விஜய் என்றொரு மகா நடிகன்


அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ கட்சியில் சேரும் முன்னரே பல விதமான கண்டனங்களையும், கருத்துக்களையும் எதிர் கொள்ளும் விஜய். காங்கிரஸில் சேரும் தன முடிவை மாற்றிக் கொள்வாரா ?.

பல கண்டனங்கள், கிண்டல்கள், எதிர்ப்புகள், விவாதங்கள் தொடருகின்றன.

விடுதலைப் புலிகள் நல்லவர்களோ கெட்டவர்களோ, இலங்கை அரசாங்கம் நல்ல அரசாங்கமோ கேட்ட அரசாங்கமோ,

ஆனால் நம் உடன் பிறவாத அண்ணன், தம்பி, அக்க, தங்கை, அம்மா, அப்பா நம் இன மக்களை அழிக்க இந்தியாவும் காங்கிரசும் துணை போனது அனைவரும் அறிந்த ஒன்று.

இன்றும் நம் மக்கள் பல பிரச்சனைகளுடந்தான் இருக்கின்றனர்.
அவர்களும் படும் வேதனைகளை பார்க்கும் போதும், அது தொடர்பான விஷயங்களைக் கேட்க்கும்போதும் நம் கண்களின் ஓரத்தில் ஒரு துளியாவது கண்ணீர் வருவது நிச்சயம்.

இலங்கையில் போர் நடந்த பொது இந்த விஜய் ஒரு காரியம் செய்தார்.

அது என்ன ?. வாருங்கள்....ஒரு சின்ன பிளாஷ் பேக்.


Friday, November 14 2008

நெல்லையில் வில்லு படப்பிடிப்பில் நிருபர்கதளிடம் விஜய் கூறியதாவது:

இலங்கையில் கொல்லப்படும் நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அங்கு பூரண சுதந்திரத்துடன் வாழ வகை செய்யப்பட வேண்டும். போர் நிறுத்தம் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். இந்த நோக்கங்களுக்காகத்தான் சென்னையில் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன்.

அதற்காக பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு எனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாரத பிரதமருக்கு தந்தி அனுப்பியதற்கு நன்றி.

இலங்கையில் தமிழ் மக்கள் தங்களின் சொந்த இடத்தை விட்டு விட்டு உயிரைக் காப்பாற்ற காடுகளுக்குள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கை தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் படுகொலையை கண்டித்து தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயம், நேரம் வந்துள்ளது என்பதை உணர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என எனது நற்பணி மன்றத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

அதை ஏற்றுத்தான் வருகிற 16ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருக்கிறோம் அதாவது காவிரிப் பிரச்சினைக்காக ரஜினி உண்ணாவிரதமிருந்த இடம். இதில் நான் கலந்து கொள்வேன்.

இதேபோல மாவட்ட தலை நகரங்களிலும், மற்ற நகரங்களிலும் நடக்கும் உண்ணாவிரதத்தில் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கிற்கு பங்கம் ஏற்படாமல் உண்ணாவிரதம் நடத்த வேண்டும்.

அங்குள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும். எனவே உண்ணாவிரதத்தின் போது துயரத்தின் அடையாளமாக கறுப்புத் துணியுடன் மவுனமாகவும், அமைதியாகவும், அகிம்சை வழியில் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்றார் விஜய்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில்,

இலங்கை தமிழ் சகோதர-சகோதரிகளின் படுகொலையை கண்டித்து, தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயமும், நேரமும் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து, நம் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று அனைவரும் எனக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள்.

ஆகவே வரும் 16ம் தேதி நற்பணி இயக்கத்தினரோடு சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து ஈழ தமிழர்கள் மீது நமக்கு இருக்கும் பரிவையும், பாசத்தையும் வெளிக்காட்ட நான் முடிவு செய்திருக்கிறேன். காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை உண்ணாவிரதம் நடைபெறும்.

அதே நாளில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், அத்தனை நகரங்களிலும் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜய் பேசியதாவது.

November 16, 2008









விஜய் பேசியதாவது-

இலங்கை பிரச்சனையை சின்ன வயது முதல் நானும் அறிந்து இருக்கிறேன். நீங்களும் அறிந்து இருப்பீர்கள். கடந்த இரண்டு மாதங்களாக பத்திரிகைகளிலும், டிவியிலும் வருகிற தகவல்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நம் ஊரில் விமானம் பறந்து போவதை பார்த்து சிறுவர், சிறுமிகள் உற்சாகத்துடன் கை தட்டுவார்கள். ஆனால் இலங்கையில் ஒரு விமானம் பறந்தாலோ, சிறுவர் சிறுமிகள் எல்லாரும் பயந்து பதுங்கு குழியில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். நம் வீட்டில் கல் விழுந்தால், கல் வீசியது யார்? என்று அதட்டி கேட்கிறோம். அங்கே வீடுகள் மீது குண்டு விழுகிறது. நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை. இலங்கை தமிழர்கள் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட வேண்டும். நிம்மதியாக உறங்க வேண்டும்.

இவ்வாறு பேசிய விஜய், நான்கு மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
------------------------------------------
இப்படி உண்ணாவிரதம் இருந்தது வெறும் வேஷம்தானா ?

அதே மேடையில் நம் இன மக்களுக்காக வருத்தப் பட்டது, பேசியது எல்லாம் வெறும் வேஷம்தானா?

வெக்கமில்லாம பொசுக்குன்னு போய் காங்கிரஸில் சேருவதற்கு எப்படி இவருக்கு மனம் வந்தது ?.

ராஜ்ய சபா எம்.பி. பதவி தரப் போகிறார்கள் என்றும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி தரப் போகிறார்கள் என்றும் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளன.

இது உண்மைதானா ?

அப்படியென்றால் வெறும்
பணம் , பதவிக்காகவா இந்த அரசியல் பிரவேசம் ?

இவரின் உண்ணாவிரத நாடகத்தில் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா சந்திரசேகரன், மனைவி சங்கீதா, விஜய்யின் ஒன்று விட்ட சகோதரர் விக்ராந்த் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள்.

இயக்குனர் பேரரசு, மன்சூரலிகான் ஆகியோர் நேரில் வந்திருந்து ஆதரவு தெரிவித்தார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எங்கு, யார் போராட்டம் நடத்தினாலும், நேரில் சென்று ஆதரவு கொடுத்து வரும் தமிழர் தேசிய தலைவர் பழ.நெடுமாறன், மற்றும் சுப.வீரபாண்டியன், தா.பாண்டியன் ஆகியோர் விஜய்யின் இந்த உண்ணாவிரதத்திற்கும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

காங்கிரஸில் விஜய் சேரப்போவதாக அனைத்து பத்திரிக்கையும் செய்திகள் வெளியிட்டது.

இன்று
கூட தினமலரில், விஜயும், பிரபுவும் காங்கிரஸில் சேரப்போவதாக திரு..வி.கே.எஸ்.இளங்கோவன்
தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்று
இவரது உண்ணாவிரத்திற்கு ஆதரவு தெரிவித்த பழ.நெடுமாறன், இன்று இந்த விஷயத்தினைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாமல், வாயை மூடிக் கொண்டு இருப்பது ஏன்?

விஜய் தன முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் எனப் பலர் விரும்புகின்றனர்.

விஜய் காங்கிரஸில் சேருவது அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்....

நாம் இவருக்கு தெரிவிக்கும் கண்டனம், இவரது அடுத்து வரும் படங்களைப் புறக்கணிப்பதே ஆகும்.

விஜயின்
ரசிகர்களே, தொண்டர்களே ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள் உங்களது இளைய தளபதியின் முடிவைப் பற்றி.

விஜையை
பிடித்தவர்களே,

பிடிக்காதவர்களே
,

நடு
நிலையானவர்களே,

தமிழ்
உணர்வாளர்களே,

தமிழ்
பேசும் மக்களே,

அனைவரும்
புறக்கணியுங்கள்....இவரையும், இவரது திரைப்படங்களையும்.

இப்பொழுது
இருக்கும் சூழ்நிலையில், விஜய்
டித்து வெளி வர இருக்கும்

வேட்டைக்காரன் ஓட்டைக்காரனாவது உறுதி.

Posted by போவாஸ் | at 9:28 AM

2 கருத்துக்கள்:

SShathiesh-சதீஷ். said...

உங்கள் கருத்தை நான் மதிக்கின்றேன். நான் ஒரு தீவிர விஜய் ரசிகன். ஆனால் இப்போது விஜய் பற்றி வரும் செய்திகள் எரிச்சலை தருகின்றது. அநியாயனாக் தமிழர்களின் உன்னத அன்பை இழக்காமல் இருக்கவேண்டுமெனில் விஜய் காங்கிரசில் சேராமல் இருப்பதே நல்லது. இல்லையேல் என்னைப்போன்ற எத்தனையோ ரசிகர்களின் அன்பை அவர் இழக்க வேண்டி வரும்.

Anonymous said...

intha vijay oru loosuppa
mokka mannan
dubukku
ivanellam arasiyalil enna kizhikka poraan?
ivangappa enna kizhichaaru?
kalaingar pera solli valarthaargal;
ippo congress pera solli surutta paakkiraanunga

Post a Comment

Related Posts with Thumbnails