தேமுதிகவுக்கு ஆரம்பமே அடி சறுக்கல் : வேட்புமனு சர்ச்சை.Latest indian and world political news informationவந்தவாசி ( தனி) தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஆதி திராவிடர் இன பட்டியலில் எப்படி இடம் பெற்றார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வந்தவாசி (தனி) சட்டசபைத் தொகுதி ரிசர்வ் தொகுதி என்பதால், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். தே.மு.தி.க., வேட்பாளர் ஜனார்த்தனனின் தாயார் பெயர் லூர்துமேரி, காஞ்சிபுரம் மாவட் டத்தைச் சேர்ந்தவர். கடந்த 19 ஆண்டுக்கு முன் வந்தவாசியில் வந்து குடியேறினார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் வந்தவாசி நகராட்சி 22வது வார்டில் போட்டியிட்டு 20 ஓட்டுகளை பெற்றார்.இவர் ஆதி திராவிட வகுப்பில் இருந்து கிறிஸ் தவ மதத்திற்கு மாறி வந்தவாசி சி.எஸ்.ஐ., சர்ச்சில் கிறிஸ்தவ முறைப்படி ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தவர்கள் பிற்பட்ட வகுப்பினர் பட்டியிலில் சேர்க்கப்படுவர். இந்நிலையில், ஜனார்த்தனன் மனு தாக்கலின் போது, "ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்' என, ஜாதிச் சான்றிதழ் சமர்பித்துள்ளார்."கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஜனார்த்தனன் எப்படி ஆதிதிராவிடர் எனக் கூறி தேர்தலில் போட்டியிட முடியும்' என, எதிர்க் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தே.மு.தி.க., வைச் சேர்ந்தவர்கள், "ஜனார்த்தனன் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர் தான்' எனக் கூறிவருகின்றனர். எனவே, எதிர்க்கட்சியினர் அவர் கிறிஸ்தவர் என்பதை நிரூபணம் செய்ய சர்ச்சில் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறியுள்ளாரா என்ற விவரங்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில், ஜனார்த்தனனுக்கு மாற்று வேட்பாளராக ராமதுரை என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.தே.மு.தி.க.,வில் இவருக்கு எதிராக உள்ள கோஷ் டியினர் இவரது மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக நினைத்து சுயேச் சையாக மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.

இது குறித்து தே.மு.தி.க., வேட்பாளர் ஜனார்த்தனனிடம் கேட்டபோது,""நான் கிறிஸ்தவராக இருந்து ஆரிய சமாஜ் மூலமாக மீண்டும் இந்துவாக மாறிவிட்டேன்,'' என்றார். எப்போது எந்த ஆண்டு சேர்ந்தீர்கள் என கேட்டபோது, "" நான் பிறகு பதில் சொல்கிறேன்,'' (அப்படியே உங்க கட்சித் தலைவரப் போலையே சமாளிக்கிறீங்க ?)  என மட்டும் கூறி முடித்துக் கொண்டார்.

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும்....தேமுதிகவினர் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது இது போன்ற நிலையே தொடர்கிறது. வேட்புமனுவிலேயே இவ்வளவு குளறுபடி, தவறுகள் செய்கின்ற தேமுதிக ஒரு பொறுப்பான கட்சியாகவும் தெரியவில்லை, எதிர்கட்சியாகவும் தெரியவில்லை ?.

"நான் ஒருவனே உத்தமன்","என்னால் மட்டுமே நியாயமான ஆட்சி தரமுடியும்" என்று கூறிக் கொண்டிருக்கும் மாலுமி விஜயகாந்து இந்த சர்ச்சைக்கு என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.?

Posted by போவாஸ் | at 10:18 PM | 0 கருத்துக்கள்

கடவுள் இருக்கும் இடமெல்லாம் காமலீலைக் கூடாரமாக மாறுகிறது


பகுத்தறிவற்ற கும்பலால் கடவுளின் முக்கிய திருத்தலங்கள் என்று போற்றப்படும் இடங்கள் எல்லாம் தற்போது அவை காம லீலை கூடாரங்களாக மாறி வருகின்றன. பகுத்தறிவாளர்களால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வரும் இந்தக் கூற்றை இரு அரசு சாரா நிறுவbjhjkjnனங்களின் ஆய்வு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளன.
புனிதத் தலங்களுக்கு ஆன்மிக யாத்திரை என்ற பெயரில் செல்லும் பக்தர்கள் அங்கு நடத்தும் காமக் களியாட்டங்கள் குறித்து இரு அரசு சாரா நிறுவனங்கள் தேசிய அளவில் சமீபத்தில் ஆய்வு நடத்தின. அதில் குறிப்பாக சிறுவர், சிறுமியர் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளிவந்து உள்ளன.
நாடு முழுவதும் ஆய்வு
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் கிராம நியோஜன் கேந்திரா என்ற அமைப்பு நாடு முழுவதும் ஆய்வு நடத்தியது. சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக திருத்தலங்கள் என நாடு முழுவதும் உள்ள 68 இடங்-களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆன்மிக திருத்தலங்கள் பலவும் காம விளையாட்டு அரங்கங்களாக மாறியிருப்பதை கண்டறிந்துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஆன்மிகத் தலங்களில் தான் இந்தியா மற்றும் வெளிநாட்டினர் தமது காம விளையாட்டுகளை அதிகமாக நடத்தி வருகின்றனர். இதில் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமின்றி வலுக்கட்டாயமாக சிறுவர், சிறுமியரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பக்தர்கள் என்ற போர்வையில் இந்த ஆபாச அரங்கேற்றத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஆன்மிகத் திருத்தலங்கள்
இந்தியாவில் பாலியல் வேட்கையைத் தணிப்பதற்கான இடமாக வெளிநாட்டினர் தேர்வு செய்துள்ள இடங்கள் ஆன்மிக திருத்தலங்கள் தாம். அந்த அளவுக்கு அங்கு காமக் களியாட்டத் தொழில் கொடிகட்டிப் பறப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், பெங்களூருவில் உள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் திருப்பதி, குருவாயூர் மற்றும் பூரி போன்ற ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் பெரும் எண்ணிக்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களின் பாலியல் சுரண்டலிலிருந்து சிறுவர், சிறுமியரைப் பாதுகாப்பது என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆன்மிகத் தலங்களில் சிறுவர், சிறுமியர் மட்டு-மின்றி இளம் பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது உண்மை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆன்மிகம் என்ற பெயரில் மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் இந்தக் காம லீலைகளைக் கட்டுப்படுத்த போதிய சட்டம் இல்லை என்று அந்த ஆய்வறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை அடுத்து இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான வரைமுறைகளை உருவாக்க மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சார்பில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசு வலியுறுத்தல்
ஆன்மிகம் என்ற பெயரில் நடத்தப்படும் சுற்றுலாக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர், சிறுமியர் இக்கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கும் விதமாக கடும் சட்டங்களும், காவல்துறை கண்காணிப்பும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுற்றுலாத்துறை வலியுறுத்தி உள்ளது.

Posted by போவாஸ் | at 9:17 PM | 1 கருத்துக்கள்

நிருபரின் கேள்வியால் டென்சனான ராமதாஸ்.

சேலத்தில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிருபர் களின் கிடுக்கிப்பிடி கேள்வியால் டென்ஷனாகி, பாதியிலேயே எழுந்து சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வன்னியர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள சேலம் வந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிருபர் களிடம் கூறியதாவது: கோவை வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவர்களை அழைத்துப் பேசி கோரிக் கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். வரும் 2011ல், ஜாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கெடுக்கும் போது பயன்படுத் தப்படும் படிவத்தில், எஸ்.சி., எஸ்.டி., பட்டியலுடன் ஓ.பி.சி., என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
"ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2008ல் துவக்கப்பட்டு, வரும் 2012 டிசம்பரில் முடிக்கப்படும்' என்று, அறிவித்த போதிலும் இத்திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதலே இன்னும் நடக்கவில்லை. நதி நீர் பிரச்னையில், தமிழகத் துக்கு, கேரளாவால் முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது. கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் மின்சாரம், காய்கறி, அரிசி போக்குவரத்தை பத்து நாட்கள் நிறுத்தினால், கேரளா வழிக்கு வந்து விடும். ஆனால், நாம் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விட்டுக்கொண்டு இருக்கிறோம். இடைத்தேர்தலில் பா.ம.க.,வினர், 49 "ஓ' பாரத்தை பயன்படுத்தி தங்களின் நிலையை வெளிப்படுத்துவர். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிலளித்தார்.


கேள்வி: இடைத்தேர்தலில் நீங்கள் எடுத்துள்ள முடிவை பொதுத்தேர்தலிலும் தொடர்வீர்களா?
பதில்: பொதுத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடும். வந்தவாசி தொகுதியில் இதற்கு முன் நடந்த தேர்தலில், பா.ம.க., போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. திருச்செந்தூர் தொகுதியிலும் எங்கள் கட்சிக்கு கணிசமான ஆதரவு உள்ளது.(ஆதரவு இருக்கு...உங்களுக்கு இருக்கா ? )கேள்வி: வன்னியர் சங்கத்தின் சொத்துக்களை நீங்கள் எடுத்துக் கொண்டதாகவும், உங்கள் பெயரில் சொத்துக்கள் இருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனரே?
பதில்: தெருவுல போற நாய் களுக்கு எல்லாம், நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. கேள்வி கேட்கிறீரே நீர் எந்த பத்திரிகை, நான் சொல்றதெல்லாம் போடுவீங்களா? என் மீது எந்த சொத்தும் இல்லை. வன்னியர் நல வாரியம் அரசு தான் அமைத்துள்ளது. சொத்துக்கள் குறித்து அரசு தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். என்னிடம் பொறுக்கிக் கொண்டு வெளியில் சென்ற சில நாய்கள் தான், அப்படிச் சொல்லி இருக்கும்.


அதே கேள்வியை மேலும் ஒரு நிருபர் கேட்டதால் டென்ஷன் ஆன ராமதாஸ், "நீங்கள் எந்த பத்திரிகை' என்று கேட்டார்.

நிருபர் பதில் கூறியும் ஆத்திரம் தணியாத ராமதாஸ், மேலும் கூறியதாவது: என் மீது சொத்துக்கள் இருந்தால் நிரூபித்து விட்டு எனக்கு தண்டனை கொடுக்கட்டும். தமிழகத்தில் என்னை போன்று நாகரிகமான அரசியல்வாதி யார் இருக்கிறார். தி.மு.க.,- அ.தி.மு.க.,வுல யாராது ஓர் ஆளை சொல்லு பார்ப்போம். ஏன் விவாதம் வச்சுக்கலாமா? அரசியல்வாதிக்கிட்ட அரசியல மட்டுமே கேட்குறதுக்கு முதல்ல பழகிக் கிடுங்க. இவ்வாறு கூறிய ராமதாசை, மற்ற பத்திரிகை நிருபர்கள் சமாதானப்படுத்தினர். எனினும், அவர் பாதியிலேயே எழுந்து சென்று விட்டார்.


நிருபரின் கேள்விக்கு, இவர் பதில் அளித்த விதத்தைப் பார்த்தாலே தெரிகிறது இவர் எவ்வளவு பெரிய அஅஅஅநாகரீகமான தலிவர் என்று. அரசியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டியவர் இவர். அடுத்து வரப் போகும் பொதுதேர்தலில், மக்கள் இவருக்கு நல்லதொரு பாடத்தினை கற்றுத் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

Posted by போவாஸ் | at 9:05 PM | 0 கருத்துக்கள்

எந்திரன் ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதி

Enthiran – The Robotரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.


ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் இங்குமாக நடந்து வருகிறது.


சமீபத்தி்ல் மதுரவாயல் பகுதியில் உள்ள பிரமாண்ட மேம்பாலத்தில் ஷூட்டிங் நடந்தது. அப்போது போக்குவரத்தை அடைத்துக் கொண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.


இந்த நிலையில் இன்று காலை கத்திப்பாரா மேம்பாலத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 


படப்பிடிப்புக்காக போலீஸ் உடையணிந்த நூற்றுக்கணக்கான செக்யூரிட்டி நிறுவன ஆட்களும், படப்பிடிப்புக்காக வந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் பாலத்தின் அருகே குவிந்திருந்தனர்.


காலை 9 மணியளவில் நடந்த இந்த படப்பிடிப்பால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பை பார்க்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டதாலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


மேம்பாலத்தின் மீது செல்லவோ, வாகனங்கள் வரவோ முடியாத அளவுக்கு முற்றிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. இதனால் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டியோர், விமான நிலையத்திலிருந்து நகருக்குள் செல்ல விரும்பியோர் என அனைத்துத் தரப்பு வாகனங்களும் எங்கும் போக முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றன.


இந்த நிலையில், இடைவெளியில் புகுந்து செல்ல முயன்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை அங்கே நின்று கொண்டிருந்த போலீஸ் உடையணிந்த செக்யூரிட்டிகள் விரட்டியடித்தனர். அவர்களை இங்கே போ, அங்கே போகாதே என்று மிரட்டியதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.


போலீஸ் உடை அணிந்ததே தவறு, இதில் பொதுமக்களை மிரட்டும் வகையில் அவர்கள் பேசியது மிகப் பெரிய சட்டவிரோத செயல் என்பதால் பொதுமக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தி அடைந்ததுடன் கோபமும் கொண்டனர். ஆனால் இதைத் தட்டிக் கேட்காமல் நிஜ போலீஸார் கண்டும் காணாததும் போல இருந்தது மக்களை வேதனைக்குள்ளாக்கியது.


ஏன் இந்த அவலம்...?


பொதுவாக வாகன நெருக்கடி நிறைந்த பகுதிகளில் படப்பிடிப்புக்கு பகல் நேரத்தில் அனுமதி வழங்கப் படுவதில்லை. இரவு நேரங்களில் தான் அத்தகைய இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.


ஆனால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த காலை நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எந்திரன் ஷூட்டிங் சென்னையில் நடக்கும் இடமெல்லாம் மக்களை வதைக்கும் செயல் தொடருவதும் அவர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.


மேலும் படப்பிடிப்பு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்ததை படமெடுக்க முயன்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் மிரட்டப்பட்டனர். அவர்களது கேமராவை பிடுங்க ஒரு கும்பல் விரட்டியது. இதை படமெடுக்க கூடாது என்று அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலுக்கு இடையே வாகன நெருக்கடியை புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர்.


இப்படி பொதுமக்களையும், பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களையும் எந்திரன் பட யூனிட்டார் ரவுடிகள் போல செயல்பட்டு அச்சுறுத்தியது, மிரட்டியது பெரும் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்களுக்கு ஒண்ணுன்னு முதல் ஆளா வருவேன்னு சொன்ன ரஜினிகாந்த் - பொது மக்களுக்கு இது போன்று சிரமம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினி நினைத்தால் இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும் என்றே நினைக்கிறேன்.
நன்றி:தட்ஸ்தமிழ்

Posted by போவாஸ் | at 8:36 PM | 0 கருத்துக்கள்

2000 கோடி பணம் : மிரட்டி வசூலித்த மாவோயிஸ்ட்டுகள்


Maoistsதொழிலதிபர்கள், சுரங்க முதலாளிகள் மற்றும் மெகா கான்டிராக்டர்கள் ஆகியோரை மிரட்டி மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சட்டிஸ்கார் போலீஸ் டி.ஜி.பி விஷ்வ ரஞ்சன் கூறினார்.

சட்டீஸ்காரில் கணிம வளம் நிறைந்த பாஸ்டார் பகுதி கடந்த பல நாட்களாக எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், கண்டுகொள்ளப்படாமல் வறுமையின் பிடியில் கிடந்தது. 

அடர்ந்த காடுகள் நிறைந்த இப்பகுதியை, இந்தியாவில் தற்போது தடை செய்யப்பட்ட நக்சல் இயக்கமான மாவோயிஸ்டுகள் தங்களின் புகலிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்தியாவில் 20 மாநிலங்களுக்கு மேல் இவர்கள் பரவியிருந்தாலும் சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கைவரிசை அதிகளவில் காணப்படும். 

அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் தங்களுக்கென தனி நெட்வொர்க்கை உருவாக்கி ஆயுதங்கள் உட்பட கட்டமைப்பு வசதிகளையும் நிழலுலகில் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான நிதி, பெரும்பாலும் ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் மூலமாகவே பெறப்படுகிறது. இவ்வாறு மாவோயிஸ்டுகள் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வசூல் செய்வதாக சட்டீஸ்கர் போலீஸ் டி.ஜி.பி விஷ்வ ராஜன் தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசூலாவதாக தெரிகிறது. சமீப காலங்களில் மாவோயிஸ்டுகள் தொடர்பாக போலீசாரிடம் சிக்கிய சில ஆவணங்களின் மூலம் கிடைத்த தகவல் தான் இது. ஆனால், உண்மையான தொகை இதை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ராய்ப்பூரில் நிருபர்கள் பேட்டியில் இதுபற்றி அவர் கூறுகையில், 'சட்டீஸ்காரின் பாஸ்டார் பகுதியில் டெண்டு பட்டா எனப்படும் பீடி தொழில் பிரபலம். இத்தொழிலில் ஏராளமான பணம் புரளும். இவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு முக்கிய இலக்காக உள்ளனர். மேலும், அரசு பணிகளை கான்டிராக்ட் எடுப்பவர்கள் சுரங்க முதலாளிகள் ஆகியோரை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். 

வசூலாவதில் 20 சதவீதத்தை அடிமட்டத்தில் இருக்கும் நக்சல்கள் எடுத்துக்கொள்கிறார்கள். மீதி 80 சதவீதம் தலைமைக்கு போகிறது. பாஸ்டார் பகுதியில் அடர்ந்த காடுகள் இருப்பதால் வான்வழியே தாக்குதல் நடத்துவது சிரமம் என்று டி.ஜி.பி கூறினார். 
நம்பர மாதிரி இல்லையே. அவ்வளவு பணம் இருந்தா இன்னும் ரொம்ப பெருசா வளர்ந்து இருந்திருப்பார்கள். ஏன் ஒரு மாநிலத்தையே கைக்குள் கொண்டு வந்திருப்பார்கள். 80 சதவீதம் தலைமைக்கு போகிறது என்று சொல்லும்போது - ஒரு வேளை அங்கேயும் ஊழல் தலைவிரித்தாடுகிறதோ என்னவோ ?.

Posted by போவாஸ் | at 8:20 PM | 0 கருத்துக்கள்

வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்!

இலங்கை நிகழ்வுகள் குறித்து தான் எழுதாத கருத்துகளுக்கு வைகோ பதில் அளித்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார்.


விவேகம் இல்லாவிட்டால் வீரத்தால் பலன் ஏற்படாது என்ற கருத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாடகத்தில் தான் எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


முதல்வர் நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:


வார இதழ் ஒன்றில் வந்துள்ள பேட்டியில், ‘இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில்  இறந்தது  பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மௌனமாக அழுவது யாருக்கு தெரியும்?’ என்கிறாரே  கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு பதில் சொல்லப்பட்டிருக்கிறதே? 


இத்தனை ஆயிரம் பேர் இறந்தது பிரபாகரனால்’ என்று நான் எழுதவே இல்லை.  நான் எழுதாததை எழுதியதாக ஒரு கேள்வியை கேட்க செய்து, அதற்கு என்னை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் எழுதியதை மறைத்துவிட்டு கற்பனையாக அந்த  இதழின் சிறப்பு செய்தியாளர் கேள்வி கேட்டு, அப்படி நான் எழுதினேனா என்பதை தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னை தாக்கி பதில் சொல்லியிருப்பது என் மீது வசை பாடுவதற்காக இருவரும் சேர்ந்து  ஜோடித்த நாடகம்.


‘சகோதர யுத்தம்  நடத்தியதால்தான் பிரபாகரன்  தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?’ என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கும் உங்களை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே? 

பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை. ‘மாவீரன் மாத்தையா’ என்று ஒரு துரோகியை நீங்கள் அழைத்து விட்டதாக  அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்கிறாரே? மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான். ‘மாவீரன் மாத்தையா’ என்றுதான் அறிமுகம் செய்துவைத்தார்.    
‘வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப் படுத்தப்பட்டது என்று வேதனைப் படுகிறாரே கருணாநிதி?’ என்ற கேள்விக்கும் பதில் அளித்தவர் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உங்களை தாக்கி இருக்கிறாரே?
அது நான் எழுதிய கருத்துதான். அதில் என்ன தவறு? வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு நம்மை தாக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்க தோன்றும். வீரம் விவேகம் பற்றி நான் இப்போது கூறவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ‘சாக்ரடீஸ்’ ஓரங்க நாடகத்திலேயே ‘வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்!   அறிவாயுதம்! அறிவாயுதம்!’ என எழுதியிருக்கிறேன். 


அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர் இப்போது இழித்துரைக்கிறார். எனக்கு இன்னும் அந்த பேச்சுதான் நினைவில் நிற்கிறது. 


ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக இரண்டு பேரை கைது செய்து, ஒருவரை  விடுதலை செய்து விட்டு, தன் மீது மட்டும் வழக்கு போட்டிருப்பதாக உங்கள் மீது குற்றம் சொல்கிறாரே?
ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக கைது செய்யப்பட்டாலும், இருவரும் என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை அறிந்து, தவறாக பேசாதவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு, தவறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுப்பது முறைதானே? இதில் சட்டத்தை வளைப்பதற்கு என்ன இருக்கிறது? சண்டித்தனமாக பேசி விட்டு, பிறகு  எதற்காக புலம்ப வேண்டும்?


பிரபாகரனால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று கருணாநிதி சொல்கிறார் என்றால், அவர் சிங்கள அரசாங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக மாறிவிட்டதையே காட்டுகிறது’ என்று பேட்டியாளர் சாடியிருக்கிறாரே? 
அப்படி நான் கூறவில்லை. 24ம் தேதி எழுதிய ஒரு பதிலில்கூட ‘விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரை பொழிகின்றன. அதே நேரம் இளந்தலைவர் ராஜீவ் காந்தியும், அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும்,  முகுந்தனும், சிறீ சபாரத்னமும், பத்மநாபாவும் கொல்லப்பட்டபோது அவர்களை  இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினரும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?’ என்று எழுதினேன். இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் நான் கண்ணீர் வடிக்கிறேன்.  அதில் புலிகளும் இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், எந்த போராளிக் குழுவிலும் சேராத அப்பாவிகளும் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.       


புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை நினைத்து மௌனமாக குதூகலித்தவர் நீங்கள் என்று  சொல்லியிருக்கிறாரே?
மனசாட்சியை விற்று விட்டவர்கள் அப்படித்தான் கூறுவார்கள். ஈழ தமிழருக்காக 1956 முதல் குரல் கொடுத்தவன் நான். அவர்களுக்காக சிறை சென்றவன். நான் சிறைபட்டதற்காக பல இளைஞர்கள் தீ வைத்துக் கொண்டு தங்கள் இன்னுயிரை போக்கிக் கொண்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் பதவியை நானும் பேராசிரியரும் இலங்கை தமிழருக்காக ராஜினாமா செய்தோம். புலிகளுக்கு உதவியதாக காரணம் கூறப்பட்டு எனது ஆட்சியே கலைக்கப்பட்டது & ஒருமுறை அல்ல, இரண்டு முறை. விடுதலை புலிகளுக்கும் நிதி வசூலித்து கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர்கள் வாங்கிக் கொள்ளவில்லை. இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் புலிகளின் தலைவரை  கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இவர் நேற்றுகூட சந்தித் திருக்கிறார். புலிகளை பற்றி ஜெயலலிதா பேசாத பேச்சா? அவரின் இனிய சகோதரர் இவர். இவர் கூறுகிறார், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை கண்டு நான் குதூகலித்ததாக! 


தமிழ்ச் செல்வன் மறைந்தபோது நான் கண்ணீர் கவிதை எழுதினேன். அதனை கண்டித்து அறிக்கை விட்டவர் ஜெயலலிதா.


சந்திரஹாசனையும், பாலசிங்கத்தையும், சத்யேந்திராவையும் தமிழக காவல்துறை கைது செய்து நாடு கடத்தியபோது, அதை நிறுத்தாவிட்டால் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தி.மு.க. அறிவித்து போராட்டம் நடத்தியது. அதன் காரணமாக நாடு கடத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்படிப்பட்ட என்னைப் பார்த்து நான் புலிகள் படுகின்ற துன்பத்தை கண்டு மகிழ்ச்சி அடைவதாக பேட்டி கொடுக்கிறார்.   


அந்த வார இதழும் அதை வெளியிட்டு  மகிழ்ந்திருக்கிறது. ஒரு வகையில் எனக்கோர் மகிழ்ச்சி. நாம் பிரிவினை கேட்டு ‘தமிழ்நாடு  தமிழருக்கே & திராவிட நாடு  திராவிடருக்கே!’ என முழங்கியபோது, ‘எலி வளை எலிகளுக்கே’ என்று கேலிச் சித்திரம்  வரைந்து நம்மை கேலி செய்த ஏடு அது. அந்த காலம் மாறி, இன்று எலிகள் அல்ல புலிகள் என்று ஏற்றுக்கொண்டிருப்பது & அதுவும் தமிழ் ஈழம்  கேட்கிற அளவுக்கு மாறியிருப்பது மகத்தான மாறுதல். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Posted by போவாஸ் | at 2:14 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails