன்ன?,

முத‌லி‌ல் மல‌‌ச்‌சி‌க்க‌ல் ‌வியா‌தி‌யி‌ல் இரு‌ந்து ம‌னிதனை‌க் கா‌‌ப்பா‌ற்று‌ம் இய‌ற்கை மரு‌ந்து வாழை‌ப்பழ‌ம்தா‌ன். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடி‌த்தா‌ல் சோ‌ம்ப‌ல் போயே‌ப் போ‌ச்சு.

மேலு‌ம், நெ‌ஞ்செ‌ரி‌ப்பு, உட‌ற் பரும‌ன், குட‌ற்பு‌ண், உட‌லி‌ல் வெ‌ப்ப‌நிலையை ‌சீராக வை‌க்கவு‌ம், மன அழு‌த்த‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு வாழை‌ப்பழ‌ம் ந‌ல்ல மரு‌ந்தாக உ‌ள்ளது.

புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் புகை‌ப்‌பிடி‌த்தலை ‌விடு‌‌ம்போது வாழை‌ப்பழ‌ம் அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌விடுபடலா‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது.

Posted by போவாஸ் | at 8:38 PM | 0 கருத்துக்கள்

40 லட்சம் பேரு‌க்கு இலவச கலர் டி.வி: கருணாநிதி.


5-வது கட்டமாக 40 லட்சம் ஏழைகளுக்கு இலவச வ‌ண்ண‌த்தொலை‌க்கா‌ட்‌சி பெ‌‌ட்டி வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.


முதலமைச்சர் கருணா‌நி‌தி தலைமையில் அமைக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது குறித்த சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 16வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இ‌ன்று நடைபெற்றது.

இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான 15.9.2006 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக 30 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும், இரண்டாவது கட்டமாக 25 இலட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும், மூன்றாம் கட்டமாக 37 இலட்சத்து 50 ஆயிரம் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து நான்காம் கட்டமாக 41 இலட்சத்து 62 ஆயிரத்து 500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செ‌‌ய்ய ஆணைகள் வழங்கப்பட்டு, 31.10.2009 வரை 26 இலட்சத்து 81 ஆயிரத்து 899 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நான்கு கட்டங்களிலும், மொத்தம் 2267 கோடியே 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா‌ய்செலவில் 1 கோடியே 4 இலட்சத்து 42 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டு, 2036 கோடியே 69 இலட்சத்து 81 ஆயிரத்து 103 ரூபா‌ய் செலவில் இதுவரை 85 இலட்சத்து 15 ஆயிரத்து 343 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில், தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தின்கீ‌ழ், நான்காம் கட்டத்தில் 8 இலட்சத்து 37 ஆயிரத்து 500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கூடுதலாகக் கொள்முதல் செ‌ய்யலாம் என்றும்; ஐந்தாம் கட்டமாக 2009 - 2010 ஆண்டில் மேலும் 40 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்யலாம் என்றும்,

இக்கொள்முதல் தொடர்பாக 2009 நவம்பர் மாத முதல் வாரத்தில் சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளைக் கோருவது என்றும், 2009 டிசம்பர் மாத மத்தியில் ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதென்றும், டிசம்பர் மாத மூன்றாம் வாரத்தில் ஒப்பந்தப் புள்ளிகளை முடிவு செ‌ய்வதென்றும், 2010 பிப்ரவரி தொடங்கி டிசம்பர் வரை 40 இலட்சம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் பொது மக்களுக்கு வழங்குவது என்றும்,

இத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குதற்கு முடிவுகள் மேற்கொண்ட போது நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி நெறிமுறைகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான தொழில்நுட்பக் குறியீடுகளையே (Technical Specifications) தற்போதைய ஐந்தாம் கட்ட கொள்முதலுக்கும் பின்பற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கருணா‌நி‌தி அறிவித்துள்ளார்.

இ‌ந்த கூ‌ட்ட‌த்த‌ி‌ல் திமுக சார்பில் துணை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்கள் டி.சுதர்சனம் (காங்கிரஸ்), சி.கோவிந்தசாமி (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்‌சிஸ்ட்), வை.சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எச்.அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), பூவை மு.ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்), டி.ரவிகுமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோரும், அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, தலைமை செயலர் கே.எஸ். ஸ்ரீபதி உ‌ள்பட அ‌திகா‌ரிக‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

இதுவரை கொடுத்தது போதாதா ?. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி கொடுத்துட்டே இருக்க போறீங்க கலைஞர் அய்யா ?. கேட்டா, தேர்தல் வாக்குறிதிகளை நிறைவேற்றுகிறோம் என்று சொல்வீர்கள். இதுக்கு செலவழிக்கிற பணத்துல ஏதாவது கம்பெனி, பேக்டரி, மில் மாதிரி ஆரம்பிச்சா மக்களுக்கு வேலைகள் கிடைக்கும். உழைச்சு சாப்பிட ஒரு திருப்தி இருக்கும்ல. என்னத்த சொல்றது. வேதனையா இருக்கு. அவ்ளோதான்.

Posted by போவாஸ் | at 8:08 PM | 1 கருத்துக்கள்

இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பார்ப்பன - பனியா சக்திகள்!


இந்தியாவின் ஆட்சி அதிகாரம் - பார்ப்பன-பனியாகளிடமே இன்னும் தங்கியுள்ளது. இந்திய தேசியம் என்பது பார்ப்பன-பனியாக்களுக்கானதே என்று பெரியார் உரத்து முழங்கினார். அதன் காரணமாகவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நாட்டுக்கு ‘சுதந்திரம்’ வந்து விட்டது என்று அறிவித்தபோது, பெரியார் ஏற்க மறுத்தார். அதை துக்க நாள் என்றார். பார்ப்பனர் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் எதிர்கால ஜனநாயகம் பார்ப்பனர் நாயகமாகவே இருக்கும் என்று இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார். பெரியார் தந்த எச்சரிக்கை மறுக்கப்பட முடியாத உண்மை என்பதையே வரலாறுகள் உறுதிப்படுத்தி வருகின்றன.
நாட்டின் முக்கிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் முழுமையான அதிகாரம் படைத்த தலைவர்களாக, பார்ப்பனரும்-பனியாக்களுமே இருந்து வருகிறார்கள். அது பற்றிய சில தகவல்கள். நிறுவனங்களும், அதன் தலைவர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. பார்த்தி ஏர்டெல் நிறுவனம் - சுனில் மிட்டல் (தலைவர்-பனியா)
2. கிரேசியம் அண்டு ஹிண்டால் கோ - குமார் மங்கலம் பிர்லா (பனியா)
3. எச்.டி.எப்.சி. - தீபக் பரேக் (பனியா)
4. இந்துஸ்தான் யூனிலீவர் - நித்தின் பரான்ஜிபே (பார்ப்பனர்)
5. அய்.சி.அய்.சி.அய். வங்கி - கே.வி. காமத் (பார்ப்பனர்)
6. ஜெய் பிரகாஷ் அசோசியேட் - யோகேஷ் கவுர் (பார்ப்பனர்)
7. எல் அண்ட் டி - ஏ.எம்.நாய்க் (பார்ப்பனர்)
8. என்.டி.பி.சி. - ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
9. ஓ.என்.ஜி.சி. - மற்றொரு ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
10. ரிலையன்ஸ் குழுமங்கள் - முகேஷ் மற்றும் அனில் அம்பானி (பனியா)

11. ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா - ஓ.பி.பட் (பார்ப்பனர்)
12. ஸ்டெர்லைப் இன்டஸ்ட்ரிஸ் - அனில் அகர்வால் (பனியா)
13. சன்பார்மா - திலிப் சங்வி (பனியா)
14. டாட்டா ஸ்டீல் - பி.முத்துராமன் (பார்ப்பனர்)
15. பஞ்சாப் நேஷனல் பாங்க் - கே.சி. சக்ரபர்த்தி (பார்ப்பனர்)
16. பாங்க் ஆப் பரோடா - எம்.டி. மல்லியா (பார்ப்பனர்)
17. கனரா வங்கி - ஏ.சி. மகாஜன் (பார்ப்பனர்)

18. இன்ஃபோசிஸ் - கிரிஸ். கோபாலகிருஷ்ணன் (பார்ப்பனர்)
19. டி.சி.எஸ். - சுப்பிரமணியன் ராமதுரை (பார்ப்பனர்)

விமானத் துறை

20. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் - விஜய்மல்லய்யா (பார்ப்பனர்)
21. ஜெட் ஏர்லைன் - நரேஷ் கோயால் (பனியா)

தகவல் தொடர்பு

22. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் - அம்பானி (பனியா)
23. ஏர்டெல் - மிட்டல் (பனியா)
24. வோடாஃபோன் எஸ்சார் - டுயா (பனியா)
25. அய்டியா - பிர்லா (பனியா)
26. ஸ்பைஸ் - மோடி (பனியா)
27. பி.எஸ்.என்.எல். - குல்தீப் கோயால் (பனியா)
28. டாட்டாவின் டி.டி.எம்.எல். - கே.ஏ. சவுக்கார் (பார்ப்பனர்)
29. கிரிக்கெட் அமைப்பு - லலித் மோடி (பனியா)

நாளேடுகள்

30. டைம்ஸ் ஆப் இந்தியா - ஜெயின்
31. இந்துஸ்தான் டைம்ஸ் - பிர்லா (பனியா)
32. தி இந்து - கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் (பார்ப்பனர்)
33. இந்தியன் எக்ஸ்பிரஸ் - கோயங்கா (பனியா)
34. சீ (Zee) டி.வி. - சுபாஷ் சந்திரா கோயல் (பனியா)
35. தைனிச் ஜெக்ரான் (இந்தி நாளேடு) - குப்தா (பனியா)
36. திவ்யா பாஷ்கர் (இந்தி நாளேடு) - அகர்வால் (பனியா)
37. குஜராத் சமாச்சார் (குஜராத்தின் மிகப்பெரும் நாளேடு) - ஷா (ஜெயின்)
38. லோக்மத் - மராத்திய நாளேடு - தார்தா (ஜெயின்)
39. நவபாரத் டைம்ஸ் - கோத்தாரி (ஜெயின்)
40. ராஜஸ்தான் பத்ரிக்கா - கோத்தாரி (ஜெயின்)
41. அமர் உஜ்ஜாலா - மகேஷ்வரி (பனியா) எஃகு உற்பத்தி
42. இந்துஸ்தான் - பிர்லா (பனியா)
43. எஸ்ஸார் (ஸ்டீல் உற்பத்தி) - ரூயா (பனியா)
44. அர்சிலோர் மிட்டல் - லட்சுமி மிட்டல் (பனியா)
45. இஸ்பெட் - மிட்டல் (பனியா)
46. புஷன் ஸ்டீல் - சிங்கால் (பனியா)
47. விசா ஸ்டீல் - அகர்வால் (பனியா)
48. செய்ல் (அரசு நிறுவனம்) - தலைவர் எஸ்.கே. ரூன்த்தா (பனியா)
49. லியாட் ஸ்டீல் - குப்தா (பனியா)

சிமெண்ட் நிறுவனங்கள்

50. அம்புஜா - நியோட்டியா மற்றும் ஷெச்சாரியா (பனியா)
51. டால்மியா சிமெண்ட் - (பனியா)
52. உட்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட் - பிர்லா (பனியா)
53. ஜெ.கே. சிமெண்ட் - சிங்காரியா (பனியா)

54. இந்துஸ்தான் மோட்டார் - பிர்லா (பனியா)
55. பஜாஜ் ஆட்டோ - (பனியா)

நாட்டில் முதலமைச்சர்களாக பார்ப்பனரல்லாதார் வந்து விட்டார்கள். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தையும், அதிகாரத்தையும், தகவல் தொடர்பு சாதனங்களையும், பார்ப்பன-பனியாக்களே கட்டுப்படுத்துகிறார்கள். தீண்டப்படாத மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் மக்கள் எண்ணிக்கையில் பெரும் பகுதியாக இருக்கிறார்கள். ஆனால், நாட்டின் அதிகார மய்யத்தில் இவர்களைத் தேடிப் பார்த்தாலும் சிக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கு செலவழித்து, தேச ஒற்றுமை, தேச பக்தி என்றெல்லாம் பேசிக் கொண்டு, இந்திய தேசியத்தை இறுக்கிப் பிடிக்க நடக்கும் முயற்சிகள் எல்லாம் இந்த பார்ப்பனர் பனியாக்களின் சுரண்டலுக்கு தானா?

தமிழ்நாட்டின் உரிமைகளில் கருநாடகமும், கேரளாவும் குறுக்கிடுவதற்கு காரணம் இந்திய தேசியம் அல்லவா? இந்திய தேசியக் கட்டமைப்பு, தேசிய இனங்களை தங்களுக்குள் அடக்கி வைத்திருப்பதால் தானே ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்ற நிலை வந்துவிட்டது? நீதிமன்றத் தீர்ப்புகளையே மதிக்காத கேரளத்தையும், கருநாடகத்தையும், ‘இந்திய தேசியம்’ கண்டித்ததா? தண்டித்ததா? பார்வையாளராக மட்டும் வீற்றிருப்பது ஏன்? சக்தி வாய்ந்த ‘மலையாள அதிகார மய்யத்தை’ உருவாக்கி, ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு திட்டங்களை வகுத்து செயல்பட்டது யார்? இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி அல்லவா?

இந்திய தேசியத்தை எதிர்த்து குரல் கொடுக்காமல், பார்ப்பன பனியாக்களின் சுரண்டலுக்கு போர்க் கொடி உயர்த்தாமல், ‘திராவிட’ எதிர்ப்பு என்ற இல்லாத ஒரு கோட்பாட்டை தூக்கி போட்டுக் கொண்டு திராவிட எதிர்ப்பு வீரர்களாக அடையாளப்படுத்துவது உண்மை எதிரிகளான இந்திய தேசியத்தையும் அது வளர்த்துவிடும் சுரண்டல் சக்திகளான பார்ப்பன பனியாக்களைக் காப்பாற்றுவது ஆகி விடாதா? கேரளத்துக்காரனும் கன்னடத்துக்காரனும் இந்திய தேசியப் பாதுகாப்பு இருப்பதால் தானே தமிழர்கள் உரிமையைப் பறிக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? தமிழர்களே, சிந்தியுங்கள்!

- விடுதலை இராசேந்திரன்

(இது பெரியார் முழக்கம் அக்டோபர் 2009 இதழில் வெளியான கட்டுரை)

Posted by போவாஸ் | at 7:05 PM | 0 கருத்துக்கள்

சட்ட ‌ரிதியாக சந்திப்பேன் - விஜய் தமாஷ் அறிக்கை


வீட்டு வசதி வாரியத்திடமிருந்து விஜய் வாங்கிய நிலம் தொடர்பாக விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபற்றி விஜய் சார்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.

உதயம் திரையரங்குக்கு எதிரே உள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் ஏலம் விட்டது.(நம்பிட்டோம்) அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கி விஜய் ஜோசப் என்ற எனது சொந்த பெய‌ரில் ‌பதிவு செய்தேன். ஆனால், அதற்கு அருகில் இருக்கும் திருமண மண்டபத்தையும் நான் வாங்கிவிட்டதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள்.

நான் வாங்கிய இடத்தில் பறக்கும் ரயில் திட்டம் வர இருப்பதால் அதற்குப் பதிலாக வேறு இடத்தை வீட்டு வசதி வாரியம் அளித்தது. அதில்தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.

இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

விஜய்க்கு தேசிய அளவில் புகழ் அதிக‌ரித்து வருகிறது.(அப்படியா...சொல்லவேயில்ல) அதை பொறுக்க முடியாத சிலர் கிளப்பிவிடும் வீண் வதந்திகள் இவை என்று தெரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

வதந்தின்னு தெரிய்துல அப்போ..அன்னைக்கே மறுத்து ஒரு அறிக்கை விட்டுருக்கலாமே.10 நாள் கழிச்சு சொன்னா எவன் நம்புவான்.

நாளு படம் ஓடலைனா கோடம்பாக்கத்துல கூட புகழும் மதிப்பும் இருக்காது இந்த லட்சணத்துல தேசிய அளவில் புகழ் அதிக‌ரித்து  வருகிறதாம்.சிரிப்புதான் வருது.

இந்த மாதிரி சட்டத்துக்கு புறம்பா, சமுதாய அக்கறையில்லாம, நேர்மை தவறி நடக்குறவங்களின் டாக்டர் பட்டத்தையெல்லாம் திரும்ப வாங்கனும்.

Posted by போவாஸ் | at 5:09 PM | 1 கருத்துக்கள்

போட்டோ கமெண்ட்ஸ்

இப்படியெல்லாம் 'கை'ய காட்டக்கூடாது....
அப்புறம் காங்கிரசில் சேரப்போவதாக ராஜ்நாத்சிங் சூசக தகவல்-னு 
செய்தி போட்டுடுவாங்க.

Posted by போவாஸ் | at 1:57 PM | 0 கருத்துக்கள்


டந்த வெள்ளிக்கிழமை பசும்பொன் கிராமத்தில் நடந்து முடிந்த முத்துராமலிங்கத்தேவரின் 102-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில், மத்திய ரசாயன மற்றும், உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிதான் முழுக் கதாநாயகன்.

முக்குலத்தோர் மக்களின் முழுமையான ஆதரவைக் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்று நேற்றுவரை இருந்த இமேஜை முழுவதுமாக உடைத்து, அந்த மக்களின் செல்வாக்கையும், ஆதரவையும் தனது பக்கமும், தி.மு.க.வின் பக்கமும் ஒரே நாளில் மாற்றிக் காட்டி, புது இமேஜுடன்தான் பசும்பொன்னில் வலம் வந்தார், மு.க. அழகிரி.

தி.மு.க.விற்கும் அதன் அமைச்சர்களுக்கும் காலை பத்துமணி முதல் பதினொரு மணி வரை தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னதாக, மேளதாளங்களின் முழக்கத்தோடு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார், மு.க.அழகிரி. கட்சி ரீதியாக மட்டுமல்லாது,பல்வேறு முக்குலத்தோர் அமைப்புகள் சார்பாகவும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட முக்குலத்தோர், அழகிரியின் காது படவே எழுப்பிய கோஷங்கள் ஒவ்வொன்றும் பசும்பொன் கிராமத்தையே `அதிரி புதிரி' ஆக்கின.

`முக்குலத்தோரைக் காக்கும் கடவுளே... முக்குலத்தோரின் நாயகனே... முதல்வர் கலைஞர் பெற்றெடுத்த வருங்கால முதல்வரே... அஞ்சுகத்தம்மாளின் அஞ்சாத பேரனே' என்றெல்லாம் எழுப்பப்பட்ட கோஷங்களைக் கேட்டு, மு.க.அழகிரியின் முகத்தில் பரவச ரேகைகள் படர்ந்தன. பசும்பொன் கிராமம் முழுக்க அழகிரியின் கட்அவுட்டுகளும், ஃபிளக்ஸ் போர்டுகளும் மலைக்க வைத்தன. அதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டே தேவர் நினைவிடத்துக்குள் நுழைந்தார் அழகிரி.அங்கேயும் அவரை முக்குலத்தோரின் கதாநாயகனாகச் சித்திரித்து எழுப்பப்பட்ட கோஷங்கள், அந்த நினைவிட வளாகத்தையே அதிர வைத்தன. வருடாவருடம் தவறாமல் தேவர் நினைவிடத்துக்கு வந்து போகும் பொதுமக்கள் (இவர்களும் முக்குலத்தோர்தான்) இந்த அதிரடியான மாற்றத்தை அதிசயத்தோடு பார்த்தனர். தேவர் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அழகிரிக்கு, அங்கிருந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர் சுவாமிகள் விபூதி வைத்தபோது அதனை பவ்யமாய் ஏற்றுக்கொண்டார் அழகிரி. விபூதித் தட்டில் 10,000 ரூபாயைக் காணிக்கையாகக் கொடுத்தார்.

அழகிரியும், அவருடன் வந்திருந்த தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் தேவர் நினைவிடத்தை விட்டு வெளியே வந்தபோது, திருச்செந்தூர் இடைத்தேர்தல் பற்றிய தகவல் சென்னையிலிருந்து அழகிரியின் அருகில் இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு போன் மூலம் வந்து சேர்ந்தது. அதனை அவர் அழகிரியின் காதில் போட, அதனைக் கேட்ட மற்ற அமைச்சர்கள், `தேவர் நினைவிடத்தில் இருக்கும்போது இடைத் தேர்தல் அறிவிப்பு வந்துருக்குண்ணே. இது நல்ல சகுனம்தான். வெற்றி நமக்குத்தாண்ணே' என்று கூற, அதனை புன்முறுவலோடு ஏற்றுக்கொண்ட அழகிரி, தங்கம் தென்னரசு பக்கம் திரும்பி, `தேதி என்றைக்கு அறிவிச்சுருக்காங்க?' என்று கேட்டார்.

`ஜனவரி 30-ம் தேதிக்குள் என்று அறிவிச்சு ருக்காங்க. ஜனவரி 30-ம் தேதியா இருந்தா நல்லா இருக்கும்ணே. ஏன்னா, அன்றைக்குத்தானே உங்க ளோட பிறந்த நாள்' என்று உற்சாகத்தோடு சொல்ல, அந்த உற்சாகம் அழகிரியையும், ஏனைய அமைச்சர்களையும் தொற்றிக்கொண்டது. இந்த உரையாடலைக்கேட்டு குதூகலமடைந்த தி.மு.க. தொண்டர்கள், அந்த வினாடியே திருச்செந்தூர் இடைத்தேர்தலையும், மு.க.அழகிரியையும் இணைத்து கோஷங்கள் எழுப்பினர்.

`மழை வருவதற்குள் பசும்பொன் கிராமத்தை விட்டுச் சென்று விட வேண்டும்' என அழகிரியுடன் வந்த அமைச்சர்கள் அவரிடம் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால், கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விட்டால்தானே?

போலீஸாரால் போடப்பட்டிருந்த ஐந்து அடுக்குப் பாதுகாப்புகளையும் மீறி அழகிரியை நெருக்கித் தள்ளினார்கள். ஒருவழியாக, அவர்களிடமிருந்து மீண்டு, காரில் ஏறி, பசும்பொன்னுக்கு வந்தபோது 600 வாகனங்கள் புடைசூழ எப்படி `கெத்தாக' வந்தாரோ... அந்த `கெத்து' கொஞ்சம் கூட குறையாமல் கிளம்பிப் போனார் மு.க.அழகிரி. அதற்கும் முன்னதாக ஷ்ரீதர் வாண்டையாரின் பந்தலுக்குச் சென்று அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார், அழகிரி.
இதுபோன்ற காட்சிகளெல்லாம் ஜெயலலிதா பசும்பொன்னுக்கு வரும்போதுதான் நடக்கும். இந்த வருடம் அதைப் போன்ற ஆரவாரமான கூச்சல்களும், கோஷங்களும், வரவேற்புகளும் மு.க.அழகிரிக்கு நிகழ்ந்திருப்பது எல்லோரையுமே திரும்பிப் பார்க்க வைத்தது.

இத்தனைக்கும் அழகிரி பசும்பொன்னுக்கு வருவது இரண்டாவது தடவை மட்டுமே. `முக்குலத்தோரின் கோட்டை `அ.தி.மு.க.' என்ற அசைக்க முடியாத இமேஜை, மு.க. அழகிரி அடித்து உடைத்துவிட்டார்' என்றுதான் அங்கு வந்திருந்த எல்லோருமே ஆச்சரியத்துடன் விவரித்தார்கள்.

`எப்படி நடந்தது இந்த அதிரடியான மாற்றம்?' என்று தி.மு.க.வினரிடம் விசாரித்தபோதுதான் `இப்படி ஒரு அஸைன்மெண்ட்டை பசும்பொன்னில் நடத்திக் காட்ட வேண்டும்' என்று கட்சியினருக்கு கட்டளையிட்டதே அழகிரிதான் என்ற விஷயமும், அதன் பின்னணியும் தெரிய வந்தது.

அதுபற்றி தி.மு.க.வினரே நம்மிடம் விவரித்தார்கள்.
``28-ம் தேதி சென்னை வானகரத்தில் கூடிய அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, ராவணன், கம்ஸன், நரகாசுரன் போன்ற அரக்கர்களோடு தி.மு.க.வையும், தலைவர் கலைஞரையும் ஒப்பிட்டுப் பேசினார். தி.மு.க.வையும் கலைஞரையும் அழிக்க வந்த அவதாரம்தான் அ.தி.மு.க.வும் தானும் என்பது போலவும் ஜெயலலிதா பேசினார். அந்தப் பேச்சு அண்ணன் அழகிரியை ரொம்பவே டென்ஷன்படுத்திவிட்டது. அந்தம்மாவுக்கு உடனடியாக பதிலடி தர வேண்டும். எப்படித் தரலாம் என்று அவர் யோசித்தபோதுதான், தேவர் ஜெயந்தி ஞாபகம் அவருக்கு வந்தது.
முக்குலத்தோரின் அபரிமிதமான செல்வாக்கைக் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான் என்ற இமேஜை பசும்பொன்னில் வைத்தே தகர்த்துக்காட்ட வேண்டும்.
அதுதான் அந்தம்மாவுக்கு தான் தரும் சரியான பதிலடியாக இருக்கும் என்று அண்ணன் அழகிரி நினைத்தார். உடனே தனது முக்குலத்தோர் சமுதாய தளபதிகளையும், தமிழக அமைச்சர்களையும் அழைத்து இந்த அஸைன்மெண்ட்டைக் கொடுத்தார். அவர்களும் இரண்டே நாளில் முக்குலத்தோர் மக்களை ஆயிரக்கணக்கில் திரட்டி சாதித்துக் காட்டி விட்டார்கள். அந்தம்மாவுக்கு அடுத்த பதிலடி கொடுக்க திருச்செந்தூர் இடைத்தேர்தல் வருகிறது. அதிலும் அ.தி.மு.க.வுக்குத் தோல்வியையே அண்ணன் அழகிரி புதுவருடப் பரிசாகத் தருவார்'' என்றனர். எந்த வருடமும் இல்லாத அதிரடி அதிசயமாக இப்படியோர் ஆச்சரியத்தை நிகழ்த்திக் காட்டிய மு.க.அழகிரி, முக்குலத்தோர் மக்களை குஷிப்படுத்தும் விதமாக ஏதாவது அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார். அதிலும் குறிப்பாக, மதுரை விமான நிலையத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரைச் சூட்டுவது பற்றி ஏதாவது நல்ல செய்தியை அவர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் அவர்கள்.

நன்றி : குமுதம்

Posted by போவாஸ் | at 11:38 AM | 0 கருத்துக்கள்

கலைமாமணி நயன்தாரா.


தமிழ்நாடு இயல், இசை,நாடக மன்றம் சார்பில் கலைத் துறையில் செயற்கரிய சேவை புரிந்த கலைஞர்களை சிறப்பித்திட 2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் கலைஞர் அவர்கள் நவம்பெர்.28 அன்று கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கி சிறப்பிக்கிறார்.

திரைப்படத் துறையில் விருது பெறுவோரின் பட்டியல் :
அபிராமி ராமநாதன் - திரைப்படத் தயாரிப்பாளர்.
சேரன் - திரைப்பட இயக்குநர்.
சுந்தர்.சி - திரைப்பட நடிகர்
பரத் - திரைப்பட நடிகர்.
நயன்தாரா. - திரைப்பட நடிகை.
அசின் - திரைப்பட நடிகை.
மீரா ஜாஸ்மின் - திரைப்பட நடிகை.
பசுபதி - திரைப்பட குணச்சித்திர நடிகர்.
செல்வி.ஷோபனா - திரைப்பட குணச்சித்திர நடிகை.
வையாபுரி.- திரைப்பட நகைச்சுவை நடிகர்.
சரோஜா தேவி.- திரைப்பட பழம்பெரும் திரைப்பட நடிகை.
கே.வேதம்புதிது கண்ணன் - திரைப்பட வசனகர்த்தா.
ஹாரிஸ் ஜெயராஜ் - திரைப்பட இசையமைப்பாளர்.
ஆர்.டி.ராஜசேகர் -திரைப்பட ஒளிப்பதிவாளர்.
பி.கிருஷ்ணமூர்த்தி - திரைப்பட கலை இயக்குநர்.
சித்ரா சுவாமிநாதன் - திரைப்பட புகைப்படக் கலைஞர்.
நவீனன் - திரைப்படபத்திரிக்கையாளர். 
 
இயல் துறை, இசை துறை, நாடக துறை, கிராமியதுறை, பரத நாட்டியம், சின்னத்திரை, ஓவியத்துறை உள்ளிட்டத் துறைகளில் கலைமாமணி விருது பெற்றவர்களின் பெயர் பட்டியல் அடுத்த பதிவில்.

Posted by போவாஸ் | at 7:12 AM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள்

எ‌ன் த‌ம்‌பி ச‌ரியான பு‌த்தக‌ப் புழுடி...
ஏ‌ன் எ‌ப்பவு‌ம் பு‌த்தகமு‌ம் கையுமா இரு‌ப்பானா
‌‌நீ வேற... அவன் புத்தகத்தை வெச்சுக்கிட்டு எ‌ன்ன நெளி நெளியறா‌ன் தெ‌ரியுமா? 


டே‌ய் படி‌க்காமலே நா‌ன் 10 மா‌ர்‌க் வா‌ங்குவே‌ன்டா
எ‌ப்படிடா? ‌நீ தா‌ன் பரீட்சையில் ஒண்ணுமே எழுத மா‌ட்டியே?
ஆமா‌ம். எழு‌தினா‌த்தானே பே‌ப்ப‌ர் கச‌ங்கு‌ம், பேப்பர் நீட்டா இருந்தா 10 ம‌தி‌ப்பெ‌ண் த‌ர்றதா ந‌ம்ம டீ‌ச்ச‌‌ர் சொ‌ல்‌லி‌யிரு‌க்கா‌ங்களே? 


எ‌ன் பைய‌ன் எ‌ப்படி இரு‌க்கா‌ன் சா‌ர் ப‌ள்‌ளி‌யில...
அவ‌ன் இரு‌க்குற இடமே‌த் தெ‌ரியாது‌ங்க சா‌ர்.
அவ்வளவு அமைதியாவா இருக்கான்?
நீங்க வேற... வகு‌ப்புல இரு‌க்காம எ‌ங்கயாவது போ‌ய் ஒ‌ளிஞ்சுக்கிறான். யாராலயுமே க‌ண்டுபுடி‌க்க முடியல‌ன்னு சொல்ல வந்தேன். 


நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.
‌நீ‌திப‌தி: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!! 

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் பண‌ம் வை‌த்த‌ப் பொருளோடு சே‌ர்‌த்து எடுத்திட்டு போயிடறானே எ‌ன்ன ப‌ண்றது.
எ‌ப்பவுமே அவ‌ன் எடு‌க்காத அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கு‌ம் எடு‌த்து‌க்‌கி‌‌ட்டு‌ம் போக மா‌ட்டா‌ன். 

உ‌ங்க ‌நீளமான‌க் கூ‌ந்தலு‌க்கு‌க் காரண‌ம்
காலை‌யி‌ல் எ‌ழு‌ந்தது‌ம் ஷா‌ம்பு போ‌ட்டு கழுவுவே‌ன். மாலை‌யி‌ல் எ‌ண்ண‌ெ‌ய் வை‌ப்பே‌ன்.
அ‌ப்போ இர‌வி‌‌ல்?
ரொ‌ம்ப‌த் தொ‌ல்லையா‌‌‌ய் இரு‌ந்தா‌ கழ‌‌ட்டி ஆ‌ணி‌யி‌ல் மா‌ட்டிடுவே‌ன்.


ஆசிரியர் : அவன் 10 காசு கொடுத்து தோசை வாங்கினான். இது என்ன காலம்?
மாணவன் : அதெல்லாம் ஒரு காலம் சார். 


வர வர லஞ்ச விவகாரம் இவ்வளவு முத்திப் போகும்னு கனவுல கூட நினைக்கல!
ஏன்? என்ன ஆச்சு?
ஒரு வேலைய முடிக்க எவ்வளவு லஞ்சம் ஆகும்னு சொல்றதுக்கே 100 ரூபா லஞ்சம் கேக்கறாங்கன்னா பாத்துக்கயேன். 


யார் யாரைத்தான் டிரான்ஸ்பர் செய்யறதுன்னு ஒரு வெவஸ்தை இல்லாம போயிடுச்சு!
ஏன்? என்னாச்சு?
நம்ம ஆபீஸ் வாசல்ல இருந்த பெட்டிக்கடைய வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. 


இ‌ந்த மாணவ‌ன்தா‌ன் எ‌ங்க‌ள் ப‌ள்‌ளி‌யி‌ல் நட‌ந்த க‌ட்டுரை‌‌ப் போ‌ட்டி‌யி‌ல் முத‌ல் ப‌ரிசு‌ப் பெ‌ற்றவ‌ன்.
எதை‌ப் ப‌ற்‌றி க‌ட்டுரை எழு‌தினா‌ன்.
த‌ண்‌ணீ‌‌ரி‌ன் பய‌ன்க‌ள் எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் க‌ட்டுரை எழு‌தி‌யிரு‌க்கா‌ன்.
அ‌ப்படியா ந‌ல்லது.. உ‌ங்க‌ப்பா எ‌ன்ன ப‌ண்றாரு‌ப்பா?
பா‌ல் ‌வியாபார‌ம். 

நா‌ன் செ‌த்து‌ட்டா ‌நீ எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?
‌நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை.. நானு‌ம் செ‌த்து‌ப் போ‌ய்டுவே‌ன்.
ச‌ரிதா‌ன்.. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு.
எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னாரு?
‌நீ செ‌த்தாலு‌ம் ச‌னி உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

Posted by போவாஸ் | at 6:58 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails