காஞ்சி ஜெயேந்திரர் தாமாஷ் அட்வைஸ்

இன்றைய திமனலரில் வெளியான செய்தி ஒன்று. படித்து பார்த்து சிரிப்பு கலந்த ஆத்திரம்தான் வந்தது. சிரிப்பு வந்தது செய்தியை படித்து, ஆத்திரம் வந்தது தினமலரை நினைத்து.
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் வழக்கு, பாலியல் குற்றச்சாட்டு, மோசடி போன்ற பல வழக்க்குகளில் குற்றச்சாட்டப்பட்டு கொஞ்ச நாள் ஜெயிலுக்குள்ளே இருந்துட்டு வந்த காஞ்சி ஜெயேந்திரர் தான் மனித நேயத்தையும், நற்பண்புகளையும் பற்றி தாமாஷ் அட்வைஸ் பண்ணியிருக்கிறார். நீங்களும் படியுங்கள்.
" சமுதாயத்தில் இன்று நிறைய பக்தி வளர்ந்து வருகிறது. நல்ல பண்புகள் குறைந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும், பள்ளிகளிலும் நற்பண்புகளை வளர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குழந்தை பருவத்தில் நல்ல பண்புகளை வளர்த்தால் தான் பெரியவர்களாகியும் நிற்கும். மனித வாழ்க்கையில் இரு கண்கள் தேவை. ஒரு கண் பக்தி. இரண்டாவது கண் நற்பண்புகள். நற்பண்புகள் வளர்ந்தால்தான் மனித வாழ்வு அமைதி, சாந்தி, சந்தோஷம் மிக்கதாகும்.


General India news in detail
ஐந்தாண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் மழை வேண்டி பூஜை நடத்தப் பட்டது. அப்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது திருநாவுக்கரசர் மழை வேண்டி பாடிய பதிகத்தை மக்களை படிக்க செய்ய வேண்டும். இயற்கை மாற்றங்கள் விரைவில் சரியாகும், என்றார். பிறகு அவர் சங்கரன் கோவில் புறப்பட்டு சென்றார். நாளை மீண்டும் மதுரை வரும் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்".
அட்வைஸ் பன்றதுக்கு ஒரு அருகதை வேண்டும். சமுதாயத்தில் இவருக்கு இருந்த மதிப்பு, மரியாதை, அருகதையை என்றோ இவர் இழந்துவிட்டார். இன்னும் இவருக்கு கூஜா தூக்கி கொண்டு ஜால்ரா அடித்து கொண்டு இருக்கும் நபர்களை நினைத்தும், இப்படிப்பட்ட ஒரு ஆளை தலயில் தூக்கி வைத்து ஆடி, செய்திகளை பிரசுரித்து தான் பார்பன பத்திரிகை என்று மார்தட்டும் தினமலரையும் நினைத்தால் ஆத்திரம்தான் வருகிறது.

Posted by போவாஸ் | at 1:45 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails