நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 3

கொசுவலையுடன் போர்

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று.ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.

எத்தனை கோழி?
ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.
சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"
நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."
சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?
நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"
சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."

அடி வாங்கிய சர்தார்கள்
இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.
முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".
'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்.
"என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".

இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."

ஏன் குதிக்கிறாய்?
தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்த சர்தாருக்கு தெரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்ததும் அவனருகில் சென்று பார்க்க ஆர்வம். அந்த ஆள் ரோட்டில் இருந்த மேன்-ஹோல் மூடியின் மீது இருபத்தி மூனு.. இருபத்தி மூனு.. என்று எண்ணிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்.
சர்தார் ஆர்வம் தாங்காமல் அவனிடம் போய், என்ன விசயம் இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், நான் என்னவென்று சொல்வதைவிட நீயே போய் உள்ளே பார்த்தால் நல்லா தெரியும் என்று சொன்னான். சர்தாரும் குழிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க உள்ளே இறங்கினார். அவ்வளவுதான், அந்த ஆள் உடனே மேன்-ஹோலை மூடியை போட்டு மூடிவிட்டு அதன் மேல் ஏறி மறுபடியும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் இந்த முறை இருபத்தி மூனுக்கு பதில், இருபத்திநாலு.. இருபத்திநாலு.. என்று எண்ணத் தொடங்கினான்

Posted by போவாஸ் | at 7:21 PM | 0 கருத்துக்கள்

மம்மி ரிடன்ஸ்

மம்மி ரிடன்ஸ்


லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. எதிர்பாராத இந்த தோல்வியால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தனது தோழியோடு கடந்த மே 30ம் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளார்.
அங்கிருந்தபடி கட்சிப் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்தினார். எஸ்.வி.சேகர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கினார். தினசரி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார். இடையில் நடந்த ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலையும் புறக்கணித்தார்.
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் போய் விட்டதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அக்டோபர் 17ம் தேதி அதிமுக ஆண்டு விழா வருகிறது. எனவே இதில் ஜெயலலிதா கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. எனவே இதற்கு வசதியாக அக்டோபர் முதல் வாரமே அவர் கொடநாட்டிலிருந்து சென்னை வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தொய்வடைந்து போய்க் கிடக்கும் அதிமுகவினருக்கு புத்துணர்ச்சியூட்ட முடியும் என அவர் நம்புகிறாராம்
நன்றி: தட்ஸ்தமிழ்.

Posted by போவாஸ் | at 2:38 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails