தமிழ்நாடுபற்றி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அந்நிய முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் மாநிலம்; உள்கட்டமைப்பு வசதி மற்றும் நிருவாகமே இதற்குக் காரணம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் சூழல் பற்றிய குறியீட்டு எண் என்ற ஆய்வினை இங்கிலாந்து நாட்டில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மேற் கொண்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே முதல்நிலையில் கருநாடகா, மகாராஷ்டிரா, டில்லி மற்றும் குஜராத் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த மாநிலங்கள் அனைத்தும் பொருளாதார சிறப்புச் செயல்பாடுகளை உள்கட்டமைப்பிலும் மனித வளத்தை மேம்படுத்துவதிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. செயல்பாடுகளில் நிரந்தரமான நிருவாகமும் இங்குள்ளன.
இந்தியாவில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பான முன்னேற்றம் என்பது குறித்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆயிரம் கல்விக்கழக உறுப்பினர்களிடம் ஆலோசனை பெற்றது.
இந்தியாவின் வணிக ஆய்வில் மாநில அளவில் குறிப்பிடத்தக்க காரணிகளில் உள்ள வேறுபாடுகனை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
மனித வளத்தை மேம்படுத்துவதைப் பொறுத்தவரையில் இமாச்சலப் பிரதேசம், கோவா, புதுச்சேரி ஆகியவையே வியக்கத்தக்க வகையில் முதலீடுகளை ஈர்த்துள்ளன. இவற்றில் கோவா முன்னிலையில் உள்ளது.
மேற்கு வங்கத்திலும் உத்தரப் பிரதேசத்திலும்தான் மிகக்குறைவான சூழ்நிலை நிலவுகிறது. வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்கள் குறைந்த நிலையில் உள்ளன. ஜார்கண்ட், அருணாச்சலப்பிரதேசம், பிகார் ஆகியவை மாநிலத்தில் குறைவான தகுதி காரணமாக உள்கட்டமைப்பு நிருவாகம் ஆகியவற்றில் கீழ்நிலையில் உள்ளன.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வு, குறியீட்டு எண்ணில் இந்தியாவில் 28 மாநிலங்களும் 2 பெரிய யூனியன் பிரதேசங்களுமான டில்லியும், புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளன.