தேர்தலை புறக்கணிக்கும் விசயகாந்து



தமிழக உள்ளாட்சி மன்றங்களில் தற்போது காலியாக உள்ள 603 பதவிகளுக்கான இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இதை தமிழக தேர்தல் ஆணையம் நடத்துகின்றது.
இதுல என்ன இருக்குன்னு கேக்குறிங்களா ? 
நம்ம வீர்ர்ரரு, தீர்ர்ரரு, சுர்ர்ரரு கேப்டன் விசயகாந்தின் தே.மு.தி.க கட்சி போட்டியிடவில்லை.
நாங்க யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம், மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டும்தான் கூட்டணி, மக்களைக் காக்க வந்த கருப்பு (வெறுப்பு) எம்ஜிஆர், புத்தரின் மறுபிறவி, மக்களுக்காக இருக்கும், பாடுபடும் ஒரே கட்சி,ஒரே தலைவர் என்று வெட்டி வாய்ச்சவடால்கள் பேசிக் கொண்டு இருக்கும் விசயகாந்தின் கட்சி போட்டியிடாத காரணம் என்ன ? 
 விஷயம் தெரிஞ்சும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும், புரிந்து புரியாமலும் எல்லாத்துக்கும் ஆஜராகி பேசுகின்ற விசயகாந்து இதை பற்றி வாய் திறக்காமல் எங்கயோ எஸ்கேப் ஆகிவிட்டார் போல.
தலைவர் சிக்காததால, நம்ம பண்ருட்டி (பன் & டி ) ராமச்சந்திரன்ட்ட கேட்டுருக்காங்க. 

அவரு என்னா சொல்லிருக்காருன்னா  "இப்போது நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை நாங்கள் பெரிதாக கருதவில்லை. மத்திய தேர்தல் ஆணையத்தாலேயே தமிழகத்தில் முறையான தேர்தலை நடத்த முடியவில்லை. இப்படி இருக்கையில் தமிழக தேர்தல் ஆணையம் முறையான தேர்தலை எப்படி நடத்திவிடும்.
தேர்தலில் போட்டியிட எங்களுக்கு முரசு சின்னம் கிடைக்கவில்லை என்பதும், தேர்தலில் போட்டியிடாததற்கு ஒரு காரணமாகும். இது குறித்து நாங்கள் தேர்தல் அதிகாரிகளையும் சந்திக்கவில்லை. இந்த தேர்தலை நாங்கள் புறக்கணித்துவிட்டதாக கூறுவது தவறு, ஒதுங்கி நிற்கிறோம் என்பதுதான் சரி என்றார் அவர்".
இதெல்லாம் ஒரு காரணமா ?.

எம்.பி எலெக்சன்ல ஜெயிக்க முடியலை. மக்களுக்கு ஒன்னும் செய்ய முடியலை. சரி . 
எம்.எல்.ஏ. எலெக்சன்ல கட்சித் தலைவரைத் தவிர யாரும் ஜெயிக்க முடியல.மக்களுக்கு ஒன்னும் செய்ய முடியலை.சரி. 
இப்பொழுது உள்ளாட்சி மன்ற தேர்தலில் நிற்காமல் ஒதுங்கியது (புறக்கணித்தது) ஏன் ?.மக்களுக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் விலகியது ஏன் ?.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் வாய்ப்பு தாருங்கள். அரியணையில் அமர்த்திப் பாருங்கள் என்று தெரு தெருவாக ஊருக்கு ஊர் கத்திய, கெஞ்சிய விசயகாந்த்.....இந்த வாய்ப்பைப் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எம்.பி., எம்.எல்.ஏவை விட மக்களுடன் கலந்து, மக்களிடம் நெருங்கி பழகி, மக்களுக்கு செய்பவர்கள் உள்ளாட்சி மன்றங்களில் இருப்பவர்கள்தான். 
ஒரு கட்சியை நடத்தும் விசயகாந்துக்கு இது தெரியாதா என்ன ?.
போட்டியிடுவதற்கு ஆள் இல்லையா ? பொருளாதாரம் சூழ்நிலைகள் சரியில்லையா ? அல்லது அதிமுக கூட்டணிக்காக விட்டு கொடுத்து ஒதுங்கிக் கொண்டதா? .

தகுந்த பதிலனை ஓய்வு நேர அரசியல்வாதி, எங்கள் ஆசான், கேப்டன் விசயகாந்துதான் சொல்ல வேண்டும். 
மத்திய தேர்தல் ஆணையத்தாலேயே தமிழகத்தில் முறையான தேர்தலை நடத்த முடியவில்லை என்று பண்ருட்டி (பன் & டி ) ராமச்சந்திரன் சொல்லிருக்காரு. அப்படினா அடுத்த வர சட்டமன்றத் தேர்தலையும் மத்திய தேர்தல் ஆணையம்தான் நடத்தும். அப்போதும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.மிக நன்றாக இருக்கும். தேர்தல் ஆணையத்துக்கும், உங்க கட்சித் தொண்டர்களுக்கும் செலவு மிச்சமாகும்.

இவுங்கெல்லாம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது பண்ணி...எப்போ நாம முன்னேறது..இதுக்கு பேசாம 10 திட்டத்துல 5 நல்லது 5 கேட்டது பண்ணுற நம்ம அம்மாவோ அல்லது கலைஞரோ ஆட்சில கிடைக்கறத வாங்கிகிட்டு புள்ளைங்கள படிக்க வச்சு நமக்கு நாமே முன்னேருரத தவிர வேற வழியில்லை.
நல்லது பன்றவன நம்பலாம்.
சில சமயம் கேட்டது பன்றவன கூட நம்பலாம்.
ஆனா நல்லது பண்றேன்னு நல்லது பண்றேன்னு சொல்லிட்டு திரியரவன 
நம்பவே முடியாது. 
மக்களுக்கு எப்போ புரியப் போகுதோ ?. ம்ம்ம்ம்  
கொசுறு தகவல் :
மாநில தேர்தல் அலுவலக வட்டாரங்கள் கூறியது:  2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள்தான் இப்போதும் பின்பற்றப்படுகின்றன. தே.மு.தி.க. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து எங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. மேலும் முரசு சின்னம் குறித்து தே.மு.தி.க. சார்பில் யாரும் எங்களைச் சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது.
 செய்திக்கு நன்றி : தினமணி. 

Posted by போவாஸ் | at 2:05 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails