உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு

அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ்த் திரையுலகம் முழு ஆதரவு அளிக்கும் என திரையுலக அமைப்புகள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் விவரம்:

உலகத் தமிழ் மாநாடு பல காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்று தமிழுக்குப் புத்துணர்ச்சி அளித்து வந்துள்ளது. ஆனால் தமிழ் மொழி "செம்மொழி' ஆன பிறகு, 2010-ம் ஆண்டு ஜூன் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெறவுள்ள "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' சரித்திரத்தில் சாதனையாகப் போற்றக்கூடிய நிகழ்வாகும்.

இந்த மாநாட்டை தமிழ்த் திரையுலகமே திரண்டு வரவேற்கிறது. மாநாடு தொடர்பாக முதல்வர் கருணாநிதியும், அரசும் இடும் பணிகளை எழுச்சியோடும், உணர்வுப்பூர்வமாகவும் செய்ய தமிழ்த் திரையுலகம் தயாராக இருக்கிறது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கலை மற்றும் இலக்கியம் சம்பந்தப்பட்ட பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளைச் சிறப்புற செய்வதற்கு தமிழ்த் திரையுலகம் ஆர்வமுடன் உள்ளது.

இந்த விவரங்களை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ராம.நாராயணன், நடிகர் சங்கம் சார்பாக ராதாரவி, பெப்ஸி அமைப்பு சார்பாக வி.சி.குகநாதன், விநியோகஸ்தர் சங்கம் சார்பாக கலைப்புலி ஜி.சேகரன், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக அபிராமி ராமநாதன், தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பாக பன்னீர்செல்வம், திரைப்பட மக்கள் தொடர்பு சங்கம் சார்பாக விஜயமுரளி ஆகியோர் தெரிவித்தனர்.
நன்றி: தினமணி

Posted by போவாஸ் | at 5:34 PM

1 கருத்துக்கள்:

ரோஸ்விக் said...

இந்த திருட்டு கும்பல்கள் கைகோர்த்து பல வருடம் ஆயிற்றே நண்பரே!

Post a Comment

Related Posts with Thumbnails