வேட்டைக்காரன் ஸ்பெஷல் - ஏம்பா, அந்த பையன போட்டு இந்த அடி அடிக்கிறாங்க.

"ஏம்பா, அந்த பையன போட்டு இந்த அடி அடிக்கிறாங்க.?."
"விஜயோட வேட்டைக்காரன் படத்தை பாத்துட்டு நல்லா இருக்கு, சூப்பர்னு சொன்னானாம்."


டாக்டர் : என்னய்யா நம்ம ஆஸ்பத்திரில இவ்ளோ கூட்டம் ?.
கம்பவுண்டர் : விஜய் நடிச்ச வேட்டைக்காரன் படத்தைப் பாத்துட்டு எல்லாருக்கும் கண்ணு, காதுல இருந்து ரத்தமா வழியுதாம்.கொஞ்ச பேருக்கு வாந்தி பேதியும் இருக்குங்க.


அம்மா தன மகளிடம் : மகளே நீ உன்னோட பிரண்ட்சோட சேர்ந்து பார்க், பீச், ஹோட்டலுக்கு, கோயிலுக்குன்னு எங்க வேணும்னாலும் போ. தப்பி தவறி வேட்டைக்காரன் சினிமாவுக்கு மட்டும் போயிடாத.


"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".





நண்பர் 1: என்னங்க வேட்டைக்காரன் விஜயோட நிலைமை இப்படி ஆயிடுச்சே ?.
நண்பர் 2: அது ஒன்னும் இல்லைங்க விஜய் வேற அரசியல்க்கு வராத சொல்லிட்டு  திரியாருல, அதனால வந்த வினைதான் இது. SUN pictures sketch போட்டு தூகறாங்க இவர. இன்னும் பொறுத்திருந்து பாருங்கல் என்னவெல்லாம் நடக்குதுன்னு...இவர இல்லாம பண்ண போறாங்க...! (உண்மையாக இருக்குமோ)

உங்க வாழ்க்கைல பொக்கிஷமா இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

விஜயின் படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு வித்யாசம் தெரியும்,அதாவது படத்தின் பெயரில் மட்டும் வித்யாசமாக இருக்கும் மற்றபடி எல்லாம் ஒரேமாதறி தான் இருக்கும் இதுவும் அப்படிதான் இருக்கு, அனுஷ்காவை பார்க்க இந்த படத்திற்கு போகலாம்.

விஜய் : வேற வேற வேற வேற வேற வேற வேற ஒரு நல்ல படத்தை போய்  பாருங்கையா.
ரசிகர்கள்: ?????

திரையிக்கு வந்து சில மணி நேரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம் "வேட்டைக்காரன்" திருட்டு வீ சீ டீ. ஆனாலும் ஒரு வீ சீ டீ கூட விக்கவில்லை.

"விஜயின் வேட்டைக்காரன் படம் பார்த்துவிட்டு வரும் மக்களுக்கு வாந்தி பேதி, மயக்கம், தலைசுற்றல் உள்ளான உடல் கோளாறுகள் ஏற்பட்டால்  உடனடியாக ஆங்காகே அமைந்திருக்கும் சிறப்பு மருத்துவ முகாமுக்கு சென்று சிகிச்சைப் பெற்று கொள்ளவும்". - தமிழக அரசு.

(சும்மா ஜோக்குக்குதாங்க)


Posted by போவாஸ் | at 11:44 PM | 4 கருத்துக்கள்

93 விழுக்காடு இந்தியர்கள் தூக்கத்தை இழந்துவிட்டனர்: ஆய்வுத் தகவல்


பெரும்பாலான இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்களும், தொழில் முனைவோரும் தூக்கம் இன்மையுடன் தொடர்புடைய இடர்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று பிலிப்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம் வெளியிட்டு உள்ள ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[bxp52648.jpg]

வளமான உடல் நலத்துக்கு எட்டுமணி நேர உறக்கம் தேவை. எட்டு மணி நேரம் பணி, எட்டுமணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்பது மனிதனுக்கு வகுக்கப்பட்ட நியதியாகும். ஆனால், பணம் ஒன்றே அனைத்தும் என்ற இலக்கோடு வேகமாக இயங்கி வரும் இன்றைய உலகில், எட்டு மணி நேர உறக்கம் என்பதே இயலாததாக ஆகிவிட்டது.
உறக்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், தூக்கமின்மையால் உடல் நலம் பாதிக்கப்படுவது கவனிக்கப்படாமல் விட்டுவிடப்படுகிறது. 2009 நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் அய்ந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழும் 35 முதல் 65 வயதுக்கு உட்பட்ட 5600 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் இந்த ஆய்விலிருந்து விலக்கப்பட்டனர். எஞ்சியவர்களில் 93 விழுக்காட்டினர் தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 58 விழுக்காட்டினர் இத்தகைய தூக்கமின்மையால் தங்களின் பணி பாதிக்கப்படுவதாகக் கூறினர். பணி நேரத்தில் தூங்கிவிடுவதைத் தவிர்க்க 11 விழுக்காட்டினர் விடுப்பு எடுக்கின்றனர்.
தூக்கமின்மையும், வேலையில் கவனமின்மையும் இணைவதால் ஏற்படும் அலை பாயும் மனநிலை குடும்ப உறவுகளைப் பாதிப்பதாகக் கூறினர். 74 விழுக்காட்டினர் தூங்கும் நேரங்களில் இரைச்சலாலும், இயற்கை அழைப்புகளாலும் தூக்கம் கலைகின்ற-னர். 62 விழுக்காட்டினர் குரட்டை போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். குரட்டை விடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்களின் ஆபத்து உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.
நல்ல உறக்கம் இல்லாததால் உடல் நலிவடைவதை 87 விழுக்காட்-டினர் உணர்ந்தாலும், 2 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவர்களை அணுகுகின்றனர்; மற்றவர்கள் அதைப் பொருட்படுத்துவதேயில்லை.

Posted by போவாஸ் | at 10:11 PM | 0 கருத்துக்கள்

இந்தியாவில் முதன்முறையாக கருணைக்கொலைக்கு உச்சநீதிமன்றம்அனுமதி

 மூளைச்சாவு அடைந்த ஒரு பெண்மணி மரணத்தை தழுவிக் கொள்ள உச்சநீதிமன்-றம் அனுமதி அளித்துள்ளது.



அருணா சான்பெக், மும்பையைச் சார்ந்த ஒரு செவிலியர் 1973-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கோரச் சம்பவம் அவருடைய வாழ்க்கையை சிதைத்தது. ஒரு காமுகனால் சீரழிக்கப்பட்டதுடன் அவருடைய மூளையும் இந்த சம்பவத்தினால் செயலிழந்தது. கடந்த 36 ஆண்டுகளாக எந்தவித உணர்வும் இல்லாமல் இருக்கிறார் அருணா.
இவரைப்பற்றி புத்தகம் எழுதிய பிங்கி விரானி என்ற பத்திரிகையாளர் எந்தவித உணர்வும் இல்லாமல் ஒரு காய்கறியைப்போல இருக்கும் அருணாவை கருணைக் கொலை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்திடம் கோரியிருந்தார். மருத்துவமனை மற்றும் மகாராட்டிர மாநில அரசிடம் அருணா பற்றிய மருத்துவ தகவல்களை தருமாறு நீதிமன்றம் கேட்டு பெற்றது.
கடந்த 1973 ஆம் ஆண்டுமுதல் உணர்வில்லாத நிலையில் இருக்கும் அருணாவை கருணைக் கொலை செய்யலாம் என நேற்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரு-ணைக் கொலை சம்பந்தமாக உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

Posted by போவாஸ் | at 9:57 PM | 0 கருத்துக்கள்

பருவநிலை மாற்றத்தால் இடம்பெயரும் மக்கள் !!

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள், தென் கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்வர் என, குடியேற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, சர்வதேச குடியேற்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி: பருவநிலை மாற்றத்தால், வரும் 2050ம் ஆண்டு, இரண்டரை கோடி முதல் 100 கோடி மக்கள் வரை இடம் பெயர்வர். சுற்றுச்சூழல் மாசு மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நெருக்கடி காரணமாக, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கே எதிர்காலத்தில் பெரும்பாலான மக்கள், இடம்பெயர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top world news stories and headlines detail


உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், கடந்தாண்டு திடீரென ஏற்பட்ட பேரழிவுகளால், இரண்டு கோடி மக்கள் வீடிழந்துள்ளனர். இவ்வாறு பருவநிலை மாற்றத்தால் அகதிகளாக மாறியோர், பலர் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வளமான பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலோர், ஏற்கனவே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்கு சென்றுள்ளதால், அங்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


பொதுவாக, பெரும்பாலான நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் இடம் பெயர்தலை தங்கள் நாட்டுக்குள்ளேயே சமாளித்துக் கொள்கின்றன. ஆனால், சிறிய தீவுகள், கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் போது சர்வதேச அளவில் இடம் பெயரும் நிலை உண்டாகிறது.
மேலும், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள் வரை இடம்பெயர்வர் என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளின் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் பருவநிலை மாற்றங்களால், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளவிலான வெப்பநிலை 2 டிகிரி சென்டிகிரேடு முதல் 5 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரிக்கலாம். 
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
--------------------------------------------------

பருவ நிலை மாற்றத்தால் பலவித நோய்கள் பாதிப்பு


பருவ நிலை மாற்றத்தால் பலர் பலவித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஜலதோஷம், காய்ச்சல், உடம்பு வலி, தொண்டை வலி, தோல் நோய்களால் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை பருவநிலை மாற்றத்தால் வழக்கத்தைவிட அதிகமானவர்கள் உடல்நிலை பாதிப் பால் அவதிப்படுகின்றனர். கடந்த 10 நாட்களாக ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் 20 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மாறுபட்ட சூழ்நிலையை உணர்ந்து குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். 

மனித உடல் 99.4 பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும். இதன் அளவு குறையும்போது நுரையீரல் பாதிப்பு காரணமாக சுவாச மண்டல நோய் வரும். இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அதனால் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடக் கூடாது. காய்கறி, பருப்பு, ரசம், காளான், பூண்டு, இஞ்சி போன்ற பொருட்களில் தயார் செய்யும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். 

ஏசியை தவிர்க்க வேண்டும். பருத்தி, கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். மார்பிள், டைல்ஸ் தரையில் வெறும் காலுடன் நடக்க கூடாது. காய்ச்சிய குடிநீரையே குடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதால், தலையை காப்பாற்றிக் கொள்வதுடன், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

Posted by போவாஸ் | at 4:01 PM | 1 கருத்துக்கள்

மூளைக்கு 'ஓவர் லோடு': சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்



இன்றைய நிலையில் மூளைக்கு அதிகமான தகவல்களை "ஓவர் லோடு' செய்வதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.


எங்கும், எதிலும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள் கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு லட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர். கடந்த 1980ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக்குள் செலுத்தப்பட்டன. ஆனால், 2008ம் ஆண்டில் 10 ஆயி ரத்து 845 டிரில்லியனாக உயர்ந்து விட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி மற்றும் ஊடகங் களில் இருந்து பெறப்பட்ட தகவல் களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம்.என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட் டுள்ளது. இது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப் படுகிறது. இது, ஒரு வாரத்தில் லேப்- டாப் கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பல் கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.


சாண்டியாகோ பல்கலைக் கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில்,"அதிக தகவல்களை திணிப்பதால், குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைபடுகிறது' என்கிறார். "பரபரப்பாக கம்ப்யூட்டரை இயக் கவும், மொபைல்போனில் பேசவும், "டிவி' பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர். அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில், தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும்' என்று நியூயார்க்கில் உள்ள மனநோய் மருத்துவர் எட்வர்டு ஹாலோவெல் தெரிவிக்கிறார்.


"கடந்த 20 ஆண்டுக்கு முன் கற்றதை விட, தற்போது, மக்கள் அதிகமாக கற்றுக் கொள்கின்றனர். இதனால், மூளையை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன் படுத்துவதை பொறுத்தது. மூளையில் புதிய செல்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும்' என்று ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் காலின் பிளாக்மோர் கூறுகிறார்.


நன்றி: தினமலர்.

Posted by போவாஸ் | at 3:40 PM | 0 கருத்துக்கள்

வேட்டைக்காரன் விஜய் vs கேப்டன் விஜயகாந்து



Posted by போவாஸ் | at 2:07 PM | 0 கருத்துக்கள்

வேட்டைக்காரனும்....கவுண்டமணியும்.



ஏற்கனவே பல விஜய் ஜோக்ஸ், வேட்டைக்காரன் குறித்த ஜோக்ஸ் படிச்சு சிரிச்சவுங்க..இதையும் பாத்து சிரிங்க.


இந்த பாடலுக்கு கவுண்டமணியை வைத்து மிக்ஸ் பண்ணி எடிட் பண்ணிய புண்ணியவானுக்கு நன்றி.

Posted by போவாஸ் | at 1:12 PM | 0 கருத்துக்கள்

தேர்தல் முடிந்ததும் கொடநாடு..ஸ்டாலின்

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது புதியதாக 'ஜெயலலிதா புளுகு' என்றும் சேர்த்துக் கொள்ளலாம் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.





வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் ஸ்டாலின் பேசுகையில்,



முன்னாள் முதல்வர், இன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவைப்போல் மக்களைப் புறக்கணிப்பவர்கள் நாங்கள் அல்ல.


தேர்தல் நேரங்களில் மட்டுமே அவருக்கு மக்கள் நினைவுக்கு வருவார்கள். தேர்தல் வந்தால் மட்டுமே உங்களை சந்திக்க அவப் வருவார்.

திமுகவினரும், முதல்வர் கருணாநிதியும் எப்போதும் மக்களுடளுடன் மக்களாக இருப்பவர்கள்.


இப்போது வந்தவாசி இடைத்தேர்தலுக்காக மக்களை சந்திக்க வந்த ஜெயலலிதா, தேர்தல் முடிந்த பிறகு கொடநாட்டிற்கு சென்று விடுவார். அங்கே அவர் இருப்பது ஓய்விற்கா? ஆய்விற்கா? அது நமக்கு தெரியாது.


ஆனால் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து ஓயாமல் செயல்படுபவர், கருணாநிதி.


ஆட்சியில் இருந்தால் திட்டங்கள் தீட்டுவோம். எதிர்கட்சியாக இருந்தால் போராட்டம் நடத்துவோம் என்கிறார். ஜெயலலிதா எங்கே இருந்து போராட்டம் நடத்துவார்? கொடநாட்டிலா?.


வந்தவாசி வறண்டவாசியாக உள்ளது என்கிறார் 'சுகவாசி' ஜெயலலிதா. கடந்த 3 ஆண்டுகளில் வந்தவாசி நகராட்சி பகுதியில் சுமார் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் சாலை, மழைநீர் வடிகால், நவீன கழிப்பிடங்கள், மருத்துவமனை மேம்பாட்டு பணிகள் என்று பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி விரைவில் தொடங்க நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வந்தவாசி தொகுதி விரைவில் 'வளர்ந்த வாசி'யாக மாறும்.


10 வருடம் முதல்வராக இருந்த ஜெயலலிதா வந்தவாசி பற்றி நினைத்தாவது பார்த்திருப்பாரா?. இந்த ஊர் மக்களைப் பற்றி எப்போதாவது நினைத்திருப்பாரா?. தமிழ்நாட்டை பற்றியே கவலைப்படாத ஜெயலலிதா வந்தவாசியைப் பற்றியா கவலைப்படுவார்?.


இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை நான் தான் வழங்கினேன் என்ற ஒரு அபாண்டமான பொய்யை இங்கு அவிழ்த்து விட்டிருக்கிறார் ஜெயலலிதா.


அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது புதியதாக 'ஜெயலலிதா புளுகு' என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.


இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு, உலமாக்களுக்கு நலவாரியம் என இஸ்லாமியர்களுக்கு பல சலுகைகளை வழங்கியவர் கருணாநிதி.


ஜெயலலிதாவால் தனது ஆட்சியில் சாதனையாகவும் எதையும் கூற முடியவில்லை. திமுக அரசின் சாதனை திட்டங்களை குறை கூறவும் முடியவில்லை என்பதால் புழுவாய் துடிக்கிறார் என்றார் ஸ்டாலின்.

Posted by போவாஸ் | at 1:03 PM | 0 கருத்துக்கள்

உரி​ய​வ​ருக்கு வாக்​க​ளிப்​பது அற​நெறி​: முதல்​வர் கரு​ணா​நிதி

இடைத்தேர்தல் களத்தில் நிற்கும் இரு தரப்பினரும் (திமுக, அதிமுக) அமைதி வழியில், அன்பு வழியில் பணியாற்ற வேண்டும். மோதலைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தல்களில் தங்கள் தொகுதிகளின் சார்பில் சட்டமன்றத்துக்கு யாரை அனுப்பி வைப்பது என்ற பொறுப்பை ஏற்றுள்ள வாக்காளப் பெருமக்களுக்கு என் பணிவான வேண்டுகோளை இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கமாக இடைத் தேர்தலில் ஏற்படும் வன்முறைகள் -வசைமாரிகள் இவையனைத்துக்கும் செவி சாய்க்காமல் -இப்போது களத்தில் நிற்கும் இருதரப்புப் பிரதான உடன்பிறப்புகள் - தோழர்கள்- பிரமுகர்கள் அமைதியான முறையில் வாக்கு சேகரித்து, எப்படியும் வென்றே தீரவேண்டும் என்று வெறிகொள்ளாமல்; ஜனநாயக ரீதியிலும், காந்தியடிகள் கடைப்பிடித்த அமைதி, அகிம்சா வழியிலும், பெரியார் வலியுறுத்திய மனித நேய உணர்வுடனும், அண்ணா, காமராஜர் ஆகியோர் விரும்பிய அறவழி -அன்பு வழியை மறந்துவிடாமலும் பணிபுரிந்து வெற்றியை ஈட்டி; நமது பண்பாட்டை நிலை நிறுத்திட வேண்டுகிறேன்.

எதிரும் புதிருமான இரு வரிசைகளில் இருப்போர் என்றைக்கும் என் உடன் பிறப்புக்கள் - ஒருவரையொருவர் தாக்கிப் பேசி தரக்குறைவான வார்த்தைகளை வீசிடும்போது; அதை சகோதரப் பாசத்துடன் சகித்துக் கொண்டு -இருவரில் ஒருவர் தோற்பினும் அது இனத்துக்குக் கிடைத்திடும் தோல்வியே என்றும் - களத்தில் தோற்காமல் நிற்கப்போவது கடமை, கண்ணியம், கட்டுப்பாடுதான் என்றும் கவனப்படுத்தி, மக்களுக்கான கழகப் பணியாற்றி வாழ்வின் உச்சியில் நிற்பவன் என்ற முறையில் அந்த உச்சியிலிருந்து உணர்வு கலந்து விடுக்கும் என் வேண்டுகோள் இதுதான்:

"இடைத் தேர்தலில் மோதும் இரு வரிசைகளில் ஜனநாயக மாமணிகள் கோக்கப்பட்டு உண்மையிலேயே கொள்கை உறுதியுடனும் -லட்சிய தாகத்துடனும் வெற்றிக் கேடயம் ஏந்தி வரும் கொள்கை வீரர் யார் -அவர் உலவும் கொள்கைப் பாசறை எது -என்பதையெல்லாம் ஆய்ந்து, அறிந்து, தெளிந்து - அவர்தம் கரங்களில் வெற்றிக் கனியைத் தரும்போது -அதைப் பெற்றுக் கொள்ள; தாள் பணிந்து கழக அணியினர் தயாராக இருக்கும்போது "உரியவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்ள உரிமையுண்டு'' என்பதை உணர்ந்து, அதற்கான ஆதரவை அளிப்பதுதான் அறநெறியாகும் என்பதையும் -அரசியலில் ஜனநாயக நெறி விரும்புவோரின் கட்டாயக் கடமை என்பதையும் கனிவுடன் நினைவுபடுத்தி -இன்றைய இடைத் தேர்தல்களில் பகலவனைக் கண்ட பனி போல பகை மாய்ந்து இருதரப்பினரும் ஜனநாயகக் கனியை மகிழ்ந்து சுவைத்திட வாக்காளப் பெருமக்கள் -வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளில் - கடமையாற்ற வாரீர் வாரீர் என்று கரம் கூப்பி அழைக்கின்றேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Posted by போவாஸ் | at 11:09 AM | 0 கருத்துக்கள்

அஜால் குஜால்



அஜால் : ஏம்பா,  விரைவில் கேபடன் டிவி, கேப்டன் முரசு வரப்போகிறது அதில் நான் 'பெரிய கொண்டை ஊசி' என்ற பெயரில் எழுதப் போகிறேன்"னு விஜயகாந்து சொல்லியிருக்காரே.


குஜால் : ஒரு அறிக்கையே தெளிவா தயார் பண்ணவே தெரியாது....இதுல இவராவது எழுதுராவது... இவர் சொல்றதப் பார்த்தா, அறிக்கைகளை மட்டும் எழுதித்தரும் பண்ரூட்டியாருக்கு கூடுதல் வேலை  கொடுத்திருக்காருன்னு மட்டும் தெரியுது.


காங்கிரஸ் எம்.எல்.ஏ., அருள் அன் பரசு: ஒன்றுபட்ட ரஷ்யா எப்படி இருந்தது; இன்று அதன் நிலைமை என்ன? அதுபோல எந்த நாட்டிற்கும் வரக் கூடாது. பிரிவினைவாதம் நாட்டிற்கு நல்லதல்ல.


குஜால் :  அட என்ன நீங்க ரஷியவேல்லாம் இழுக்குறீங்க. உங்க காக்கிராஸ் கட்சியப் பாருங்க. ஒண்ணா இருந்த காங்கிரஸ் கட்சி எப்படி இருந்துச்சு...இன்னைக்கு எப்படி இருக்கு ?.ஒண்ணா இருந்திருந்தா ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சியை அமைச்சிருக்கலாம்...அட்வைஸ் எல்லாம் மத்தவங்களுக்குதானே.

Posted by போவாஸ் | at 12:38 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails