மம்மி ரிடன்ஸ்

மம்மி ரிடன்ஸ்


லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. எதிர்பாராத இந்த தோல்வியால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தனது தோழியோடு கடந்த மே 30ம் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளார்.
அங்கிருந்தபடி கட்சிப் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்தினார். எஸ்.வி.சேகர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கினார். தினசரி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார். இடையில் நடந்த ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலையும் புறக்கணித்தார்.
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் போய் விட்டதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அக்டோபர் 17ம் தேதி அதிமுக ஆண்டு விழா வருகிறது. எனவே இதில் ஜெயலலிதா கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. எனவே இதற்கு வசதியாக அக்டோபர் முதல் வாரமே அவர் கொடநாட்டிலிருந்து சென்னை வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தொய்வடைந்து போய்க் கிடக்கும் அதிமுகவினருக்கு புத்துணர்ச்சியூட்ட முடியும் என அவர் நம்புகிறாராம்
நன்றி: தட்ஸ்தமிழ்.

Posted by போவாஸ் | at 2:38 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails