ஆஸ்திரேலியாவில் பிறந்த அதிசயக் குழந்தை

ஆஸ்திரேலியாவில் பிறந்த அதிசயக் குழந்தைஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த தாரா-சுதீஷ் பாட்டீல் தம்பதிக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அக்குழந்தையின் பிறந்த தேதி நேரத்தை நினைவில் வைத்துக் கொள்வதில் அத்தம்பதிக்கு சிரமம் இருக்காது என்றே தோன்றுகிறது.

இதற்கு காரணம், அந்தக் குழந்தை 9ஆம் தேதி செப்டம்பர் மாதம் காலை 9.09 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) பிறந்ததுதான். இதனை நேரடியாக எழுதிப் பார்த்தால் 09/09/09/09/09 என்று வரும்.

இதுபற்றி குழந்தையின் தாய் தாரா கூறுகையில், “என்னை பரிசோதித்த மருத்துவர்கள் செப்டம்பர் 12ஆம் தேதிதான் குழந்தை பிறக்கும் எனக் கணித்திருந்தனர். ஆனால் இன்றே (9ஆம் தேதி) எனக்கு குழந்தை பிறந்து விட்டது. அதுவும் 9 மணி 9 நிமிடத்திற்கு பிறக்கும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

அந்த வகையில் 9 என்ற எண் தனது குழந்தையின் வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. அதுவே அவளின் அதிர்ஷ்ட நம்பர் ஆகவும் இருக்கக் கூடும்” எனக் கருதுவதாக அவர் கூறினார்.


Posted by போவாஸ் | at 6:45 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails