சென்னை சங்கமம் - தமிழர் கலைத் திருவிழா.


இந்த ஆண்டின் 'சென்னைச் சங்கமம்'  கலாச்சாரவிழா  10.01.2010  மாலை, சென்னைத் தீவுத்திடலில் பிரமாண்டமான அரங்கில் ஆரம்பமாகியது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பலகலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய 'பிறப்பொக்கும் ' நடன நிகழ்ச்சி இடம் பெற்றது.  
 சங்க காலம் முதல் தமிழர்களின் பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் நடனங்களின் தொகுப்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

தமிழர்களின் பல்வேறு கலை வடிவங்களுக்கும்  நிகழ்ச்சியில் இடம் பெற்றன. பனை ஓலை, தென்னோலை முதலானவற்றைக் கொண்டு வித்தியாசமானதும் , அழகானதுமான மிகப் பெரிய அரங்கத்தில் இந்நிகழ்வுகள் நிகழ்ந்நதன.
நிகழ்ச்சியில், துணமுதல்வர் ஸ்டாலின்,  மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,  மத்திய அமைச்சர் ஆ.ராசா, மத்திய இணை அமைச்சர் ஆர்.ஜெகத்ரட்சகன், உட்பட மேலும் அமைச்சரக்ளும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் கலந்து கொண்ட, விழாவைக் கண்டு மகிழ்ந்து சிறப்பித்தார்கள்.இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை, 17 இடங்களில் மொத்தம் 4 ஆயிரம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, தியாகராயநகர் நடேசன் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, போகன் வில்லா அண்ணாநகர், வளசரவாக்கம் பெரியார் விளையாட்டுத் திடல் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும், மாலை நேரங்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா, ஷெனாய் நகர் திரு.வி.க.பூங்கா, அசோக்நகர் பூங்கா, திருவொற்றிïர் விம்கோ நகர் மாநகராட்சி திடல், பாலவாக்கம் பல்கலைநகர் திடல், ராயபுரம் அண்ணா பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி அண்ணா அரங்கம் ஆகிய இடங்களில் மாலை நேரங்களில் கலைவிழாக்கள் நடைபெறுகின்றன.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மதியம் ஒரு மணியளவில் 11, 12 தேதிகளில் ராக் பேண்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இது தவிர, 11-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பல்லாவரம் கன்டோன்மென்ட் பள்ளி வளாகம், கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் அரங்கு, திரு.வி.க.நகர் மாநகராட்சி பள்ளி வளாகம், மெரினா லேடி வெலிங்டன் கல்லூரி அரங்கு ஆகிய இடங்களிலும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கடந்த ஆண்டு தியாகராயநகர் வெங்கட் நாராயணா சாலையில் விடிய, விடிய இசை, நடனம் போன்ற கொண்டாட்டம் நடந்ததைப் போல இந்த ஆண்டு அண்ணாநகர் பகுதியிலும் நடைபெறும். தியாகராயநகர் திருவிழா 13-ந் தேதி மாலை 7 மணி முதல் இரவு 2 மணிவரை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு போலவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் வேணு பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி, மதுரை ஜிகர்தண்டா போன்ற தல உணவு வகைகளும் சங்கமம் விழாவில் கிடைக்கும்.

இந்த ஆண்டு பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் தவிர மேற்கத்திய இசைக்குழுவினரும் பங்கேற்று தமிழில் இசைக்கின்றார்கள். `உலக அமைதி' என்ற பொருளில் இசை குழுக்களுக்கு இடையேயான போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

16-ந் தேதி காணும் பொங்கல் அன்று, பிரமாண்டமான வாண வேடிக்கையுடன் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் சென்னை சங்கமம் விழா நிறைவடைகிறது.

Posted by போவாஸ் | at 10:12 AM | 5 கருத்துக்கள்

Related Posts with Thumbnails