80 வயதில்தான் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் - ஆய்வு

வயதானால் 'எல்லாம்' முடிந்து விடும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த எண்ணமே அவர்களது இயல்பான செக்ஸ் ஆர்வத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறி விடுவதுண்டு.

ஆனால் 80 வயதில்தான் செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எட்வர்ட் வியூமான் தலைமையிலான குழு இதுகுறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில், 57 முதல் 85 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரிடமும் எந்த வயதில் செக்ஸ் ஆசை அதிக அளவில் இருந்தது என்று கேட்கப்பட்டது.

இந்த ஆய்வில், 1,550 ஆண்களும், 1,755 பெண்களும் கலந்து கொண்டனர். அவர்களைத் தேடிப் போய் கருத்து கேட்கப்பட்டது.

கருத்துச் சொன்னவர்களில் 68 சதவீதம் ஆண்களும், 42 சதவீதம் பெண்களும் தாங்கள் தற்போதும் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். 

அதிலும் 80 முதல் 85 வயது வரைக்குட்பட்டவர்கள்தான் பெருமளவில் செக்ஸ் ஆர்வம் அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், 'அதை' வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திரு்நதவர்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பிரச்சினைகளுடன் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்களிடையே, கணவன் மனைவி உறவும் நெருக்கமாக இல்லாததும் தெரிய வந்தது.

செக்ஸ் உறவு வைத்து கொள்பவர்களில் 60 வயதினரைவிட 80 வயதினர் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
--------------------------------------------
ஆந்திராவின் ஆளுநர், 86 வயாதான என்.டி. திவாரி ராஜ் பவனில் ஆடிய காமக் களியாட்டங்கள் மூலம் இப்போது இந்த ஆய்வு உண்மை என்று நம்ப முடிகிறது.

Posted by போவாஸ் | at 11:41 PM | 0 கருத்துக்கள்

இந்தியாவின் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள 20 தொழிற்பேட்டைகளில் 3 தமிழகத்தில்



அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பின் படி இந்தியாவில் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள 20 தொழிற்பேட்டைகளில் 3 தமிழகத்தில் உள்ளது. அவ்வறிக்கையின் படி இந்தியாவில் அதிக மாசுபடுத்தப்பட்டுள்ள தொழில் பகுதிகளில் வேலூர், கடலூர், சென்னை புறநகர் பகுதியான மணலி ஆகியவை முறையே 8,16,20 வது இடத்தை பிடித்துள்ளன.


ஐஐடி டெல்லி, மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுபாடு வாரியங்களின் உதவியுடன் இவ்வறிக்கையை தயாரித்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 88 தொழிற்பேட்டைகளில் 85 சதவிகிதம், 75 தொழிற்பேட்டைகள் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ளன. முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் குஜராத்தில் உள்ள அங்கலேஸ்வர் மற்றும் வாபி ஆகியவை தான் இந்தியாவிலேயே அதிக மாசுபடுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர், திருப்பூர், மேட்டூரும் மோசமாக மாசுபடுத்தப்பட்டுள்ள பட்டியலில் இடம் பிடித்துள்ளன. ஈரோட்டில் மட்டுமே மாசு அரசாங்கம் நிர்ணயித்த வரம்புக்குள் உள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது. இவ்விபரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மாசு கட்டுப்படுத்தப்படும் வரை இப்பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் கட்டுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழக தொழிற்பேட்டைகள்
தரவரிசை
தொழிற்பேட்டை
மாசு-காற்றில்
மாசு-தண்ணீரில்
மாசு-நிலத்தில்
8
வேலூர்
அபாய அளவு
அபாய அளவு
அபாய அளவு
16
கடலூர்
அதிக மாசு
அபாய அளவு
அபாய அளவு
20
மணலி
அபாய அளவு
அதிக மாசு
அதிக மாசு
34
கோவை
அபாய அளவு
அதிக மாசு
வரம்புக்குள்
51
திருப்பூர்
அதிக மாசு
அதிக மாசு
அதிக மாசு
56
மேட்டூர்
வரம்புக்குள்
அதிக மாசு
வரம்புக்குள்
78
ஈரோடு
வரம்புக்குள்
வரம்புக்குள்
வரம்புக்குள்




Posted by போவாஸ் | at 8:37 PM | 0 கருத்துக்கள்

விஜயகாந்து கட்சி வெற்றி பெற என்ன வழி ?.

திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் முடிவுகள் ஜனநாயக முறைக்கு எதிரானது. எந்த ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிரோமோ அந்த ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் இந்த இடைத் தேர்தலை ரத்துச் செய்திருக்கவேண்டும்.


எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்துச் செய்யவேண்டும். அப்போதுதான் நேர்மையாக தேர்தல் நடைபெறும்.
- என்று டைம்பாஸ் அரசியல்வாதி விஜயகாந்து தனது படுதோல்விக்குப் பட்டுத்திரை போட்டு மூட முயன்றிருக்கிறார்.


திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய இரு தொகுதிகளிலும் விஜயகாந்து கட்சி டெபாசிட் தொகையை இழந்துள்ளது என்பதோடு, சென்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளைக் கூட இந்தத் தேர்தலில் வாங்க முடியவில்லை.


1 ) திருசெந்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் 3756 வாக்குகளை இவரது கட்சி வாங்கியது.
இந்தத் தேர்தலிலோ - 
கை சுத்தம் 
அதைவிட 
வாய் சுத்தம் 
மணக்கும் 
வாயோடு தொகுதியை வளம் வந்தார் விஜயகாந்து. எனினும் இந்தத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 4186. சென்ற தேர்தலைவிட, 430 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறது அவரது கட்சி.


2) வந்தவாசி தொகுதியில் கடந்த தேர்தலில் விஜயகாந்து கட்சி பெற்ற வாக்குகள் மொத்தம் 9096.
இந்தத் தேர்தலிலோ 7063 தான்.


போன தேர்தலில் விஜயகாந்து கட்சிக்கு வாக்களித்த 2033 பேர் "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்பது போல விஜயகாந்து கட்சியைக் கை கழுவி விட்டார்கள். 9 ஆய்ரமாக இருந்தால்தான் என்ன ? இரண்டு தேர்தலிலும் டெபாசிட் என்னவோ காலிதான்.
viruthagiri Movie Stills

மற்றபடி - எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்து செய்யவேண்டும். அப்போதுதான் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்கிறார்.


இதற்கு உண்மையான அர்த்தம் என்ன ?


4 ஆயிரம் ஓட்டும், 7 ஆயிரம் ஓட்டும் பெற்று டெபாசிட் இழக்கும் விஜயகாந்து கட்சியே வெற்றி பெற்றது என்று அறிவிக்கும் வரையில் தேர்தலை ரத்து செய்யவேண்டும்.


நமது அரசியல் சட்டப்படி - அது முடியுமா ?


டெபாசிட் இழந்த கட்சியைத்தான் வெற்றி பெற்ற கட்சி என்று அறிவிக்க தேர்தலி சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வர பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன பைத்தியக்காரர்களா ?.

Posted by போவாஸ் | at 6:33 PM | 0 கருத்துக்கள்

பாடையில போகுற வயசுல...படுக்கையறை உல்லாசம்.

ஆந்திர மாநில ஆளுநர் என்.டி.திவாரி, ராஜ்பவன் படுக்கை அறையில் பெண்களுடன் இருப்பது போன்ற டிவி வீடியோ படத்தால் அங்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கவர்னர் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் மட்டுமின்றி டெல்லியிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏபிஎன் ஆந்திரஜோதி என்ற தனியார் தொலைக்காட்சி சானல் இந்த செய்தியை வீடியோவுடன் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



ஆந்திர மாநில ஆளுநராக இருப்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி எனப்படும் நாராயண் தத் திவாரி. இவர் உ.பி. முதல்வராக 3 முறையும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் முதல்வராகவும் இருந்தவர்.




ஏற்கனவே தெலுங்கானா காரணமாக கொதிப்பில் இருக்கும் ஆந்திராவில் திவாரி பிரச்சினை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா பிரச்சினையால் முடங்கிப் போய்க் கிடந்த தெலுங்கு தேசம் கட்சி, திவாரிப் பிரச்சினையை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளது.

நேற்று காலை இந்த வீடியோ செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராஜ்பவன் நோக்கி பெண்கள் அமைப்பினர், தெலுங்கு தேசம் கட்சியினர் படையெடுத்து போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பெண்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

திவாரி குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த ராஜ்பவன் உடனடியாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அதில் ஆந்திர ஜோதி டிவியில் காட்டப்படுவது திரிக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான காட்சிகள். ஆளுநரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி. உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து படு வேகமாக செயல்பட்ட ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த செய்தியை ஒளிபரப்பவும், வீடியோவைக் காட்டவும் ஆந்திர ஜோதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஆந்திர ஜோதி வீடியோ படத்தைக் காட்டுவதை நிறுத்தியது.

அந்தக் காட்சி...

ராஜ்பவன் மாளிகையின் படுக்கை அறையில் இந்தக் காட்சி விரிகிறது. இரவு நேரத்தில் இது படமாக்கப்பட்டுள்ளது. என்.டி.திவாரி படுக்கை அறையில் உட்கார்ந்துள்ளார். அவருக்கு அருகில் 3 பெண்கள் உள்ளனர்.
மனு கொடுக்க வந்த
 
 பிரபல நடிகை-பெண்களை
 
 கவர்னர் கட்டி அணைத்தார்;
 
 விபசார பெண்கள் பரபரப்பு...
அவர்களில் ஒரு பெண்ணுக்கு 18 வயது என்று கூறப்படுகிறது. திவாரியின் வயது 87 ஆகும். இன்னொரு பெண் கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.

அம்பலப்படுத்திய ராதிகா...

திவாரியின் இந்த செக்ஸ் ஊழலை அம்பலப்படுத்தியவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆவார்.

ராஜ் பவன் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் திவாரிக்காக தான் இந்தப் பெண்களை அனுப்பி வைத்ததாக அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், திவாரிக்கு பெண் மோகம் அதிகம். அவருக்காக நான் பல பெண்களை அனுப்பி வைத்துள்ளேன். அனைவரும் ராஜ்பவன் வேலைக்காக என்று கூறி சேர்க்கப்படுவர். ஆனால் அவர்களை திவாரிதான் தனது இச்சைகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.

எந்த நேரத்தில் அவர் பெண் வேண்டும் என்று கேட்பார் எனக் கணிக்கவே முடியாது. திடீரென நள்ளிரவில் கேட்பார், சில சமயம் மதிய உணவை முடித்ததும் கேட்பார்.

எனக்கு கடப்பாவில் சில கல்குவாரிகளை நடத்த விருப்பம் இருந்தது. இதற்காக லைசென்ஸ் வாங்கித் தருவதாக திவாரி உறுதியளித்திருந்தார். ஆனால் சொன்னபடி அவர் செய்யவில்லை. இதையடுத்தே இந்த வீடியோ படத்தை அம்பலப்படுத்தி ஆந்திரஜோதிக்குக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார் ராதிகா.

டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - நாயுடு

திவாரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரஜோதி டிவியில் காட்டிய காட்சிகள் மிகவும் அசிங்கமானவை, ராஜ்பவனுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் திவாரி. ஆந்திராவுக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்து விட்டார்.

அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

இதேபோல திவாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பல்வேறு மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. அதுவரை போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவை கூறியுள்ளன.

திவாரிக்கு எதிராக சித்தூர், நெல்லூர், கம்மம், அடிலாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், அம்மாநில கவர்னர் மீது எழுந்துள்ள செக்ஸ் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்தால் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட ஒரு திறமையான, முழுநேரம் பணியாற்றக்கூடிய தலைவர் தேவை. 86 வயதான என்.டி.திவாரி அதற்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று ஏற்கனவே காங்கிரஸ் மேலிடம் கருதியது. இந்தநிலையில் திவாரி மீது புகார் வந்துள்ளதால் புதிய கவர்னரை நியமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு ஆளாகியுள்ளது. 
--------------------------------------------
பாடையில போற வயசுல....படுக்கையறையில் பெண்களுடனும், விபச்சார அழகிகளுடனும் உல்லாசம்.
ச்..சி..சீ.. கேவலம். ஷிட் .

மன்மோகன் சிங் : இந்த வயசுலயும், எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் பண்ண முடியுது ?.
என்.டி.திவாரி: அய்யே..ரொம்ப புகழாதீங்க. இதுகெல்லாம் போயி கையெடுத்து கும்டுகிட்டு. ராஜ் பவனுக்கு வாங்க விவரமா சொல்லித்தாரேன்.
மன்மோகன் சிங் : ??????????

Posted by போவாஸ் | at 4:20 PM | 0 கருத்துக்கள்

ஐயப்பன் - "பவர்" இல்லாத அப்பன் ?

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த சில நாட்களாக சபரிமலையில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சபரிமலை விழா சமயத்தில் பலத்த போலீஸ் காவல் இருக்கும் என்று கேரள அரசு அறிவித்த பிறகும், போலீஸ் துறையின் பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடப்பது பக்தர்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.



மொத்தத்தில் கோடிக்கணக்கான மக்கள் வழிபாடு செய்யும் முக்கிய இந்துத் திருவிழாவான சபரிமலையில் இந்துக்களை பயமுறுத்துவதற்காகவும், மக்களை சபரிமலை வரவிடாமல் தடுப்பதற்காகவும், அரசு எந்திரங்களுக்கு சவால் விடுவதற்காகவும் தான் பயங்கரவாதிகள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பக்தர்களை காக்க வேண்டிய பொறுப்பு மாநில, மத்திய அரசின் கைகளில் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போலீஸ் துறை இணைந்து செயல்பட வேண்டியதும் அவசியம் ஆகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து பக்தர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.
நன்றி:நக்கீரன்.
--------------------------------
இதை படித்துவிட்டு மக்களின் அறியாமையை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.


" பக்தர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில, மத்திய அரசின் கைகளில் உள்ளது " - என்று கூறுவதிலிருந்தே அவர்களுக்கே ஐயப்பனின் மீது நம்பிக்கையில்லை என்ற உண்மை புலனாகிறது.


" மத்திய மாநில அரசுகள் இணைந்து பக்தர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி " என்பதின் மூலம்...உண்மை இல்லாதவற்றை உண்மை என்று மக்களிடத்தில் கூறி நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது. 


மக்களிடத்தில் இன்னும் அதே பொய்யான நம்பிக்கையை வளர்க்க மத்திய மாநில அரசுகளின் அதிகாரத்தை நாடுகின்றனர்.



ஐயப்பன் இருக்கும் சபரிமலையில் தொடர் குண்டு வெடிப்புகள் மூலம்..., ஐயப்பன் வெறும் கல் என்பதும், ஐயப்பனின் கதை ஒரு கட்டுக்கதை என்கிற உண்மையும், மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு போலியான மோசமான மூடநம்பிக்கை என்று தெரியவருகிறது.


ஐயப்பன் - "பவர்" இல்லாத அப்பன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


அறியாமையைப் போக்குங்கள். அறிவுடன் பகுத்தறிவையும் சேர்த்து வளர்த்துக் கொள்ளுங்கள். உண்மையை உணருங்கள். பிறருக்கும்  தெரிவியுங்கள்.

Posted by போவாஸ் | at 3:22 PM | 5 கருத்துக்கள்

கட்சி ஊழல்களையே கேப்டனால கட்டுபடுத்த முடியல.!!!

" கேப்டன் கட்சி ஆரமிச்ச புதுசுல, 'நான் ஊழல் செஞ்ச பணத்துல கட்சி ஆரம்பிக்கலை, ஏன் சொந்த பணத்தைப் போட்டுதான் கட்சி நடத்துறேன். நான் பாடுபட்டு சம்பாதிச்ச சொத்துக்களைக் கூட இழந்திருக்கேன்'னு அடிக்கடி சொல்வார்.

ஆனா, இப்போ தேமுதிக-வுக்குள்ள நடக்கற சில ஊழல்களையே கேப்டனால கட்டுபடுத்த முடியல. தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மாவட்டங்களிலும் கட்சி பொறுப்புகள் விலை பேசி விற்கப்படுவதாக தகவல் பரவியுள்ளது.


இப்படி பதவிக்கு பணம் வாங்குராங்கலேன்னு மாவட்டச் செயலாளர்களையோ, பொறுப்பாளர்களையோ மட்டும் குறை சொல்ல முடியாது. ஏன்னா, கட்சித் தலைமைக்கான தேர்தல் செலவுக்கு இவர்களும் தங்களைத் தயார்படுத்திக்க வேண்டியிருக்கு.மாநாடு, பேரணி ஏன் அறிவிக்கும்போது மாவட்ட செயலாளர்களிடமும் லட்சக்கணக்கில் பணத்தைக் கேட்கிறது தலைமை.


இதற்கிடையில், திமுக அரசு பக்காவாகத் திட்டமிட்டு பல கட்சிகளில் இருந்தும் இளைஞர்களை இழுக்க ஆரம்பித்த பிறகு, தேமுதிகவுக்கு புதிதாக வருகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் முன்பு போல் இல்லை. வேற கட்சிகளில் இருந்துவிட்டு இப்ப ஆதரவில்லாமல் உள்ள சில ஊழல் அரசியல்வாதிகள்தான் அதிகம் வாறாங்க."


நன்றி: ஜூனியர் விகடன்.
--------------------------------------
மக்களே சிந்திங்க...கட்சிகுள்ளாரையே ஊழலை ஒழிக்க முடியாத இவர்....,ஊழலை ஒழிப்பேன்னு ஒழிப்பேன்னு வாய் கிழிய பேசுவது மக்களிடம் ஓட்டுக்களைப் பெற ஒரு ஏமாற்றுப் பேச்சு என்று.


விஜயகாந்துக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்க ஆசை என்றால்...முதலில் பண்ரூட்டி ராமச்சந்திரனை கட்சியில இருந்து நீக்கியிருக்க வேண்டும். எம்ஜிஆர் ஆட்சியின் போதே ஊழல் செய்ததற்கான குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு. 


விஜயகாந்து பின்னாடி,அவரை நம்பி கட்சியில சேர்ந்து கைகாசப் போட்டு...தேர்தலுக்கும், பேரணி, மாநாடு, ஆர்ப்பாட்டங்களுக்கும், பணத்தை தண்ணிபோல செலவு செய்துவிட்டு பின்னர் புலம்பாமல், முன்ஜாக்கிரதையோடு இருப்பது நல்லது. வீணா செலவு பண்ணுற காசுல நாலு பிள்ளைங்கள படிக்க வச்சா...வம்சம் முழுக்க பேரு சொல்லும்...இல்லைனா ஏதாவது ஒரு அனாதையில்லதுக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுங்கப்பா...புண்ணியமாவது கிடைக்கும்.
viruthagiri Movie Stills
படம் எடுக்க டைரக்டருமில்லை. 
கூட நடிக்க நடிகையுமில்லை.
படத்தினை வாங்க விநியோகஸ்தருமில்லை. 
படம் திரையிட தியேட்டருமில்லை. 
படத்தை பார்க்க ஜனங்களும் தயாரில்லை 


என்கிற உண்மை நிலையிலும் இவ்வளவு தைரியமா இவர் டைரக்ட் பண்ணி நடிச்சு படம் எடுக்குறதே...வருமான வரி கணக்கு காட்டதான்னு ஊருக்குள்ள பேசிகிறாங்க....இது எவ்ளோ உண்மையோ தெரியலை..ஆனா உண்மையா இருக்குமோன்னு மனசுக்கு படுது.

Posted by போவாஸ் | at 1:50 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails