நகைச்சுவை துணுக்குகள்

எ‌ன்ன‌ங்க சா‌ர் இது.
ஏ‌ன் எ‌ன்ன ஆ‌ச்சு.
உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் பிராந்தி குடிக்கறானே
சீ! சீ! அவனுக்கு முன்னாடியே நான் குடிக்க ஆரம்பிச்சுட்டேன். அவ‌ன் இ‌ப்போ‌த்தா‌ன் ஆர‌ம்‌பி‌ச்‌சி‌யிரு‌க்கா‌ன்.

என் பையன் 420 மார்க் எடுத்ததுனால என‌க்கு தெ‌ரி‌‌‌ஞ்சவ‌ங்க ‌கி‌ட்ட எ‌ல்லா‌ம் போ‌ய் ‌சீ‌ட் கே‌ட்க வே‌ண்டிய ‌நிலைமை ஆ‌யிடு‌ச்சு.
என்ன சார் 420 மார்க்குக்கு கேக்கற குரூப் கொடுப்பாங்களே! ஆமா‌ம்.. 10வ‌தி‌ல் எடு‌த்‌திரு‌ந்தா பரவா‌யி‌ல்லை. இவ‌ன் ‌தா‌ன் ‌பிள‌்‌ஸ்டூ வா‌ச்சே.

உன் பையனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்ப என்ன பண்றான்?
தொலைதூர‌க் க‌ல்‌வி வ‌ழியா பி.ஏ. படிக்கிறான்!

ஆ‌சி‌ரிய‌ர் : வான் கோழி முட்டை போடு‌‌ற பறவை இன‌ம்
மாணவ‌ன் : அ‌ப்போது அது உ‌ங்க இன‌ம்னு சொ‌ல்லு‌ங்க..
ஆ‌சி‌ரிய‌ர் : ‌‌எ‌ப்படிடா?
மாணவ‌‌ன் : நீ‌ங்க‌ளு‌ம் மு‌ட்டைதானே போடு‌‌றீ‌ங்க.

நா‌ன் எழு‌தின கதை எ‌ப்படி இரு‌க்கு?
ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல!
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது.

திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?.

அண்ணாச்சி கடையில போய் திருடணும்னா உனக்கு என்ன தைரியம்?
எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு அவங்கதான எசமான் விளம்பரம் செஞ்சாங்க!

"அந்த பொண்ணு அவன் கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினானே.. இப்ப என்னாச்சு தெரியுமா...?"
"
என்னாச்சு?"
"
பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்..."

என்ன உன்னோட லவர் கிட்ட அடி வாங்கிட்டேன்னு கேள்விபட்டேன்?
அத ஏன் கேக்கற! இந்த டிரஸ்ல நான் நல்லா இருக்கேனான்னு கேட்டா. இந்த டிரஸ் இல்லாமையும் நல்லா இருப்பன்னு சொன்னேன், தப்பா எடுத்துக்கிட்டா!

நல்லா ஓவர் போடுவாரே அவர் இன்னிக்கு ஆடலியா?
ஓவரா போட்டுட்டுப் படுத்துட்டாராம்.

Posted by போவாஸ் | at 6:27 PM | 0 கருத்துக்கள்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு

அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ்த் திரையுலகம் முழு ஆதரவு அளிக்கும் என திரையுலக அமைப்புகள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் விவரம்:

உலகத் தமிழ் மாநாடு பல காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்று தமிழுக்குப் புத்துணர்ச்சி அளித்து வந்துள்ளது. ஆனால் தமிழ் மொழி "செம்மொழி' ஆன பிறகு, 2010-ம் ஆண்டு ஜூன் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெறவுள்ள "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' சரித்திரத்தில் சாதனையாகப் போற்றக்கூடிய நிகழ்வாகும்.

இந்த மாநாட்டை தமிழ்த் திரையுலகமே திரண்டு வரவேற்கிறது. மாநாடு தொடர்பாக முதல்வர் கருணாநிதியும், அரசும் இடும் பணிகளை எழுச்சியோடும், உணர்வுப்பூர்வமாகவும் செய்ய தமிழ்த் திரையுலகம் தயாராக இருக்கிறது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கலை மற்றும் இலக்கியம் சம்பந்தப்பட்ட பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளைச் சிறப்புற செய்வதற்கு தமிழ்த் திரையுலகம் ஆர்வமுடன் உள்ளது.

இந்த விவரங்களை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ராம.நாராயணன், நடிகர் சங்கம் சார்பாக ராதாரவி, பெப்ஸி அமைப்பு சார்பாக வி.சி.குகநாதன், விநியோகஸ்தர் சங்கம் சார்பாக கலைப்புலி ஜி.சேகரன், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக அபிராமி ராமநாதன், தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பாக பன்னீர்செல்வம், திரைப்பட மக்கள் தொடர்பு சங்கம் சார்பாக விஜயமுரளி ஆகியோர் தெரிவித்தனர்.
நன்றி: தினமணி

Posted by போவாஸ் | at 5:34 PM | 1 கருத்துக்கள்

காதல் வைரஸ் : சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்


ந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.


ஆனால் காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.

உங்கள் காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான் நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

அவரும் நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும் உண்டு.

கல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும்.

உங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.



சாதாரண நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.


நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.

சரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல் ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி கப் தான் கையில் மிஞ்சும்.

Posted by போவாஸ் | at 5:28 PM | 0 கருத்துக்கள்

வேட்டையாடப்படும் வேட்டைக்காரன்






இப்படி ஆப்பு வச்சிட்டாங்களே.
நாம கொஞ்சம் ஓவராதான் போய்ட்டோமோ..?
எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப்படமான "வேட்டைக்காரன்' என்கிற தலைப்பால் ஈர்க்கப்பட்டோ அல்லது கற்பனை வறட்சியால் பீடிக்கப்பட்டோ அதே தலைப்பிலேயே தற்போது இன்னொரு படம் தயாராகியுள்ளது.

வேடிக்கை என்னவென்றால்,   எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் தலைப்பில் உருவான "அன்பே வா', "நாடோடி மன்னன்', "ரகசிய போலீஸ் 115', "நம் நாடு', "நாளை நமதே' உள்ளிட்ட எந்தத் திரைப்படமுமே இதுவரை வெற்றி பெற்றதில்லை. பரத் நடிப்பில் "எங்க வீட்டு பிள்ளை' என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட படமும் நின்றுவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட "ஆயிரத்தில் ஒருவன்' படம் இரண்டு வருடங்களாகியும் இன்னும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் புதிய "வேட்டைக்காரன்' படத்தை பாரம்பரியம் மிக்க ஏவி.எம். நிறுவனம் சார்பாக ஏவி.எம்.பாலசுப்ரமணியனும் பி.குருநாத்தும் தயாரிக்க, நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.

அவரோடு, தெலுங்கின் முன்னணி நடிகை அனுஷ்கா கை கோர்த்திருக்கிறார் கதாநாயகியாக! வியாபார ரீதியான இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஆக, ஒரு கமர்ஷியல் திரைப்பட கூட்டணியின் பின்புலத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் "வேட்டைக்காரன்' வெற்றிக் கனவோடு பயணிக்கத் தொடங்கினான்.

கடந்த இரண்டு வருடங்களாக, அவ்வப்போது தனது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, மன்றத்துக்கென தனிக்கொடி, இயக்கம், இலச்சினை (ப்ர்ஞ்ர்)  உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய்யின் இந்தப் பயணத்தை அரசியலில் வெற்றிக் கூட்டணி அமைத்து வருபவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக எதிர்பாராத அறிவிப்பு வந்தது.

பொதுவாக, எந்த நிறுவனம் தயாரித்த படமாக இருந்தாலும் அதை தங்களது விளம்பர சக்தியைக் காட்டி மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே சன் பிக்சர்ஸின் வழக்கம் எனக் கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட படங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பெறாவிட்டாலும் கூட சன் டி.வி.யின் "டாப் டென்' பட வரிசையில் முதலிடம் பெற்றுவிடும்.

படத்தைத் தயாரித்து வியாபாரம் செய்ய முடியாமலோ அல்லது பணம் குறைந்தால் கூட பரவாயில்லை; நல்ல விளம்பரம் கிடைக்கும்; அதை வைத்து அடுத்த படத்தில் காலூன்றிவிடலாம் என நினைப்போர் தங்களது படங்களை "சன்' வசம் தருவதாகவும் பேச்சு உண்டு.

விளம்பரங்களில் ஏவி.எம்.மின் "வேட்டைக்காரன்', இளைய தளபதியின் "வேட்டைக்காரன்' என்றெல்லாம் பயன்படுத்த முடியாது; சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்' என்றுதான் வரும். அதனால் வேட்டைக்காரனாக இருந்துகொண்டு சன் பிக்சர்ஸ் கூண்டில் அடைபடுவதை விஜய் தரப்பும் தயாரிப்பு தரப்பும் ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே அவர்களது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சன் பிக்சர்ஸ் வசம் படம் போய்விட்டால் தங்களுக்கு சென்னை ஏரியா விநியோக உரிமை கிடைக்காது என்பதும் விஜய் வட்டாரத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் என்ன காரணத்தாலோ, வேறு வழியில்லாமல் வேட்டைக்காரனே வலையில் சிக்கிக்கொண்டான். படம் சன் பிக்சர்ஸ் வசம் மாறியது, விஜய் தரப்பே எதிர்பார்க்காத... குறிப்பாக, அறியாத ஒன்று எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சில நல விரும்பிகள் மூலம் தில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டு வந்தார். உடனே காங்கிரஸில் சேரப் போகிறார்; இளைஞரணித் தலைவர் ஆகப்போகிறார் போன்ற ரீதியில் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை திடீரென அழைத்து "எனக்கு எல்லாமே சினிமாதான்; "வேட்டைக்காரன்' படம்தான் என் தற்போதைய இலக்கு. இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன்' என திடீரெனப் பின்வாங்கினார் நடிகர் விஜய்.

அவராகப் பின்வாங்கவில்லை; சில சக்திகளும் சூழ்நிலைகளும்தான் அவரை அப்படிப் பேசச் செய்தன என்று கூறியவர்களும் உண்டு.

விஜய்யும் அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தது போல, தில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் அவருக்கு வரவேற்பு இருக்கவில்லை என்று தெரிகிறது. தனது தந்தைக்கு மத்திய அமைச்சர் பதவி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவி, தனது ரசிகர் மன்றத்தினருக்கு வட்ட, மாவட்ட, மாநில அளவில் கட்சிப் பதவிகள் என்றெல்லாம் கனவுகள் கண்ட நடிகர் விஜய், காங்கிரஸ் மேலிடத்தின் "ஆகட்டும் பார்க்கலாம்' நமுட்டுச் சிரிப்பைப் பார்த்ததும் தகர்ந்தன. அதிகபட்சம் நடிகர் விஜய் மாநிலங்களவை உறுப்பினராக்கப் படலாம் என்பதுதான் காங்கிரஸ் தரப்பில் வாக்குறுதியாக இருந்ததாம்.

அது ஒரு புறம் இருக்க, "இளைய தளபதி'யின் அரசியல் ஆசையும், காங்கிரஸில் இணைந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் ஆளும் திமுக தரப்பை எரிச்சலூட்டியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

அதையடுத்து உருவான அரசியல் திட்டமே "உறவாடிக் கெடு' ப்ராஜெக்ட். அதன் முன்னோட்டம்தான் "வேட்டைக்காரன்' படம் கைப்பற்றப்பட்டதன் பின்னணி என்கிறார்கள்.

தீபாவளிக்கு வர வேண்டிய படம் வெளிவரவில்லை. இதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த "ஆதவன்' படம்தான் காரணம். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கக் காரணமாக இருந்த காரணிகளைக் காலமும் பணமும் மாற்றிவிட்ட சூழ்நிலை நிலவுவதால் வேட்டைக்காரனும் ஆதவனும் ஓரிடத்துப் பிள்ளைகளாகிவிட்டனர். அதனால் தீபாவளிக்கு "ஆதவன்' அதன் பிறகு "வேட்டைக்காரன்' என முடிவு செய்யப்பட்டது.

விஜய்யின் முந்தைய பட வெளியீடுகளின்போது இருந்த அவருடைய தலையீடு முதல்முறையாகத் தகர்ந்தது. "வேட்டைக்காரன்' வெளிவராமல் தள்ளிப் போவதால், அடுத்த படத்தின் தயாரிப்பும், ரிலீசும் தள்ளிப் போகும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று "வேட்டைக்காரன்' தள்ளித் தள்ளிப் போகிறதே என்கிற கவலையில் "விஜய்' வட்டாரம் நிலைகுலைந்து போயிருக்கிறதே... சினிமாவைப் பொருத்தவரை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானுங்களே..!




Posted by போவாஸ் | at 3:38 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails