போட்டோ கமெண்ட்ஸ் - 5


தகுந்த நேரத்தில் உதவி செய்த மக்களுக்கு ஒரு SALUTE.
மலரட்டும் மனித நேயம்.



தம்பி...மேப்புல இந்தியானு போட்டுருக்கு...
ஆந்திராஎங்க இருக்கு?



இப்படி அழுகுற மாதிரி மூஞ்ச வச்சுக்கிட்டு இருந்தாலும்
ஒரு பய மதிக்க மாட்டேங்குறானே.



நாந்தான் 21 ம் நூற்றாண்டின் பீமன்..
இது எப்படி இருக்கு ?



மாத்தி யோசி படத்தோட ஹீரோக்கள்.
ரொம்ப யோசிச்சிட்டாங்க போல.?



அறுபதிலும் ஆசை வரும்னு 
சும்மாவா சொன்னாங்க.



யம்மாடி..வாரத்துக்கு ஏழு நாளு இருக்கு.
இதுல ரெண்டு குறையுதே.



ஐ...ஒரு குடும்பக் குத்துவிளக்கு
குத்துவிளக்கு ஏற்றுகிறதே !!!



அப்போ நான் போயிட்டு வரேங்க மேடம்.

Posted by போவாஸ் | at 11:46 PM | 2 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள்


ஒருவர் : சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
மற்றொருவர் : எப்படிச் சொல்றீங்க ?
ஒருவர் : ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
திருடன் : என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.
நீதிபதி : எப்படி ?
திருடன் : ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.
நண்பர் 1 : தீபாவளிக்கு ரிலீசாகற படங்கறதால இந்த மாதிரி சீன் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.
நண்பர் 2 : என்ன சீன்?
நண்பர் 1 : ஹீரோயின் தொப்புள்ல சங்குச் சக்கரம் விடறமாதிரி!
வேலு : "விசிடி கடையெல்லாம் மூடினதால நம்ம டைரக்டர் கை ஒடிஞ்ச மாதிரி ஆயிட்டார்"
ரமனன் : "ஏன் இவங்கதானே திருட்டு வி.சி.டி.ய ஒழிக்கனும்னு குதிச்சாங்க?"
வேலு : "தமிழ் சிடிக்கள மட்டும்தான் சொன்னாங்க இங்கிலீஷையும் ஒழிச்சுட்டா எதப்பாத்து இவர் படம் எடுக்க முடியும்"
கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?
நண்பர் 1 : நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?
நண்பர் 2 : சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்.
ரானி : தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
வேனி : தெரியலையே .. .. என்னது ?
ரானி : தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
நோயாளியின் மனைவி : எப்படி சொல்றீங்க?
டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!

ஒருவர் : டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.
மற்றொருவர் : மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு.
பாபு : அவர் ஏன் காரை ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.
கோபு : காரை விக்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்.
ரமனன் : என்னப்பா இது எலக்ட்ரிக் ட்ரெயின் டிரைவர போய் ஈவ் டீசிங் கேஸ்ல புடிச்சுட்டு வந்திருக்கீங்க?
வேலு : லைன்ல நடந்து போய்ட்டு இருந்த காலேஜ் பொண்ணு மேல ட்ரயினால மோதிட்டாராம்.
பாக்கி : டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு!
டாக்டர் : நீங்க சொல்லவே வேண்டாம் எங்கிட்ட நீங்க வந்ததவச்சே புரிஞ்சுக்க முடியும்.
நண்பர் 1 : இதோ தர்றேன் அவசரப்படாதீங்க எல்லாருக்கும் உண்டு அப்டீன்னு 100, 200ன்னு ரூபாய அள்ளி வீசுறாரே அவர் என்ன பெரிய கோடீஸ்வரரா?
நண்பர் 2 : நீ வேற வாங்கின கடனை திருப்பி வாங்க சம்பளத்தன்னிக்கி ஆபிஸ்க்கே கடன்காரங்க வந்திருக்காங்க.
ஒருவர் : அந்த சலூன் கடைக்காரரை ஏன் கைது செஞ்சாங்க?
மற்றொருவர் : "தலை சீவிட்டாராம்"
கோபு : 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையப் படிச்சதும் நீங்களா இப்டி எழுதியிருக்கீங்கன்னு ஆச்சரியமா இருந்தது.
பாபு : உங்களுக்காவது ஆச்சரியம் எனக்கு சந்தேகமா இருந்தது.
ரமனன் : என்னது நம்ம பத்திரிகை ஆபீஸ்லேந்து திருடிட்டு போனவன் திருப்பி பார்சல் அனுப்பியிருக்கானா?
பாபு : அதை ஏன் கேக்கறீங்க? பத்திரிகைக்கு வந்த கதையெல்லாம் படுகண்றாவியா இருக்குன்னு திருப்பி அனுப்சுட்டான் சண்டாளன்.

Posted by போவாஸ் | at 4:37 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails