தமிழ் சமூகம், கலாச்சாரம் சீரழிவிற்கு இதுவும் ஒரு காரணம்.
தமிழ் சமூகம், கலாச்சாரம் சீரழிவிற்கு இது போன்ற அழகு போட்டிகளும் ஒரு வகையில் காரணம்தான்.
அதிலும் குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வேதனைதான். கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, சமூக அக்கறையுடன் கூடிய பட்டிமன்றங்கள், உரையாடல்கள், கருத்து மேடை, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, அறிவு சார்ந்த போட்டி போன்றவைகளை நடத்தினால் மனதிற்கும் ஒரு சந்தோஷம், உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒருவித உற்சாகம், தனக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பும் கிடைக்கும்.
அழகு போட்டியின் மூலம் என்ன சமுதாய சீர்திருத்த ஏற்றத்தை ஏற்படுத்த முடியும் ?. சென்னை மட்டுமல்லாமல், தமிழகம் முழுக்க இதைப் பிரபலப்படுத்த போகிறார்களாம், நடத்தப் போகிறார்களாம்.
இது அழகு போட்டியன்று, அடங்காபிடாரிகளின் ஆணவப் போட்டியென்று நான் நினைக்கிறேன்.
0 கருத்துக்கள்:
Post a Comment