இறைவனின் சிரிப்பில் ஏழையை காணலாம்



றைவனின் சிரிப்பில் ஏழையை காணலாம்


அட உண்மை தான் ...


இதோ நம் தேசிய நெடுஞ்சாலையில்


இறைவன் வேடமிட்ட ஒரு பிச்சைகாரி
சிரித்தபடி இறைவன் வர்ணப்பூச்சாய் !!!


பல லட்சங்களால்
உருப்பெற்றது இங்கே ஓர் கோபுரம் ..,
கனவில் வந்து சொன்ன சாமிக்கு
வியப்பளிக்கும் இருப்பிடமாம் ...
அடேய் மதி கெட்டவனே ,
உன் கண்களால் காண்கிறாயே நித்தமும் இந்த ஏழயை,
இவன் பசி போக்க உன்னால் முடிந்ததா ?


இறைவா !!!
இவனுக்குத்தான் பார்வை ஊமையாகிவிட்டது
உனக்குமா ?
ஏழையின் கனவு கூட உனக்கு வெருப்பாகிவிட்டதா?



Posted by போவாஸ் | at 7:19 PM | 0 கருத்துக்கள்

இளைய தளபதி டாக்டர். விஜய் ஜோக்ஸ்

ரசிகர்:- எனுங்கண்ணா சாக்கடைக்குப்பக்கத்தில போய் சத்தமா கத்தீட்டு இருக்கீங்க?.
விஜய்:- சாமிக்கிட்ட மட்டும் தான் சைலன்சா போசுவன்... சாக்கடைக்கிட்ட இல்லை
Director : சார், படத்தோட கதைப்படி நீங்க கழுதை மேய்க்கிறீங்க.
Dr.VIjay: இமேஜ் கேட்டுபோயடுமே....!
Director: ஹையோ...சூப்பர் சார்..இதேதான் கழுதையும் சொல்லுச்சு...
பெண்: ஐயா..எனக்கு தாலி பிச்சை கொடுங்க..
தியேட்டர் ஓனர் : அதை என்கிட்டே வந்து எம்மா சொல்லுற...? ?
பெண் : தியேட்டருக்குள்ள என் புருஷன் வேட்டைக்காரன் படம் பார்க்க போயிருக்காரு...அதான்.
விஜய் : "நான் அடிச்சா தாங்கமட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட...."
டைரக்டர் : கட், கட், கட்...விஜய் சார் டயலாக்கை ஒழுங்கா கரெக்டா சொல்லுங்க.
விஜய் : " நான் நடிச்ச தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட..."
வேட்டைக்காரன் பஞ்ச் டயலாக்
ஒருத்தன மட்டும் கோல பண்ணுனா அவன் பெரு கொலைகாரன்.
படம் பாக்குற எல்லாரையும் கொலை பண்ணுனா அவன் பேரு வேட்டைக்காரன்.


வேட்டைக்காரன் பாடல்:
”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,
ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,
படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”

படம் பார்த்த பின்பு:
“நிக்காம ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வாரேன் பாரு வேட்டைக்காரன்!.”

திரையரங்கிலிருந்து தப்பித்த பின்பு:
”என் உச்சி மண்டையில சுர்ர்ருங்குது
படத்த பார்க்கையில கிர்ர்ருங்குது,
டர்ர்ருங்குது”
இறுதியில் படத்தயாரிப்பாளர் நடிகர் விஜயிடம்:
”நான் அடிச்சா தாங்க மாட்ட,
மவனே இனி நீ நடிக்க வர மாட்ட
மக்களை வாழு வாழு வாழ விடு
வாரேன் பாரு'கொலைகாரன்'




டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?

விஷம் குடிச்சாக்கூட பிழைக்க வைச்சிருக்கலாம்...பையன் ரொம்ப தெளிவா வேட்டைக்காரன் டிரெய்லர் தொடர்ந்து 100 தடவை பார்த்து இருக்கான்..

Dr.vijay

நகைச்சுவைக்கு மட்டுமே...இன்னும் தொடரும்

Posted by போவாஸ் | at 3:48 PM | 4 கருத்துக்கள்

புதிதாக அமையும் திரைப்பட நகருக்கு 'கலைஞர்' பெயர்!


திரைப்பட நகரம், திரையுலகினர் குடியிருக்க இலவச வீடு, நலவாரியம் என ஏகப்பட்ட சலுகைகளை வாரி வழங்கி வரும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து ஒட்டு மொத்த திரையுலகமும் மெரினா கடற்கரையிலுள்ள தொழிலாளர் சிலையிலிருந்து கோட்டை வரை பேரணி செல்கிறார்கள்.

புதிய திரைப்பட நகருக்கு முதல்வரில் நினைவாக, 'கலைஞர் நகர்' என்று பெயர் சூட்டவும் முடிவு செய்துள்ளனர். 

இந்த தகவலை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
 

உயிர் கொடுத்து எம்மை உலகில் உலவவிட்ட தாய்க்கு நாம் நன்றி சொல்ல முடியாதோ, அதே போல்தான் தாயுள்ளத்தோடு கருணையின் உச்சத்தில் நின்று... குந்தக் குடிசை கூட இல்லாமல்.. நிரந்தர வருமானமோ, நிலையான தொழிலோ இல்லாமல் சினிமாவை நம்பி அல்லப்பட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ, நிலமும் பிழைக்க திரைப்பட நகரமும்... தயாரிப்பாளர்கள் இணைந்து வாழ்ந்திட அதே இடத்தில் வீட்டுமனையும் தந்து... தமிழ்த்திரையுலகை வாழ வைத்திருக்கும் கலை உலகக் காவலர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாமல் தடுமாறி நிற்கிறோம்.
 
அக்டோபர் 9 ம் தேதி அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர் மாநாட்டில் சொன்னார். அதன் பின்னர் நிலம் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது.. டிசம்பர் 21 ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் திரைப்பட நகரம் அமைக்க பையனூர் கிராமத்தில் பட்டா எண்ணு டன் சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

கலை உலகத்தினர் மீது எந்த அளவு பாசம், பரிவு, கருணை, ஐம்பது ஆண்டு காலமாக கோடம்பாக்கத்துக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ் சினிமா உலகம் இயற்கை எழில் நிறைந்த விஸ்தீரனமான பழைய மகாபலிபுரம் வீதி யுள்ள பையனூருக்கு குடி போகிறது.
 
கலைஞர் நகர் என்ற எழில் சூழ்ந்த புதிய திரைப்பட நகரம் உருவாகிறது. தயாரிப் பாளர்கள், நடிகர்கள், இயக் குனர்கள், இசையமைப் பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சின்னத் திரை கலைஞர்கள், மக்கள் தொடர் பாளர்கள் அனைவரும் கூடி வாழ... படப்பிடிப் புத்தளங்கள், ஒலிப்பதிவுக் கூடங்கள், வீதிகள் இப்படி ஒரு புதிய திரைப்பட நகரம், கலைஞர் நகர் என்ற பெயரில் உருவாகிறது. இதற்கான நிலத்தை அளித்து தமிழ்த்திரையுலகின் புதிய அவதாரத்தை உருவாக்கி தந்த எமது முதல்வருக்கு கலை உலகம் காலமெல்லாம் நன்றியோடு நடந்து கொள்ளும்.
 
மிக விரைவில் தயாரிப்பா ளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகையர், இசை யமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், பெப்சியின் 23 சங்க நிர்வாகிகள் அனைத்து தொழிலாளர்கள், சின்னத்திரை கலைஞர்கள், தியேட்டர் அதிபர்கள், விநி யோகஸ்தர்கள், மக்கள் தொடர்பாளர்கள் ஆக ஒட்டு மொத்த திரையுலக மும் சேர்ந்து மெரினா கடற் கரையிலுள்ள தொழிலாளர் சிலையிலிருந்து கோட்டை வரை ஊர்வலமாக நடந்து சென்று தமிழக முதல் வருக்கு நன்றி சொல்ல இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted by போவாஸ் | at 2:12 PM | 0 கருத்துக்கள்

ரேஷன் கடையில் காய்கறிகள்.. வாங்கக் குவியும் மக்கள்!




முதல்வர் கலைஞர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காய்கறிகளின் விலையைக் குறைத்திட தமிழக அரசு கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்திட முடிவு செய்யப்பட்டது. மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மலிவு விலையில் காய்கறி விற்பனையையும் ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
Vegetables

சென்னையில் மட்டும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், இதனை தமிழகம் முழுக்க விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது தமிழக அரசு.

வெளி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக அன்றாடம் சமையலுக்கு அவசியமான வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்குவதற்கு வசதியாக சென்னையில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை நேற்று முதல் தொடங்கியது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சென்னையில் உள்ள 117 டியுசிஎஸ், ரேஷன் கடைகளில் மட்டும் காய்கறி விற்கப்பட்டது.

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தரம் பார்த்து தேவையான அளவுகளில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது.

கியாஸ் விற்பனை மையங்கள், மண்ணெண்ணை விற்பனை நிலையங்களிலும் வெளி மார்க்கெட்டை விட பாதி விலையில் இந்த காய் கறிகள் விற்கப்படுகின்றன.

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறிகள் விற்கப்படும். ஒவ்வொரு விற்பனை நிலையத்தின் முன்பும் காய்கறிகளின் விலைப்பட்டியலும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தெரிய வந்ததுமே, பலரும் ரேஷன் கடைகளில் குவிந்துவிட்டனர். வெளிமார்க்கெட்டை விட கணிசமாக விலை குறைத்து விற்கப்படுவதால், காய்கறிகளை அள்ளிச் சென்றனர் மக்கள்.


சந்தை விலை மற்றும் டி.யு.சி.எஸ் விலை நிலவரம் வருமாறு:


  • வெங்காயம் - சந்தை விலை ரூ.34, டி.யு.சி.எஸ் ரூ.24.
  • தக்காளி - சந்தை விலை ரூ.27, டி.யு.சி.எஸ் ரூ.16.
  • உருளைக் கிழங்கு - சந்தை விலை ரூ.32, டி.யு.சி.எஸ் ரூ.18.
  • கோஸ் - சந்தை விலை ரூ.15, டி.யு.சி.எஸ் ரூ.8.
  • கேரட் - சந்தை விலை ரூ.36, டி.யு.சி.எஸ் ரூ.14.
  • பீன்ஸ் - சந்தை விலை ரூ.24, டி.யு.சி.எஸ் ரூ.14.
  • பீட்ரூட் - சந்தை விலை ரூ.24, டி.யு.சி.எஸ் ரூ.14.
  • சௌசௌ - சந்தை விலை ரூ.18, டி.யு.சி.எஸ் ரூ.8.
  • நூக்கொல் - சந்தை விலை ரூ.16, டி.யு.சி.எஸ் ரூ.6.
  • பச்சைமிளகாய் - சந்தை விலை ரூ.18, டி.யு.சி.எஸ் ரூ.10.
  • காலிபிளவர் பூ ஒன்று - சந்தை விலை ரூ.15, டி.யு.சி.எஸ் ரூ.10.
இந்த முயற்சிக்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க இத்திட்டத்தை நகரப்பகுதிகளில் மட்டும் முதலில் நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசின் சிவில் சப்ளைஸ் துறை.

இதன் மூலம் விவசாயிகளும் கணிசமாக லாபம் பார்க்க முடியும் என்பதால் இத்திட்டத்துக்கு பல மட்டத்திலும் ஆதரவு பெருகியுள்ளது.

------------------------------------------------------------------

பல நல்ல திட்டங்களை அடுத்து அடுத்து அறிவித்து மக்களின் பேராதாரவை பெற்று வரும் திமுக அரசில்...விலைவாசி உயர்வால், அன்றாட, நடுத்தர மக்களிடம் அதிருப்தி இருந்துவந்தது. இதை எதிர்கட்சிகளும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் சுட்டிக்காட்டிக் கொண்டு வந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுகவின், "ரேசன் கடைகளில் குறைந்த விலையில் காய்கறி விற்பனை" முயற்சி ஒரு புதிய முயற்சியாகவும், மக்களிடையே வரவேற்பையும் பெற்று அதிருப்தி நிலையைப் போக்கும் என்பதில் ஐயமில்லை.


உழவர் சந்தை , நமக்கு நாமே திட்டம், சமத்துவபுரம், ரேஷன் மளிகை, ரேஷன் காய்கறி, கலைஞர் காப்பீடு திட்டம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் இவை அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை கணிசமான அளவு திமுக பக்கம் அழைத்து வந்துள்ளது. மேலும் இதுபோன்ற திட்டங்களால் வரும் 2011 பொதுத் தேர்தலிலும் திமுக அமோக வெற்றிபெற்று புதிய வரலாறு படைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும்போது அதை வரவேற்பதில் தவறேதுமில்லையே.

Posted by போவாஸ் | at 12:29 PM | 0 கருத்துக்கள்

தேர்தல் முடிவுகளால் எதிர்க்கட்சிகள் கலக்கம்.


தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப் பேற்றது முதல் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சிக் கூட்டணி அசுர பலத்துடன் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால், எதிர்வரும் இடைத் தேர்தலை எதிர்கொள்ள வழி தெரியாமல் எதிர்க்கட்சிகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.

கடந்த 2006 சட்டசபை தேர்தலுக்கு பின், மதுரையில் துவங்கி திருச்செந்தூர் வரை 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி கூட்டணி தொடர் வெற்றி பெற்று வந்துள்ளது.இதில், ஐந்து இடைத்தேர்தல்களை அ.தி.மு.க., புறக்கணித்தது. ஐந்தில் களம் கண்டது. தொடர் வெற்றிகளால், எப்போது இடைத் தேர்தல் நடந்தாலும், அ.தி.மு.க., உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் தி.மு.க., எளிதில் ஊதித் தள்ளி விடுகிறது.இந்நிலையில் தற்போது, பெண்ணாகரம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இடைத் தேர்தல் முடிந்ததற்குள்ளாக, அடுத்த இடைத்தேர்தலை எதிர்கொள்வது தற்போது தமிழகத்திற்கு புதிது. வேறு வழியின்றி தமிழக கட்சிகள் இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளன.

தி.மு.க.,வை பொறுத்தவரை இடைத் தேர்தலைப் பற்றிய கவலை சிறிதும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் தனது கைக்குள் இருப்பதால் எத்தகைய இடைத் தேர்தலையும் அந்த கட்சி எளிதில் சமாளித்து விடும். அதன் ஒரே கவலை செலவழிக்கப்படும் தொகை மட்டுமே.எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த இடைத் தேர்தலிலும் வழக்கம் போல் தி.மு.க., கூட்டணி அசுர பலத்துடன் செயல்படும். பெரிய கட்சியாக இருந்தும், தொண்டர் பலம் அதிகம் இருந்தும் இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அ.தி.மு.க., திணறி வருகிறது.ஒவ்வொரு இடைத் தேர்தல் முடிவின் போதும், அ.தி.மு.க., மீது எறியப்படும் விமர்சன அம்புகள், அக்கட்சியை திணறடித்து வருகிறது. தேவையற்ற இடைத் தேர்தல் சங்கடங்களை தவிர்க்கவும் அ.தி.மு.க., தலைமை நினைக்கிறது.

தேர்தலை புறக்கணிப்பு செய்யவும் கட்சித் தலைமை தயாராக இல்லை. அதே சமயம் தேர்தலை எதிர்கொண்டு வீண் வழக்கு, அலைச்சல், பண விரயத்தை செய்ய வேண்டுமா என்றும் அந்த கட்சி யோசித்து வருகிறது. இதனால், இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டுள்ளது. பெரிய கட்சியான அ.தி.மு.க.,வின் நிலையே இப்படி என்றால், சிறிய கட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவை, பெண்ணாகரம் இடைத் தேர்தலை நினைத்து இப்போதே கலங்கிப் போய் உள்ளன.

வீம்புக்கு போட்டியிடவும், தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும் வீணாக பணத்தை செலவழிக்கவும் அவை தயாராக இல்லை. அதே சமயம் தேர்தலை புறக்கணிப்பு செய்யவும், அந்த கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை.பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வே இடைத் தேர்தல்களை கண்டு விக்கித்து போய் உள்ளதால், மற்ற எதிர்க்கட்சிகளின் பாடு படுதிண்டாட்டமாக உள்ளது. இது ஆளும் கட்சி தரப்பை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

நன்றி: தினமலர்.

Posted by போவாஸ் | at 11:19 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails