ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த நோக்கியா



ஐ போன் மென்பொருள் பயன்படுத்தலில் காப்புரிமை மீறப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மொபைல் தயாரிப்பில் முன்னோடியான நோக்கியா. 

ஐபோனில் ஜிஎஸ்எம், யுஎம்டிஎஸ் மற்றும் லோக்கல் ஏரியா நெட்வொர்க் (லான்) போன்ற தொழில் நுட்பப் பயன்பாட்டில் நோக்கியா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது அப்பட்டமான காப்புரிமை மீறல் என்றும் நோக்கியா தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் ஆப்பிள் போனில் உள்ள வயர்லெஸ் டேட்டா, ஸ்பீச் கோடிங், செக்யூரிட்டி உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களிலும் நோக்கியா தொழில் நுட்பமே உள்ளதாகவும், இதுகுறித்து தங்களுக்கும் ஆப்பிளுக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை, இது அப்பட்டமான காப்புரிமை மீறல் என்றும் நோக்கியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் டிலெவர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்துள்ள ஆப்பிள் பதில் நடவடிக்கை  குறித்து ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளது.

Posted by போவாஸ் | at 11:59 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails