அமைச்சர் அன்பழகன் 88-வது பிறந்தநாள்: கருணாநிதி- மு.க. ஸ்டாலின் வாழ்த்து


நிதி அமைச்சர் அன்பழகன் 88-வது பிறந்தநாளை இன்று எளிமையாக கொண்டாடி னார். இதையொட்டி அவ ருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

முதல்-அமைச்சர் கருணாநிதி தொலைபேசி மூலம் அமைச்சர் அன்பழகனை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

 துணை முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பரிதி இளம்வழுதி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ. அன்பழகன், வி.எஸ். பாபு, காங்கிரஸ் சார்பில் சுதர்சனம் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்தினார்கள். போன் மூலமும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
-----------------------------
இன்றைய சூழ்நிலைகளில், எந்த ஒரு ஏச்சு பேச்சுகளும், சர்ச்சைகளிலும், வம்பு தும்புகளிலும் சிக்காத....ஒரு நல்ல அரசியல்வாதி.


அடுத்த தலைமுறைக்கு எடுத்தக்காட்டாக விளங்கும் அரசியல்வாதி.


பேராசிரியர் அன்பழகன் அவர்களை வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்.
------------------------------

Posted by போவாஸ் | at 10:07 PM | 0 கருத்துக்கள்

வாடகைத் தாய் மோகம் : சென்னை வரும் வெளிநாட்டினர் அதிகரிப்பு


குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாத வெளி நாட்டில் வாழும் இணையர்களில் பலர், வாடகைத் தாய் மூலம் தங்களது வாரிசுகளைப் பெற்றுக் கொள்ள சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவ மனைகளுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.

திருமணம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை பல இணையர்களுக்கு உள்ளது. ஆண்களின் உயிரணுக்கள் போதிய அளவில் இருந்தபோதும், சில பெண்களின் உடலமைப்பில் கருத்தரிக்க முடியாத நிலை உள்ளதால், இவர்களுக்கு வாரிசு இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது.


இதைப் போக்க நவீன மருத்துவ வளர்ச்சியில் கணவனின் உயிரணுக்களை, ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தி வாரிசு உருவாக்கும் முறை தற்போது உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் வாழும் இணையர்கள் அதிக அளவில் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.


குஜராத் மாநிலத்திலும், சென்னையிலும் பலர் இவ்வாறு வாடகைத் தாய்களாக செயல்பட்டு வருகின்றனர். மருத்துவ உலகிலே சிறந்த இடமாகக் கருதப்படுவது சென்னை. சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் இவ்வாறு வாடகைத் தாயாக இருக்க சம்மதித்த, சோதனை மூலம் தகுதி வாய்ந்தவர் என்று கருதப்படும் 30 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.


40 வயதைக் கடந்த அமெரிக்க நாட்டு இணையர்களுக்கு இவ்வாறு வாடகைத் தாய் மூலம் வாரிசு கிடைத்தது அவர்-களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் ஜெர்மனி நாட்டில் குழந்தைக்குக் குடியுரிமை கிடைக்காது என்பதால் ஏமாற்றமடைந்த ஜெர்மன் நாட்டு இணையர் நாடு திரும்பினர் என்று பிரசாந்த் கருத்தரிப்பு மய்ய மருத்துவர் கீதா தெரிவித்தார்.


வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் அனுமதித்துள்ளன என்பதால், இந்நாடுகளில் இருந்து இதற்காக இந்தியா வரும் இணையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நன்றி:விடுதலை ஏடு.

Posted by போவாஸ் | at 6:55 PM | 0 கருத்துக்கள்

சென்னையில் அரவாணிகள் “மிஸ் இந்தியா” போட்டி

சென்னையில் “மிஸ் இந்தியா” போட்டி: “சிக்” ஆடையில் அணிவகுத்த அழகு அரவாணிகள்அரவாணிகளுக்கு முதன் முதலாக அகில இந்திய அளவில் அழகி போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஓட்டலில் இதற்கான போட்டி இன்று நடந்தது. போலீஸ் கூடுதல் கமிஷனர் எம்.ரவி அழகி போட்டியை தொடங்கி வைத்தார்.
 
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மணிப்பூர், கோவா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில் இருந்து 120 அரவாணிகள் கலந்து கொண்டனர். 800 அரவாணிகள் நாடு முழுவதும் இருந்து போட்டியைகாண குவிந்தனர்.
 
கூந்தல் அழகு, நடை அழகு, கண்கள் அழகு, அழகான தோல், மிஸ் இந்தியா ஆகிய கட்டங்களாக போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்ற அரவாணிகள் அழகான ஆடைகளில் ஒய்யாரமாக அணிவகுத்து வந்தனர். விதவிதமான கூந்தலில் தங்கள் அழகை வெளிப்படுத்தினார்கள். கவர்ச்சி கண்களை சிமிட்டி பார்வையாளர்களை அசர வைத்தனர்.
 
மாலையில் மிஸ் இந்தியா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்படும். நடை, உடை, கண் என ஒவ்வொரு போட்டியிலும் 3 அரவாணிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்படும் அரவாணிக்கு பரிசுத்தொகையும், பதக்கமும் வழங்கப்படும்.
 
இந்த போட்டியை இந்திய சமுதாய நல அமைப்பு நிறுவனம் நடத்துகிறது. அதன் அமைப்பு செயலாளர் அரிகரன் கூறுகையில், 3 ஆண்டுக்கு ஒருமுறை இது போன்ற அழகி போட்டி அரவாணிகளுக்கு நடத்தப்படும். இனி 2012-ம் ஆண்டு நடைபெறும் என்றார்.
-------------------------
அரவாணிகளின் வாழ்க்கைத் தரம் மாறிட, மேன்மை அடைந்திட போட்டிகள், விழிப்புணர்வுகள் தேவைதான். ஆனால் அழகிப் போட்டி நடத்துவது தான் கேவலத்திலும் கேவலம்.

வேறு விதமான போட்டிகள் மூலம் தங்கள் திறமையை வெளிபடுத்த வாய்ப்புகள் அமையும்.

Posted by போவாஸ் | at 6:26 PM | 0 கருத்துக்கள்

அதிக தனிநபர் உற்பத்தி அமெரிக்கா 10வது இடம்தனிநபர் உற்பத்தி அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு 10வது இடமே கிடைத்தது. முதலிடத்தை குட்டி நாடான லீச்டென்ஸ்டீன் பிடித்தது.
Swine Flu

உலகின் டாப் 10 தனிநபர் உற்பத்தி கொண்ட நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா நாடுகள் இடையே உள்ள மிகக் குட்டி நாடான லீச்டென்ஸ்டீன் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.55.46 லட்சம். அங்கு இயற்கை வளம் குறைவு என்பதால் தொழிற்சாலைகள் அதிகம். அதாவது, மக்கள் எண்ணிக்கையைவிட ஆலைகள் அதிகம்.ரூ.48.64 லட்சம் தனிநபர் உற்பத்தியுடன் கத்தார் 2வது இடம் வகிக்கிறது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் கொழிக்கும் நாடு அது. 


ஐரோப்பிய தன்னாட்சி நகரான லக்சம்பெர்க் 3ம் இடம் பெற்றுள்ளது. அங்கு தனிநபர் உற்பத்தி ரூ.38.11 லட்சம். 4 முதல் 9ம் இடம் வரை முறையே பெர்முடா, குவைத், ஜெர்சி, நார்வே, புருனே, சிங்கப்பூர் ஆகியவை வகிக்கின்றன. 


கத்தார் போலவே எண்ணெய் வளம் மிக்க மற்றொரு குட்டி நாடான குவைத், இந்தப் பட்டியலில் 5ம் இடம் பெற்றது. அங்கு தனிநபர் உற்பத்தி ரூ.26.98 லட்சம். 


பணக்கார நாடு மற்றும் உலக நாடுகளின் முன்னோடி என கருதப்படும் அமெரிக்காவுக்கு தனிநபர் உற்பத்தியில் 10வது இடமே கிடைத்தது. அங்கு தனிநபர் ஆண்டு உற்பத்தி ரூ.22.09 லட்சம்.

Posted by போவாஸ் | at 1:28 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails